தில்லியிலிருந்து 8 ம் தேதி காலை சென்னைக்கு ரயிலேறினேன்.. நானும் சபரியும் தான். வெளியில் 20 டிகிரி என்றால் தானாகவே அந்த ஏசி ஹீட்டராகி விடுமாம். ஹீட்டர் சூடும் எக்கச்சக்கமாக , அட்டெண்டரை கூப்பிட்டு எல்லாரும் குறைஞ்சபட்சம் ப்ளோயராவது இருக்கட்டும் ஹீட்டர் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம்.. சென்னையில் எக்மோர் ஸ்டேஷ்ஸனில் இறங்கியது சூடோ சூடு.. அதும் உயர்வகுப்பு பயணியர் காத்திருக்கும் அறை அடுப்பு சூடு.. இறங்கியதுமே கவிதாவுக்கும் முல்லைக்கும் ஒரு போன் போட்டு எங்க இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டேன். கவிதா வந்துகிட்டே இருக்கேன் என்றார்கள். முல்லை யாரு நீங்க என்று கேட்டுவிட்டு ..ஓ உங்களைத்தானே பாக்கவரேன் .. வழியில் தான் இருக்கோம் என்றார்கள். :)
முல்லை வந்து சேர்ந்ததும் போலீஸ் அக்கா என்னை அவங்களுக்கு அடையாளம் காட்ட ...முல்லை பேரைச்சொல்லி, வாங்கிய டோக்கனை போலிஸ் அக்காக்கிட்ட குடுத்துட்டு வெளியேவே போயிக்கிறேங்க என்று அந்த அறை சூட்டிலிருந்து தப்பித்து , ஹாட் சிப்ஸ் ரெஸ்ட்ரண்டுக்கு சென்றோம்.ஒருத்தங்க கூட ஃபேன் போடசொல்லலைங்க.. நாங்க கூட சாப்பிட்டு முடித்து அரட்டையை தொடர்ந்த போது தான் சபரி ஃபேனைப் போடச்சொல்லி பேரரை அழைத்தான். குட்டிப்பொண்ணு பப்புவுக்கு கீரிடமும் பொட்டுக்களும் குடுத்தான் சபரி. அவள் கிரீடத்தையே தொட்டு தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தாள் அதை அணிந்து ஒரு படம் எடுத்துக்கொண்டோம். மதிய தூக்கமில்லாததால் அவள் கொஞ்சம் மூடியாக இருந்தாள்.
என் குரல் அப்போதே குளிர், சூடு என்ற மாற்றங்களினால் த்ன் வேலையை காட்டத்தொடங்கியது . தொண்டைக்கட்டு வரப்போகிறது என்று உணர்ந்தேன். அளவாக பேசியதற்கே அணில்க்குட்டி கவிதா காதில் ரத்தம் வருவதாக போஸ்ட் போட்டிருக்கிறார்கள். இருந்தாலும் கவிதாவுக்கும் நல்ல திறமை . நான் கேப் விட்டபோதெல்லாம் பிடிச்சு அவங்களைப்பத்தி புலம்பி தள்ளிவிட்டார்கள். முல்லை தான் பாவம் .
பரோட்டா, சாம்பார் இட்லி ,தோசை பதிவர் சந்திப்பில் உணவருந்தினால் பதிவில் லிஸ்ட் தருவது சம்பிரதாய வழக்கமாம்.. :)
நண்பர்கள் மனமின்றி இரவினைக்காரணம் காட்டி விடைபெற்று சென்றனர். நான் கோவைக்கு அடுத்த ரயிலை பிடித்தேன். அடுத்த நாள் என் தாத்தாவின் நூற்றாண்டு விழா . நண்பர்களை அழைக்காலாமா என்று தெரியாததால் முன்பே அழைக்கவில்லை. பிறகு எத்தனை பேருக்கு ஏற்பாடுகள் என்று கேட்டு தெரிந்து கொண்டபின் நண்பர்களை அழைக்க நினைத்து , மெயிலில் பரிசல், வடகரைவேலன், சஞ்சய் ,வெயிலான், வின்செண்ட்,மங்களூர் சிவா ஆகியோரையும் , கவிதாயினி காயத்ரியை தொலைபேசியிலும் அழைத்தேன். வடகரை வேலனும் சஞ்சயும் சேர்ந்து வந்திருந்தார்கள். சரியாக கவனிக்க இயலவில்லையோ என்று நினைத்திருந்தேன்.சஞ்சயின் பதிவு படித்து மனம் நிம்மதி அடைந்தது. மரவளம் வின்சென்ட் விழா முடிவில் கலந்து கொண்டு ஆசி பெற்றுச்சென்றார். எனக்கும் சில பரிசுகள் கொண்டு வந்திருந்தார். சில செடிகள். அது பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
மீண்டும் கோவையிலிருந்து வரும் வழியில் சென்னையில் இம்முறை செண்ட்ரலில் சந்திப்பு.
இரண்டாம் தளத்தில் இருக்கும் பயணியர் தங்கும் இடத்தில் இருந்தேன். ஆடுமாடு அவர்கள் வந்து சந்தித்தார்கள். பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டேன் இருந்தும் போன் ஒலிக்க காத்திருந்தேன் . ஒலித்ததும் உறுதிப்படுத்திக்கொண்டு வணக்கம் சொல்லி பேசினேன். அவர் சின்னமகனின் குறும்புகளை சொல்லிக்கொண்டிருந்துவிட்டு அருகில் நடக்கும் புத்தககண்காட்சிக்கு செல்லவேண்டுமென்று வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டுச் சென்றார். அவருடைய நண்பர் தேநீர் வாங்கிவர சென்றார். நல்லவேளையாக தேநீர் இல்லையென பால் கிடைத்தது என்று வாங்கிவந்தார் சரியாக அந்நேரம் கண்விழித்த சபரி அருந்த வசதியாக அமைந்தது.
சற்றே பொறுத்து குசும்பன், ஜி3, சிபி மூவர் குழு வந்தது. அவர்கள் அனைவரையும் நான் புகைப்படத்தில் பார்த்திருப்பதால் நானாகவே அடையாளம் கண்டு ஹாய் சொல்லிக்கொண்டேன். அவர்கள் சபரிக்கு ஒரு பெரிய டெடிபேர் வாங்கிவந்தார்கள் அவனும் அதை உடனே பிரித்துப்பார்த்து மகிழ்ந்தான். குசும்பனின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால் அவர் உணவு வாங்கிச்செல்ல வேண்டிய கடமை அழைத்தது .. ஜி3 க்கு ஊரின் மறுகோடிக்கு செல்லவேண்டுமாம்.. சிபிக்கு எங்கே காதில் ரத்தம் வந்துவிடுமோ என்ற பயம் காரணம் போலும் சற்று நேரத்திலேயே கிளம்பி ஓடிவிட்டார்கள். இத்தனைக்கும் அவர்கள் செய்த புண்ணியம் போலும் என் தொண்டை அதுவரையில் சரியாகாமல் இன்னும் கிணற்றுக்குள்ளிருந்தே ஒலித்தது..
இத்தனைக்கும் அவர்கள் மூவர் குழு என்னை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்கு கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்..நல்லவேளை என்னைவிட்டார்களே என்று நான் நிம்மதியாக இருந்தேன். இன்னும் பலரை சென்னையில் சந்திக்க ஆவலிருந்தாலும் எல்லாரையும் நான் செண்ட்ரலுக்கும் எக்மோருக்கும் அழைத்து சிரமப்படுத்துவது சரியாக இருக்காது என்பதாலே அழைக்கவில்லை . யாரும் தவறாக நினைக்கவேண்டாம்.
தில்லி வந்து சேர்ந்துவிட்டேன். இருந்தும் உடல்நிலை காரணமாக அதிகம் இணையப்பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
46 comments:
வாங்கக்கா! அணில் பிரியானி ரெடியா?
பொங்கல் நல்லா கொண்டாடுனீங்களா??
//அளவாக பேசியதற்கே //
ஆஆஆ!!
அப்புறம் "அணில்க்குட்டி கவிதா" எப்படி கண்டுபிடிச்சு ஜாயின் பண்ணாங்கன்னு சொல்லலியே!!!
//முல்லை தான் பாவம் . //
சந்திச்ச கொஞ்ச நேரத்திலயே எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, பாருங்க!! பாராட்டறேன்!!
இரு பதிவர் சந்திப்புகள்-ன்னு கிளிக்கி வந்தா மூனுன்னு காட்டுதே!!
/இத்தனைக்கும் அவர்கள் செய்த புண்ணியம் போலும் என் தொண்டை அதுவரையில் சரியாகாமல் இன்னும் கிணற்றுக்குள்ளிருந்தே ஒலித்தது.. //
அதுக்கே அப்படியா!
கடவுளே! நல்லா இருந்திருந்தா?
அபி அப்பா.. நான் வெஜ் ங்க.. அட நான்வெஜ் இல்ல நான் ஒரு வெஜ்ஜிட்டேரியன்னு சொன்ன்னேன்..
:)
-------------------
முல்லை.. அது மூன்றாச்சேன்னு அப்பறம் தான் நினைவுக்குவந்துச்சு.. மாத்திட்டேன்.. :)
//நல்லவேளை என்னைவிட்டார்களே என்று நான் நிம்மதியாக இருந்தேன்//
எப்பவுமே முதல் சந்திப்பு அப்படித்தான் இருக்கும்!
அடுத்த தபா பாருங்க!
//அளவாக பேசியதற்கே அணில்க்குட்டி கவிதா காதில் ரத்தம் வருவதாக போஸ்ட் போட்டிருக்கிறார்கள். //
ஒரு வேலை நிறைய பேசி இருந்தீங்கன்னா.. காது அறுந்து போச்சின்னு சொல்லியிருப்பேன்ன்னு நினைக்கிறேன்.. :)) நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் ஃஆப் டெல்லிப்பா.. :)
//இருந்தாலும் கவிதாவுக்கும் நல்ல திறமை . நான் கேப் விட்டபோதெல்லாம் பிடிச்சு அவங்களைப்பத்தி புலம்பி தள்ளிவிட்டார்கள்//
ஹி ஹி..நீங்க கேட்ட சில கேள்விகளுக்கு முழுசா சொல்ல முடியாட்டாலும் நடுவுல நீங்க கொடுத்த கேப்ல கொஞ்சமா சொன்னேன்...:))
//முல்லை தான் பாவம் . //
பாவம் எல்லாம் இல்லப்பா திரும்ப போகும் போது நல்லா பேசிட்டுபோனோம்.. :))
//அப்புறம் "அணில்க்குட்டி கவிதா" எப்படி கண்டுபிடிச்சு ஜாயின் பண்ணாங்கன்னு சொல்லலியே!!!//
முல்லைய பார்த்துத்தான்..:))) அது அவங்கக்கிட்ட எங்க சொன்னேன்.. உங்ககிட்ட திரும்பி வரும்போது இல்ல சொன்னேன்... :) அவங்களுக்கு தெரியாது...
//வாங்கக்கா! அணில் பிரியானி ரெடியா?//
//அட நான்வெஜ் இல்ல நான் ஒரு வெஜ்ஜிட்டேரியன்னு சொன்ன்னேன்..
:)//
அபிஅப்பா..பாவம் நீங்க.. இந்த விஷயம் தெரிந்து தானே தைரியமாக நாங்க பதிவு போடறோம்.. அவங்க பேசும் போது வெஜ்'னு சொல்லிட்டாங்களே.. !
சரி தட்டுல எவ்வளவு கலக்ஷன் ஆச்சி.. சொல்லவே இல்ல பாத்தீங்களா.. நைசா நீங்களே எடுத்துக்களாம்னு பார்க்காதீங்க.. பங்குன்னா பங்குத்தான். .இல்லன்னா அணில் வீடு தேடி வரும்..!! :))
அட! தெரிந்திருந்தால் நானும் நானும் எக்மோரிலோ செண்ட்ரலிலோ சந்தித்திருப்பேனே?
\\தில்லி வந்து சேர்ந்துவிட்டேன். இருந்தும் உடல்நிலை காரணமாக அதிகம் இணையப்பக்கம் வர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்\\
ரைட்டு...உடம்பை கவனிச்சிக்கோங்க அக்கா!.
// மெயிலில் பரிசல், வடகரைவேலன், சஞ்சய் ,வெயிலான், வின்செண்ட்,மங்களூர் சிவா ஆகியோரையும் , கவிதாயினி காயத்ரியை தொலைபேசியிலும் அழைத்தேன். //
அழைப்புக்கு நன்றி!
போகலாம்...
கெளம்பலாம்....
வந்திடறேன்...... என்று சொல்லிய, சொன்ன, சொல்லிக்கொண்டே கிளம்பாமல் இருந்த பரிசல்காரரால், நானும் வரமுடியாமற் போயிற்று என்பது மட்டுமே நான் விழாவிற்கு கோவை வராமலிந்ததற்கு காரணமில்லை.
வாங்கக்கா!
என்னாது அக்கா அளவா பேசறாங்களேன்னு நிறைய பேர் கண்ணு பட்டிருக்கப்போகுதுக்கா எதுக்கும் மாமாக்கிட்ட சொல்லி திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க :)))))))
சந்திப்பினை வெற்றிகரமாக நிகழ்த்தி டெல்லி திரும்பிய முத்துக்காவை ஷார்ஜா தலைமை ரசிகர் மன்றம் பாராட்டுகின்றது...
சென்ஷி
அக்கா உங்க பேச்சு கா..
சந்திப்பினை வெற்றிகரமாக நிகழ்த்தி டெல்லி திரும்பிய க.முத்துவை சிட்னி கிளை மன்றம் பாராட்டுகின்றது...
// Namakkal Shibi said...
//நல்லவேளை என்னைவிட்டார்களே என்று நான் நிம்மதியாக இருந்தேன்//
எப்பவுமே முதல் சந்திப்பு அப்படித்தான் இருக்கும்!//
Repeatae.. aarambaththula ippadi dhaan adakki vaasippom :)
//ரைட்டு...உடம்பை கவனிச்சிக்கோங்க அக்கா!.//
Idhukkum oru repeatae.. odamba badhrama paathukkonga :)
சிபி அப்ப அடுத்த முறை வரும் போது பார்த்தவங்களை விட்டுட்டு ஒரு மீட் போட்டறவா??
:)
-----------------------
கவிதா பேசறத பத்தி சொல்றதெல்லாம் நான் கவலையே படறதில்லப்பா.. எத்தனை வருசமா அதெல்லாம் தாங்கிட்டு சும்மா சூப்பரா அந்த வாயாடி பட்டத்தை தக்க வச்சிக்கிட்டிருக்கேன்னு எனக்குத்தானே தெரியும்..
//அவர்கள் மூவர் குழு என்னை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்கு கலாய்த்துக்கொண்டிருந்தார்கள்.//
irundhaalum romba varuthappatirukkeenga pola irukkae.. idhuku edhaavadhu parigaaram seyyanumae.. irunga sibi annan kitta kalandhu pesi oru post pottavadhu ungala kalaaichu ungala thrupthi paduththa mudiyudhaanu paakarom ;)
//சிபி அப்ப அடுத்த முறை வரும் போது பார்த்தவங்களை விட்டுட்டு ஒரு மீட் போட்டறவா??//
Permission not granted :)
நானானி உங்கள போல பெரியவங்களை நேரில் வந்து நானில்லயா சந்திக்கனும்.. அதனால் தான் :) தப்பா நினைச்சிக்காதீங்க..
---------------------
கோபி ரொம்ப நன்றிப்பா ... :) கண்டிப்பா பாத்துக்கிறேன்..
இன்னும் என்ன காரணம்ன்னு சொல்லவே இல்லையே வெயிலான்..:) பரவாயில்லை நிதானமா இன்னொருமுறை சந்திப்பில் பேசலாம்...
----------------
சுத்திப்போட்டாச்சு ஆயில்யன் நன்றி.. :)
-----------------------------
நன்றி சென்ஷீ
-------------------
தப்பான டேட் சொல்லி ஊரிலிருக்கமாட்டேன்னு சொல்லிட்டு என்னை ஏமாத்தின உன் பேச்சுத்தான் நான் கா விடனும் பூர்ணிமா..:)
கானா இன்னும் எந்த எந்த நாட்டுல எல்லாம் கிளை திறந்திருக்கீங்க எனக்கே தெரியாதே.. கோபால் பல்பொடி மாதிரி லிஸ்ட் பெரிசா இருக்கா.. :)
---------------------
அம்மா ஜி 3 உனக்கு நான் பணம் கொடுக்கனுமே அதைக்கூட கொடுக்க மறந்து உங்க கலாய்த்தல் விளையாட்டை ரசிச்சிட்டே இருந்துட்டேன்..பாரு...
இந்த சுப்புரத்தினத்தை மறந்துட்டீகளே !!
போனால் போகிறது. அடுத்த தரம் சென்னை வரும்போது
உங்கள் பதிவில் விவரம் சொன்னால், உங்களை வரவேற்க
சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து தஞ்சாவூர் டிகிரி காபி
ஃப்ளாஸ்க்ல் எடுத்து வருவோம்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
உங்க அன்புக்குரொம்ப நன்றி சூரிசார்
என்ன நான் உங்களயெல்லாம் சிரமப்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் தான் விட்டுவிட்டேனே தவிர.. வேறொன்னும் காரணமில்லை என்று மட்டும் புரிந்துகொள்ளூங்கள்..
//PoornimaSaran said...
அக்கா உங்க பேச்சு கா..
//
ஏய் பூர்ணி.. என்ன இது.. பெரியவங்ககிட்ட மரியாதை இல்லாம பேசிகிட்டு...
உங்க பேச்சி காக்கா-ன்னு சொல்லனும்..சரியா? ( ஸ்மைலி போடலை.. ஆகவே இதை அட்வைசாக மட்டும் ’கொல்ல’வும் )
//சரியாக கவனிக்க இயலவில்லையோ என்று நினைத்திருந்தேன்.சஞ்சயின் பதிவு படித்து மனம் நிம்மதி அடைந்தது//
அட என்னக்கா நீங்க? நாங்க ரொம்பவே நெகிழ்ந்துபோய்ட்டோம். அவ்ளோ பெரிய விழாவுல எங்களை ரொம்பவே அன்பா கவனிச்சிங்க.
சஞ்சய் .. இந்த பக்கத்திலிருந்து உங்களைத் தாண்டி என் குரல் வடகரை வேலனுக்கு போய் சேர்ந்ததா தெரியல .. குத்துமதிப்பாவே தலையாட்டி இருப்பாருன்னு நினைக்கிறேன்.. என் தொண்டை அப்படி அன்னைக்கு.. :)
// முத்துலெட்சுமி-கயல்விழி said...
சஞ்சய் .. இந்த பக்கத்திலிருந்து உங்களைத் தாண்டி என் குரல் வடகரை வேலனுக்கு போய் சேர்ந்ததா தெரியல .. குத்துமதிப்பாவே தலையாட்டி இருப்பாருன்னு நினைக்கிறேன்.. என் தொண்டை அப்படி அன்னைக்கு.. :)//
நானும் அப்டிதான் நினைக்கிறென்.. :))
( நான் ரொம்ப குண்டா இருக்கேன்னு சொல்ல வரலைதானேக்கா. :) )
உங்க மெயில் கிடைத்தது. வர இயலவில்லை. சஞ்சய் பதிவை படித்த பின் அடடா மிஸ் பண்ணீட்டோமே என்ற எண்ணம் தோன்றுகிறது.
ரொம்ப பக்கத்துல இல்லையே சிவா.பரவாயில்லை.. கடைசி நிமிசத்தில் சொன்னால் என்ன செய்வீங்க.. நீங்களும் ...
சந்திப்பினை வெற்றிகரமாக நிகழ்த்தி டெல்லி திரும்பிய முத்துக்காவை கத்தார் இணை தலைமை ரசிகர் மன்றம் பாராட்டுகின்றது...
ஆயில்யன்
(மத்த மன்றத்து பொறுப்பாளர்கள் வந்து போயிருக்கும்போது நான் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும்!)
:)) போட்டுட்டு போனா மூத்த பதிவரா'கிட்டிங்கன்னு லந்தை கொடுப்பீங்க...
இந்த பதிவை படித்த உடன், தென் சென்னை மாவட்ட பதிவர் சங்க செயலாளர் அஞ்சா நெஞ்சன் லக்கிலுக் அவர்களும், திருவள்ளூர் மாவட்ட பதிவர் சங்க செயலர் அண்ணன் அதிஷா அவர்களும், அடுத்த பதிவர் சந்திப்பை கடற்கரை டூ செங்கல்பட்டு மின் ரயில் வண்டியில் நடத்த போவதாக கேள்வி.
குப்பன்_யாஹூ
அதென்னப்பா...இப்படி ஓட்டமா பதிவு போடறீங்க... ரெண்டு நாள் இருந்து நிதானமா போட்டா என்ன.... :-)
அவசர அவசரமா...
அப்புறம்... 3 சந்திப்பா...அட்டகாசம் போங்க...
ஆயில்யன் .. சரிதலைவரே.. :)
------------------
இராம்.. ஓகே ஒகே நீங்க சின்ன கைப்புள்ள சரியா...:)
குப்பன் யாஹூ நல்ல ஐடியாங்க இது.. யாரும் தப்பிச்சு ட்ரயினிலிருந்து குதிக்கவும் முடியாது பேச்சை கேட்டாக வேண்டிய கட்டாயமும் இருக்கும்.. இது ஏன் எனக்குத்தோணாமப் போச்சு.. :)
-------------
மங்கை அப்பறம்ன்னு விட்டேன் நான் மறந்துபோயிடுவேனே.. அதான்..
பிப்ரவரில கோவை வருவீங்கன்னா சொல்லுங்க முத்தக்கா, சந்திக்கலாம்.
//என் குரல் அப்போதே குளிர், சூடு என்ற மாற்றங்களினால் த்ன் வேலையை காட்டத்தொடங்கியது . தொண்டைக்கட்டு வரப்போகிறது என்று உணர்ந்தேன். //
பேசும்போதே நெனைச்சேங்க!!!
சின்ன அம்மிணி ... இப்பத்தான் போய் வந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திட்டிருக்கேன் அதுக்குள்ள பிப்ரவரியா ... தாங்கதம்மா...
இனி மே ஜூன் தாங்க அந்த பக்கம்..
------------------------
பரிசல் எப்படியோ தப்பிச்சிட்டீங்க .. :))
எங்கே பாத்தாலும் பதிவர் சந்திப்பு...அடப் போங்கப்பா....(பொறாமை..)
சந்திப்பினை வெற்றிகரமாக நிகழ்த்தி டெல்லி திரும்பிய முத்துக்காவை லண்டன் தலைமை ரசிகர் மன்றம் பாராட்டுகின்றது...
கபீஷ்
இனிய பல சந்திப்புகள் நிகழ்ந்ததில் மனம் மகிழ்ந்து, இல்லம் திரும்பியதும் உற்சாகமாய் உடன் இட்டிருக்கிறீர்கள் பதிவு.. உடல் ஒத்துழைக்காவிட்டாலும் உள்ளம் நெகிழ்ந்து.
எப்படி உங்களுக்கு ஏமாற்றமில்லாத திருப்தியான பின்னூட்டமா:)))?
இப்படியே நினைச்சுக்கிட்டே உக்காந்திருந்தா நான் அங்க வரும் போது தான் சந்திப்புல கலந்துப்பீங்க போலயே.. பாசமலர் :)
------------------------
ஆகா கபீஷ் ,நீங்களுமா,, ? நடந்த்துங்க நடத்துங்க கலாய்த்தல் சங்கமா இல்லாதவரை எனக்கு ஓகேதான்..:)
-------------------------------
ராமலக்ஷ்மி ரொம்ப நன்றிப்பா..திருப்தியான பின்னூட்டம் தான்.. :)
Post a Comment