January 25, 2009

அவ்வை சங்கத்து தமிழ்நாடு கலைவிழா


நேற்று வெகுநாட்களுக்குப் பின் வருகை தந்த நண்பர்கள் குடும்பத்தோடு பிக்னிக் செய்தோம். மெல்லிய குளிர் காற்று அன்றைய பொழுதை இனிமையாக்கியது. குழந்தைகள் ஓடியாடி விளையாண்டு களைத்தார்கள். கையோடு கொண்டு சென்ற உணவை பசித்து ருசித்தார்கள்.

நொய்டா அவ்வை தமிழ்ச்சங்கம், நொய்டா க்ரேட் இண்டியாப்ளேஸ் மால் பகுதியில் ஒரு தமிழ்நாடு கலைவிழா நடத்துகிறார்கள் என்பதால் அங்கேயே போய் வர திட்டமிட்டிருந்தோம். நாங்கள் சென்ற நேரம் மதுரை டாக்டர் சோமசுந்தரம் குழிவினரின் மயிலாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பின்னோடு கரகாட்டம் ஆரம்பித்தது. கரகம் ஆடியவர் கண்ணைக்கட்டிக்கொண்டு எதுவோ செய்து காட்டப்போகிறார் என்று ஆர்வமானோம். உண்மையிலேயே மிக வித்தியாசம் தான் கையில் ஒரு கத்தியை வைத்துக்கொண்டு ஆடியபடி வந்தார்.. கீழே அமர்ந்து வாயில் பெரிய முள்ளங்கியை ஒருவர் பிடித்திருக்க.. இவர் கண் கட்டியபடியே இருக்க சரக் சரக் என்று முள்ளங்கியை வட்டவட்டமாக வெட்டி வீழ்த்தினார். பின்பு தலை மேல் தேங்காய் உடைத்தார்.

தொடர்ந்த காவடி ஆட்டத்தின் நடுவே மால் உள்புற அலங்காரங்களைக்காணச் சென்றோம். மாலின் ஒரு பகுதி தமிழ்நாடு தீம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாக்கோலங்கள் காவியுடன் வரவேற்க உள்ளே நுழைந்ததும் கோயில் அமைப்பு இருந்தது. எங்கெங்கும் குருத்தோலை அலங்காரங்களும் ஸ்டிக்கர் கோலங்களும் கலர் கோலங்களும் என்று உள்தோற்றமும் கலையாக இருந்தது.

கோலங்களுக்கு சுற்றிலும் காவலும் போடப்பட்டிருந்தது. மூன்று நாள் திருவிழா ஆயிற்றே! ... சின்னக்கிணறு , சின்ன மாட்டுவண்டி , சின்ன வயல்வெளி என்று பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கம் பொம்மைக்கொலுவும் கூட இருந்தது.

வேக வைத்த சோளம் வாங்கிக்கொண்டு திரும்ப வரும்போது , ஒரு நிமிடம் ஆச்சரியப்பட்டுப் போனோம். வண்ணமயமான , பலகரங்களுடன் , கோயிலில் இருக்கும் சிமெண்ட் கலவை கடவுள்கள் கண் முன் எழுந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். புகைப்பட எடுக்க மறந்து கவனித்துக் கொண்டிருந்துவிட்டேன். மகிஷாசுர வதத்தை ஆடிக்கொண்டிருந்தார்கள். மகிஷனும் தேவியும் போரிட்டக் காட்சி நிஜமெனத் தோன்ற வைத்தது.

அதனைத்தொடர்ந்து , நொய்டா கலா சாகர் குழந்தைகளின் நடனம், நொய்டா தியாகாராஜா செண்டர் குழந்தைகளின் பரதநாட்டியம் என்று கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். மீண்டும் இன்றும் மதிய நிகழ்ச்சிக்கு செல்ல விரும்புகிறோம். ராஜேஸ்வரி நாட்டியாலயா பரதநிகழ்ச்சியையும் மீண்டும் ஒரு முறை சோமசுந்தரம் குழுவினரின் கிராமப்புற நடனத்தைப் பார்க்க ஆவலாயிருக்கிறோம்.

26 ம் தேதி லாலு வருகிறார் .... குடியரசு தின விழாவன்றும் நிகழ்ச்சிகள் தொடரும். இன்றும் நாளையும் மதியம் 12.30 மணியிலிருந்து இரவு ஏழு மணிவரை தொடர்கின்றபடியான நிகழ்ச்சிகள் இருக்கின்றது.

16 comments:

அபி அப்பா said...

nalla post!

நிஜமா நல்லவன் said...

படங்களுடன் தொகுப்பு நல்லா இருக்கு கயலக்கா!

நிஜமா நல்லவன் said...

அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்!

நட்புடன் ஜமால் said...

\\மெல்லிய குளிர் காற்று அன்றைய பொழுதை இனிமையாக்கியது. குழந்தைகள் ஓடியாடி விளையாண்டு களைத்தார்கள். கையோடு கொண்டு சென்ற உணவை பசித்து ருசித்தார்கள்.\\

ஆரம்பமே அழகு ...

நாகை சிவா said...

படங்கள் அருமை.

பாச மலர் / Paasa Malar said...

படங்கள் நல்லாருக்கு..நல்லா ரசிச்சு enjoy பண்ணிருக்கீங்கனு எழுதிருக்குறதிலேயே புரியுது..

Anonymous said...

நானும் போயிருந்தேன்! மனமாரப் பாராட்டப் பட வேண்டிய மிக நல்ல தொடக்கம்!

நன்றி!

சினிமா விரும்பி

http://cinemavirumbi.tamilblogs.com

சென்ஷி said...

பதிவும் புகைப்படங்களும் அருமை.....

துளசி கோபால் said...

ஆஹா....

கொடுத்து வைத்தவர் நீங்க.

அட்டகாசமா இருந்துருக்கு போல.!!!!
கூடவே என்னையும் கொண்டுபோனதுக்கு நன்றி.

கட்டுச்சோத்து மூட்டையில் பெருச்சாளியா வந்துருந்தேன்:-)

ஆமாம். என்னென்ன கொண்டு போனீங்கன்னு சொல்லவே இல்லை.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு..;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா, நிஜம்மா நல்லவன் , ஜமால், நாகை சிவா நன்றி..

அடுத்தபோஸ்ட் எழுதனும் ... சில படங்களை தோழியின் கேமிராவில் எடுத்தேன் அது வந்துசேர்ந்ததும் பதிவிடுவேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாசமலர், சென்ஷி , .. நன்றி..
முதல் நாளை விட இரண்டாம் நாள் நன்றாக பார்க்க முடிந்ததுஎனக்கு..
---------------------
சினிமா விரும்பி ... ஓ நீங்களும் சென்று வந்தீர்களா .. கலைஞர் தினம் தினம் புதுப்புது ஐட்டங்களை சேர்க்கிறார்களாம்.. இன்று காவடியில் ஆடிக்கொண்டே ஏணி ஏறுவாராம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபிநாத் நன்றி
------------------
துளசி நான் பிக்னிக் கொண்டு போனது. .. லெமன் ரைஸ், தயிர்சாதம், ஆலுபராத்தா, தயிர் , ஊறுகாய், அப்பளம் , கூழ் வத்தல் , வெள்ளரிக்காய்.. :) இன்னும் சிலது செய்ய நேரமில்லை அன்னைக்க்கு...

ராமலக்ஷ்மி said...

பார்த்து அனுபவித்ததை ரசித்து எழுதியிருக்கிறீர்கள். பாகம் இரண்டு எப்போ? தோழி படங்கள் தருவது எப்போ?
ஆவலுடன்
அனைவரும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தோழி படங்களை மெயில் செய்ய இயலவில்லைன்னு இப்பத்தான் சிடியா தந்திருக்காங்க.. இனி போஸ்ட் போட்டுடுவேன் ராமலக்ஷ்மி... :)

rapp said...

நீங்க கொண்டுபோனதை மட்டுமா சாப்டுட்டு வந்தீங்க? :(:(:( அங்க எதுவும் தமிழ்நாட்டு சிறப்பு உணவுகள் / உணவுத்திருவிழான்னு எதுவும் இல்லையா?