February 25, 2009

கண்ணீர் தேவதைகள்

"என்ன அவசரமோ?இப்படி பறக்கிற... "
"அவசரம் தான் ..வா..பறந்துகொண்டே பேசலாம்"
நான் இப்போது நியமிக்கப்பட்டிருப்பது ஒரு குழந்தையின் கண்ணீர் தேவதையாக...எட்டு மாதம் நிறைந்த நாளிலிருந்து அவள் அழத்தொடங்கிவிட்டாள. அவள் பெயர் நிலா..
நிலா அழும்போதெல்லாம் ..அவள் அன்னையோ தந்தையோ அணைத்து ஆற்றுவார்கள். அக்கம்பக்கமிருபோரொல்லாம் கூட வந்து கொஞ்சுவார்கள் விளையாடுவார்கள். அந்த இடமே ஆனந்தமயமாய் இருக்கும்.. நிலா சிணுங்கியேனும் ரெண்டு சொட்டு கண்ணீர் வடிப்பதை வழக்கமாக்கி வைத்திருக்கிறாள்..

தலைவியின் அழைப்பிற்க்காக இந்த இரவில் வந்தேன்..ஆதவன் கதிரை விரிக்க ஆரம்பிக்கவும் நிலா அழத்தொடங்கிவிடுவாள்..அதனால் தான் அவசரம்"

நிலா சரியாக இவர்கள் நுழையும்பொழுதில் உடலை வலப்புறமும் இடப்புறமும் நெரித்தாள்.கைகளை தலைக்கு மேல் உயர்த்திக்கொண்டு கண்ணை சுருக்கிக்கொண்டு கால் களை உதைத்தாள்.. சிணுங்கத்தொடங்கினாள்..தேவதை அவள் தலையை தடவிக்கொடுத்தாள்.. கண்களிலிருந்து சிறிதே கண்ணீர் துளிகள் விழுந்தன.

"தலைவியின் அழைப்பு எதற்கோ? என்னைப்போன்றவர்களை எங்கும் நியமிக்காமல் இருப்பதற்கு எதுவும் காரணம் உண்டா? நீ அறிந்த செய்திகள் என்ன?"



தலைவி மிகக்கவலையாக இருந்தாள்.உலகமெங்கும் யுத்தங்களும் கொடிய நிகழ்வுகளுமாய் கண்ணீருக்கான காரணிகள் நிரம்பி இருந்தாலும் உங்களுக்கெல்லாம் வேலையளிக்க இயலாதவளாக அவள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றனவாம்.

யுத்தக்களங்களில் கண்ணீருக்கு வேலையில்லை.
அழுதழுது ஓய்ந்துவிட்ட கண்களில் கண்ணீருக்கு சக்தி இல்லை.
விட்ட கண்ணீருக்கு விலை இல்லை.
ஆற்றுவிக்க ஒரு ஆளில்லை
விரக்தியின் எல்லையில் அவர்கள் கண்ணீர் தேவதைகளைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கி வருகிறார்கள். ஒரு சொட்டு கண்ணீர் விடவும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. கருணையில்லாத மனங்களுக்கு முன் மதிப்பிழந்து நிற்கிறது கண்ணீர்.
குருதியே சில நேரம் கண்ணீர் வடிவத்தில் விழச்செய்து கொள்வோம் .. நீங்கள் எதற்கு என்று விரட்டப்பட்ட தேவதைகள் மனம் வெதும்பி இறைவனிடம் முறையிடபோயிருக்கிறார்களாம்.

எங்கே தன் கண்ணீரும் வற்றிவிடுமோ என்ற பயத்தில் தான் தலைவி என்னைப்போன்ற கண்ணீர் தேவதைகளை அழைத்து குழந்தைகளின் சின்ன அழுகைக்கதைகளையும் அதை ஆற்ற வரும் அன்பின் நெகிழ்ச்சியான இன்பக்கதைகளையும் கேட்டும் கண்களில் சில சொட்டு கண்ணீர் விட முயல்கிறாள் .

ஒருக்களித்த கதவிற்கு வெளியே .. "அடி என் தங்கமே! அழாதே ! இந்தா அம்மா வரேண்டி கண்ணு! உன்னை தூக்கிக்குவேனாம்.... " - நிலாவின் அம்மா வருகிறாள் பார்.

என் செல்லப்பொண்ணுக்கு என்னவேணும் .. அம்மா இருக்கேன் .. இந்தா பாரு அப்பா அப்பா.. இருக்காங்க.. எதுக்கு அழணும் நீ ... ஹ்ம்..

உலகின் ஒரு மூலையில் கண்ணீரின்றி அரற்றும் மற்றொரு குழந்தையை நினைத்தபடி மேலெழும்பி பறந்தது மற்றொரு தேவதை..

31 comments:

அபி அப்பா said...

படங்களும் அருமை! மீ த பஷ்டூ!

நாமக்கல் சிபி said...

அழகான படங்களோட அற்புதமான கதை!

நாமக்கல் சிபி said...

எங்கே தன் கண்ணீரும் வற்றிவிடுமோ என்ற பயத்தில் தான் தலைவி என்னைப்போன்ற கண்ணீர் தேவதைகளை அழைத்து குழந்தைகளின் சின்ன அழுகைக்கதைகளையும் அதை ஆற்ற வரும் அன்பின் நெகிழ்ச்சியான இன்பக்கதைகளையும் கேட்டும் கண்களில் சில சொட்டு கண்ணீர் விட முயல்கிறாள்//

:((

நென்சு கனக்கிறது!

நட்புடன் ஜமால் said...

\\
ஒருக்களித்த கதவிற்கு வெளியே .. "அடி என் தங்கமே! அழாதே ! இந்தா அம்மா வரேண்டி கண்ணு! உன்னை தூக்கிக்குவேனாம்.... " - நிலாவின் அம்மா வருகிறாள் பார்.

என் செல்லப்பொண்ணுக்கு என்னவேணும் .. அம்மா இருக்கேன் .. இந்தா பாரு அப்பா அப்பா.. இருக்காங்க.. எதுக்கு அழணும் நீ ... ஹ்ம்..

உலகின் ஒரு மூலையில் கண்ணீரின்றி அரற்றும் மற்றொரு குழந்தையை நினைத்தபடி மேலெழும்பி பறந்தது மற்றொரு தேவதை..\\

மிக அழகு தங்களின் படங்கள் போலவே ...

அபி அப்பா said...

நல்லா இருக்குது கண்ணீர் தேவதைகள்!

KarthigaVasudevan said...

கதையே கவிதை மாதிரி கனமா இருக்கே?! நல்ல அர்த்தமுள்ள கதை .

வல்லிசிம்ஹன் said...

கண்ணீர்த் தேவதைகள்,ரெண்டு நிமீஷம் வந்துவிட்டுப் போனால் பாப்பா அரை மணீ அழுமா:)
அப்ப ஆனந்தத் தேவதைகளை அரைமணி நேரம் வரச் சொல்ல்லலாமா. வேணாம் அதுக்குத்தான் அம்மா இருக்காளே.

வெகு அழகான கதையும் படங்களும் கயல் லக்ஷ்மி.

ராமலக்ஷ்மி said...

//யுத்தக்களங்களில் கண்ணீருக்கு வேலையில்லை.
அழுதழுது ஓய்ந்துவிட்ட கண்களில் கண்ணீருக்கு சக்தி இல்லை.
விட்ட கண்ணீருக்கு விலை இல்லை.
ஆற்றுவிக்க ஒரு ஆளில்லை
விரக்தியின் எல்லையில் அவர்கள் கண்ணீர் தேவதைகளைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கி வருகிறார்கள். ஒரு சொட்டு கண்ணீர் விடவும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. கருணையில்லாத மனங்களுக்கு முன் மதிப்பிழந்து நிற்கிறது கண்ணீர்.//

அத்தனை வார்த்தைகளும் சத்தியம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா நன்றி..:)

-----------------------
சிபி சில பல செய்திகளும் காட்சிகளும் மனதை கனக்கச்செய்ததின் பலன் தான் இக்கதை.. :(
----------------------------
ஜமால் நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டவுட்.. நன்றிப்பா..
------------------------------
வல்லி அந்த தேவதை பாப்பா உறங்கும் இரவு சமயம் மட்டும் தான் விட்டுபிரிஞ்சு சென்றது..நீங்க சொன்னதுபோலவே.. அம்மா தான் இருக்க்காங்களே..
----------------------------
ராமலக்ஷ்மி நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப அருமையான கதை.. உள்ளே இருக்கும் வேதனை புரிகிறது.. நாளைய உலகம் எப்படி இருக்குமோ என்ற கவலையும் வருகிறது..

Anonymous said...

கவிதையாய் ஒரு கதை! அழகாகவே இருக்கிறது!

Thekkikattan|தெகா said...

முத்து,

கதையின் ஒரு சில பத்திகள் படிக்க ஆரம்பித்த உடனேயே என் மனதில் ஓட ஆரம்பிச்ச எண்ணம் இது ஒரு மொழி பெயர்ப்பு கதையாகத்தானிருக்க வேண்டுமென்றும், கடைசியில் அந்த மூலக் கதைக்கான நன்றி இருக்குமென்ற எண்ணத்திலயே படித்தேன்.

ஏன்னா, எழுத்தின் ஓட்டம் அப்படி என்னை கருத வைத்தது.

ஆனால், நீங்க படித்த ஒரு செய்தியின் தாக்கம்தான் இந்த கதை எனும் பொழுது, ஓ! காமன், இன்னும் நிறைய படிங்க, பாருங்க விசயங்களை - மென்மேலும் எழுதிக் குவிங்கப்பா... வாழ்த்துக்கள், அருமையா இருக்கு.

நிசர்தனம் முட்களாக மாறி குத்துகிறது!

Thamiz Priyan said...

அருமை~!

கோபிநாத் said...

அருமையான படைப்பு ;)

பாச மலர் / Paasa Malar said...

ரொம்ப அழகா வந்திருக்கு முத்துலட்சுமி...உங்கள் வழக்கமான நடையிலிருந்து சற்றே வித்தியாசமாய்..சிறப்பான கதைக்கான சிறப்பான முயற்சி...இது போல நிறைய எழுதுங்கள்..

meenamuthu said...

\\ உலகின் ஒரு மூலையில் கண்ணீரின்றி அரற்றும் மற்றொரு குழந்தையை நினைத்தபடி மேலெழும்பி பறந்தது மற்றொரு தேவதை \\

திக்கற்ற குழந்தைகளைத் தேடி தேவதைகளை அனுப்பிய தேவதையே உன் எண்ணம் உன்னதம்!

உயிரோடை said...

vithiyasama sinthanainga lachumi.

rapp said...

//
எங்கே தன் கண்ணீரும் வற்றிவிடுமோ என்ற பயத்தில் தான் தலைவி என்னைப்போன்ற கண்ணீர் தேவதைகளை அழைத்து குழந்தைகளின் சின்ன அழுகைக்கதைகளையும் அதை ஆற்ற வரும் அன்பின் நெகிழ்ச்சியான இன்பக்கதைகளையும் கேட்டும் கண்களில் சில சொட்டு கண்ணீர் விட முயல்கிறாள்//


சூப்பர்:):):)


//
ஒருக்களித்த கதவிற்கு வெளியே .. "அடி என் தங்கமே! அழாதே ! இந்தா அம்மா வரேண்டி கண்ணு! உன்னை தூக்கிக்குவேனாம்.... " - நிலாவின் அம்மா வருகிறாள் பார்//

நான் நெஜத்துல ஒரு குழந்தைய வளர்க்கிற வரை இப்டி கொஞ்சறவங்களை பாத்து ஆச்சர்யப்படுவேன், எப்டி இப்டி கொஞ்ச முடியுதுன்னு:):):)

rapp said...

//யுத்தக்களங்களில் கண்ணீருக்கு வேலையில்லை.
அழுதழுது ஓய்ந்துவிட்ட கண்களில் கண்ணீருக்கு சக்தி இல்லை.
விட்ட கண்ணீருக்கு விலை இல்லை.
ஆற்றுவிக்க ஒரு ஆளில்லை
விரக்தியின் எல்லையில் அவர்கள் கண்ணீர் தேவதைகளைக் கண்டாலே வெறுத்து ஒதுக்கி வருகிறார்கள். ஒரு சொட்டு கண்ணீர் விடவும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. கருணையில்லாத மனங்களுக்கு முன் மதிப்பிழந்து நிற்கிறது கண்ணீர்.//

:(:(:(

சந்தனமுல்லை said...

கதையில குதிச்சுட்டீங்களா...படங்கள் அழகு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கார்த்திகை பாண்டியன் மறுமொழிக்கு நன்றி.. நாளை உலகம் என்ன ? இன்றைக்கே பயமாகத்தானே இருக்கு..

-------------------
ஷீ நிசி நீங்க எல்லாத்தையும் கவிதையாவே பார்ப்பீங்க போல :)
-----------------------

தெகா படித்த செய்தி இல்லை பார்த்த ஒரு செய்திக்கோப்பு .. ஒரு குழந்தையின் கண்ணீரில்லாத அழுகை ..ஒரு அம்மாவான என்னை பாதித்ததால் ..இது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் பிரியன் கோபிநாத் நன்றி நன்றி..
------------------------

பாசமலர் இன்னும் கூட சிலவரிகள் எழுதினேன் ..நல்லாவும் வந்தது. ஆனால் குழந்தைகளின் கண்ணீர் பற்றிய அறிவியலுடன் அது இடித்தது அதனால் விட்டுவிட்டேன்..
-------------------------

மீனா .. மறுமொழிக்கு நன்றிங்க..
உங்க கமெண்ட் பார்த்து என்ன சொல்ரதுன்னே தெரியலைங்க.. அப்படி அனுப்பமுடிஞ்சா எத்தனை நல்லா இருக்கும்.. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மின்னல் வாங்க.. வித்தியாசமா எழுதியதால் தான் நீங்க வந்தீங்க .. :)
-------------------------------
ராப் வாம்மா நன்றி..
-------------------
முல்லை.. இதை என்ன வகையில் சேர்க்கன்னு தெரியல ..அதனால் சிறுகதையிலேயே சேத்திட்டேன்.. கதைதானே விட்டிருக்கேன்.. :)

சென்ஷி said...

மீ த 25 :-)

சென்ஷி said...

//கருணையில்லாத மனங்களுக்கு முன் மதிப்பிழந்து நிற்கிறது கண்ணீர்.//

எல்லா வரிகளும் அற்புதமா இருந்தாலும் இந்த வரி ரொம்ப அர்த்தபூர்வமா இருக்குது.. கலக்கிட்டீங்க அக்கா :-)

மங்கை said...

உங்க வழக்கமான நடையில இருந்து முற்றிலும் மாறுபட்ட நடை... நல்லா வந்து இருக்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி நன்றி.. தேவதைன்னு தலைப்பு வச்சதுமே உன்னைத்தான்ப்பா நினைத்தேன்..
-----------------------

மங்கை நன்றி. :)

hema said...

supper

mani said...

really super

முத்துலெட்சுமி/muthuletchumi said...

gjk , hari இருவருக்கும் ந்ன்றிகள்.