April 15, 2009

நடிகர் விவேக் சொற்பொழிவு

புதன்கிழமை வேலை நாளாக இருந்தாலும் மக்கள் விவேக் ஒருவருக்காக அலைகடலென (சே தில்லியில் கடலே கிடையாதே! ) ஆந்தி காற்றென( மணற்புயல் ) வந்து குமிஞ்சிட்டாங்க.. சாலை நெறிசலில் சிக்கி தாமதமாக தமிழ்ச்சங்க அரங்கத்தை அடைந்தோம்.. மக்கள் கீழ் தளம் நிரம்பி பலகணியிலும் நிரம்பி பலகணியின் இடைப்பட்ட படிக்கட்டுகளையும் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் கார்பெட் விரித்த படிக்கட்டுகளில் அமர்ந்தோம். ஒரு இளைஞர் அதிசயமாய் நீங்க உக்காருங்களேன் என்று எனக்கு இருக்கை அளித்தார். நன்றி சொல்லி அமர்ந்தேனோ பிழைத்தோனோ.. ? ஏறுவோரும் இறங்குவோரும் என்று தொந்திரவாக இருந்திருக்கும்.

விவேக்கும் சாலை நெரிசல் காரணமாக தாமதம் எனவே நிகழ்ச்சியும் தாமதமாகவே ஆரம்பித்தது. பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கு சுடச்சுட தில்லித் தமிழ்சங்கம் தரும் பாராட்டுவிழா. விவேக் பேச்சிலேயே சொன்னார் ..தமிழனுக்கு சூடுன்னா ரொம்ப பிடிக்கும்ன்னு ( தமிழ்மணம் படிப்பாரோ சூடான இடுகை எல்லாம் தெரிஞ்சுருக்கே அவருக்கு) ரெண்டு நண்பர்கள் சந்திச்சா அடிக்கிற வெயிலப்பத்தி கண்டுக்காம வாயேன் சூடா ஒரு டீ குடிக்கலாம்ன்னு சொல்வாங்கன்னு ..:)

அவரைத்தவிர அங்கே வந்திருந்த அறிஞர்களைப் பற்றிய அறிமுகம் கொஞ்சம் குறைவானதே ( ஒருவேளை என்கருத்தாக இருக்கக்கூடும்) பத்ம பூஷன்
டாக்டர் சரோஜினி வரதப்பன் சிறந்த சமூக சேவகி
பத்மஸ்ரீ
டாக்டர் கிருஷ்ணக்குமார் ( ஆரியவைத்தியசாலை கோவை )
பத்மஸ்ரீ டாக்டர் தன்வந்திரி சிவராமன் (அலோபதி டாக்டர்)
பத்மஸ்ரீ சுப்ரமணியம் கிருஷ்ணஸ்வாமி ( குறும்பட இயக்குனர்)
பத்மஸ்ரீ காஞ்சிவரம் ஸ்ரீரங்கச்சாரி சேஷாத்ரி ( கணிதம்)

ஐ ஏ எஸ் அதிகாரி பாலசந்திரன் அவர்கள் வழக்கம்போல அழகான ப்ரசங்கத்துடன் தலைமை தாங்கி ஒவ்வொருவரையும் பாராட்டிப் பேசினார். போன முறை சுசீலா அம்மாவுக்கெல்லாம் பாராட்டு விழா நடந்தபோது ஒவ்வொருவரையும் பேச வைத்தனர். ஆனால் இம்முறை யாரும் தயாராக வரவில்லையோ என்னவோ? ஆனால் விவேக் தான் சொற்பொழிவு ஆற்றுவதாக இருந்தாரே அதுக்குத்தானே கூட்டம்.

சுடச்சுடத் தமிழ்சங்கம் அளிக்கும் விழாவில் அவருக்கு பல வெளிநாட்டு தமிழ்சங்கங்களுக்கு சென்றுவந்ததில் ஒரு சுவையான நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். ஊரைச்சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது கதையாக அந்த அமரிக்க தமிழ்சங்க பெயரை மட்டும் சொல்லவில்லை. சொன்னால் இண்டர்நெட்டில் அவரை திட்டுவார்களாம்.. ( நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா..)
விழாவுக்கு போகும் முன் கிருஷ்ணா ஸ்வீட் ஓனரை கோயிலில் வைத்து பார்த்தாராம் அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு வாங்க என்று சொந்த அழைப்பில் அழைத்துப் போனாராம். அங்கே நன்கொடையாக எல்லாருக்கும் இலவசமாக குடுக்க என்று கிருஷ்ணாக்காரர் குடுத்த மைசூர்ப்பாக்கை டேபிள் போட்டு வித்துட்டிருந்தாங்களாம்.. பஞ்ச் டயலாக் என்னனா க்ருஷ்ணா ஸ்வீட் ஓனர் கிட்டயே சார் கிருஷ்ணா மைசூர் பாக்கு சார் 50 ரூபாதான் இண்டியாலேர்ந்து வந்திருக்கு நல்லாருக்கும்ன்னு விக்கப்பாத்தாங்களாம்.. சரி சரி நன்கொடை எப்படியோ வசூலாகுதுன்னு சிரிச்சிக்கிட்டாங்களாம்..

பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கும் போது தன் பெற்றோரையும் மேடை ஏற்றி அவர்களுக்கும் சிறப்பு செய்தார்.

வரிசையா அவர் நடித்த பல படங்களின் சாதா ( ஆனா செம ஹிட்) காமெடிகளை அடுக்கினார் . ஒவ்வொன்று க்கு பின்னும் இதுக்காகவெல்லாம் எனக்கு பத்மஸ்ரீ குடுக்கல என்று சொல்லிக்கொண்டே வந்து பகுத்தறிவு மற்றும் இன்னபிற கருத்து கந்தசாமி காமெடிகளை சொல்லி இவற்றுக்காகத் தான் கொடுத்திருக்கனும் என்று முடித்தார். விழா ஆரம்பத்தில் நடுவில் எழுந்து உள்ளே போய்விட்டு வந்தார். போகும் போது எங்க ரசிகர்கள் பயந்துடுவாங்களோ என்று இந்தா வரேன் வரேன்னு சைகை செய்ததை நினைத்து ஒவ்வொரு ரசிகர்களும் ஆனந்தப்பட்டார்கள்.

வழக்கம்போல மைக் கிடைச்சா அறுத்தெடுப்பார்ன்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா நாம நினைச்சது எங்க நடக்குது அவர் நல்லாவே பேசிட்டார். ஐ. ஏ. எஸ் அதிகாரியின் பேச்சை விவேக் மிகவும் பாராட்டினார்.. என்னய்யா அதிகாரிகள் என்னத்த பேசப்போறாங்க.. லெட்ஸ் ஸ்டார்ட் சொல்லிட்டு கிளம்பிருவாய்ங்களேன்னு நினைச்சேன் . யூ மேட் மை டே ன்னு சொல்லிட்டார்.


சென்னையில் மூணு க்ளைமேட் உண்டாம் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.. அது மாதிரி அவருக்கு டெல்லின்னா ஹாட்டஸ்ட் ஒன்னாம் இன்னோன்னு கோல்டஸ்ட் ஆம். ஒன்னுல உடம்புவெடிக்க வெயிலாம். இன்னோன்னு உதடு வெடிக்க குளிராம்.. ஆக மொத்தம் வெடிச்சிட்டே இருக்குமாம். காலையில் வாக்கிங் கீக்கிங் போய் உடம்பை ட்ரிம்மா வச்சிக்கவேண்டிய கட்டாயத்துல இருக்காராம் ஏன்னா இன்னு ம் வர இளைய நடிகர்களுக்கும் நண்பரா வரவேண்டாமா? அமைச்சர்கள் வீடுகிட்ட ஹோட்டல். காலை வாக்கிங் போனப்ப எங்க பாத்தாலும் துப்பாக்கி காவலர்களையும் சிமெண்டு மூட்டைக்கிடையில் காவலர்கள் என்று நிம்மதியா இந்த ஊருல வாக்கிங் போகமுடியுமாய்யா.. வேகமா நடந்தாலும் பாக்கறாங்க ..மெதுவாப்போனால் சந்தேகப்படராங்க.. உத்துப்பாத்தா சுட்டுடுவாங்கன்னு பயந்துகிட்டே வாக்கிங்க் போனாராம்.

சரோஜினி வரதப்பன் கூட நல்ல வாக்கர் பீச்ல வாக்கிங்க் வருவாங்க் காந்தி மாதிரி பெரிய பெரிய ஆளுங்கள்ளாம் கூட நல்ல வாக்கர்ஸ் ன்னு அங்கயே கருத்து கந்தசாமியாகிட்டார். எல்லாரும் மன நிறைவோட அவர் ஜோக்குகளுக்கு சிரித்துவிட்டு ஆட்டோக்ராப்க்கு முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள்.

பி.கு நிஜம்மாகவே மேடையில் இருந்த மற்றவர்களைப் பற்றி இனிதான் நான் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களைக் குறிப்பிட்டு அதிகம் எழுதாததற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.

25 comments:

Thamiz Priyan said...

விவேக் சொற்பொழிவா? தலைப்பே பலமா இருக்கே..? ;-)

சென்ஷி said...

:‍))

மத்தவங்களை பத்தியும் விசாரிச்சு எழுதுங்கக்கா.. விவேக்குக்காக இன்னமும் தில்லியில கூட்டம் கூடுறதுங்கறது ஆச்சரியப்படுறதா தெரியலை. இருக்குற ஒரே ஒரு பொழுதுபோக்குன்னு நினைச்சு அவரைப்பார்க்க போக வேண்டியதா இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்படித்தாங்க அவங்க நிகழ்ச்சிநிரல் போட்டிருந்தாங்க..பின்ன நானும் அப்படித்தானே போடனும்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி அல்ரெடி மத்தவங்களைப்பற்றி தேட ஆரம்பிச்சிட்டேன்.. அதான் லிங்க் போட்டிருக்கேன் பாரு..

தில்லிமக்கள் பொழுதுபோகமல்லாம் இல்ல.... எங்கயும் சட்டுன்னு கிளம்பி இப்படி வந்து உக்காரமாட்டாங்க.. பலதுக்கு கூட்டம் வராது..

இயற்கை நேசி|Oruni said...

ஒவ்வொன்று க்கு பின்னும் இதுக்காகவெல்லாம் எனக்கு பத்மஸ்ரீ குடுக்கல என்று சொல்லிக்கொண்டே வந்து பகுத்தறிவு மற்றும் இன்னபிற கருத்து கந்தசாமி காமெடிகளை சொல்லி இவற்றுக்காகத் தான் கொடுத்திருக்கனும் என்று முடித்தார். //

தமிழ்மணம் கண்டிப்பா வராருன்னு தெரியுது... :-)

சென்ஷி - ....இருக்குற ஒரே ஒரு பொழுதுபோக்குன்னு நினைச்சு அவரைப்பார்க்க போக வேண்டியதா இருக்கும்.... அப்படித்தான் இருக்குமோ :-)).

என்ன இருந்தாலும் பெரியவர் நாகேஷையும் ஒரு விருது கொடுத்து கெளரவிச்சிருக்கலாம்.

முத்து, கை கேக்க மாட்டீங்கிதுங்க :-)

ஆயில்யன் said...

டிரையல் பதிவு தான் இது!

அனேகமா நிறைய நிறைய விசயங்களை விட்டுட்டோமேன்னு யோசிச்சு யோசிச்சு வரும் !

வரும் வரைக்கும் வெயிட்டீஸ்....!

☀நான் ஆதவன்☀ said...

அடி சக்கை...

அடுத்த வருஷம் வடிவேலுக்கும் முத்துகாளைக்கும் பத்மசீரீ(இதுக்கு காரணம் உங்களுக்கு தெரியுமே) விருது கொடுப்பாங்க...அவுங்களையும் பாராட்டி நம்மாளுங்க விழா எடுப்பாங்க

துளசி கோபால் said...

ஆஹா....... அருமையா எல்லாத்தையும் 'கவர்' பண்ணிட்டீங்க!!!!

முந்தாநாள்தான் விவேக்கின் முதல்படம் பார்த்தேன்.

சமீபத்துலே வந்த படங்களில் அவர் காமெடி சரியாப்போகலைன்னு நினைப்பு.

தில்லிக்காரங்களுக்கு 'ஜே' போட்டுத்தான் ஆகணும்போல:-))))

ராமலக்ஷ்மி said...

நன்றாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்.

அப்புறம் அடிக்கடி டிவிட்டர்ஸ் அப்டேட் பண்ணுங்க. முதலாவது உங்க கவிதையில் கண்டதே. ரெண்டாவதும் பிடிச்சிருக்கு. நல்லாக் கேட்டிருக்கீங்க ஒரு கேள்வி:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா.. நாகேஷுக்கும் குடுத்திருக்கலாம் மறுக்கலை.. ஆனா திறமையைக் கண்டறியரது மட்டுமில்லாம அதை அங்க இங்க சொல்லி மேலேத்திவிடறதுங்கறது ஒருவர் பழகும் விதத்திலும் இருக்கிறது இல்லையா.. ?
--------------------------
ஆமா ஆயில்யன் .. எல்லாத்தையும் எல்லாம் என்னால எழுதமுடியாதுன்னு தெரியும் . மறந்துருவேனேனு தான் உடனே போட்டாச்சு பதிவு..
இப்பக்கூட அவங்க பேரெண்ட்ஸ் மேடை ஏறினத சேக்கலையேன்னு சேத்தேன்..
----------------------------
ஆதவன் ஏன் கோவமாகிறீங்க..அதுவும் நீங்க கோவமாகலாமா.. நீங்களே நகைச்சுவை பதிவு எழுதறவர் அதும் இப்ப வருத்தப்படா வாலிபசங்கத்துல அட்லாஸ் வாலிபரா இருப்பவர் ..இப்படி சொல்லலாமா .. வடிவேலு உங்க வீட்டுப்பிள்ளை எங்க வீட்டுப்பிள்ளை.. இன்னைக்கும் அவ்வ்வ்.. ஆஹா போடாம நீங்கல்லாம் சேட் கூட செய்யறதில்ல.. அவங்கவங்க துறையில் மேலே வந்தவங்களுக்குத்தானே தராங்க ஸோ நீங்க சொன்னவங்களுக்கு தந்தாலும் தப்பு இல்லை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி .. வாங்க.. விவேக்க்குக்கு அப்பப்பா ஏறுமுகம் இறங்குமுகமா இருக்கத்தன் செய்யுது.. ஆனா மேடையில் ஒன்னு சொன்னார்.மக்களின் ஆராவாரம் பாத்துட்டு , இனி நகைச்சுவை தான் எனக்கு மாத்தல்லாம் மாட்டேன்னு.. :))
----------------------------
ராமலக்ஷ்மி நான் ஒரு சோம்பேறி ..டிவிட்டர் முடிந்தவரை அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன்..

சென்ஷி said...

/முத்துலெட்சுமி-கயல்விழி said...

தெகா.. நாகேஷுக்கும் குடுத்திருக்கலாம் மறுக்கலை.. ஆனா திறமையைக் கண்டறியரது மட்டுமில்லாம அதை அங்க இங்க சொல்லி மேலேத்திவிடறதுங்கறது ஒருவர் பழகும் விதத்திலும் இருக்கிறது இல்லையா.. ? //

ஆமாம்க்கா.. குருவுக்கு காக்கா பிடிக்கறதுன்னா என்னன்னு தெரியாது. வெறும் காமெடியிலயே காலத்த ஓட்டிட்டாரு ;-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காக்கான்னு சொல்லவரலை ஆனா அதும் இருக்கலாம்.. சென்ஷி,,
அந்த காலம் மாதிரியா இப்ப நடிகர்கள் பல விழாவுக்குப் போறாங்க .. பலரோட தொடர்புகள்.. நட்புக்கள்.. புகழ் சீக்கிரமா பரவிடும்..மேலேத்தூக்கிவிட்டவங்க நட்புகள்ன்னு தான் அவரும் மேடையில் சொன்னார்..
ஒருத்தருக்கு தந்தா இன்னொருத்தருக்கு தராம இவருக்கு ஏன் தந்தாங்கன்னு கேக்கறதில எனக்கு உடன்பாடு இல்லை..

goma said...

அவருக்கு அரசாங்கம் என்ன அவார்டு வேண்டுமென்றாலும் தந்து கெளரவிக்கட்டும் .சின்னக் கலைவாணர் என்ற பட்டத்தை மட்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.அல்லது திரு விவேக் மரியாதைக்குரிய அந்த பட்டத்துகுத் தக்கவாறு தன்னை மோல்டு செய்து கொள்ள வேண்டும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோமா வாங்க..நீங்க சொல்றது சரிதான்.. :)

கோபிநாத் said...

பகிர்ந்தமைக்கு நன்றிக்கா ;-))

Sasirekha Ramachandran said...

//பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கும் போது தன் பெற்றோரையும் மேடை ஏற்றி அவர்களுக்கும் சிறப்பு செய்தார்//

நெகிழ்ச்சியான விஷயம்!!

சந்தனமுல்லை said...

எதுக்குக் கொடுத்தாங்கன்னு விருது பெற்றவங்களுக்கே தெரியலையா...கொடுமைதான்!

// தமிழ் பிரியன் said...

விவேக் சொற்பொழிவா? தலைப்பே பலமா இருக்கே..? ;-)//

ஒருவேளை அப்படியாவது தில்லில கூட்டம் கூடுதான்னு வைச்சிருப்பாங்களோ?!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி..
-------------------------
சசி அந்த பெற்றோருக்கு ரொம்ப மகிழ்ச்சிங்க அவங்கம்மா ரொம்ப எளிமையா வந்தாங்க.. அவங்கப்பா ரசிகர்களை எல்லாம் ஆவலாவும் மகிழ்ச்சியாவும் பாத்தார்..
------------------------
முல்லை ஏன் கொடுக்கலைன்னும் சொன்னாரு.. எதுக்காக குடுத்திருப்பாங்கன்னு சொன்னார்... எல்லாம் நம்ம தமிழ்மண நட்சத்திரம் மாதிரி தான்..:)) ஆனா அவருக்கு ஏன் கொடுத்தாங்கன்னு திட்டறவங்க லிஸ்ட்ல நான் இல்ல..கண்டிப்பா குடுத்தே ஆகனும்ன்னு சொல்ற லிஸ்ட்லயும் நான் இல்ல..

குடுத்தது தப்பு இல்லை அவ்வளோ தான்..

Poornima Saravana kumar said...

சென்னையில் மூணு க்ளைமேட் உண்டாம் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.. அது மாதிரி அவருக்கு டெல்லின்னா ஹாட்டஸ்ட் ஒன்னாம் இன்னோன்னு கோல்டஸ்ட் ஆம். ஒன்னுல உடம்புவெடிக்க வெயிலாம். இன்னோன்னு உதடு வெடிக்க குளிராம்.. ஆக மொத்தம் வெடிச்சிட்டே இருக்குமாம். காலையில் வாக்கிங் கீக்கிங் போய் உடம்பை ட்ரிம்மா வச்சிக்கவேண்டிய கட்டாயத்துல இருக்காராம் ஏன்னா இன்னு ம் வர இளைய நடிகர்களுக்கும் நண்பரா வரவேண்டாமா? அமைச்சர்கள் வீடுகிட்ட ஹோட்டல். காலை வாக்கிங் போனப்ப எங்க பாத்தாலும் துப்பாக்கி காவலர்களையும் சிமெண்டு மூட்டைக்கிடையில் காவலர்கள் என்று நிம்மதியா இந்த ஊருல வாக்கிங் போகமுடியுமாய்யா.. வேகமா நடந்தாலும் பாக்கறாங்க ..மெதுவாப்போனால் சந்தேகப்படராங்க.. உத்துப்பாத்தா சுட்டுடுவாங்கன்னு பயந்துகிட்டே வாக்கிங்க் போனாராம். //

அக்கா ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க....

அதுவும் இந்த பேரா சான்ஸே இல்லை!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பூர்ணிமா அந்த பேரா பூராவும் அவர் சொன்னது தான்ப்பா :) ஞாபகம் வந்தது எழுதி இருக்கேன் அவ்வளவு தான்.

விக்னேஷ்வரி said...

நான் வந்தது அவர் வந்துட்டுப் போன அடுத்த நாள் தான் எனக்கு தெரியும். I missed the oppurtunity. :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க விக்னேஷ்வரி .. இத்தனை அருகில் இன்னொரு பெண் ப்ளாக்கர் கிடைச்சிருக்கீங்க..மகிழ்ச்சி. தில்லி தமிழ்சங்கத்துக்கு இணையத்திலேயே நிகழ்ச்சி நிரல் கிடைக்குது முன்பே பாத்து வச்சிக்கோங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்படியே விவேக் பேசுனத கேட்கறா மாதிரியே இருந்துச்சி இந்த பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க அமித்து அம்மா .. இப்பல்லாம் நாம யாருங்க நம்மளை மாதிரியெ பேசறோம் வடிவேலுவோ விவேக்கோ மாதிரி தானே.. :)அப்படியே கேக்கறமாதிரி தான் இருக்கும்..