October 15, 2009

சிறுமுயற்சியில் இன்னுமொரு முயற்சி

கவிஞர் தாமரையின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ( யாருக்குத்தான் பிடிக்காதுங்கறீங்களா? )

பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்த பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்புகளற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ் வார்த்தைகளை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்த புதிய தமிழ்வார்த்தைகளை என்னவென்று தேடி தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.

தாமரை அவர்களிடம் நான் கண்ட சிறு பேட்டியினை நீங்கள் இங்கே வாசிக்கலாம்.

என் முயற்சிக்கு ஊக்கங்களும் , அவற்றை திறம்பட செய்ய தங்கள் அறிவுரைகளையும் நேரத்தையும் தந்து உதவிவரும் நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியூரில் இருப்பதால் பின்னூட்டங்களை பிரசுரிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புரிந்துணர்தலுக்கு நன்றி

16 comments:

☀நான் ஆதவன்☀ said...

வந்திடுச்சா :) படிச்சுட்டு வரேன். தீபாவளி வாழ்த்துகள்க்கா.

☀நான் ஆதவன்☀ said...

//not 4 publish//

லின்ங் செக் பண்ணுங்கக்கா.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல கேள்விகள். நல்ல பதில்கள்.

அவரது கணவரும் தமிழ்ப்பற்று மிக்கவர் என்பது புது செய்தி.

Agila said...

Link is not working
Thanks
Ag

காட்டாறு said...

//வெளியூரில் இருப்பதால் பின்னூட்டங்களை பிரசுரிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//

வெளியூரில் இருந்தாலும் பதிவு போடுறீங்க பாருங்க. அங்க தான் உங்க பெரு சிறுமுயற்சி மேலோங்கி நிற்குது. வாழ்க உங்கள் சேவை!

நசரேயன் said...

பேட்டி லிங்க்கை சரிசெய்யவும், நேரம் கிடைக்கும் போது

R.Gopi said...

//கவிஞர் தாமரையின் பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ( யாருக்குத்தான் பிடிக்காதுங்கறீங்களா? )//

முத்து லெட்சுமி... மற்றொரு சூப்பர் பதிவோடு வந்து இருக்கீங்க...அதற்காகவும் கூடவே என் வலைப்பக்கம் வந்திருந்து தீபாவளி சிறப்பு பெற்று சென்றமைக்கும் வாழ்த்துக்கள்...

அதானே.... தாமரையின் மயக்கும் வரிகளுக்கு நான் அடிமை... அதுவும் மின்னலே படத்தின் வசீகரா பாடலின் இந்த வரிகள்... ஆஹா...

"அடைமழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சேர்ந்து
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்

புது புது பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்"

தாமரை பேட்டி எடுத்தமைக்கு வாழ்த்துக்கள்...

பேட்டியை படித்தேன்... இரட்டை அர்த்தம், ஆங்கிலம் கலக்காத‌ அவரின் உறுதிப்பாடுக்கு என் சல்யூட்...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி .....

(பின்குறிப்பு : சமீபத்தில் "வாரணம் ஆயிரம்" படத்தில் அவர் எழுதிய "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை" என் மனதில் இப்போதும் ரீங்காரமிடுகிறது...)

கோபிநாத் said...

தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா ;)

சிறுமுயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

லிங்கு வேலை செய்யவில்லை..;(

SUFFIX said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆதவன், நன்றி அகிலா, நன்றி நசரேயன் லிங்க் சரிசெய்துவிட்டேன்.

----------------
காட்டாறு நம்ம தான் ப்ராக்ஸி வச்சி பப்ளிஷ் செய்துட்டமில்ல.. தோழி
இருக்க பயமேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆர் கோபி, நன்றி ஷஃபிக்ஸ் நன்றி சிங்கக்குட்டி.. :)

சந்தனமுல்லை said...

நல்லாயிருக்கு முத்துலட்சுமி! அவரது முயற்சிக்கு வாழ்த்துகள்!

கானா பிரபா said...

தாமரை பேட்டியை இன்றுதான் கண்ணுற்றேன் சிறப்பாக இருக்கின்றது.

மங்கை said...

செய்யற வேலைய என்னைக்கு நான் உறுப்படியா செய்திருக்கேன்..எப்படியோ எல்லாரும் படிச்சிருந்தாங்கன்னா சரி...:))

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி முல்லை , நன்றி கானா

------------------
அட மங்கை என்ன இது ?
செய்யற வேலை = என்னை நம்பினது

நான் சரியான லிங்க் சேர்த்திருந்திருப்பேன்னு நீங்க என்னைப்பத்தி நினைச்சதை சொல்றீங்களா ? :))