சிறுமுயற்சியைப் பற்றி தேவதை என்கிற பெண்கள் இதழில் போட இருக்கிறோம் என்று பின்னூட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டார் அப்பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர். புகைப்படம் பிரசுரிப்பது அவர்களுக்கு கண்டிப்பு என்றார்கள். பதிலுக்கு நானும் ஒரு கண்டிசனைச் சொல்லிவைத்தேன். என் பெயரை மட்டும் போட்டு என் பதிவினை பிரசுரித்த குமுதம் போல இல்லாமல் லிங்க் அச்சிடப்படவேண்டும் முக்கியமாக வலையோடு உறவாடு என்கிற பகுதிக்கு என்பதால் இது அவசியமுமாகும். படிச்சிட்டு பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ புதியதாக பல பெண்கள் எழுத வரலாம்.. லிங்க் அச்சில் வந்திருக்கிறது . . எனக்கான படி(காப்பி) இன்று வந்து சேர்ந்தது..நன்றி
அங்கே சிறுகுறிப்பில் சொன்னது போல என் முயற்சிகளை சேமிக்கும் இடமான இத்தளத்தில் இந்நினைவையும் சேமிக்கிறேன்.


பத்திரிக்கை ஜூலை மாதத்திலிருந்து வெளிவருகிறதாம். அவள் விகடனுக்கு தங்கச்சி போல இருக்கிறது. பெண்கள் பத்திரிக்கைகளுக்கு என்று தனியாக நாட்டில் வைத்திருக்கிற அளவுகோலில் உள்ள எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கிறது. எம்பிராய்டரியிலிருந்து ,சொற்ப முதலீட்டு சிறுதொழில்கள், வீட்டுக்குறிப்புகள் வரை....:) வகை வகையான பிரியாணி க்கு ஒரு இணைப்பு. மாலை போடற சீசனுக்காக சபரிமலை தரிசனம் என்கிற சபரிமலை பற்றிய கையேடு. குடும்பப்பத்திரிக்கைன்னு சொல்லிக்கலாம் ..பயமுறுத்தாத படங்கள். :)
38 comments:
வாழ்த்துகள்க்கா.
//பெண்கள் பத்திரிக்கைகளுக்கு என்று தனியாக நாட்டில் வைத்திருக்கிற அளவுகோலில் உள்ள எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கிறது. //
அட்லீஸ் பெண்கள் பத்திரிக்கைன்னு தனியா ஒன்னாவது இருக்கு. ஆண்கள் பத்திரிக்கைன்னு எதுவுமே இல்லையே :(
//புகைப்படம் பிரசுரிப்பது அவர்களுக்கு கண்டிப்பு என்றார்கள்//
//பயமுறுத்தாத படங்கள். :)//
ஏதோ வலியக்கவந்து சொல்ற மாதிரி இருக்கேக்கா :))))
congrats :)
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி. அசத்துங்கள்!
வாழ்த்துக்கள் முத்தக்கா
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் முத்தக்கா..!
//சிறுமுயற்சியைப் பற்றி தேவதை என்கிற பெண்கள் இதழில் போட இருக்கிறோம் என்று பின்னூட்டத்தின் மூலம் தொடர்பு கொண்டார் அப்பத்திரிக்கையின் பொறுப்பாசிரியர். புகைப்படம் பிரசுரிப்பது அவர்களுக்கு கண்டிப்பு என்றார்கள். பதிலுக்கு நானும் ஒரு கண்டிசனைச் சொல்லிவைத்தேன். என் பெயரை மட்டும் போட்டு என் பதிவினை பிரசுரித்த குமுதம் போல இல்லாமல் லிங்க் அச்சிடப்படவேண்டும் முக்கியமாக வலையோடு உறவாடு என்கிற பகுதிக்கு என்பதால் இது அவசியமுமாகும். படிச்சிட்டு பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ புதியதாக பல பெண்கள் எழுத வரலாம்.. லிங்க் அச்சில் வந்திருக்கிறது . . எனக்கான படி(காப்பி) இன்று வந்து சேர்ந்தது..நன்றி//
நீங்களும் எழுத்துலகில் “ரவுடி”யானதற்கு வாழ்த்துக்கள்... எல்லாரும் பாத்துக்கோங்க... நானும் ரவுடியாயிட்டேன்...
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி...
//பத்திரிக்கை ஜூலை மாதத்திலிருந்து வெளிவருகிறதாம். அவள் விகடனுக்கு தங்கச்சி போல இருக்கிறது. //
ஹா...ஹா...ஹா... இதுதான் முத்துலெட்சுமியின் டச்..
வாழ்த்துக்கள்.... தொடர்ந்து கலக்குங்க....
வாழ்த்துகள் கலக்குங்க :-)
வாழ்த்துகள்!
கலக்குங்க
வாழ்த்துகள்!
மாயவரம் மாஃபியா சார்பாக வாழ்த்துக்கள் :))))
மகிழ்வாய் உள்ளது. வாழ்த்துக்கள் அக்கா!
வாழ்த்துகள்...........
சும்மா புகுந்து வியையாடுங்க...........
நான் ஆதவன் , பெண்கள் பத்திரிக்கைன்னாலும் கடைசிபக்கத்துல ஆண்கள் பாதுகாப்பு சங்கமாம் எழுதி இருக்காங்க.. :) டோண்ட் ஒர்ரி பெண்கள் பத்திரிக்கைன்னா குடும்பம்முழுக்கத்தான்னு தான் சொல்லிட்டனே..
என் புகைப்படம் இருக்கற பகுதி மேலே இல்லையே..வேற யாரோ ரெண்டு யங்க் ப்ரெண்ட்ஸ் போட்டோ காத்திருக்கும் நட்புன்னு ஒரு பதிவுக்கு பொருத்தமா இருக்கும்ன்னு போட்டிருக்காங்க அதை என் போட்டோன்னு நினைச்சு பயந்துக்கவேண்டாம்..
----------------------------------
நன்றி ஜீவ்ஸ், நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சின்ன அம்மிணி , நன்றி அமிர்தவர்ஷினி அம்மா, நன்றி உண்மைத்தமிழன் ..
நன்றி முல்லை , நன்றி குசும்பன்
-----------------------
நன்றி ஆர். கோபி .. நல்லவேளை ரவுடின்னு ஒத்துக்கிட்டீங்க..
------------------------
யெஸ் ஆயில்யன் பாஸ்.. நன்றி
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்!!
வந்தாச்சா, வந்தாச்சா... :))
எங்க நைசா உங்களப் பத்திய விவரமடங்கிய பகுதியை மட்டும் இங்கு துண்டிச்சு வைச்சிருக்கீங்க...
மென்மேலும் புகழை ஈட்டி இந்த செடிகள் போலவே வளர வாழ்த்துக்கள், சிறு முயற்சி!
சென்ஷி நன்றி :)
சங்கவி நன்றிங்க :)
நன்றி நிஜம்மா நல்லவன் :)
நன்றி மேனகா சத்யா:)
--------------------
நன்றி தெகா..
அதுவா என்ன படிச்சிருக்கேன் என்ன ஏதுன்னு கேட்டாங்க... அதுக்கு நடுவில் என் படமும் போட்டிருக்காங்க..எதுக்கு எல்லாரையும் பயமுறுத்திக்கிட்டுன்னு அதை கட் செய்திட்டேன்.. விசயம் இதான் அங்க இருக்கிறது.
\\இளங்கலை வேதியியல் மற்றும் விளம்பரத்துறையில் டிப்ளமோ பெற்றிருக்கிறேன்.
இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகளின் தாய். கணவர் தனியார்த்துறையில்
மேனேஜர். தில்லியில் வசிக்கிறேன்.
கவிதைகள் , புகைப்படங்கள் ,அனுபவக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும்
வாழ்வில் நானெடுக்கும் சிறு சிறு முயற்சிகளை பதிவிட்டு சேமிக்கிறேன்.
சிறுமுயற்சி தளத்தை துவங்கி 3 வருடங்களாகிறது. தற்போது மற்ற தமிழ்
இணையதளங்களுக்கும் ஆக்கங்கள் எழுதிவருகிறேன்.//
மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;)
சிறு முயற்சி, பெற்றுத் தந்த பெருவெற்றிக்கு
வாழ்த்துக்கள்
அன்பின் முத்துலட்சுமி
நல்வாழ்த்துகள்
பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,
இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….
http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html
அன்புடன்
செல்லத்துரை…..
கோபிநாத், செல்வநாயகி,நசரேயன், கோமா, சீனா எல்லாருடைய வாழ்த்துக்களுக்கும் நன்றி.. :)
----------------------------------
துரை , உங்க கதை ஆனாலும் ரொம்ப நீளம். நல்லா இருந்தது .ஐயப்பன் கோயில் பத்தியும் நல்லா எழுதி இருக்கீங்க நன்றி.. :)
வாழ்த்துக்கள் அக்கா!
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் லட்சுமி....கலக்குங்க
அப்புறம் லேட்டா வந்ததுக்கு மாப்பு..
:)
வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி.
தமிழ்பிரியன், மங்கை,அமுதா , சிங்கக்குட்டி நன்றி நன்றி ..:)
congrats!
பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்
சர்வேசன் , அருணா, தியா உங்களுக்கும் நனறி.. :)
எஸ் பாஸ் மேடம்.. நானும் வந்துட்டேன். இனி தொடர்ந்துவருகிறேன்..
nandrairunthathu kayal vizhi. unga blog nalla irukku. niraiya ezuthunga... puducherrypandian@gmail.com
வாழ்த்துகள்..
ஏன் உங்களைப்பற்றியுள்ள குறிப்பை மட்டும் தவிர்த்துவிட்டீர்கள்..?!
அட! இப்படி ஒரு பத்திரிக்கை வருகிறதா?
இனிய வாழ்த்து(க்)கள்.
நன்றி வாசமுடன் :) நன்றி பாண்டியன் :) நன்றி ரித்து அப்பா, குறிப்பா அது சும்மாதான் இங்க போடல .. :) ------------------ துளசி!!! குருவே!!!! நீங்க தான் முதல்லயே தேவதையில் வந்துட்டீங்களே
Post a Comment