March 12, 2010

நன்றியுடையவர்களாய் இருப்போம்..

எங்க ஏரியாவில் எல்லா நாளும் யமுனா ஸ்நானமும் கங்கா ஸ்நானமும் தான் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அதற்காக பெருமையெல்லாம் படமுடியாது. அந்த ஆற்றையெல்லாம் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சுத்திகரிப்பு செய்து அனுப்புகிறார்கள். குடிக்க குளிக்க எல்லாமே நல்ல தண்ணிதான். வேறு தண்ணீருக்கும் வழியில்லை. அரசாங்கம் அனுப்பும் தண்ணி வரலை என்றால் குளிப்பதற்கு விடுமுறை விடவேண்டியது தான். அடிபம்பு தரையிலிருந்து மோட்டார் என்பது எதுவுமே கிடையாது.

பழைய கட்டடங்கள் என்பதால் முன்பு வைத்திருந்த வாட்டர் மீட்டர்கள் வீணாகிபோய் செயல் இழந்து விட்டன. அதற்காக வருத்தப்படாமல் எதோ குத்துமதிப்பாக (குறைவானது) தொகையைப் பெற்று வந்தார்கள். தற்போது 2015 க்கு பிறகு நிலத்தடி நீர் குறைந்துவிடும் அபாயம் வந்திருப்பதாக தில்லி நகருக்கு குடிநீர் வழங்கும் அமைப்பில் தெரிவித்திருக்கிறார்கள். அதனால் மீண்டும் மீட்டர்களை சரிபடுத்துவது புதிதாக மாற்றுவது என்று திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். இதனால் மக்கள் சற்றேனும் தண்ணீர் பற்றி கவனமெடுக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

யமுனையில் ஒரு காலத்தில் வெள்ளம் வந்தது என்று கேள்விப்பட்டு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இப்போது ஓடுவது சாக்கடை மட்டும் தான். குப்பைகளை , மாலைகளை அதில் போடக்கூடாது என்பதற்காக மிகப்பெரிய வலையை பாலங்களின் இருமருங்கிலும் அமைத்திருந்தாலும் எம்பி குதித்தாவது மாலை நிறைந்த ப்ளாஸ்டிக் பைகளை போட்டுவிட்டு செல்வதை க்டமையாக வைத்திருக்கும் மககள் இருக்கிறார்கள்.
STOP TAKING WATER FOR GRANTED
முடிந்த வரை வீட்டில் குழாய்களை சரியாக மூடிவைப்பது , வீணாக தண்ணீரை இறைக்காமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிப்போம்.அருகில் இருக்கும் நீராதாரங்களில் குப்பைகளை கொண்டு சேர்க்காமல் இருப்போம். இயற்கை நமக்கு தன்னலமில்லாமல் கொடுக்கிறது. அதற்கு நன்றியுடையவர்களாக இருப்போம்.


மண்மரம்மழை மனிதன் பதிவு எழுதும் மரவளம் வின்சென்ட் அவர்களின் பதிவில்
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடம் சுத்தமான நீரின் அவசியம் பற்றி மக்களிடையே “சுத்தமான நீரினால் ஆரோக்கியமான ஒரு உலகம்” என்று தலைப்பிட்டு விழிப்புணர்வை தரவுள்ளனர். அதிவேக பொருளாதாரத்தினால் நகரங்களில் ஏற்படும் மாசு மற்றும் நீராதாரங்களே காணாமல் போய்விடுதல், கிராமங்களில் இரசாயான உரம், பூச்சி கொல்லி மற்றும் களைகொல்லிகளால் நீராதாரங்களில் மாசுபாடு போன்ற காரணிகளால் நீராதாரங்கள் இயற்கையாய் புதுபித்துக்க கொள்ளும் அல்லது சுத்தமாகும் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன. அதனைப்பற்றி மக்களும் அதிகம் கவலைப்படுவதில்லை. வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன்’


எனக்கேட்டுக்கொண்டார்.

நான் அழைக்க விரும்புவது :
முல்லை,
நான் ஆதவன்,
முகுந்த் அம்மா

45 comments:

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள் முத்துலெட்சுமி.

//தற்போது 2015 க்கு பிறகு நிலத்தடி நீர் குறைந்துவிடும் அபாயம் வந்திருப்பதாக தில்லி நகருக்கு குடிநீர் வழங்கும் அமைப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.//

இந்த அபாயம் பல இடங்களிலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதற்கு செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையோ சிந்தனையோ இன்றி இருக்கிறார்கள் மக்கள். மழைநீர் சேகரிப்பின் அவசியத்தையும் மக்கள் உணர வேண்டும்.

முகுந்த்; Amma said...

Good post. Thanks for the invitation Muthulakshmi. I will definitely take part in this.

Anonymous said...

இங்கேயும் தண்ணீர் கட்டுப்பாடுகள் உண்டு முத்தக்கா. சிக்கனமாத்தான் இருக்கின்றோம்.

சாந்தி மாரியப்பன் said...

//அருகில் இருக்கும் நீராதாரங்களில் குப்பைகளை கொண்டு சேர்க்காமல் இருப்போம்//

இதையும் முக்கியமா சொல்லியே ஆகணும். விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜா எல்லாம் முடிந்தபின் பார்த்தால் நீர் நிலைகளெல்லாம் குப்பைமலைகளாக இருக்கு.திருவுருவங்களை விசர்ஜன் செய்வதால், ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் நீரின் குணத்தையே கெடுத்துவிடுகிறது. மக்கள் எப்போத்தான் திருந்தப்போறாங்களோ தெரியல.

பாராட்டுக்கள் முத்துலெட்சுமி.

settaikkaran said...

ஏராளமாக இருக்கிற எதையும் தண்ணி பட்ட பாடு என்கிறோம். ஆனால், தண்ணீர் படுகிற பாடும், தண்ணீருக்காக பல இடங்களில் மக்கள் படுகிற பாடும் புரிந்து கொண்டால், சிக்கனமாயும், சுகாதாரமாயும் இருந்து தண்ணீரைச் சேமித்து வைக்கலாம். இப்போதைக்குப் பெருமூச்சு தான்!

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். அற்புதமான கட்டுரை. மிக்க நன்றி.

கோமதி அரசு said...

நல்ல பதிவு பாராட்டுக்கள்.

தண்ணீர் சிக்கனம்
வேண்டும் இக்கனம்.

//முடிந்த வரை வீட்டில் குழாய்களை சரியாக மூடிவைப்பது,வீணாக தண்ணீரை இறைக்காமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிப்போம்.அருகில் இருக்கும் நீராதரங்களில் குப்பைகளை கொண்டு சேர்க்காமல் இருப்போம்.இயற்கை நமக்கு தன்னலமில்லாமல் கொடுக்கிறது. அதற்கு நன்றியுடைவர்களாக் இருப்போம்.//

நானும் இதை வழி மொழிகிறேன்.

நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிறந்த தொடர்பதிவை தொடங்கிவைத்ததற்காய் பாராட்டுக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி ..நீங்களும் எழுதுங்களேன்..
---------------------
நன்றி முகுந்தம்மா
--------------------
குட் கேர்ள் சின்ன அம்மிணி கீப் இட் அப்..:)
----------------
சேட்டைக்காரன் சரியாச் சொன்னீங்க.. தண்ணிப்பட்ட பாடு இப்ப படாத பாடு தான்.
------------------
ஆமாங்க அமைதிச்சாரல்.. களிமண்ணில் செய்த உருவங்க்ள் போய் இப்ப கண்டதுல செய்துட்டு அதை கொண்டு போய் குளத்துல ஆத்துல போட்டு அநியாயம் செய்யறாங்க.

Thamiz Priyan said...

படம் தளத்தில் இணைச்சாச்சு... எங்க ஊரில் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைக்கும்.. ஆனாலும் ரொம்ப சிக்கனமாக பயன்படுத்தப் பழகி இருக்கின்றோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வாக்கு
-----------------------
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா.. இது வின்செண்ட் தொடங்கிய தொடர்ப்பா.. நன்றி..
-----------------------
நன்றி கோமதிம்மா..
--------------
நன்றி தமிழ்ப்ரியன்..கொடுத்துவச்சவங்க போலயே நிறைய..:)

ராமலக்ஷ்மி said...

கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.

//வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால்//

‘புகைப்படங்கள்’... ரைட்:)!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பதிவு முத்துலெட்சுமி. யமுனை பற்றி நானே எழுத நினைத்திருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க!

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

எம்.எம்.அப்துல்லா said...

//வலைப்பதிவர்களாகிய நாம் நிறைய கட்டுரைகள், புகைபடங்கள், அனுபவங்களை அவரவர் வலைப்பூக்களில் பதிவுகள் இட்டால் இந்த விழிப்புணர்வை எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன்’

//

ரைட்டு, அக்காவே சொல்லியாச்சு (வின்செண்ட் சொன்னதா). செஞ்சிருவோம்.

கண்ணகி said...

நல்ல கருத்து...

Chitra said...

விழிப்புணர்வு பதிவு.

மக்களும் உணர்ந்து கொண்டு, விரைவில் ஒத்துழைப்பது அவசியம்.

ஆயில்யன் said...

தொடர்பதிவு - நல்ல முயற்சி !

சாதாரண பதிவாக இருந்துவிடாமல் தண்ணீர் பற்றாக்குறையினை/விழிப்புணர்வினை ஏற்படுத்தகூடிய - பதிவு செய்யும் - பதிவுகளாக அமைய வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

எண்ணங்களை நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்!
கொஞ்சம் பயமாகவும் இருக்கு! சிக்கனம் அவசியம்!

அழைப்பிற்கு நன்றி முத்துலெட்சுமி. விரைவில் எழுதுகிறேன்.

கபீஷ் said...

நல்ல பதிவு. கங்கா, யமுனா பாவம்:-(

சுபலலிதா said...

நீர் ஆதாரங்களை பாதுக்காப்பதன் மூலம் இயற்கைக்கு நன்றி உடையவர்களாகவும் நமது வருங்கால சந்ததியினருக்கு நன்மை பயப்பவர்களாகவும் ஆகிறோம் ..நல்ல பதிவு...

மங்கை said...

The Citizens Water Allianceனு ஒன்னு இருக்கே..டெல்லி ஜல் போர்ட் ல.. ரொம்ப நல்ல initiative..ஆனா அது எத்தன தூரம் நல்ல படியா நடக்குதுன்னு தெரியலை..தன்னார்வ குழுக்கல் அமைச்சு ஆரம்பிச்சாங்க

க.பாலாசி said...

நல்ல இடுகை... பகிர்வு.... நீரின்றியமையாது உலகு... உங்களின் இடுகையை படிக்கும்போது அதை மாசுபடுத்துபவர்களை என்னசெய்தால் தகும் என்றே எண்ணத்தூண்டுகிறது.

"உழவன்" "Uzhavan" said...

நிச்சயம் விழிப்புணர்வு தேவை.
ஷவர்ல குளிப்பதை நிறுத்திக்கொண்டால் நிறைய நீர் மிச்சமாகுமாம்.

Anonymous said...

// வேறு தண்ணீர்களுக்கு வழியில்லை. //

Water is countable noun in Tamil?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜோ அமலன் திருத்தத்திற்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி கலக்குங்க ;)
-------------------
இன்னும் விரிவா எழுதுங்க வெங்கட் ... மக்கள் தெரிஞ்சுக்கிறதும் நல்லது தானே ..
----------------------------
நன்றி கண்ணகி
--------------
ஆமாம் அப்துல்லா , அது வின்சென்ட் அவர்கள் சொன்னது தான்.
-----------------------
நன்றி சித்ரா
-------------------
நன்றி ஆயில்யன்
-------------------------
முல்லை எழுதிவிட்டு மரவளம் பதிவிலும் தெரிவியிங்கள்.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா கபீஷ் ரொம்ப பாவம்.. இயற்கைய தெய்வமா மதிப்போம் ஆனா அசிங்கப்படுத்துவோம். ( பெண்ணுக்கும் சில சமயம் அதே கதி தான்)
------------------------

நன்றி லலிதா
--------------------
நன்றி மங்கை .. அப்படியா அது என்ன திட்டமோ? எனக்குத்தெரியாதே ?
-------------------
நன்றி பாலாசி
-----------------------
நன்றி உழவன் ..
-----------------------
நன்றி அக்பர்

மாதேவி said...

அவசியமான பதிவு.
வெப்பகாலமாக இருப்பதால் இடையிடையே தண்ணீர் வெட்டும் இங்கு வரும் கூடியஅளவில் நீரை விரயம் செய்யாமல் இருப்போம்.

Thekkikattan|தெகா said...

காலம் அறிந்து பதியப் பட்டதொரு பதிவு! உங்களுக்கும், மரவளம் வின்செண்ட் சாருக்கும் நன்றிகள்!

நீரின் முக்கியத்துவம் அறியத்தரும் என்னுடை சிறு பதிவு இங்கே டில்லியில் இந்தியா ஒளிரும் சில காட்சிகள்...!!! ... தட்டிய தூக்கிப் போட்டுடாதீங்க, இப்பவும் லேட்தான் :(

Thekkikattan|தெகா said...

இந்தாங்க சில புள்ளி விபரம் உலகம் தழுவிய முறையில் நம்மின் நன்னீர் கையிருப்புப் பற்றி;

உலகத்தில மொத்தமாகவே 2.5 சதவீதம்தான் உப்புத்தன்மை இல்லாம தண்ணீர் இருக்கிறதாம். அதிலும் மூன்றில் இரு மடங்கு பனிப்பாறைகளிலும், பனிச் சரிவுகளிலும் சிக்கியுள்ளதாம்.

இது இப்படியாக இருக்க, மழை வேறு பொய்த்து வருகிறது. எனவே 21வது நூற்றாண்டு ஒரு நீருக்கென அடித்துக் கொள்ளும் ஒரு நூற்றாண்டாகவும் அமையாலாமென கருதப்படுதுங்க...

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா.. நல்ல பதிவுக்கா. கூடிய சீக்கிரம் பதிவு போட்டுறேன் :)

வின்சென்ட். said...

உங்கள் பதிவிற்கு நன்றி. எதிர்பார்த்ததை விட நன்றாக பதிவர்களிடம் சென்றுள்ளது. இனி பதிவிடுபவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் 22 ஆம் தேதி தொகுத்து ஓரே இடத்தில் அனைத்து பதிவுகளுக்கும் தொடர்பு தரலாம். " சிறு முயற்சி " பலன் பெரியது.

கோபிநாத் said...

நல்ல பதிவு ;-)

ராமலக்ஷ்மி said...

என் பதிவு:
உலகம் உய்ய..-தண்ணீர் தினத்துக்காக http://tamilamudam.blogspot.com/2010/03/blog-post_13.html

அம்பிகா said...

அவசியமான இடுகை.
அமைதிசாரலின் பின்னூட்டமும் அருமை. நீர்நிலைகளை அசுத்த படுத்துவோர் எப்போது தான் திருந்துவார்களோ?

Dubukku said...

நல்ல பதிவு.

இந்த விழிப்புணர்வு மட்டும் இருந்துவிட்டால் தண்ணீர் பிரச்ச்னையை நிறைய ஊர்களில் சமாளிக்கலாம். தமிழ்நாட்டில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் வந்து எங்க ஊர் கிணறுகள் மழை காலத்தில் நிரம்பி வழிவதைப் பார்க்கும் போது மிக சந்தோஷமாய் இருந்தது

Ananya Mahadevan said...

மிக அருமையான பதிவு!

// எம்பி போட்டு விட்டு போகும் மக்களும் இருக்கிறார்கள்!//

அதாவது மாலைகள் அந்த வலையில் விழாமல் மறுபடியும் ஆற்றில் விழும்படி? ஒரு வேளை அவங்களுக்கு புரியலையா? ஏங்க இப்படியெல்லாம்ன்னு கேக்கணும். கஷ்டம்!

ஹுஸைனம்மா said...

நிறைய நல்லக்கருத்துக்கள் சொல்லிருக்கீங்க முத்தக்கா. நிச்சயம் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள். நன்றி.

முகுந்த்; Amma said...

என்னால் இயன்றவரை ஒரு விழிப்புணர்வு கட்டுரை எழுதி இருக்கிறேன்.

http://mukundamma.blogspot.com/2010/03/blog-post_13.html

தங்களின் அழைப்புக்கு என் கோடான நன்றிகள்.

பனித்துளி சங்கர் said...

அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .

மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி !


மீண்டும் வருவான் பனித்துளி!

பாச மலர் / Paasa Malar said...

நல்ல விழிப்புணர்வு பதிவு....நம்மால் முடிந்ததை அவசியம் செய்வோம்

பனித்துளி சங்கர் said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? புதியதாக பதிவு எதுவும் போட்டு இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மாதேவி , தெகா, ஆதவன், வின்சென்ட், கோபி, டுபுக்கு,அநன்யா, முகுந்த் அம்மா, அம்பிகா, பாசமலர் நன்றிங்க..

நன்றிங்க பனித்துளி, வீட்டுல கட்டிட வேலை நடக்குதுங்க.. அதுமட்டுமல்லாம எப்ப எழுதனும்ன்னு தோணுதோ அப்பத்தாங்க எழுதறது.. அடிக்கடி தினம் தினம்ல்லாம் நான் பதிவெழுதறதில்ல.. எல்லார்கிட்டயும் இதே கேக்கறீங்க போல /.ஆர்வமெல்லாம் ஆரம்பத்துல தான் ;)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவு