June 23, 2010

பெம்மானை ஓதுவார்

Get this widget | Track details | eSnips Social DNA



பெரியம்மா தேவார சிடி ஒன்றை கொடுத்திருந்தார்கள்.அதனைப் பாடி
பயிற்சி செய்து வீட்டில் நிகழ இருக்கும் விழாவில் என் மகளைப்
பாடச் சொல்லி இருந்தார்கள்.. இரண்டு நாட்களாக அவள் அதனை
பயிற்சிக்காகப் பாடிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே இருந்த
மகனுக்கு அதன் தாக்கம் வந்திருக்கிறது. முதல் இரண்டு வார்த்தைகளை
மீண்டும் மீண்டும் ராகமிட்டு பாடிக்கொண்டிருந்தவனைப் பார்த்து நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம்.

மகள் அதனை சொல்லச்சொல்ல பாடுகிறாயா என்று கேட்க தம்பியாரும்
சரி என்று பாடத்தொடங்கி இருந்தார்கள்.’ தோடுடைய செவியென்
விடையேறியோர் தூவெண் மதிசூடி’ சத்தம் கேட்டு நான் அங்கே
சென்றால் எங்கே பயிற்சி கெடுமோ என்ற பயத்தால் அடுத்த
அறையிலிருந்தபடியே போனில் பதிவு செய்யத்தொடங்கினேன்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கார்டூன் பார்த்துக்கொண்டிருந்த
மகனுக்கு விளம்பர இடைவேளையில் தேவார வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பின்புறமிருந்து மெதுவாக மிக மெதுவாக நான் சென்றபோது கைகளை
வீசி வீசி ‘ஏஏஏஎ’ க்கள் இழுத்துக்கொண்டிருந்தவனை வீடியோவும் எடுத்தேன்.
ஆனால் அதனை இணைக்க இயலவில்லை. விடுமுறைக்கு வந்த இடத்தில்
கணினிக்கு மாற்றும் இணைப்பு வயரை எடுத்து வரவில்லை.

மிக அழகாக சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக அவன் பாடியது கேட்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது..

29 comments:

ஆயில்யன் said...

ஆஹா ஆஹா ! தேவாரம் பற்றி நேற்று கொஞ்சமாய் தகவல் மேஞ்சுகிட்டிருந்தேன் :)

ஆமாம் அது சரி ஏன் //தோடுடைய செவியென் விடையேறியோர் தூவெண் மதிசூடி// இதையே முதல் பாடலாக பெரும்பாலும் பாடச்சொல்லுகிறார்கள்? :) -ச்சும்மா ஒரு கேள்விதான் மற்றபடி தோடுடைய செவியென்று என்று அழகாய் பாடும்போது நானும் கூட பாடியிருக்கிறேன் - குட்டி வயசுல :)))

மாதினி பாடப்போகும் பாடலையும் கண்டிப்பாக ஆடியோவிலேற்றி அனுப்புங்கள் !

வெங்கட் நாகராஜ் said...

சபரியின் குரலில் ”தோடுடைய செவியன்” - இனிமை. விழாவில் மாதினி பாடப்போவதையும் பதிவு செய்து விடுங்கள் - என்றென்றும் கேட்க வசதியாக இருக்கும். சபரி மற்றும் மாதினிக்கு என் வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

//மிக அழகாக சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக அவன் பாடியது கேட்கும் போது...//

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்:-))))

அந்த நெகிழ்ச்சி...அது பொக்கிஷம். காலத்துக்கும் மனசின் மூலையில் தங்கி இருக்கும்.

குழந்தைகளுக்கு என் அன்பு.

சந்தனமுல்லை said...

மிகவும் அருமை....வாய்ஸும் தெளிவாக கூடவே பாடுவதும்..சபரி..சோ ஸ்வீட்!

சாந்தி மாரியப்பன் said...

//சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக அவன் பாடியது கேட்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.//

றெக்கை முளைக்கிறவரை அனுபவிங்க :-)))))

ராமலக்ஷ்மி said...

ஆசிரியையின் குரல் அமுதம் என்றால் மாணவரின் குரல் மதுரம்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்:)!

சென்ஷி said...

அருமை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திருமுறையின் முதல் பாடல் என்பதால் இருக்கும் ஆயில்யன்.. திருஞான சம்பந்தரின் பாடல்.

ஆமா நானும் இந்த பாட்டு தான் பாடுவேன் சின்னதா இருக்கும்போது..
------------------
நன்றி வெங்கட் ;)
--------------------
நல்ல ஐடியா குடுத்தீங்க துளசி தூற்றிக்கொள்கிறேன் ;)
--------------------------
நன்றி முல்லை :)
--------------------------
ஹை ராமலக்‌ஷ்மி உங்க ஸ்டைல் பின்னூட்டம் .. :) நன்றி
----------------------

நன்றி சென்ஷி

Thekkikattan|தெகா said...

:)) செமையா இருந்திருக்கும் நேரடிக் காட்சின்னு மட்டும் எனக்குத் தெரியுது - எஞ்சாய் !!

கோமதி அரசு said...

முத்துலெட்சுமி,பேரக் குழந்தைகளின் தேவாரபாடல் அருமை.


துளசி,அமைதிச்சாரல்,ஆயில்யன்,
சொல்வதை நானும் வழி மொழிகிறேன்.

ஆயில்யன் -ஆடியோவிலேற்றி அனுப்புங்கள்.

துளசி -காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

அமைதிச்சாரல் -றெக்கை முளைக்கிற வரை அனுபவிங்க.

குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

Thamiz Priyan said...

மாதினியின் குரலில் முன்புக்கு இப்போ நல்ல தெளிவும், பாவமும் இருக்கின்றது..சபரியின் இழுவைகள் அழகு!

கோபிநாத் said...

ஆகா..ஆகா...சூப்பர் C & V ;))

Chitra said...

அருமை.

Iyappan Krishnan said...

ஆஹா ஆஹா :) அருமை

ஜெயந்தி said...

பாடலை சொல்லிக்கொடுக்கிற அதே ராகத்தில் பாடுவது கேட்க இனிமையாக இருக்கிறது.

Ahamed irshad said...

அருமை வாழ்த்துக்கள்:)..

geetha santhanam said...

உங்கள் மகளுக்கு அருமையான குரல் மற்றும் இசையில் தேர்ச்சி இருக்கிறது. வாழ்த்துக்கள். மகனும் உங்கள் மகளுக்கு ஈடு கொடுக்கிறார்.--கீதா

பா.ராஜாராம் said...

:-))

'பரிவை' சே.குமார் said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்

santhanakrishnan said...

குழந்தைகளுக்கு
என் வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

தோடுடைய செவியன்.... பாடலை குழந்தைகள் பாடினால் கேட்க அழகாய்த்தான் இருக்கும்.. :-))

கானா பிரபா said...

கலக்கலாக இருக்கு ;)

☀நான் ஆதவன்☀ said...

அய்யோ இப்ப ஆபிஸ்ல கேட்கமுடியாதே :( ரூமுக்கு போய் முதல் வேலை இது தான்க்கா

☀நான் ஆதவன்☀ said...

க்யூட் சபரி :)))))))))))

'பரிவை' சே.குமார் said...

Namma blog pakkam romba nala aliyey kanom.

http://www.vayalaan.blogspot.com

Radhakrishnan said...

http://www.greatestdreams.com/2010/07/blog-post_19.html. பதிவுலகில் நான் எப்படிபட்டவர் எனும் தொடர்பதிவுதனை எழுத அழைக்கிறேன். மிகவும் நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவுங்க...நல்ல அக்கா தம்பி...சூப்பர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா உண்மைதான்.. அது ஒரு அற்புதமான காட்சி :)
------------------
கோமதிம்மா நன்றி.
--------------------
தமிழ்பிரியன் சரியாக கவனிக்கிறீங்க நன்றி..:)
--------------------
கோபி நன்றிப்பா..
-----------------------
நன்றி சித்ரா .. உங்க ப்ரபைல் போட்டோ சூப்பரும்மா..
--------------------
ஜீவ்ஸ் ந்ன்றி
------------------
ஆமா ஜெயந்தி மிக ஆச்சரியமான விசய்மெ அதான்.. அதே மாதிரி பாட முடிகிறது என்பதே புதுவிசயம் எங்களுக்கு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி இர்ஷத்..
--------------
நன்றி கீதா..
---------------
நன்றி பா.ராஜாராம்
------------------
நன்றி சே.குமார் நான் கொஞ்ச நாள் தமிழ்நாடு போயிருந்தேன் வந்து இன்னும் கூட செட்டில் ஆகலை வீட்டுல வருகிறேன் உங்கள் பதிவுக்கும்..
-------------------
நன்றி சந்தானகிருஷ்ணன்
-----------------------
நன்றி ஆனந்தி
--------------
நன்றி கானா
----------------
நன்றி ஆதவன்
------------------------
நன்றி அப்பாவி ..
--------------
நன்றி ராதாகிருஷ்ணண்
இப்ப இருக்கிற மனநிலையில் அண்ட் ஊருல இருந்து வந்து செட்டில் ஆகாத நிலையில் எழுத வ்ருமான்னு தெரியல.. முயற்சி செய்கிறேன் தவறாக நினைக்கதீங்க..