October 20, 2010

நிலவொளியோடும் தீப ஒளியோடும் கங்கை

நீல்கண்டிலிருந்து திரும்ப லக்ஷ்மண் ஜூலாவில் வந்து இறங்கினோம். நடந்தே ராம் ஜூலாவிற்கு சென்று விடலாம் என்று அக்கரையிலேயே நடந்தோம்.. மிக நீண்ட தூரம் என்பது நடக்க நடக்கத்தான் தெரிந்தது.ஆனால் அதே போல் வெளிநாட்டினர் பலர் பேக்பேக் போட்டுக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள்.. மதிய உணவை ஒரு சிறு தாபாவில் முடித்துக்கொண்டு நாங்கள் ராம் ஜூலாவை அடையும் போது அங்கே ஒரு ரிஷிகேஷ் புகழ் உணவு விடுதி அதன் பெயர் சோட்டிவாலா (இந்த சைட் ல் ரெசிபி கூட இருக்காம்) அருகருகே இரண்டு இருந்தது எது ஒரிஜனல் என்று தெரியவில்லை. சாப்பிடச்செல்ல எங்களுக்கு நேரமில்லை.. வெளியே சோட்டியும் (குடுமி) தொந்தியுமாக இரண்டு கடைகளிலும் ஆளுக்கொரு மனிதரை மேக்கப் செய்து விளம்பரத்துக்கு வைத்திருக்கிறார்கள்.
புகைப்படம் எடுக்கிறோம் என்று தெரிந்தும் மிக பந்தாவாக அந்த பக்கம் இந்த பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

ரிஷிகேஷ் ஆரத்தி நடப்பது பரமார்த்த ஆசிரமத்தில் என்பதால் அங்கு சென்றோம். கங்கைக்கரையில் படித்துறைக்கு எதிரில் நீருக்குள் ஒரு மேடை அமைத்து அதில் பெரிய சிவன் தவமியற்றும் காட்சி..
மாலை நேரத்திற்கு பிறகு சிவனின் முடியில் இருந்து கங்கை விழுகிறாள். குறிப்பிட்ட நேரம் வரை அந்த படித்துறைக்கு செல்ல முடியாது என காவலுக்கு இருந்தவர் சொன்னதால் அதற்கு எதிர்புறமிருந்த பரமார்த்த ஆசிரமப் பூங்காவில் அமர்ந்திருந்தோம். பூங்கா மிக அழகாக பரமாரிக்கப்படுகிறது. ஆங்காங்கே சில சிலைகள் கதை சொல்கின்றன. தினமும் சத்சங்கம் உண்டு போல.. நாங்கள் சென்றபோது தான் அது முடிந்தது. சத்சங்கம் செய்ய பெரிய ஹால் இருக்கிறது. பாலாஜி மற்றும் சில சாமி சன்னதிகள் பார்த்த நினைவு. 

படித்துறைக்கு நுழைய அனுமதி கிடைத்ததும் நாங்கள் படிகளுக்கு பிறகு இருந்த சமதளத்தில் அமர்ந்திருந்தோம். கூட்டம் வரத் தொடங்கும் முன் எங்களைப் போலவே காத்திருந்த இன்னோரு குடும்பத்தினரை அழைத்து கங்கைக்கு பூஜை செய்யத்தொடங்கினார் ஒரு காவி உடையணிந்த குரு ஒருவர். அக்குடும்பத்தினர் எங்களையும் அழைக்கவே நானும் குழந்தைகளும் அதில் கலந்து கொண்டோம். அவர் மந்திரங்களைச் சொல்லி நம் கைகளில் மலர் கொடுத்து பூஜை செய்யும்படி பணித்தார்.ஒரு வெளிநாட்டுப்பெண் சிவனுக்கு முன்பு படித்துறை கடைசிப்படியில் அமர்ந்து சிறிதுநேரம் த்யானம் செய்தாள்.

பிறகு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சேரத்தொடங்கியது . வானில் இருள் கவியத்தொடங்கியது கூடவே குளிரும் வந்துவிட்டது .. கங்கைபூஜை செய்த குருவின் மேற்பார்வையில் காவி உடையணிந்து வந்த சிறுவர்கள் சமதளத்தில் வரிசையாக உட்காரவைக்கப்பட்டார்கள்.அப்போது பூஜ்யஸ்வாமி ஒருவர் வந்தார் .. இவர்களை எல்லாம் ஆஸ்தா போன்ற தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம்.. பிறகு பாடல்கள் பாடினார்கள்.. கங்கா ஆரத்தியின் (போட்டோ கேலரி பரமார்த் தளம்)போது சிறு சிறு தட்டுகளில் தீபம் வந்தது.
அதைகொண்டு மக்களும் ஆரத்தி எடுக்கலாம். நாம் எடுத்துவிட்டு அருகிலிருப்பவருக்கும் அதை கொடுத்து அவர்களை ஆரத்தி எடுக்க செய்யலாம். ப்ரதம சிஷ்யை வெளிநாட்டுக்காரங்க போல பாட்டும் ஆரத்தியும் பக்தியுமா இருந்தாங்க..

முழுநிலா இரவில் ராம் ஜூலாவில் நடந்து கங்கையை கடந்தது அருமையான அனுபவம் . ஷேர் ஆட்டோ பிடித்துக்கொண்டு கோவிலூர் மடம் வந்து சேர்ந்தோம். டீவி இல்லாத புதுவருடப்பிறப்பின் இரவு. அங்கே ஏற்கனவே சொல்லியிருந்தேனே நம்ம சாய் குழுவைச் சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் பான் ஃபயர் செய்ய தயாரிப்பில் இருந்தார்கள். இன்னோரு பக்கம் புதுவருட பிறப்புக்கான சத்சங்க் ஒன்றும் ஒரு அறையில் ஏற்பாடாகி இருந்தது. இரவெல்லாம் முழித்திருக்கப்போவதால் இரவு உணவு தாமதமாக தயார் செய்ய திட்டம் போலும். நாங்களும் காத்திருந்து உணவு மணி அடித்ததும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டோம். 12 மணிக்கு வெடிச்சத்தமும் தொலைபேசி அழைப்புகளும் புத்தாண்டு வாழ்த்துகளை வழங்கியது. . (தொடரும்)

(படங்களை க்ளிக் செய்து பெரியதாக்கி பார்க்கலாம்)
பிற்சேர்க்கை: கங்கையில் வெள்ளப்பெருக்கு நேர்ந்த போது சிவ்ஜி அடித்து செல்லப்பட்டது நான் அறியாதது. குழந்தைகள் கொடுக்கின்ற கொஞ்ச நேரத்தில் நியூஸ் பார்க்கும்போது ஆரத்தி நடந்த இடமும் சிவனும் வெள்ளத்தில் பாதி மூழ்கியது தெரியும்.. இப்போது பின்னூட்டத்தில் ஸ்வாமி ஓம்கார் சொன்னபின் தான் தேடியதில் இந்த வீடியோ கிடைத்தது..37 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

முழுநிலவு அழகு.

தவக்கோலத்தில் சிவனும், நதியோரம் தியானிக்கும் பெண்மணியும் அருமை.

பக்தரே ஆரத்தி எடுப்பது பற்றி இப்போதுதான் அறிகிறேன். பார்க்கிறேன். நல்ல ஏற்பாடு.

ADHI VENKAT said...

நல்ல பயண அனுபவம். புகைப்படங்களும் அருமை.

ஸ்வாமி ஓம்கார் said...

அருமையான பகிர்வு..

தகவல் :

நீங்கள் கண்டு களித்த பரமார்த்த நிகேதன் சிவன் கங்கையில் அடுத்து செல்லப்பட்டார். கங்கையில் வெள்ளப்பெருக்கு காரணமாக. ஆகஸ்டு இறுதி வாரத்தில் இந்த நிகழ்வு நடந்தது.

2.5 கோடியில் புது சிவன் தயாராகிறார்..! :)

☀நான் ஆதவன்☀ said...

:) துளசி டீச்சரை போல எல்லா விசயத்தையும் மாதங்கள் கடந்தாலும் ஞாபகம் வச்சிருக்கீங்களேக்கா. :)

நல்ல பகிர்வு. இந்த வருட புத்தாண்டு வர்ரதுக்குள்ள தொடரை முடிங்க :)

மங்கை said...

எப்பவும் விட இந்த பதிவுகள்ள படங்கள் அருமை..சிவனின் படமும்... நிலவின் அழகும்...அருமை..

//முழுநிலா இரவில் ராம் ஜூலாவில் நடந்து கங்கையை கடந்தது அருமையான அனுபவம்//

உண்மை தான்...எங்களுகே அந்த உணர்வு வருது..

கபீஷ் said...

படம் எல்லாம் அழகு, குறிப்பா சிவன் ரொம்ப அழகா இருக்கார்:), நுழைவாயில், கரையில் இருக்கற பொண்ணு, ஆரத்தி.எல்லாமே வந்துடுச்சோ :)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. சோட்டி வாலா - படம் எடுக்க ரொம்பவே பிகு பண்ணிப்பார் - நான் எடுக்கும்போது கூட ரொம்பவே பிகு பண்ணியது நினைவுக்கு வந்தது.

வெங்கட்.

செல்வா said...

நல்லா இருக்கு அக்கா .,
அந்த மூணாவது சிவன் படம் கலக்கல் ..!!

அம்பிகா said...

அழகழகான படங்கள்.
நல்ல பயணக் கட்டுரை. நேரில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

Vidhya Chandrasekaran said...

நல்ல பகிர்வு. நிலா ஃபோட்டோ ரொம்ப சூப்பர்.

கவிதா | Kavitha said...

முத்து, கடைசி படம் அந்த பொண்ணு ரொம்ப நல்லா இருக்கு.. :)

கங்கை சுத்தமா இருக்குதா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி போட்டோக்காரவுங்க நீங்களே சொல்லிட்டீங்க.. நன்றி நன்றி :)
-------------------
ஆதி வாங்க நன்றி :)
--------------------
ஓம்கார் ஜி ,
ஓ எப்படி ஒரு அழகு அந்த சிவன் ..
குறிப்பிட்டதற்கு நன்றி .. வீடியோவை இப்பத்தான் தேடி போட்டிருக்கிறேன்.. என்னமா அலை அடிக்கிது
கழுத்துவரை உயர்ந்து
அலைகள் 15 அடிக்கு ஓடுதுகங்கா.. ம்ம்
--------------------
நன்றி ஆதவன் ... அதான் என் டார்கெட்டும் கூட :))
-----------------------
நன்றி மங்கை :)
---------------------
கபீஷ் எல்லாத்தையும் குறிப்பிட்டுடீங்க.. நன்றி :)
-------------------
வெங்கட் உங்களுக்கும் சோட்டிவாலா பிகு செய்தாரா.. :))
பக்கத்துக்கடையில் ஒல்லி சோட்டிவாலா இருந்தார் ..இவர் நல்லா கொழுக்குன்னு இருக்காரேன்னு
எடுக்கப்பாத்தா
நாலு போட்டோக்கப்பறமா தான் இது ..க்ளோசப்பெல்லாம் கெட்டுச்சு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செல்வக்குமார் நன்றி :)
------------------------


நன்றி அம்பிகா :)
----------------
நன்றி வித்யா ;)
------------------
கவிதா நன்றி ..
ஆமா ரிஷிகேஷத்தில் கங்கை தூய்மையா அழகா இருந்தா..

Thekkikattan|தெகா said...

//மதிய உணவை ஒரு சிறு தாபாவில் முடித்துக்கொண்டு நாங்கள் ராம் ஜூலாவை அடையும் போது அங்கே ஒரு ரிஷிகேஷ் புகழ் உணவு விடுதி அதன் பெயர் சோட்டிவாலா (இந்த சைட் ல் ரெசிபி கூட இருக்காம்) அருகருகே இரண்டு இருந்தது எது ஒரிஜனல் என்று தெரியவில்லை. //

எனக்கு சோட்டிவாலா கடை ஞாபகமிருக்கிறது. அந்தாளு, அன்னிக்கு அந்த ச்சேர்ல ஏறி உட்கார்ந்தவருதானா, இன்னும் இறங்கவே இல்ல போல! :); உண்மையிலயே யோசிச்சிப் பார்த்தா ரொம்ப கஷ்டமான வேலதான் அவரு செய்றது இல்ல...

நிலாப் படம், பரவாயில்ல ஒளியைக் இம்பூட்டுத் தூரம் குறைச்சு காமிச்சிருக்கீங்க (கேமராவின் featuresகளையும் கவனத்தில் நிறுத்தணும்), சோ நாட் பேட், குட் ஜாப்!

மற்ற பட பகிர்தலுக்கும், நன்றி!

Chitra said...

அருமை. பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

//முழு நிலா இரவில் ராம் ஜீலாவில்
நடந்து கங்கையை கடந்தது அருமையான அனுபவம்.//

நல்ல அருமையான அனுபவம் தான்.

படங்கள் அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

படங்கள் அவ்வளவு அழகு. நல்ல பகிர்வு. நன்றி.

நானானி said...

அருமையான பகிர்வு...கயல்,
நாங்கள் கண்டறியா கேட்டறியா தகவல்களை அழகாக தொகுத்து அளித்தமைக்கு நன்றி.
நதிக்கரையில் மேனத்தவம் செய்யும் அந்நியநாட்டுப் பெண்....இனி அவள் இந்நிய நாட்டுப் பெண். படம் அருமை.
முழு நிலவில் இரவு முழுத்தும் புது வருடத்துக்காக காத்திருப்பதும் ஒரு சுகம்.

கோபிநாத் said...

நல்ல பகிர்வு ;))

பழமைபேசி said...

நன்றிங்க!

எஸ்.கே said...

அழகான படங்களும் அனுபவமும்!

துளசி கோபால் said...

நேத்தே படிச்சேன். லிங்கைக் கிளிக்கி அப்படியே யூ ட்யூப் போயிட்டேன். சிவன் சிலையைக் கங்கை சுத்தி வளைச்சுக்கிட்டாள்:-)

பதிவு அருமைப்பா.

குறிப்புகள் எடுத்துவச்சாச்சு:-)

சாந்தி மாரியப்பன் said...

நல்ல அருமையான அனுபவம்தான்.. நிலவொளியில் நடப்பது இனிமையான அனுபவம்.

thiyaa said...

நல்ல பதிவு
அருமையாக இருக்கு

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் இந்த ஆரத்தியை சன்ஸ்கார் ட்.வி யில் தினம் சாயந்திரம் 5.30 மணிக்குக் காண்பிப்பார்கள். உலகமே மறந்துவிடும். வெகு அழகாக பயணத்தைப் படத்துடன் நடத்துகிறீர்கள் கயல்.

ராஜ நடராஜன் said...

//ஒரு வெளிநாட்டுப்பெண் சிவனுக்கு முன்பு படித்துறை கடைசிப்படியில் அமர்ந்து சிறிதுநேரம் த்யானம் செய்தாள்.//

நாம் மேலைநாட்டவர் போல முன்னேறவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்தாலும் மேற்கத்தியவர்கள் அமைதி தேடி இன்னும் இந்தியா வருவது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

பயணக்கட்டுரைக்கு நீங்க துளசி டீச்சருக்குப் போட்டியா:)

இலவச ரிஷிகேஷ் பயணம் கூட்டிப்போனதற்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு.

படங்கள் அருமை.

பனித்துளி சங்கர் said...

நேரில் சென்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது தங்களின் புகைப்படங்களும் அனுபவத்தை நீங்கள் சொல்லி இருக்கும் விதமும் . பகிர்வுக்கு நன்றி .

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்க படங்களும், அழகான நீரோடை போன்ற பயண அனுபவமும் நல்லா இருக்குங்க..
சிவனின் தலையில் இருந்து, மாலையில் விழும் கங்கை, அருமையான படம்.. :-)))

http://lifestyle-jothidam.blogspot.com/ said...

மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக....

உண்மையை சொல்லுங்கள் யார் சொன்னது இந்த அற்புதமொழிகளை?

நீங்களே எழுதியிருந்தால் உங்களுக்கு எனது அன்பார்ந்த பாராட்டு.

வேறு யாராவது சொல்லியிருந்தால் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டு.

மேற்கண்ட அமுதமொழிகளை வாழ்வில் எல்லோரும் கடைபிடித்தால் இத்தனை ப்ளாக்கர் துவங்க வேண்டிய அவசியமே இருக்காது என நினைக்கிறேன் இல்லையா?

அன்புடன் உங்கள்


அடியேனின் http://janiyaa.freeforums.org க்கு

வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறேன்,

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தெகா :)
ஓடறவனுக்கு உக்காந்து வேலை செய்யறது பெஸ்ட்
உக்காந்து வேலை செய்யறவனுக்கு ஓடியாடறது பெஸ்ட் .. எதோ ஒன்னு காசு கிடைக்கனும் உணவுக்கு ..
---------------------

நன்றி சித்ரா..:)
-----------
நன்றி கோமதிம்மா..:)
---------------------
நன்றி புவனா :)
------------------
நன்றி நானானி.. :)
------------------------
நன்றி கோபி :)
------------------
நன்றி பழமைபேசி
:)
------------------
நன்றி எஸ்.கே :)
---------------
நன்றி துளசி.. ஆமா இன்னோரு வீடியோவில்
கூட கங்கை சிவனை சுற்றி ஓடி முழுகியபோது சிவனின் தலையிலிருந்து கங்கை பொங்கி ப்ரவாகமெடுப்பது போல் இருந்ததாக ஒருத்தர் சொன்னார்..;)
----------------
நன்றி அமைதிச்சாரல்
:)
---------------------
நன்றி தியாவின் பேனா
:)
--------------------
நன்றி வல்லி .. ஆரத்தியும் பாடல்களும் இயற்கையன்னைக்கு .. கேட்க சுக ம் பார்க்க சுகம்.:)
---------------------
ராஜ நடராஜன் வாங்க.. துளசிக்கு போட்டி இல்லைங்க
அவங்க எனக்கு குரு..:)) புதிர் ?அக்கரைக்கு இக்கரை பச்சையாக இருக்குமோ..
-----------------------------
நன்றி ..சே.குமார்.. உங்க பதிவு லோட் ஆக மிக சிரமமா இருக்கு .. டெம்ப்ளேட் விட்ஜெட்கள் ஜாஸ்தி இருந்தா என் கணினி பாடாய் படும் கொஞ்சம் கவனிங்களேன்..
-------------------------------
பனித்துளி சங்கர்.. நன்றி:)
----------------------------
நன்றி ஆனந்தி .... :)
-------------------
நன்றி இர.கருணாகரன் ..
அது பாண்டிச்சேரி அன்னையின் அருள்மொழிகள்..
இவைகள் நானும் வேண்டி நிற்கும் மாற்றங்கள்
எனவே அதை இங்கே இணைத்திருக்கிறேன்.

ப்ளாக்கர் ஏன் ஆரம்பித்திருக்க அவசியமிருந்திருக்காது என்று சொல்கிறீர்கள் புரியவில்லையே.. கடைபிடித்து அன்பும் இணக்கமும் அமைதியும் நிரம்பி இருந்தாலும் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு பகிர விவரங்கள் இருக்கத்தானே இருக்கும்.. என்ன சரிதானே..? :)

Unknown said...

படம் எல்லாம் அழகு.நல்ல பகிர்வு.

மாதேவி said...

தவக்கோலத்தில் சிவன், ஆரத்தி அருமை.

மதுரை சரவணன் said...

nalla pakirvu. photos also talking. vallththukkal

ஜெயந்தி said...

படமும் அனுபவப் பகிர்வும் அருமை.

மே. இசக்கிமுத்து said...

கட்டுரையோடு இணைத்திருந்த படங்களும் அருமை!! முழுவதும் படித்தேன்!!

ஜோதிஜி said...

இடையில சில சிமயம் உள்ளே வந்துருக்கேன். நீங்க புதுடெல்லி என்பது மட்டும் உங்க பின்னோட்டத்தை பார்த்து மனதிற்குள் வந்து போனது. வந்து பார்த்தால் அதே. நன்றிங்க. அப்புறம் நிகழ்காலத்தில் சிவா இடுகையை ஒரு முறையை முடிந்தால் பார்க்க. ஒரே சமயத்தில் கந்தசாமி, சிவா, நீங்க பயணக்கட்டுரைகள். ஒரே இடம். வெவ்வேறு நடையில்.....