February 23, 2011

கற்பக விருட்சம்

ஒரு நாள் சுழன்று மறுநாள் ஆவதன்
இடைப்பட்ட பொழுதில்
நீள்கனவு
மூழ்கியவனை மீள்காட்டும்
கனவில் நீளும் கடற்கரைகள்

சுவடுகள் அழித்து அழித்து
அலையெழுதும் கதைகளில்
விதிகளின் வழிப்படியும்
வலியுடனும்
விட்டெறிந்த கல்லாக
ஆசைகள் மீள்வதைக் காணும்
அலையோசைக் கனவுகள்

பச்சையம் சமைக்கும் சருகுகள்
இயலாததில்லையென்று
முட்டி மோதி கிளைத்தெழுதலை
இட்டு நிரப்பும்
வளர்விருட்சக் கனவுகள்

இயல்பை மறந்த எதிராளியும்
குழப்ப முடிச்சின் நுனியும்
தோன்றுமொரு நாளின் கனவை
நனவாக்கும்
மந்திரக்கோல் தேடுதல்
மற்றொரு கனவின் தொடக்கமாகக் கூடும்.

ஈழநேசனில் 2009 ல் வெளிவந்த கவிதை

17 comments:

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

Unknown said...

//சுவடுகள் அழித்து அழித்து
அலையெழுதும் கதைகளில்
விதிகளின் வழிப்படியும்
வலியுடனுஎம்
விட்டெறிந்த கல்லாக
ஆசைகள் மீள்வதைக் காணும்
அலையோசைக் கனவுகள்//

நல்லா இருக்குங்க வரிகள்..
வாழ்த்துக்கள்

goma said...

அலைகளே நிலையற்றவை ,அலையோசை கண்ட கனவு?????

அடுத்து அடுத்து எழுத இடம் தரும் எண்ண அலைகள்....உங்களது கவிதை வரிகள்

Chitra said...

இயல்பை மறந்த எதிராளியும்
குழப்ப முடிச்சின் நுனியும்
தோன்றுமொரு நாளின் கனவை
நனவாக்கும்
மந்திரக்கோல் தேடுதல்
மற்றொரு கனவின் தொடக்கமாகக் கூடும்.


.....அருமை.... பாராட்டுக்கள்!

பூங்குழலி said...

கனவில் நீளும் கடற்கரைகள்

இந்த வரி பசக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டது ..வாழ்த்துகள்

ADHI VENKAT said...

நல்லாயிருக்குங்க. வாழ்த்துக்கள்.

சுசி said...

அழகான வரிகள்.

ராமலக்ஷ்மி said...

/இயல்பை மறந்த எதிராளியும்
குழப்ப முடிச்சின் நுனியும்
தோன்றுமொரு நாளின் கனவை
நனவாக்கும்
மந்திரக்கோல் தேடுதல்
மற்றொரு கனவின் தொடக்கமாகக் கூடும்./

அருமையான வரிகள். சிறப்பான கவிதை.

கோமதி அரசு said...

//இயல்பை மறந்த எதிராளியும்
குழப்ப முடிச்சின் நுனியும்
தோன்றுமொரு நாளின் கனவை
நனவாக்கும்
மந்திரக்கோல் தேடுதல்
மற்றொரு கனவின் தொடக்கமாகக் கூடும்.//

கவிதை நல்லாயிருக்கிறது முத்துலெட்சுமி.

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான வரிகள்.. ஜூப்பர்.

Thamiz Priyan said...

ஒரு கவிஞையை இந்த பதிவுலகம் இந்த ஆண்களில் இழந்து போச்சுதே.. ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி :)

நன்றி ஜிஜி:)

நன்றி கோமா :)

நன்றி சித்ரா :)
நன்றி பூங்குழலி :)
நன்றி ஆதி :)
நன்றி சுசி :)
நன்றி ராமலக்‌ஷ்மி :)

நன்றி கோமதிம்மா :)

நன்றி சாரல் :)

ஆண்டுகளிலா தமிழ்ப்ரியன் :) நன்றி .. கவிதையெல்லாம் தன்னைத்தானே தான் எழுதும் எப்ப எழுதும் ந்னு அதுக்குத்தானே தெரியும் :)

Anonymous said...

கவிதை வரிகளில்... பொருள் நிறைந்துள்ளது;பாராட்டுக்கள்...

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு.

வெங்கட் நாகராஜ் said...

பொருள் செறிந்த கவிதை பகிர்வுக்கு நன்றி சகோ.

நிலாமகள் said...

உங்கள் மூலம் தன்னைத் தானே எழுதிக் கொண்ட கவிதை வெகு அழகு... தேர்ந்தெடுத்த வரிகளும் வார்த்தைகளுமாக அர்த்தத்தைக் கனப்படுத்தின... இரண்டாவது மூன்றாவது பாராக்களில் கட்டுண்டேன். முதலும் நன்றே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குறட்டைப் புலி நன்றி :)

குமார் நன்றி :)

வேலு நன்றி :)

வெங்கட் நன்றி :)

நிலாமகள் நன்றி :))