November 30, 2011

பேரருள்

காணிக்கை என்பதும் கையூட்டாய்
கடவுள் கூட அவர் கூட்டாய்
பால்வெண்மையில் கரையுமோ
சிவப்பு நிறப்பாவங்கள்
கண்கள் மூடிய அரையிருட்டில்
தள்ளுமுள்ளு இல்லாத
தரிசனத்தில்
தள்ளுபடியானதோ கணக்குகள்?
மனமிரங்கக் கேட்டோர் குரல்
மலை எதிரொலிக்க பட்டு
திரும்புவதோ
வாழ்வின் திருப்பம்?
நீளும் உயிரும்
நெருக்கிய இருளுமாய்
தவித்த இரைச்சல்களை
கடந்த கால்கள்
இன்று யாத்திரையோ?
குற்றம்சுட்டிய விரல்கள்
நெஞ்சு துளைக்க
இன்றவர் கூப்பியகரங்களோ?
இல்லையென்றார்
இருக்கின்றாரென்றார்
நிலையானவர் என்றார்
நிலையுயர்த்துவார் என்றார்
நிலையாக நிற்பவரே
உம்நிலை தான் என்ன?

டிசம்பர் 2009 - ஈழநேசன் தளத்தில் வெளிவந்த எனது கவிதை

9 comments:

கோபிநாத் said...

நல்லாயிருக்கு அக்கா ;-)

ADHI VENKAT said...

நல்லாயிருக்குங்க.

புதியவன் பக்கம் said...

அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி
நன்றி ஆதி
நன்றி ஷாஜகான்

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு! ஈழநேசனில் வெளியானதற்கு வாழ்த்துகள்....

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் சகோதரி! பதிவுலகில் புதியவன். நான் இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். கவிதைகள் அருமை. தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி சகோதரி! நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

ஜீவி said...

மாற்றுங்கள்...

இருண்மையை ஒளியாக;

குழப்பத்தைத் தெளிவாக.

பாச மலர் / Paasa Malar said...

வாழ்த்துகள் கயல்....குழப்பத்தை விவரிக்கும் நேர்த்தியான வரிகள்..

Anonymous said...

நல்ல கவிதை. ரொம்ப பிடித்தது.