குறையொன்றுமில்லை
செய்யாமல் போன நேர்த்திகளுக்காய்
குறிப்புகள் காட்டினால்
என்னை
குறை சொன்னதாகுமென்று
கையோடு கொணர்ந்த
வேறொன்றில்
கணக்கை நேர் செய்துகொள்கிறாய்
---------------------------------

சுவர்க்கண்ணாடி
எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்
பேசாது கேட்டுக்கொண்டிருந்தது
உயிர்ப்பொன்றை அறிந்து
மறைக்கத்தொடங்கிய நாளில்
நினைப்பதெல்லாம் கூட
கண்டுபிடித்துக்கொண்டிருந்து
12 comments:
:-))
கண்ணாடியின் குணமே அதானே! :)
எல்லாமே நல்லாருக்கு. அந்த புகைப்படமும் ஒரு கவிதைதான்.
இரண்டு கவிதையும் அருமை அக்கா...
கண்ணாடி குறித்த கற்பனை அருமை.
இரண்டுமே அருமை....
பெண்ணழகி
ஆடி அழகு.
பொம்மை அழகு
சேர்த்துக் கவிதையும் அழகு. கயல்
முதல் கவிதையில் கண்ணாடி இல்லாவிட்டாலும்சரிபார்த்துக் கொண்டதும் வரிகளில் அழகாய் வடிகிறது.
கவிதை அழகு.
வாழ்த்துக்கள்.
கோபி நன்றிப்பா :)
தெகா அந்தப் புகைப்படம் மிக புகழ்வாய்ந்ததுன்னு படிச்சேன் .கவிதைன்னு படத்தை சொல்லலாம் தான் .. நன்றி..:)
குமார்..நன்றி :)
ஷாஜாகான் நன்றி :
வெங்கட் நன்றி :)
வல்லி :) நன்றி
கோமதிம்மா நன்றி :)
இரண்டுமே அருமை....
கண்ணாடி
முன்னாடி
ஆடிப் பாடியதெல்லாம்
வாடி நின்றதெல்லாம்
நாடி அவளைக் காண
மாடிக்குச் சென்றதெல்லாம்
ஏராளமடி, என் நெஞ்சின்
எண்ணங்கள்
ஈரம் தருவதடி.
சுப்பு ரத்தினம்.
பின் குறிப்பு: இது ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி
நான் எழுதியது. இன்னமும் இந்த கடுதாசி எங்கிட்டே இருக்கு.
இரண்டும் அருமை. முதல் மிகப் பிடித்தது.
நன்றி ஆதி :)
நன்றி சூரி சார்.. நீங்க பாட்டெழுதாத விசயம் உண்டோ..:)
ராமலக்ஷ்மி நன்றிப்பா..:)
Post a Comment