December 3, 2012

வார்த்தைகளும் மௌனங்களும் -1




பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்கள் . ஆனால் மௌனங்களும் காக்கத் தெரிந்தவர்கள்.

இங்க்லீஷ் விங்க்லீஷ் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மனசு கலங்கிப்போன அன்று இதை இவ்வளவு சின்னச்சின்ன விசயங்களோடு அழகாக காட்டமுடிந்ததன் காரணம் அது ஒரு பெண்ணால் எடுக்கப்பட்டதால் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் திரைப்படத்தைப் பார்க்கும்போது கதையில் அந்தச்சின்னச்சின்ன விசயங்களைக் கவனத்தில் எடுக்கக்கூட சில ஆண்களால் முடியாமல் போகலாம் என்றும் தோன்றிக்கொண்டிருந்தது.

ஆனால் ஷிண்டேயின் முயற்சி தோற்கவில்லை, எனக்குத் தெரிந்து விமர்சனம் எழுதிய சில நண்பர்களும் அவர்களின் சிறுகுறைகளை உணர்ந்ததாகச் சொல்லிக்கொண்டார்கள்.

அன்று உடனே பெண்களால் இயக்கப்பட்டப் படங்களைத் தேடிப்பார்ப்பது என்று தொடங்கினேன். இதுவரை  அந்த வரிசையில் இந்தப்படத்தையும் சேர்த்து 6 திரைப்படங்களை  பார்த்து முடித்தேன்.

.மை லைஃப் வித்தவுட் மீ (2003) - இசபெல் கோசெட் (Isabel Coixet)

My Life Without Me 


மை லைஃப் வித்தவுட் மீ ..  ஷிண்டெ யைப் போலவே இசபெல் கூட விளம்பரத்துறையிலிருந்தே சினிமாவுக்கு வந்திருக்காங்க..  எப்படியோ அவங்க படம் கைக்கு கிடைச்சுப் பார்த்துட்டமே என்று அவங்களைப்பற்றி படிச்சப்போ அவங்களும் எங்கயோ உலகத்தில் ஒருமூலையில் இருந்து பார்த்துட்டு உங்க படம் நல்லா இருந்ததுன்னு சிலர் சொல்றாங்க.. அதுவே போதும்.. எனக்கு படம் எடுக்கப்பிடிக்கும். என்று சிம்பிளா முடிச்சிக்கிறாங்க.. ரொம்பப்பேசராங்க .ஆனா எல்லாமே ஸ்பானிஷ் ல   பேட்டிக்கொடுத்திருக்காங்க.

தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்த பின் சில செயல்களை செய்யவேண்டும் என்று முடிவெடுக்கும்
ஒரு பெண்ணின் கதை. கணவனின் அன்பில் குழந்தைகளின் அன்பில் குறையேதும் காணாத ஒரு பெண் தான். ஆனா இறக்கபோகிறோம் என்கிற அழுத்தத்தை மறக்கவோ அல்லது வாழ இருக்கும் நாட்களை வேறுவிதமா வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணமோ அவள் சில வித்தியாசமான முடிவுகளையும் அதில் சேர்த்திருப்பாள். அவற்றை அவள் ஏன் செய்யவேண்டும் அல்லது ஏன் செய்யக்கூடாது என்பதற்கு
நாம் செல்லவேண்டியதில்லை. அப்படி ஒரு நிலையில் யார் என்ன முடிவெடுப்பார்கள் என்பது யாராலும் முன்கூட்டியே சொல்லமுடியாது.

இசபெல் சுபமான முடிவுகொண்ட படங்களை விட கஷ்டமான முடிவு கொண்ட படங்கள் உங்களை திரும்ப உலகத்துக்கு வரும்போது நிம்மதியா இருக்கவைக்கும்ன்னு கேலியா சொல்லிக்கிறாங்க..

இசபெல் இதுபோன்ற ட்ரைலர் ல வாழ்கிற பணக்கஷ்டத்தோடு வாழ்க்கையை நகர்த்தும் அமெரிக்கர்களைப்பற்றி சினிமாவில் இதுவரை சித்தரிச்சதற்கு மாற்றாக காண்பிக்கனும் முயற்சித்திருக்கிறதா சொல்றாங்க..

Ann: THINGS TO DO BEFORE I DIE.
Ann: 1. Tell my daughters I love them several times.
Ann: 2. Find Don a new wife who the girls like.
Ann: 3. Record birthday messages for the girls for every year until they're 18.
Ann: 4. Go to Whalebay Beach together and have a big picnic.
Ann: 5. Smoke and drink as much as I want.
Ann: 6. Say what I'm thinking.
Ann: 7. Make love with other man to see what it's like.
Ann: 8. Make someone fall in love with me.
Ann: 9. Go and see Dad in Jail.
Ann: 10. Get false nails. And do something with my hair.

 ஆன் 17 வயதில் திருமணம் ஆனவள். இரண்டு குழந்தைகளின் தாய். அப்பா சிறையில் இருப்பார். அம்மாவின் வீட்டின் பின்னால் ட்ரைலர் வண்டியில் தான் இவர்கள் குடியிருப்பு. கணவருக்கு வேலை இழப்பினால்
தற்காலிகமாக நீச்சல்குளம் கட்டும்பணி. இவளுக்கு இரவு நேரம் கல்லூரியை சுத்தம் செய்யும் பணி.

கிடைக்கின்ற கொஞ்ச நேரத்திலும் கொஞ்சம் பணத்திலும் அன்பை பகிர்ந்துக்கிற சின்னகுடும்பம்.. ஆனா வாழ்க்கையில் அடுத்த நாளைப்பற்றிய சிந்தனையோ ஆசையோ அதிகம் இல்லாமல் ஓடிக்கிட்டே இருக்கின்ற வாழ்க்கை.  ஒரு சமயம் படத்துல வர வசனம் இது...
\\Thinking. You're not used to thinking.//

அவள் தன் கணவனை ஒரு இசை நிகழ்ச்சியில் சந்தித்ததாகக் நினைவுகூர்கிறாள். அழுதுகொண்டிருந்த அந்தச்சின்னப்பெண்ணை தேற்ற தன்னிடம் கைக்குட்டை இல்லை என்று தன் டீசர்ட்டை கழட்டி கொடுத்த அன்பானவன். என்னிடம் எதையும் கேட்டு தொந்திரவு செய்யாத அன்பானவள் என்று அவளைப்புரிந்தே இருக்கிறவன்..

அவளின் ஏழாவது எட்டாவது திட்டங்கள் ஒன்று போல் தோன்றினாலும் ஒன்றல்ல.. அதற்காக அவள் முயற்சி செய்வதாக படத்தில் காட்டப்படவில்லை. அவளின் நோயின் சோகமும் தனிமையும்.. போலவே
நிலையில் இருக்கும் இன்னோரு மனிதனின் தற்செயலான சந்திப்பு. அறையின் வெறுமையையும் அவனுடைய தனிமையும் மாற்றுவதற்கு அவளின் தேவையும் இருந்தது போன்ற ஒரு அமைப்பு.

மருத்துவரிடம் அவள் பதிவு செய்த கேசட்டுகளைக் கொடுத்து இறந்தபின் சேர்க்கக் கேட்கிறாள். எல்லாருக்கும் செய்திகளை  சேர்க்கிறாள்..எல்லாரிடமும் மன்னிப்புகளைக் கேட்கிறாள். சோகமென்றால்
படத்தில் சோகமான காட்சிகள் அவ்வளவாக இல்லை.சாவைக் காட்டவில்லை. அழுகையைக் காட்டவில்லை. ஆனால் சோகத்தை நம் இதயத்தில் உணரவைக்கும் ஒரு முகம் கதாநாயகி சாரா வுக்கு.. (Sarah Polley)

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களின் வசனங்களும் நன்றாக இருந்தது.. ஒரு நாவலை கதையாக்கியிருக்கிறார்கள் என்கிற போது அதைப்படிக்கவேண்டும் என்கிற ஆவலைத்தூண்டுவதாய்
வசனங்கள்.

எல்லாரும் தான் சாகப்போகிறார்கள் . ஆனால் நாள் குறிப்பிட்டபின் அதுவும் ஒருமாதம் என்றபின் அவள் சுற்றி இருக்கிறவர்களை கவனிக்க ஆரம்பிக்கிறாள். யோசிக்கவும் ஆரம்பிக்கிறாள் . டயட் டயட் என்று பாடுபடும் தோழி, லாட்டரி பணம் கிடைத்தால் என்ன செய்வேன் என்று சொல்லும் ரெஸ்டரண்ட் ஊழியர் ..எல்லாரையும் குறை சொல்லும் அம்மா ஏன் அப்படி நடந்துகொள்கிறாள்.. இதுவரை சந்திக்கத் தோன்றாத அப்பாவை சந்தித்துவிடவேண்டும் , என்னதான் வேதிப்பொருள் கலந்திருந்தாலும் சாகப்போகிற நாள் தெரியாமல் பிடித்திருக்கிறது என்று எல்லாம் வாங்கி சாப்பிடும் மக்களின் மனநிலை. யாராவது சூப்பர்மார்க்கெடில் சாவை நினைப்பார்களா என்றபடி நடப்பாள்..



சூப்பர்மார்க்கெட்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக நடனமாடுவது போன்ற காட்சி..
லீ அவளைத்தூங்கும்போது கவனிக்கும் காட்சி, ஆன் ம் அவள் அப்பாவும் பேசுவது , மனைவியைப் புகழ்ந்து பேசும் கணவன்,  அவன் உறங்கியபின் அவனுக்கு லவ்யூ சொல்லும் மனைவி....லீ யும் ஆன் ம் சந்திக்கும் கடைசி சந்திப்பு... என பலகாட்சிகள் எனக்கு குறிப்பாக  மிகவும் பிடித்திருந்தது.
அவளுடைய இரண்டாவது திட்டத்திற்கு வசதியாக வந்து வாய்க்கும் பக்கத்துவீட்டு ஆன், கதை சொல்லும் காட்சியும் மிக அருமையானது..


5 comments:

சாந்தி மாரியப்பன் said...

பார்க்க நினைச்சிருக்கும் படங்களில் இங்க்லிஷ் விங்க்லிஷ் படமும் ஒண்ணு.

மை லைஃப் விதவுட் மீயின் விமர்சனமும் அருமை.

கோபிநாத் said...

நல்ல பகிர்வு அக்கா ;))

\\மருத்துவரிடம் அவள் பதிவு செய்த கேசட்டுகளைக் கொடுத்து இறந்தபின் சேர்க்கக் கேட்கிறாள். எல்லாருக்கும் செய்திகளை சேர்க்கிறாள்..எல்லாரிடமும் மன்னிப்புகளைக் கேட்கிறாள். சோகமென்றால்
படத்தில் சோகமான காட்சிகள் அவ்வளவாக இல்லை.சாவைக் காட்டவில்லை. அழுகையைக் காட்டவில்லை. ஆனால் சோகத்தை நம் இதயத்தில் உணரவைக்கும் ஒரு முகம் கதாநாயகி சாரா வுக்கு.. (Sarah Polley)\\

கிட்ட தட்ட இதே சூழ்நிலைகளை கடந்த சொல்லும் ஒரு படம் தான் ஆதாம்ஈடே மகன் ஆபு

http://www.youtube.com/watch?v=elwhu4wzmj4

படம் வந்த வருடத்தில் மிக சிறந்த நடிகருக்கான தேசிய விருது சலீம்முக்கு கிடைத்தது

நேரம் கிடைக்கும் போது பாருங்கள் ;)

எம்.ஏ.சுசீலா said...

நல்ல பதிவு.பார்வையில் கூர்மையும்,நடையில் தேர்ச்சியும் கூடிக்கொண்டே வருகிறது.பாராட்டுக்கள் முத்து.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாரல் நன்றிப்பா.. :)

கோபி நன்றி:) .. அந்தப்படம் பார்க்கறேன்ப்பா..

சுசீலாம்மா நன்றி :)

கோமதி அரசு said...

நல்ல பட விமர்சனம்.