August 31, 2010

Whatever will be, will be

சமீபத்தில் கேட்ட பாடல்கள் சிலவற்றை பகிர்கிறேன்.. மற்றும் என் சேமிப்புக்காகவும்.

கலகலப்ரியாவின் பதிவின் பின்னூட்டத்தில் பிரியா சிவனை பின்பற்றி சென்றதில் அவரின் பெண்களைப்பற்றிய கட்டுரையும் இப்பாடலும் கிடைத்தது. உடனே இணையத்தில் தேடி , மௌஸ் பிடித்த கை சும்மா இருக்குமா?’ மற்றும் தேடுதலே வாழ்க்கை இல்லையா? இந்த பாடலைக் கேட்டமாத்திரத்தில் பிடித்துப்போய் நான் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கு வைத்துக்கொள்ளவே முடியவில்லை. நானே கூட பாடிவிடக்கூடிய அளவில் அதன் எளிமை இருப்பதால் .. தொடர்ந்து ஹம் செய்வதோ அல்லது பாடவோ என்று இன்று இங்கே ஒரே கச்சேரியாக இருக்கிறது. எதற்கும் இருக்கட்டுமே என வாசல் கதவை நன்றாக சாத்தி வைத்தேன்.



When I was just a little girl
I asked my mother, what will I be
Will I be pretty, will I be rich
Here's what she said to me.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

When I grew up and fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows, day after day
Here's what my sweetheart said.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

Now I have children of my own
They ask their mother, what will I be
Will I be handsome, will I be rich
I tell them tenderly.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.



இதே பாடலைப்போடும்போதே உள்ளுக்குள் ஜிக்கி குரல் போல எதோ ஒன்று கேட்டுக்கொண்டிருந்தது. அதை ஒரு தட்டு தட்டி அடக்கிவைத்திருந்தேன். ஆனால் பின்னூட்டத்தில் கோமதியம்மா வந்து சொன்னதும் தான் அந்த ஜிக்கியின் குரல் தெளிவாக கிடைத்துவிட்டது. அதே ஆரம்பம் ..அதே மெட்டு.. நன்றி கோமதியம்மா.. இதோ உங்களுக்காக ஏ எம் ராஜா ஜிக்கி குரலில் சின்னப்பெண்ணான போதிலே ஆரவல்லி திரைப்படத்திலிருந்து.. ( ஆமா பெரிய ரேடியோ ஜாக்கி)


---------------------
கெக்கேபிக்குணி போன பதிவில் இந்த பாடல் so-the-journey-goes இணைப்பை தந்தார்கள். நம்ம ஊர் அம்மணி ஒருவர் தான் பாடி இருக்காங்க .. எனக்கு ரொம்பவும் பிடிச்சது. சலநாட்டைக்காக இந்தப்பாடலை அவங்க குடுத்தாங்க.. மேலே இருக்கும் கே ஸரா ஸரா கூட இதே ராகம் போலவே எனக்கு தோன்றுகிறதே யாரும் இசைமேதைகள் என் ஐயத்தை தீர்ப்பீர்களா?

பாட்டுக்கு நடுவில்
How do they see my differences with the same dress and skin?
How do they know me as a foreign alien?
அதெல்லாம் கண்டுபிடிச்சிடுவாங்க இல்ல.. :)

அவர்களே போபால் ப்ரச்சனைக்காக (city-of-lakes )ஒரு பாடல் செய்திருக்கிறார்கள். கேட்டுப்பாருங்கள் லிரிக்ஸ் ம் அங்கேயே இருக்கின்றது.

---------------------------------------
இன்றைய சிந்தனை ஓட்டம்
நண்பரொருவர் சொன்னார். ”எல்லா தகராறுகளும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் உலகம் மற்றவர்களுக்கு இயங்கத்தான் செய்கிறது. பிறகு அதை அறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது? ”


யாரோ ஒரு பெரியமனிதர் அதிக விலையுள்ள பொருட்கள் பகுதியை சுற்றி வந்துவிட்டு எதும் வாங்க மாட்டாராம். இவைகள் இல்லாமலே இன்பமாக வாழமுடியுமென்று நினைப்பதற்காம். அப்படியே எல்லாவற்றையும் கற்று தெளிந்துவிடப் போராடுபவர்கள் கூட அல்லது நான் பல கற்றவன் என்று சொல்பவர்கள் பார்க்கையில் நாலு விசயத்துக்கு மூன்று குறைவாக தெரிந்து வைத்துக்கொள்பவனுக்கு ஏதும் குறைவந்துவிடுமா வாழ்வில் ? ஒன்றுமே புரியவில்லை போங்க..