August 31, 2010

Whatever will be, will be

சமீபத்தில் கேட்ட பாடல்கள் சிலவற்றை பகிர்கிறேன்.. மற்றும் என் சேமிப்புக்காகவும்.

கலகலப்ரியாவின் பதிவின் பின்னூட்டத்தில் பிரியா சிவனை பின்பற்றி சென்றதில் அவரின் பெண்களைப்பற்றிய கட்டுரையும் இப்பாடலும் கிடைத்தது. உடனே இணையத்தில் தேடி , மௌஸ் பிடித்த கை சும்மா இருக்குமா?’ மற்றும் தேடுதலே வாழ்க்கை இல்லையா? இந்த பாடலைக் கேட்டமாத்திரத்தில் பிடித்துப்போய் நான் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கு வைத்துக்கொள்ளவே முடியவில்லை. நானே கூட பாடிவிடக்கூடிய அளவில் அதன் எளிமை இருப்பதால் .. தொடர்ந்து ஹம் செய்வதோ அல்லது பாடவோ என்று இன்று இங்கே ஒரே கச்சேரியாக இருக்கிறது. எதற்கும் இருக்கட்டுமே என வாசல் கதவை நன்றாக சாத்தி வைத்தேன்.When I was just a little girl
I asked my mother, what will I be
Will I be pretty, will I be rich
Here's what she said to me.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

When I grew up and fell in love
I asked my sweetheart what lies ahead
Will we have rainbows, day after day
Here's what my sweetheart said.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.

Now I have children of my own
They ask their mother, what will I be
Will I be handsome, will I be rich
I tell them tenderly.

Que Sera, Sera,
Whatever will be, will be
The future's not ours, to see
Que Sera, Sera
What will be, will be.இதே பாடலைப்போடும்போதே உள்ளுக்குள் ஜிக்கி குரல் போல எதோ ஒன்று கேட்டுக்கொண்டிருந்தது. அதை ஒரு தட்டு தட்டி அடக்கிவைத்திருந்தேன். ஆனால் பின்னூட்டத்தில் கோமதியம்மா வந்து சொன்னதும் தான் அந்த ஜிக்கியின் குரல் தெளிவாக கிடைத்துவிட்டது. அதே ஆரம்பம் ..அதே மெட்டு.. நன்றி கோமதியம்மா.. இதோ உங்களுக்காக ஏ எம் ராஜா ஜிக்கி குரலில் சின்னப்பெண்ணான போதிலே ஆரவல்லி திரைப்படத்திலிருந்து.. ( ஆமா பெரிய ரேடியோ ஜாக்கி)


---------------------
கெக்கேபிக்குணி போன பதிவில் இந்த பாடல் so-the-journey-goes இணைப்பை தந்தார்கள். நம்ம ஊர் அம்மணி ஒருவர் தான் பாடி இருக்காங்க .. எனக்கு ரொம்பவும் பிடிச்சது. சலநாட்டைக்காக இந்தப்பாடலை அவங்க குடுத்தாங்க.. மேலே இருக்கும் கே ஸரா ஸரா கூட இதே ராகம் போலவே எனக்கு தோன்றுகிறதே யாரும் இசைமேதைகள் என் ஐயத்தை தீர்ப்பீர்களா?

பாட்டுக்கு நடுவில்
How do they see my differences with the same dress and skin?
How do they know me as a foreign alien?
அதெல்லாம் கண்டுபிடிச்சிடுவாங்க இல்ல.. :)

அவர்களே போபால் ப்ரச்சனைக்காக (city-of-lakes )ஒரு பாடல் செய்திருக்கிறார்கள். கேட்டுப்பாருங்கள் லிரிக்ஸ் ம் அங்கேயே இருக்கின்றது.

---------------------------------------
இன்றைய சிந்தனை ஓட்டம்
நண்பரொருவர் சொன்னார். ”எல்லா தகராறுகளும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் உலகம் மற்றவர்களுக்கு இயங்கத்தான் செய்கிறது. பிறகு அதை அறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது? ”


யாரோ ஒரு பெரியமனிதர் அதிக விலையுள்ள பொருட்கள் பகுதியை சுற்றி வந்துவிட்டு எதும் வாங்க மாட்டாராம். இவைகள் இல்லாமலே இன்பமாக வாழமுடியுமென்று நினைப்பதற்காம். அப்படியே எல்லாவற்றையும் கற்று தெளிந்துவிடப் போராடுபவர்கள் கூட அல்லது நான் பல கற்றவன் என்று சொல்பவர்கள் பார்க்கையில் நாலு விசயத்துக்கு மூன்று குறைவாக தெரிந்து வைத்துக்கொள்பவனுக்கு ஏதும் குறைவந்துவிடுமா வாழ்வில் ? ஒன்றுமே புரியவில்லை போங்க..

25 comments:

ஆயில்யன் said...

//மற்றும் தேடுதலே வாழ்க்கை இல்லையா?//

எஸ்! எஸ்!

ரவி said...

என்னுடைய ஓட்டுகளை செலுத்திட்டேன்

கோமதி அரசு said...

இந்த பாடல் மாதிரி தமிழில் கேட்டு இருக்கிறேன்.

பழைய பாடல் ஜிக்கி பாடியது,முதல் வரி

’சின்ன பெண்ணனான போதிலே அன்னையிடம் நான் ’என்று ஆரம்பிக்கும்.ஆங்கில பாடலும் கேட்க இனிமையாக உள்ளது.

தேடுங்கள் கிடைக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

சிந்தனை ஓட்டம் சொன்ன நண்பர் யாருக்கா? :)

கோபிநாத் said...

;))

வல்லிசிம்ஹன் said...

கயல் முத்து:)
இந்தப் பாட்டு ஒரு ஹிட்ச்காக் படம்,அதில ஒரு அம்மா பையனுக்காகப் பாடி கண்டுபிடிப்பாங்க. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்.
அதுவும் டாரிஸ்டே குரல் கேட்கணுமா!! சான்சே இல்லை!! சின்னப் பெண்ணான போதிலே பாட்டு எங்களுக்கெல்லாம் பள்ளி.ஆண்டு விழாவுக்கு ஆடுகிற பாட்டு.:)
இதே மாதிரி சிடுவேஷன் கைதி கண்ணாயிரம் படத்தில 'கொஞ்சிக் கொஞ்சி பேசி'' பாட்டைப் பாடி ராஜசுலோசனா காணாமப் போன பையனைக் கண்டுபிடிப்பாங்க.
லேட்டஸ்டா ஆங் இல்லை இருபத் வருஷம் முன்னால ரஜினி ,பிரியா படத்தில ஸ்ரீதேவிக்காகப் பாடுவாரே:) ஸ்ரீராமனின்.... ஸ்ரீதேவியே...ஏஏ.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆயில்யன் :)
நன்றி ரவி..:)
புதியபாடல் இணைக்கப்பட்டிருக்கிறது அதையும் கேட்டு மகிழுங்கள்.

கோமதிம்மா நன்றி.. நலல்வேளை சொன்னீங்க
பிழைச்சேன்.. இல்லன்னா போனபதிவு மாதிரியே
மண்டைகுடைச்சலில் அவதிப்பட்டிருப்பேன்.

ஆதவன் .. பாருங்க அதுல மேற்கோளிட்ட பகுதி நண்பரோடது.. மீதி ரிலே ரேஸ் போல நம்மளுது.. :) அதனால் நிறைய நான் தான் சிந்திச்சிருக்கேன் அவர எதுக்கு கேக்கறீங்க..

நன்றி கோபிநாத்.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி வாங்க.. உங்களுக்கு நினைவுகளை இனிமையாக மீட்டெடுக்க வைத்ததா..இந்த பாடல்.. :) நன்றி.

ADHI VENKAT said...

உங்கள் தேடுதலுக்கு வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

என்னங்க சிந்தனை ஓட்டம் ரொம்ப கலக்கலா இருக்கு!!!!!

பார்த்துங்க...... சூடாயிறப்போகுது:-)

எழுத வந்துட்டாலே மூளை ஒரு கணம்கூட சும்மா இருப்பதில்லை!!!!

ராமலக்ஷ்மி said...

பகிர்ந்து கொண்ட பாடல் நன்று. ஒலிவடிவிலும் கேட்கிறேன். நன்றி.

சிந்தனை ஓட்டம் நல்ல ஸ்பீடு:)! புதிரான விஷயங்களுக்கான தேடலின் போதும் இது போலவே தோன்றும்:

//உலகம்.... இயங்கத்தான் செய்கிறது. பிறகு அதை அறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது?//

ஜெயந்த் கிருஷ்ணா said...

;))

முகுந்த்; Amma said...

Wow, எப்படிங்க, famous ஆன ஆங்கில பாடலயும், அதற்கு இனையான தமிழ் பாடலயும் கண்டுபிடிச்சீங்க.

'Que Sera’,இந்த பாடல் த்ரில் மன்னர் Alfred Hitchcock,இன் படமான "The man who knew too much" ல வந்தது, ஆஸ்கர் கூட வாங்குச்சுன்னு நினைக்கிரேன்.

Chitra said...

wow!!!!!!! QUe Sera Sera song is a classic over here..... I am happy to know that there is a tamil version too. Super! :-)

Thekkikattan|தெகா said...

யப்பே! என்னன்னமோ ஆராய்ச்சி எல்லாம் பண்ணிறீங்களே. துள்சிங்க சொன்ன மாதிரி பார்த்துக்கோங்க, ஓவர் ஹீட்டாகிடப் போவுது மண்டை பாக்ஸ் :)

தேடுங்க! தேடுங்க!!

//”எல்லா தகராறுகளும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் உலகம் மற்றவர்களுக்கு இயங்கத்தான் செய்கிறது. பிறகு அதை அறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது? ”//

யாருங்க அந்தப் பெரிய மனுசன். அப்படி அறிந்து கொள்வது உலக ஞானமுங்க. அரசியல் தெரியத் தெரிய முண்டி மேலே வரலாமுங்க. அப்படி வேணாமின்னு தள்ளிப் போனா, தனிப்பட்ட நிலையில ‘முழுமையா’ வாழ்ந்த மாதிரியான ஒரு கனம் கிடைக்கலாமோ...

'பரிவை' சே.குமார் said...

//”எல்லா தகராறுகளும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் உலகம் மற்றவர்களுக்கு இயங்கத்தான் செய்கிறது. பிறகு அதை அறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது? ”//

athu sari.

நசரேயன் said...

//எல்லா தகராறுகளும் நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் உலகம் மற்றவர்களுக்கு இயங்கத்தான் செய்கிறது. பிறகு அதை அறிந்துகொள்வதில் என்ன இருக்கிறது//

உண்மைதான்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எதற்கும் இருக்கட்டுமே என வாசல் கதவை நன்றாக சாத்தி வைத்தேன்//

இதான் முன்ஜாக்கிரதை முத்துலட்சுமினு சொல்றதா மேடம்... ஹா ஹா ஹா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஆதி :)
--------------------
துளசி நன்றி... :)
--------------------
ராமலக்‌ஷ்மி சில புதிர்களை விடுவிக்கலாம்
சிலதை விட்டுடணும்.. :)
--------------------
நன்றி வெறும்பய :)
--------------------
நன்றீ முகுந்தம்மா.. அதான் கோமதிம்மா சொல்லிட்டாங்களே இப்படித்தான் பதிவு போட்டு கண்டுபிடிச்சேன்.. நீங்களும் வல்லியும் நல்லவிவரங்கள் எல்லாம் தர்ரீங்க நன்றி..

--------------------
சித்ரா நன்றி:)
--------------------
தெகா நல்லா சொல்லி இருக்கிங்க நன்றி :)
--------------------
சே. குமார் நன்றி :)
--------------------
நசரேயன் நன்றி :)
--------------------
அப்பாவிதங்கமணி ... ஆமா ஆமா.. நன்றி:)

அரசூரான் said...

தேடுதல் வேட்டையில் நல்ல கண்டுபிடிப்புகள்தான் போல, கேட்டு ரசித்தேன்.

செல்வா said...

///மற்றும் தேடுதலே வாழ்க்கை இல்லையா? ///
அப்ப கூகுள் தான் வாழ்கையா ..?
//நாலு விசயத்துக்கு மூன்று குறைவாக தெரிந்து வைத்துக்கொள்பவனுக்கு ஏதும் குறைவந்துவிடுமா வாழ்வில் ? ஒன்றுமே புரியவில்லை போங்க..
//
எனக்கும் ஒண்ணும் புரியலைங்க ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அரசூரான் :)

செல்வகுமார் என்னங்க புரியலையா?
நாலுவிசயமும் தெரியனும் வாழ்க்கையில்
என்று சொல்றாங்களே.. அதான் ;)))

மங்கை said...

//மௌஸ் பிடித்த கை சும்மா இருக்குமா?’ மற்றும் தேடுதலே வாழ்க்கை இல்லையா//

சும்மா இருக்காம தேடிட்டே இருங்க.. அப்பத்தான் எங்களுக்கு இது மாதிரி நிறைய விஷ்யங்கள் தெரிய வரும்.. அதுவும் என்னை மாதிரி சோம்பேரிகளுக்கு ரொம்ப தேவை...

Vijiskitchencreations said...

சூப்பர் செலக்‌ஷன் பாட்டு வரிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி மங்கை .. உங்களிடம் பகிர்வது தானே மகிழ்ச்சி..

--------------
நன்றீ விஜீ..:)