February 7, 2007

எல்லாமே என்னோடது

பருப்புகட பருப்புகட(இல்லன்னா கீரகடகீரகட)
அரிசி பருப்பு சாதம் நெய்யு
எல்லாம் போட்டு பிசைஞ்சு
பாப்பாக்கு ஒரு வாய், அக்காக்கு ஒரு வாய்
தாத்தாவுக்கு ஒரு வாய், ஆச்சிக்கு ஒரு வாய்
காக்காவுக்கு ஒரு வாய் குடுத்துட்டு ,
கழுவி கழுவி கவுத்திட்டு
நண்டு வருது நரி வருது கிசு கிசு."

இப்படி சின்னதா இருக்கும் போதே விளையாட்டோட காக்காவுக்கும் குருவிக்கும் வீட்டில் உள்ளவங்களுக்கும்
பகிர்ந்து குடுத்து சாப்பிடச் சொல்லிக்குடுத்தாங்க அந்த
காலத்துல. ஆனா இந்த ஓட்ட சாட்டமான வாழ்க்கையில் இப்படி யாருக்கும் விளையாட நேரம் இருக்கா தெரியல.
ஒத்தப்புள்ளயயே ஒழுங்கா வளக்கறது கஷ்டம்ன்னு இருந்துடறதால பகிர்ந்துக்கற பழக்கமே இல்லாம இருக்காங்க குழந்தைகள்.



குழந்தையோட ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாங்க ஒரு நண்பர் . அந்த பையன் வந்ததும்
சைக்கிள், பொம்மை எல்லாம் என்னோடது என்னோடதுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான். போகும் போதும் சிலத எடுத்துட்டும் போவேன்னு ஒரே அடம்.
அவனுக்கு தெரியாமத்தான் கடைசியில வச்சிட்டு போனாங்க அவங்க அம்மா.




சொல்றாங்க எங்க வீட்டுலயும் 'எல்லாமே என்னுடையது'ன்னு தான் சொல்லுவான். அம்மா லேப்டாப் அப்பா லேப்டாப் எல்லாமே அவனோடதாம். காரில் அவன்
சாவியப் போட்டு ஸ்டார்ட் பண்ணித்தந்தா தான் அப்பா ஆபீஸ் போலாமாம். பெருமை அதில அவங்களுக்கு.



இதுனால பள்ளிக்கூடத்திலும் பிரச்சனை . பகிர்தலே தெரியல அவனுக்கு. வீட்டிலே ஒருத்தனாப் போயிட்டதாலதான் இப்படின்னு காரணம் சொல்லறாங்க .
அப்பா அம்மாவே விளையாட்டு தோழர்களா இருந்து பகிர்தல சொல்லிக்குடுக்கலாமே.. இப்ப நான் ஓட்டுவேனாம்...இப்ப உன் டர்ன், இப்படி. கொஞ்ச நேரம் எனக்கு அந்த பேட்(bat) தாயேன் ப்ளீஸ். இப்படி நாமும் சின்னக் குழந்தையா மாறிப் போய் அவங்க உலகத்துல என்ன என்ன அவங்களுக்கு கத்துக்கணுமோ அதுகள சொல்லிக் குடுக்கலாமே..


குழந்தைகளோடு பகிர்ந்துக்கறது மட்டுமில்லாமல் வீட்டுல
இருக்கற (இல்லன்னா எப்பவாவது வருகிற) தாத்தா பாட்டிக்கும் பகிர்ந்துக்கறத நம்ம குழந்தைகளுக்கு சொல்லித் தரணும். ஏன்னா ஒரு வயசுக்கப்புறம் வயசானவங்க கூட குழந்தைகள் போலத்தான். அவங்க
காலத்துல இப்ப நம்ம குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்,
வேஃபி போன்றவை இருந்திருக்காது இல்லன்னா அவங்களுக்கு சாப்பிடவோ வாங்கவோ சந்தர்ப்பமே
அமைந்திருக்காது... பார்க்கும் போது அவங்களுக்கும் ஆசையிருக்கலாம்... கேட்க தயக்கமா இருக்கலாம்.


எத சாப்பிட எடுத்தாலும் மற்றவங்களுக்கு வேணுமான்னு
கேட்டுட்டு சாப்பிடுன்னு சொல்லிப் பழக்கணும். இதே போலவே , உன்னைப் போல சின்னக் குழந்தைங்க சிலர் அம்மா அப்பா இல்லாம இருக்கிறவங்க ,கஷ்டப் படறவங்க ,இருக்காங்கன்னு அவங்களுக்கு தெரியப்படுத்தணும். சில வேண்டாத செலவுகளை குறைக்கவும் அதை அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கணும் அப்படிங்கற குணம் அவங்களுக்கு
தானாவே வரும்படி ( நாம வலுக்கட்டாயமா செய்ய வைக்காம) செய்யணும்.

12 comments:

அபி அப்பா said...

அருமையான பதிவு. இதே கருத்தை எல்லா மாண்டிசரி பள்ளிகளிலும் செய்து வருகின்றார்கள். என் பள்ளியில் கூட k.R என்ற என் ஆசிரியர் அவன் டிபன் பாக்ஸ் மாற்றி சாப்பிடும் திட்டம் கொண்டு வந்து failure ஆகி விட்டது.

மங்கை said...

நல்ல பதிவு லட்சுமி...கண்டிப்பா இத குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கனும். இதுல எல்லாம் பெற்றோர்கள் கவனம் செலுத்தறது இல்லை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அபி அப்பா. குழந்தைகள் பத்தி போட்ட பதிவ பொறுப்பான அப்பாவா படிச்சு மறுமொழி போட்டுட்டீங்க. :))

கொண்டுவந்த சாப்பாட்ட மாத்தினா அவங்க அவங்க அம்மா திட்டுவாங்களே அதான் பாவம் திட்டம் சரியா வரல போல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா மங்கை. சிலர் குழந்தைங்கள வளர்க்கறத விளையாட்டா நினைக்கற மாதிரி தெரியுது.சரியா வளர்க்கலன்னா அது ஒரு சமூகத்தையே கெடுக்கக்கூடியதுன்னு யோசிச்சா
கவனம் எடுத்துக்குவாங்க எல்லாருமே.

பங்காளி... said...

தெரியாமத்தான் கேக்கறேன்....இந்த டில்லிகாரவுகளுக்கு ஏதும் ஃபோபியாவா....எப்ப பார்த்தாலும் சீரியஸ் மேட்டராவே எழுதி தள்றீங்க....

இத்தன மெனக்கெட்டு எளுதறீங்க...ஒரு பயலும்(எங்கூர்ல ச்செல்லமா பங்காளிகள இப்டித்தான் கூப்டுவமாக்கும்..ஹி..ஹி..) வந்து பின்னூட்ட்ன மாதிரி தெரியல...

நாந்தான் வந்து மாஞ்சு மாஞ்சு படிச்சிட்டு ஃபீலிங்க்ஸா போறேன்...

மத்தபடி நீங்க சொன்னதையெல்லாம் அப்பனாத்தாதான் புள்ளைகளுக்கு தொட்டில் பழக்கமா சொல்லித்தரணும்....என்ன நாஞ்சொல்றது.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பரவால்ல ரெண்டு பேர் முன்னாடியே படிச்சு மறுமொழி போட்டு பின்னூட்டப் பெட்டியில ஒன்னும் கோளாறு இல்லன்னு நிரூபிச்சிட்டாங்க.

அப்புறம் நானே நினைச்சேன் ஒரே கருத்து கந்தசாமியாட்டம் (பெண்மொழியென்ன?) பதிவு போட்டுவரோமேன்னு... இப்படி வாத்தியாருங்க பரம்பர அப்படித்தான்.

தொட்டில் பழக்கமா வரதில்ல..நியுக்ளியர் குடும்பத்துல சொல்லிதர வயசானவங்க இல்ல.

தருமி said...

இந்த பகிர்தல் வரணும் அப்டிங்கிறதுக்காகவே 'நாம் இருவர்; நமக்கு இருவர்' அப்டின்ற தத்துவம் எனக்குப் பிடிச்சிப் போச்சு.


தருமின்னு பேரைச் சொன்னால் உங்கள் பின்னூட்டப் பெட்டி என்னை ஏற்க மறுக்கிறதே?!

Tulsi said...

அருமையான பதிவுங்க.
ஒரே குழந்தை இருக்கற வீட்டுலே, இன்னும் கவனமா இருக்கணும் பெத்தவுங்க.

நமக்குக் காக்கை குருவி எல்லாம் இல்லீங்க. சோத்தைப்போட்டா, 'ஸீ கல்' என்மேலே
கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போகும்:-)))))
நமக்குத்தான் இருக்கவே இருக்கே நாய் பூனைங்க. நம்ம பூனைங்ககூட
மத்த உயிர்களான பக்கத்து வீடு, எதிர்த்தவீடு நாய், பூனைகளுக்கும்,
'ஹெட்ஜ் ஹாக்'க்கும் தன் சாப்பாட்டுலே பங்கு கொடுத்துருது.

ஆனா ஒரு விஷயம் சொல்லணுங்க, 'கொடுக்கறதுலெ இருக்கற மகிழ்ச்சி' வேற
எதுலேயும் இல்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ தருமி said...
இந்த பகிர்தல் வரணும் அப்டிங்கிறதுக்காகவே 'நாம் இருவர்; நமக்கு இருவர்' அப்டின்ற தத்துவம் எனக்குப் பிடிச்சிப் போச்சு.


தருமின்னு பேரைச் சொன்னால் உங்கள் பின்னூட்டப் பெட்டி என்னை ஏற்க மறுக்கிறதே?! //

நன்றி தருமி தங்கள் வருகைக்கு.
இங்கயும் நாமிருவர் நமக்கிருவர் தாங்க.
அப்புறம் பேரைச்சொன்னால் பெட்டி திறக்கலயா அப்புறம் எப்படி இப்ப பின்னூட்டம் வந்தது. நானும் ஒரு க.கை.நா தாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன துளசி ஸீகல் ஏன் கல் போடும் சாதம் புடிக்காதா? பூனை கூட ஹெட்ஹாக் கும் நீங்க தர சாப்பிடுதா அப்ப நீங்க தான் வலையுலக மேனகா காந்தி சரியா?

தருமி said...

ரெண்டு தடவை போட்டுப்பாத்தும் போகலையேன்னு இப்படி எழுதி முயற்சி செய்தேன். அதுக்கு ரோசம் வந்திருச்சி... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தடைகளை மீறி மறுமொழி அனுப்பி இருக்கீங்களா? ரொம்ப மகிழ்ச்சி தருமி அவர்களே :))