February 10, 2007

அர்த்தமில்லா காத்திருப்பு

தூரிகைக்கு ஓய்வில்லை,
வண்ணங்கள் காத்திருக்கின்றன.
மையிட்ட கண்களுடன்
மங்கையவள் காத்திருப்பாள் .
அர்த்தமில்லா காத்திருப்பு.
ஓவியத்தில் மூழ்கி,
தன் முகமே மறந்தவனிடம்,
அசையாமல் நின்றுவிட்டு,
மனதைக் குறையாகிப் போன
ஓவியத்தைத் தள்ளுவதுபோல்,
ஒதுக்கித் தள்ளிவிட்டு
முணுமுணுப்பாய் ,
மொடமொடத்தக் காகிதத்தை
எண்ணியபடி அவள்.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

முத்துலட்சுமி,

ஓவியக்காரனுக்கு ஓவியம் தான் பிடிக்கும்.

உயிரை விட உடலை நேசிப்பானா?;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது சரிதான்ங்க வல்லி . ஆனா அவளுக்குள்ள இருக்குறதும் அவனோட ஓவியத்தப் போல ஒரு உயர்ந்த உயிர் தானே,அந்த உயிரோட மனச அவன் புரிஞ்சிக்கலன்னு தான் அவள் கவலை.

வல்லிசிம்ஹன் said...

அப்படியெல்லாம் புரிஞ்சுகிட்டாலும்!

விடற பெருமூச்சை நிறுத்தினாலும் அவன் திரும்புவானா என்பது சந்தேகம் தான்.:-)
ஏக்கம் பெண்ணுக்கு மட்டுமே சொந்தம்.