கிடைத்தது. சுற்றி சுற்றி வந்ததில் வெட்டிப்பயல் அவர்களின் கதை ஒன்று படித்தேன். ஆஹா இது உன்கதை தானே என்று எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் பின்னூட்டத்தில். அவரோ சுற்றிலும் இருப்பவர்களை கவனித்து எழுதுவதே என்று மறுத்துக்
கொண்டிருந்தார். நாமும் தான் கண்டுறுக்கோம் கேட்டும் இருக்கோம் . இப்படி கதை எழுதி பார்க்கணும்ன்னு நினைச்சாலும் யார் போடுவா நம்மளோட எழுத்தை எல்லாம்ன்னு முன்பெப்போதும் முயற்சிக்கவே இல்லை.
சித்திரமும் கை பழக்கம் , எழுத எழுத , படிக்க படிக்க
எல்லாம் வரும்ன்னாலும் படிக்க கருத்து சொல்ல (திட்ட)
யாராச்சும் நாலு பேர் வேண்டாமா? இப்படி யோசிச்சுட்டு விட்டாச்சு. கவிதைங்கர பேருல சிலத கிறுக்கி நோட்டுல
சேமிக்கறது. படிச்சதுல பிடிச்சதா நாலு விஷயத்த பின்னால திருப்பிப் பார்க்கன்னு ஒரு டைரியில சேமிக்கரதுன்னு இருந்துட்டேன்.
நம்மளே அடுத்த ஆள் (அப்படி எல்லாம் பிரிச்சு பேசக்கூடாது தான் ) சம்பாத்தியத்துல சாப்பிடறோம். காசைக் கரியாக்கக் கூடாதுன்னு சும்மா இருந்தேன். தமிழ்மணம் வந்து பார்த்தா எல்லாம் இலவசமாம்.ப்ளாக் இலவசம். படிச்சு நல்லதாவோ, இப்படி இல்ல அப்படின்னு கருத்து சொல்லவோ கூட ஆள் இலவசமா கிடைக்கறாங்க ன்னு தெரிஞ்சுது.
கணினியோ இருக்கு.கணவர் வேலைக்கென்று வீட்டு உபயோகத்துக்கும் முழு நேரம் இணைப்பு இருக்கு. அப்புறம் என்ன களத்தில் இறங்கி சோதிச்சுப் பார்த்துடுவோம் நம்ம திறமையை என்று எழுத ஆரம்பிச்சுட்டேன். படிக்கறவங்களை சோதிக்கறமோன்னு யோசிச்சா நாம தொடர்ந்து எழுத முடியாது அதனால அப்படி யோசிப்பதை மறந்தாயிற்று. கணவரும் பெண்ணும் படிக்கலன்னாலும் (அதனால தானோ??) முயற்சிக்கு ஊக்கம் தந்தார்கள்.
முதலில் ஆரம்பித்த வலைப்பதிவு சரியாக வேலை செய்யவில்லை. அதில் முதலில் வாழ்த்தியது சிவஞானம்ஜி. பிறகு பாடாய்பட்டு இந்த பதிவு ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த உடன் சேதுக்கரசி வந்து வாழ்த்தி வரவேற்றாங்க.மறுமொழி திரட்டப்பட்டால் தான் கவனிக்கப்படும் அப்படிங்கறது விளக்கிட்டு போனாங்க. பாலபாரதி வந்து விரைவு படுத்தியே ஆகனும்ன்னு சொல்லிட்டு போனாங்க. இதுல இருக்கற ஆபத்து அப்ப விளங்கல. பொன்ஸ் கிட்ட சில சந்தேகம் கேட்டுகிட்டேன். எப்படியோ முட்டி மோதி அதையும் செஞ்சாச்சு.
மேம்பாலம் பத்தி எழுதியபோது அனுபவம் மிக்க பதிவர்கள் வந்து பின்னூட்டம் போட்டதுல கவனம் பெற்று விட்டொம்ன்னு மகிழ்ச்சி கிடைத்தது. பூங்காவில் நம்மோடது வருமான்னு யோசிச்சதுண்டு.அப்புறம் வந்தது . வந்ததும் அடுத்து சின்ன பிள்ளையாட்டம் அட்டையில பெயர் வரல்லையேன்னு தோன்றியது . அப்புறம் பூங்காவில் அட்டையிலும் வந்தது ஒரு பதிவு. இது ஒரு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது .இன்னும் நன்றாக எழுதத் தூண்டுகிறது.
வலைப் பதிவு சந்திப்புகள் பற்றி படித்து அதில் ஒரு ஆசை. நாமும் எழுத வந்தாச்சு ரோல் மாடல் இருக்கணுமே, துளசியோட பதிவுகள் படிக்கும் போது அப்படி தோன்றியது. அவங்க இந்தியா வந்ததும் பார்க்கணும்னு முயற்சி செய்தேன். பொன்ஸ் உதவியால முடிந்தது. பொன்ஸ், துளசி, மதுமிதா, அருணா, நிர்மலா மற்றும் மீனா எல்லாரும் சந்தித்தோம். எழுதுங்க என்று உற்சாகப் படுத்தினார்கள்.
சிலர் தங்களது பக்கத்தில் படிக்கிற சிலவற்றை சேமித்துவைப்பது பார்த்திருக்கிறேன். அடுத்து இப்படி நம்மளோடத யாராச்சும் தொடர்ந்து வாசிக்க ஆசைப்படறமாதிரி என்னைக்காச்சும் எழுதனும் என்று ஆசைப்பட்டாச்சு. ஆசைப் பட என்ன அளவு ?? ஆக
அதுவும் நிறைவேறிப் போச்சு. மதி கந்தசாமி அவங்க பதிவுல என் பெயரைப் பார்த்தேன். நன்றி மதி.
பாஸ்டன் பாலா அவர்கள் சேமித்து வைக்கும் தளத்தில்
என்னுடைய பதிவுகள் சிலவற்றை பார்த்தேன். சங்கத்தில் ஒருமுறை என் பதிவு பரிந்துரைக்கப்பட்டது. நன்றி பாலா,
நன்றி இளா.
பின்னூட்டங்கள் இட ஆரம்பம் முதலே ஒரு சிறு தயக்கம்
இருந்தது .ஒரே ஒரு முறை தவறுதலாக பின்னூட்டமிட்டு
விட்டேன். இருந்த போதிலும் சில விஷயங்களில் மற்றவர்களின் பதிவில் நான் எழுதிய பின்னூட்டங்கள் கவர்ந்தது என்று பாராட்டியவர்கள் தந்த ஊக்கத்திற்கும் நன்றி. பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டம் அளித்து இதுவரை கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.
பெற்றோரும் கணவர் வீட்டாரும் மற்றும் நட்பு வட்டமும் கூட ஊக்கமளிக்கவே தொடர்கிறது பதிவுகள்.
பெற்றோரும் கணவர் வீட்டாரும் மற்றும் நட்பு வட்டமும் கூட ஊக்கமளிக்கவே தொடர்கிறது பதிவுகள்.
70 comments:
வாழ்த்துக்கள்!
//படிக்கறவங்களை சோதிக்கறமோன்னு யோசிச்சா நாம தொடர்ந்து எழுத முடியாது//
:))
தொடர்ந்து உங்க டைரில எழுதி வெச்சிருக்குற கவிதைகளையெல்லாம் போடுங்க!
கலாய்க்கக் காத்திருக்கிறோம்!
:))
ஊரோட ஒத்துவாழ காதல்பற்றி பதிவு(முந்தைய பதிவு) போட்டேன் ஏதோ படிச்சு பார்த்துட்டு போனாங்க போல ஹிட் கவுண்ட்டர் கூடியிருக்கு கொஞ்சம்போல .ஆனா ஒரு கமெண்ட் கூட வரல,
நாமக்கலாரே.:((
பின்னூட்டம் கேட்டேன்கறதுக்காக இந்த ஆவி கூட்டம் ஏதும் வராம இருந்தா சரிதான். :))
//பின்னூட்டம் கேட்டேன்கறதுக்காக இந்த ஆவி கூட்டம் ஏதும் வராம இருந்தா சரிதான். :)) //
அதை அவர்கிட்ட கேட்ட எப்படி?
எங்களுக்கு சொல்லியணுப்பினா நாங்க வந்துட்டுப் போறோம்!
நம்ம பேரெல்லாம் போட்டுருக்கீங்க...
ரொம்ப சந்தோஷம்.
தொடர்ந்து எழுதுங்க... இங்கு ஊக்குவிப்பவர்கள் மிக அதிகம்!!!
முத்துலட்சுமி,
நீங்கள் எழுதும் இடுகைகளும் சரி ஆங்காங்கே இடும்பின்னூட்டங்களும் சரி கவனத்தை ஈர்த்தன. அழகாக எழுதுகிறீர்கள். உங்களின் கருத்துகளை நல்ல முறையில் வைக்கிறீர்கள். அதுதான் எல்லோரையும் கவனிக்க வைக்கிறது.
இப்ப நீங்க நன்றி சொல்றீங்கல்லியா? அதுமாதிரித்தான் நானும் தமிழ் இணையத்திற்கு வந்தபோது (யாகூ தமிழ்க்குழுமங்கள்) என்னையும் சிலர் ஊக்கப்படுத்தினார்கள். மரத்தடியில் அதை 'ஊக்கு'விக்கிறது என்று தமாஷாக அழைப்போம். இது ஒரு rippling effect தானில்லையா? Pass it forwardனு ஒரு படம் வந்தது பார்த்திருக்கீங்களா? அருமையான கருத்து..
-மதி
இன்னொரு உசா ராமசந்திரன் உருவாகற மாதிரி தெரியுது....கலக்குங்க கலக்குங்க....
அப்பால இந்த புகழ்வட்டமெல்லாம் மாயை....அதுக்காக எழுதாதீங்க. மனசுக்கு சரின்னு பட்டா தயங்காம எழுதுங்க....
இன்னாடா இவன் கருத்து கந்தசாமி மாதிரி அள்ளிவுடரானேன்னு தோனுதா...என்ன பண்றது...இங்க இந்த மாதிரி கொசுக்கடியையும் சாமாளிக்க கத்துக்கனும் தாயீ...ஹி..ஹி...
வாழ்த்துக்கள்
எனக்கு காதல்னா அலர்ஜி.
அதான் நேத்து லீவு போட்டுட்டுட்டேன்..
:)))
சென்ஷி
நாமக்கலார் வந்த பின்னாடி தான் இந்த கழகம் ஆவிகள் எல்லாம் வருது . அதான் அவர்கிட்ட சொல்லிவிட்டேன்.
வராம இருக்கணும்ன்னு ல்ல சொல்லிவிட்டேன்.:(( அப்படியும் வந்துட்டாங்க.
நீங்க வருகை தந்ததற்கும் பின்னூட்டமிட்டதற்கும்,நன்றி வெட்டிபயல்...ஜி.
நன்றி, மதி .
"ஊக்கு"வித்தாங்க வாங்கிகிட்டு நன்றி சொல்லிட்டேன்.:))
உண்மை தான் பங்காளி. சில பதிவுக்கு ஒருத்தருமே பின்னூட்டம் தராம இருக்கும் போது புகழ் போதை தெளிந்து தான் போகும்.அப்பறம் கிடைக்கும் போது திரும்பி வந்து ஒட்டிக்கும்.
\\சென்ஷி said...
எனக்கு காதல்னா அலர்ஜி.
அதான் நேத்து லீவு போட்டுட்டுட்டேன்..
:)))
சென்ஷி //
பொய் எதுக்கு சென்ஷி, நீங்க தானே காலியான வகுப்புல பேர் பாத்து மாட்டிக்கிட்டவர்...நல்லா காதலர் தின கொண்டாட்டத்தை டில்லியில் பார்த்திருப்பீர்கள் லீவ் போட்டுட்டு சரிதானே.
\\நீங்க தானே காலியான வகுப்புல பேர் பாத்து மாட்டிக்கிட்டவர்...\\
புரியலயே :((
சென்ஷி
நான் எழுதிய உயிர்த்தெழுந்து சொன்னது உன் மேஜை கவிதையில் நீங்க அப்படித்தான் பின்னூட்டம் போட்டிருந்தீங்க. அதான் சொன்னேன்.
ஒரு பின்னூட்ட எச்சரிக்கை...
இது ஒரு மீள் பதிவு பின்னூட்ட பதிவு.. படித்து தேடாதீர்கள்
//லட்சுமி said...
//நானும் அப்படி பார்த்துத்தான் மாட்டிக்கிட்டேன்//
சென்ஷி
காதலிச்சவங்க கிட்டயா?மாட்டினது
நல்லதுதானே.//
அட நீங்க வேற, அது பெரிய கத, இதுக்கு பின்னூட்டமெல்லாம் பத்தாது. ஒரு பதிவு தொடரே போடணும்..
நன்றி, பழசை நினைவு படுத்தியதற்கு.
சென்ஷி
//அட நீங்க வேற, அது பெரிய கத, இதுக்கு பின்னூட்டமெல்லாம் பத்தாது. ஒரு பதிவு தொடரே போடணும்..
//
சென்ஷி! சீக்கிரம் போடுங்கோ!
//நாமக்கலார் வந்த பின்னாடி தான் இந்த கழகம் ஆவிகள் எல்லாம் வருது . அதான் அவர்கிட்ட சொல்லிவிட்டேன்.
வராம இருக்கணும்ன்னு ல்ல சொல்லிவிட்டேன்.:(( அப்படியும் வந்துட்டாங்க.
//
அவங்க வருவதற்கும் நமக்கும் என்னங்க தொடர்பு? ஏன் இப்படி பத்த வெக்குறீங்க?
:))
வாழ்த்துக்கள் + கலக்குங்க...!!!!
// இங்கு ஊக்குவிப்பவர்கள் மிக அதிகம்!!! //
ஆமாம்! எவ்வளவு ஊக்கு வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் ஹோல் சேல் விலையில் டெலிவரி செய்கிறோம்!
டெலிவரி சார்ஜஸ் இல்லை!
உங்க லிஸ்ட்டுலே இருக்க எல்லாத்துக்கும் சேர்த்து வாழ்த்து(க்)கள்.
காதலைப் பத்திச் சரியாத் தெரியாது .அதான் நேத்து காதலர்தினப் பதிவுக்கு
வரலை.
//அவங்க வருவதற்கும் நமக்கும் என்னங்க தொடர்பு? ஏன் இப்படி பத்த வெக்குறீங்க?
//
அதானா!
பத்த வெக்குறதெல்லாம் நாங்கதான் செய்வோம்! பாருங்க எங்க வாய்ல நெருப்பு இருக்கு!
மன்மோகன் சிங் மற்றும் அப்துல் கலாம் என்னும் பெயரில் வந்த பின்னூட்டங்களை பிரசுரிக்க எனக்கு பயமாக இருக்கிறது.ஏதோ ஆரம்பித்து இருக்கும் என் பதிவுகளை அரசாங்கமே தடை செய்ய வேண்டும் என்ற எண்ணமா? நான் வரல இந்த விளாட்டுக்கு.
:-)
அய்ய்ய்.. உங்க பட்டியலில் அடியேனுமா? வியப்பா இருக்கு!
அப்புறம்.. உங்க வலைப்பக்கம் ஏன் அறிவொளி புத்தகம் மாதிரி மிகப்பெரிய எழுத்துக்களில் இருக்கு! கொஞ்சம் குறைச்சுக்கலாமேத்தா!
வாழ்த்துக்கள்.
கஷ்டப்பட்டு போட்டீங்களா மன்னித்துக் கொள்ளுங்கள் அனானி.
உங்கள் இரண்டு பின்னூட்டத்தையும் அழித்துவிட்டேன்..பெரியாளுங்க பேரேல்லாம் விளையாட்டுக்கும் கூட வேணாம்.அனானியாகவே வந்து பின்னூட்டமிடுங்கள்.ஆவிகளையே சில முறை தான் பிரசுரிக்கிறேன்.
நன்றி பாலபாரதி. எழுத்துக்களை சிறிதாக்குகிறேன்.என் கண் கோளாறுடைய கண் அதான்.கொஞ்சம் பெரிசா...:((
பாகச-வுல சேந்தாச்சா,
புதிய பதிவர்களை இணைக்கின்றோம்.
தொடர்புக்கு,
ஆனைத்தலைவி பொன்ஸ்-ஐ தொடர்பு கொள்க. சேர்வது மிக எளிது. உடனே சேர்வீர்.
பாகச - டெல்லி கிளை செயலாளர்
சென்ஷி
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " என்பதற்கினங்க நான் யாரையும் கிண்டல் செய்வது இல்லை.
சும்மாவே என்னை கிண்டல் செய்தவர்கள் இருக்கிறார்கள். எனக்கு வேண்டாமப்பா சங்கமும்
கலாய்த்தலும்:((
பாருங்க கலாய்த்தல் தலைவிக்கே
பொகச ஆரம்பிக்க தயாராக இருக்கும்
வலையுலகம் இது.
பா.க.ச வின் புதிய உறுப்பினரை
வாழ்த்தி வரவேற்கிறோம்
இவண்,
பா.க.ச
கோவை மற்றும் நாமக்கல் மாட்ட கிளைகள்
நாங்கள் ல.க.ச என்று ஒன்றைத் தொடங்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்!
உங்கள் அனுமதிக்காக!
ல.க.ச,
கோவை மற்றும் நாமக்கல் உறுப்பினர்கள்!
பா.க.ச சேரரீங்களானு கேட்ட பின்னூட்டத்தை பிரசுரித்தற்கே விளைவைப் பார்த்தீங்களா சென்ஷி.
உடனேயே ல.க.ச வாம்.
இதத்தான் நாங்க பாகச மகிமைன்னு சொல்வோம்
:))))))))
சென்ஷி
நாமக்கல்லாரே, ல.க.ச.எல்லாம் ஆரம்பிச்சு பெயரை பிரபலடுத்தாதீங்க.
அப்புறம் நான் பா.க.ச வுல சேரலைன்னு சொன்னாலும் சேர்க்கறீங்களே. கட்சியில் கடத்தி போய் சேர்க்கறமாதிரி.
//கட்சியில் கடத்தி போய் சேர்க்கறமாதிரி.
//
உறுப்பினர் சேர்க்கைன்னா அப்படித்தான்!
:))
என்னுடைய கலாம், சிங் பின்னூட்டங்களை ஒரு அஞ்சி நிமிட் வெளியிடுங்க, நான் கோப்பி செய்துக்கறேன். பிறகு நீங்க டெலிட் செய்யுங்க. கற்பனை மீண்டும் வரமாட்டேங்குது. ஷோர்ட் டெம் மெமோரி லாஸ்.
பயப்பட வேண்டாம் ஆத்தா,
பா.க.ச ஆளுங்க அத்தனி பேரும் சொக்க தங்கமுக! அவங்களாக எப்பவும கஷ்டம் வராதுன்னு நம்பலாம்.
ல.க.ச ஆரம்பிக்காம்ம இருக்க.. சங்கத்தில சேர்ந்திருங்க.
(மகளீர் அணி வீக்க இருக்குது)
:)
\\அரே, கோன் ஹே தூ...ப்லாக் மேலே புச்சா எய்துறே, டெல்லி கவர்மெண்ட் கிட்டே அனுமதி வாங்கீட்டியா// இது மன்மோகன்.
\\சும்மா இருந்தால் அப்படியே குடும்பத்தோடு மொகல் கார்டன் பக்கம் வரவும். நான் வைத்திருக்கும் க்ரோட்டண்ஸ் செடிகளை பார்வை இடலாம். செக்கியூரிட்டியிடம் இந்த பின்னூட்டத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து காட்டவும்.
அன்புடன்,
ஏ.பி.ஜே.அப்துல் கலாம். ( என்னோட கையொப்பம் வேறு போட்டிருக்கேன், சத்தியமா செக்கியூரிட்டி நம்புவான் ?//
ஒகேவா அனானி. உங்க பேர் என்ன? இத்தனை கிரியேட்டிவா?? திங்க் பண்ணறீங்க பேரப்போடுங்க.
இந்த கட்சி அடிக்கக்கூடாதுன்னா அந்த கட்சியில சேருங்க மாதிரி நடுநிலையே கிடையாதுங்களா? ஒன்னு ல.க.ச இல்லன்னா பா.க.ச வா?
//இந்த கட்சி அடிக்கக்கூடாதுன்னா அந்த கட்சியில சேருங்க மாதிரி நடுநிலையே கிடையாதுங்களா? ஒன்னு ல.க.ச இல்லன்னா பா.க.ச வா? //
அதுக்குத்தான் நான் முன்னாடியே கூப்ட்டேன். இப்ப என்ன பண்றது?
சரி, ல.க.ச. வுல டெல்லி கிளை யாரு பாக்குறான்னு கேளுங்க. ஏதாவது சீட்டு கிடைக்குதான்னு பாப்போம்....
சென்ஷி
லட்சுமி,
உங்கள், இடுகைகள், மற்றவர் பதிவுகளில் இடும் பின்னூட்டங்கள் எனப் பலதையும் வாசித்திருக்கிறேன். பிடித்திருக்கின்றன அவை. தொடருங்கள்.
நாமக்கல் சிபி,
எனக்கும் நெடுநாளைய சந்தேகமா இருந்தது. நீங்க போற இடங்களுக்கு ஆவிகளும் கூடவே ஏன் வர்றாங்கன்னு:))
பாலபாரதி,
//உங்க பட்டியலில் அடியேனுமா? வியப்பா இருக்கு!///
நீங்க யார் பட்டியல்லதான் இல்ல:))
பி.கு
அப்துல்கலாமாக வந்த அனானியின் கற்பனையை ரசித்தேன்.
நன்றி செல்வநாயகி. முதன் முறை பின்னூட்டமிட்டிருக்கீங்க.
அனானி ரொம்ப கேட்டுகிட்டதால அத ப்ரசுரிச்சேன் ஆனா பாருங்க அனானி பேரச்சொல்லல. மெயில் தேடி வெட்டி ஒட்டி போட்டேன்.நன்றியே இல்ல.
ஆக்சுவலி நான் பா.க.ச. அதனால் தான் இந்த ஏரியாவில் புழங்குறேன்.
செந்தழல் ரவி
//ஆவிகளையே சில முறை தான் பிரசுரிக்கிறேன்.//
அதான் ஏன்னு கேக்குறோம்? நாங்களும் பதிவர்கள்தானே!
//நாமக்கல் சிபி,
எனக்கும் நெடுநாளைய சந்தேகமா இருந்தது. நீங்க போற இடங்களுக்கு ஆவிகளும் கூடவே ஏன் வர்றாங்கன்னு//
அவர்தான் எங்களை குப்பிக்குள்ளே இருந்து திறந்து விட்டாரு.
பார்க்க : எப்படி வந்தோம்?
ஆ.லை.ஆவி, அதாகப்பட்டது,
இந்த கவுண்டமணி சொல்வாரே
"கூடை வச்சிருக்கறவங்களுக்கு எல்லாம்
பெட்ரமாக்ஸ் குடுக்கறது இல்ல"ன்னு
அப்படி எனக்கு பெயர் பிடிக்கலன்னா
போடறது இல்ல.
பாருங்க ஒரு தடவை கும்தலக்கடி கும்பா வந்தார் போடலை.அப்புறம் முத்துலட்சுமி ஆவி வந்தாங்க போடலை.(என்பெயரிலேயே வந்ததால் பிடிக்கலன்னு சொல்ல முடியாது )சர் நேம் ஆவிங்கறதால போடலை.
பின்னூட்ட வெறியன்னு சொன்னதால ஒருத்தடவை ரிஜக்ட் செய்தேன்.இப்படி....:))
ஆவிகளை உள்ள விட்டதால், டேஷ்போர்டில் ஒரு கமெண்ட் ன்னு காண்பிக்குது உள்ளப் பார்த்தால் ஒன்னும் இல்ல.கமெண்ட் ஆவியா போயிடுச்சு போல.
அடுத்த முறை நன்றி தெரிவிக்கும் பதிவு போடும் போது ஆவிகள் கழகம் மற்றும் பா.க.ச ரெண்டோட பேரும் போடப்படும் .பின்னூட்டம் போட்டு ஊக்கமளித்தற்காக. ஆனால் எப்படித்தான் ஒருஒருத்தங்க 100 200 எல்லாம் பின்னூட்டம் வாங்கறாங்களோ பாவம் அவங்கள்ளாம்.:((
அதை ஏன் கேக்குறீங்க, கொடுமையான சம்பவம் அது.
ஏய் எனக்கு யாராவது பின்னூட்டம் போடுங்கப்பா ?
ஏனுங்க, அதென்ன முத்துலெச்சுமி , வித் இன் த பிராக்கெட்ல லெச்சுமி ?
வெறும் லெச்சுமின்னு வைங்க, இல்லை வெறும் முத்துலெச்சுமின்னு வெய்யுங்க ?
கொடுமைதான் இது.
ஆவிகளால் தொல்லையா?
அணிந்து கொள்ளுங்கள் தாயத்து!
////ஏய் எனக்கு யாராவது பின்னூட்டம் போடுங்கப்பா ? ...///
யாருன்னு போடுறது ? பேரையாவது சொல்லேன்.
பெயர் காரணமெல்லாம் தனியா பதிவு போட்டாச்சுப்பா அங்க போய் பாருங்க.
//எப்படித்தான் ஒருஒருத்தங்க 100 200 எல்லாம் பின்னூட்டம் வாங்கறாங்களோ பாவம் அவங்கள்ளாம்//
டார்கெட் புரிந்தது!
ஸ்டார்ட் மியூசிக்!
பசங்களா ஆரம்பிங்க!
அட ஆரம்பிச்சாச்சுப்பா, இவங்கதான் பப்லிஸ் செய்ய பயப்படுறாங்க.
*
//ஏய் எனக்கு யாராவது பின்னூட்டம் போடுங்கப்பா ? //
அட்ரஸைச் சொல்லுங்கப்பா!
உடனே வருகிறோம்!
அய்யோ வேணாம் ஆவி 100 அப்படிங்கற வார்த்தையே அலர்ஜியா இருக்கு எனக்கு.ரிஜக்ட் பண்ணியே கை வலிக்குது.
ஆவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அக்காவை வண்மையாக கண்டிப்போம்.
////அய்யோ வேணாம் ஆவி 100 அப்படிங்கற வார்த்தையே அலர்ஜியா இருக்கு எனக்கு.ரிஜக்ட் பண்ணியே கை வலிக்குது. ///
நாங்க என்னமோ வெட்டியா குந்திக்கினு பின்னூட்டம் போடுறமாதிரி இல்லை இருக்கு...நாங்க எவ்ளோ க்ரியேட்டிவ்வா யோசிச்சு பின்னூட்டுறோம். அவன் அவன் ஒரு பின்னூட்டம் இல்லாம காயறான். அதை புரிஞ்சுக்காம எல்லாத்தையும் ரிசக்ட் செய்யுறாங்கப்பா இவங்க.
பயந்தாங்கொள்ளி அக்கா. யாரும் இங்கே பின்னூட்டம் போடாதீங்கப்பா. வாங்க நாம வேற எடம் போலாம்.
எங்கள் பின்ன்னூட்டதை பப்ளிஷ் செய்ய முடியாதுன்னா முன்னாலியே சொல்லி இருக்கலாம் இல்லையா ? எதுக்கு மற்ற பின்னூட்டத்தை எல்லாம் அலவ் செஞ்சீங்க ?
முதலில் எப்படிப்பட்ட பின்னூட்டம் பிரசுரிக்க மாட்டீங்க என்று தன்னிலை விளக்கம் கொடுத்துட்டு பின்னூட்ட பெட்டியை மூடுங்க.
அனானிகள் முன்னேற்ற கழகம்.
//அட ஆரம்பிச்சாச்சுப்பா, இவங்கதான் பப்லிஸ் செய்ய பயப்படுறாங்க//
அடப் பாவமே!
:(
அமுக வினர் நல்லவர்கள்!
ஆமாங்க கொஞ்சம் பயங்தாங்கொள்ளி அக்காதான் நான். இப்ப சொல்லிடறேன்
ஏதோ 40 50 ஒகே அதுக்கு மேல இந்த கழக பின்னூட்டமெல்லாம் வேணாம். உங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்ததற்கு நன்றி.
இன்ந்த பின்னூட்ட அரசியல் எனக்கு அவ்வளவா புரியல.கொஞ்ச நாள் ஆகும். மன்னித்துக் கொள்ளுங்கள்.
:)))
வாழ்த்துக்கள்.. ஊக்கெல்லாம் இங்க நிறைய இருக்கு :)) மதி சொல்வது போல், ஊக்குவிப்பவர்களும் அரவணைத்து எழுத அழைப்பவர்களும் ஏராளம்..
பாகசவில் சேர்ந்ததற்கு ஒரு ஓ :))
ஆவி,
அவங்க தான் பயப்படுறாங்க இல்ல.. விட்ருங்களேன் :)))
நன்றி பொன்ஸ், (பரிந்து பேசுனதுக்கும் பின்னூட்டத்திற்கும்)
சிந்தாநதி பதிவ பாத்தீங்களா?
//போட்டியை துவக்கி வைக்க அழைக்கப் பட்ட நண்பர் பாலபாரதி தவிர்த்து மற்ற கருத்துக்கள் பரிசீலிக்கப் பட்டதில்,
இது பட்டிமன்ற பாணி விவாதம் என்று ஆரம்பத்திலேயே சொல்லப் பட்டதை பலரும் கவனித்திருக்க வில்லை என்று தோன்றுகிறது. அதே சமயம் பட்டி மன்றம் மாதிரி அறிவிக்கப் பட்ட பேச்சாளர்கள் இங்கில்லை. எனினும் எதிராளியை, எதிர்க்கருத்தை சவாலுக்கழைத்து ஒரே ஒருவர் மட்டுமே எழுதியிருக்கிறார். மற்றவர்கள் எதிர்க்கருத்தையும் தாங்களே சொல்லி தங்கள் தரப்பை கொஞ்சம் பலவீனமாக்கிக் கொண்டதாக தோன்றுகிறது.
"சந்தோஷமா.
அன்பை வெளிப்படுத்த எல்லா நாளும்
நல்ல நாள் தான்.மத்த நாள் இல்லாட்டியும் அன்னைக்கு மட்டுமாவது சிலர் வெளிப்படுத்தறது நல்லது தானே. அன்பை கொண்டாட ஆள் இல்லாதவங்க வேணாம் வேணாம்ன்னு தான் சொல்லுவாங்க." முத்துலெட்சுமி(லட்சுமி)
எதிர்க்கருத்து சொன்ன இருவருமே இந்தக் கருத்தை மறுத்து எதுவும் சொல்லாததால் இந்தப் போட்டியாளர் வெல்கிறார்.//
வாழ்த்துக்கள்
சென்ஷி
நன்றி சென்ஷி நான் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைத்தேன்.
இன்றைய தினம் உங்களுக்கு இனிதாய் கழிந்திருக்கும்....
வாழ்த்துக்கள்....
கலக்குற முத்து...:-)))...
//மேம்பாலம் பத்தி எழுதியபோது அனுபவம் மிக்க பதிவர்கள் வந்து பின்னூட்டம் போட்டதுல //
ஹய்ய்ய்ய்..இதுல நானும் பின்னூட்டம் போட்டேனே...உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியலை..
தொடர்ந்து எழுதுங்க
வாழ்த்துக்கள்....
பங்காளி, பின்னூட்டத்தில் முந்தைய என்னோட பதிவின் ரெக்கார்ட்டை இந்த பதிவு முறியடித்து விட்டது. ஆனா அதுக்காக பின்னூட்டத்தில் தான் என்னுடைய கவனம் இருக்குன்னு அர்த்தம் இல்லை. சும்மா யாரும் கவனிச்சாங்களா இல்லையான்ன ஒரு ஆதங்கம் தான்.கொஞ்ச நாள் போனா படிக்கறவங்க பின்னூட்டம் இடலைன்னாலும் புரிஞ்சுக்கற தன்மை எனக்கு வந்துடும்ன்னு நினைக்கிறேன்.
நன்றி , மங்கை. நியாபகம் இருக்கு.ஆமா நீங்க கூட எனக்கு முன்னாடியே எழுதிக்கிட்டு இருக்கற பதிவர் தானே.
//\\சென்ஷி said...
எனக்கு காதல்னா அலர்ஜி.
அதான் நேத்து லீவு போட்டுட்டுட்டேன்..
:)))
சென்ஷி //
பொய் எதுக்கு சென்ஷி, நீங்க தானே காலியான வகுப்புல பேர் பாத்து மாட்டிக்கிட்டவர்...நல்லா காதலர் தின கொண்டாட்டத்தை டில்லியில் பார்த்திருப்பீர்கள் லீவ் போட்டுட்டு சரிதானே.//
எந்த ஒரு விஷயத்திலும் அதை அனுபவிச்சப்புறம் தான் நமக்கு ஒத்துக்குமா, ஒத்துக்காதான்னு தெரிய வரும். சிலருக்கு கத்தரிக்காய், மாத்திரை இவ்வளவு ஏன் சிலபேருக்கு இன்சுலின் ஊசியே ஒத்துக்கறதில்ல. அதனாலதான் நானும் பிப்ரவரி-14 அன்னிக்கு லீவ் போடறதாயிடுச்சு. இதத்தான் நான் காதல்னா அலர்ஜின்னு பதிவுல எழுதினேன்.
சென்ஷி
//சென்ஷி said...
//\\சென்ஷி said...
எனக்கு காதல்னா அலர்ஜி.
அதான் நேத்து லீவு போட்டுட்டுட்டேன்..
:)))
சென்ஷி //
பொய் எதுக்கு சென்ஷி, நீங்க தானே காலியான வகுப்புல பேர் பாத்து மாட்டிக்கிட்டவர்...நல்லா காதலர் தின கொண்டாட்டத்தை டில்லியில் பார்த்திருப்பீர்கள் லீவ் போட்டுட்டு சரிதானே.//
எந்த ஒரு விஷயத்திலும் அதை அனுபவிச்சப்புறம் தான் நமக்கு ஒத்துக்குமா, ஒத்துக்காதான்னு தெரிய வரும். சிலருக்கு கத்தரிக்காய், மாத்திரை இவ்வளவு ஏன் சிலபேருக்கு இன்சுலின் ஊசியே ஒத்துக்கறதில்ல. அதனாலதான் நானும் பிப்ரவரி-14 அன்னிக்கு லீவ் போடறதாயிடுச்சு. இதத்தான் நான் காதல்னா அலர்ஜின்னு பதிவுல எழுதினேன்.
சென்ஷி//
இதுக்கு ஏன் பதில் சொல்லல :(
நான் இதைப்பத்தி டெல்லி தலைவிகிட்ட (மங்கை அக்கா) புகார் கொடுக்க வேண்டியிருக்கும். தீர்மானத்தை மீருகிறார்ன்னு :)
Post a Comment