February 19, 2007

மிதியடியின் உதவியில் எடுத்த ஃபோட்டோ

மெழுகுவத்தி உதவியில் எடுத்தப் படத்தை என் மற்றொரு பதிவில் பார்த்திருப்பீர்கள்.. லைட்டிங்கில் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தாகி விட்டது. இரவில் எடுப்பதில் இரண்டு பிரச்சனை. ஒன்று வீட்டில் எல்லாரும் இருப்பது. மற்றொன்று காமிரா முழு இருட்டா எடுக்குது.



சந்தை நாளை எதிர்பார்த்திருந்தேன். புது காய்களை வாங்க.
போகும் போதே ஒரு எண்ணம் வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் நல்லா , அழகா, இந்த பச்சைக் கலரில் காம்பு வைத்த தக்காளி எல்லாம் போடுவாங்க நமக்கு எங்க கிடைக்கும்ன்னு . ஆனா பாருங்க என்னைக்கும் இல்லா திருநாளா அதே மாதிரி தக்காளி பத்து ரூபாய்க்கே கிடைக்குது.


ஆனா வெங்காயம் தான் விலை அதிகம் அன்னைக்கு நான் எப்போதும் சின்ன சின்ன அளவு வெங்காயம் தான் வாங்கறது. போட்டோ எடுக்க பெரிய அளவு ல இருக்கறதா தேர்ந்தெடுத்து வாங்கியாச்சு.



அடுத்த நாள் காலையில் கணவரை ஆபிசுக்கும்,
பெண்ணைப் பள்ளிக்கும் துரத்திவிட்டு , பையனை தூங்க செய்து முதலில் வீட்டை அமைதியாக்கியாச்சு. அப்புறம்
காயை எல்லாம் எடுத்து நல்லா கழுவி வச்சுக்கிட்டு யோசிச்சேன் யோசிச்சேன். யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.எப்படி லைட்டிங் குடுக்கலாம்.மெழுகுவத்திய எடம் மாத்தி வித்தியாசம் காட்டலாம். இந்த சூரியன் என் பேச்சு கேட்குமா??


சூரியன்ன உடன ஒரு நியாபகம் வந்தது. ஒரு முறை சூரிய கிரகணம் வந்த போது ஆச்சி வீட்டுல நேரா சூரியனப் பாக்கக்கூடாதுன்னு சொன்னதால கண்ணாப்பை (ஓட்ட ஓட்ட கரண்டி) வச்சு சூரிய வெளிச்சத்த தரையில் பார்த்தா
சின்னச் சின்ன பிறை நிலா மாதிரி தெரிஞ்சதப் பார்த்தோம். இப்ப வெங்காயம் தக்காளி தெரியற அளவு பெரிய கண்ணாப்பைக்கு எங்க போக. அப்பத்தான் கண்ணுல பட்டது இந்த மிதியடி.

பால்கனி தண்ணியா இருக்கும்ன்னு ரப்பர் ல போட்டு இருக்கும் மிதியடி ஓட்டை ஓட்டையா இருந்தது. எடுத்து வச்சு பக்கெட்ட முட்டு குடுத்து நிக்க வச்சுப் பார்த்தா அழகா வட்ட வட்டமா வெளிச்சப் புள்ளிகள். காயை எல்லாம் அடுக்கி வச்சு அழகு பாத்துட்டு இருந்தேன் அம்மா வா வா ன்னு பையன்..அதுக்குள்ள ஏண்டா எந்திரிச்சான் இவன்.. சரி என்ன பண்ணன்னு மடியில வச்சுக்கிட்டு தொடர்ந்தேன்.

அவன் "அம்மா அம்மா", "மம்மம்' , "கிளிக் கிளிக்" இப்படி வர்ணனை செய்துகிட்டே சில சமயம் கையை நடுவில் கொண்டுவந்து வைப்பான். இதற்கிடையில் தக்காளி ஒன்று அவன் கைக்குப் போயிருக்கும். சரி இத்தனை இருக்கு ஒன்னு கொறைன்ஞ்சா என்ன ? ஆமான்டா மம்மம் தான் போட்டோ தான் எடுக்கறேன்னு பதில் சொல்லிக்கிட்டே கொஞ்சம் வரிசைகளை மாற்றி வைத்து அப்படி இப்படி மிதியடியின் நிலைகளை( பொஷிஸன்) மாற்றி எடுத்துத்
தள்ளினேன்.


பள்ளியில் இருந்து வந்த பெண், என்ன மிதியடி வச்சு போட்டோ எடுத்தயா , சீ. சீ. என்றாள் . என்ன மிதியடி மேலயா வச்சேன். அது லைட்டிங் தானே தந்தது. மூன்று நாளா மூடி இருந்த வானம் அன்னைக்கு சூரியன வெளிய விட்டதே எனக்கு புகைப்படம் எடுக்க வசதியாகத் தானே. இது தாங்க நான் த.வெ.உ புகைப்படப் போட்டிக்காக புகைப்படக் கலைஞர் ஆன கதை.

பன்னிரண்டு வருசம் முன்னாடி தம்பிய மெழுகுவத்தி கிட்ட வச்சு ஒரு போட்டோ எடுத்தேன். அட அந்த 1000 ரூ கோனிகா கேமிரா ஃப்ளாஷ் இல்லாம எடுக்காது ன்னு தெரியாது. அதனால் நல்ல வெளிச்சமா ஒரு வித்தியாசமும் இல்லாம வந்தது. கண்ணாடி முன்னாடி நிக்க வச்சு தோழிய எடுக்க முயற்சி செய்து அதுவும் ஃப்ளாஷ் கண்ணாடியில் பட்டு நம்ம திறமையை சோதிச்சுருக்கு.




முதல் முதலா இப்படி படைப்பு ஒன்று
மீடியாவில வந்துருக்கு. நன்றி திரு சர்வேசன்.

20 comments:

கொழுவி said...

//மிதியடியின் நிலைகளை( பொஷிஸன்) மாற்றி //

நல்ல வேளை!.
அடைப்புக்குறிக்குள்ள விளக்கம் சொல்லியிருக்காட்டி எங்களுக்கு விளங்கியிராது.

aparnaa said...

i liked ur photo in the contest.very good idea!! also enjoyed reading the story behind it!!
g8 work!!

k4karthik said...

soooper idea'nga..

congrats

பொன்ஸ்~~Poorna said...

ஐடியா நல்லா இருக்கு.. அப்புறமா உங்க பொண்ணு அந்தத் தக்காளிய சாப்பிட்டாங்களா? :)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

Collapse comments


\\கொழுவி said...

//மிதியடியின் நிலைகளை( பொஷிஸன்) மாற்றி //

நல்ல வேளை!.
அடைப்புக்குறிக்குள்ள விளக்கம் சொல்லியிருக்காட்டி எங்களுக்கு விளங்கியிராது. //

என்ன கொழுவி கிண்டலா?:) தினமும் கழுவி வைத்த சுத்தமான மிதியடிதான் அதோட நிலையை மாற்ற அவசியம் இல்லை .இருந்தாலும் சொல்வது போலயே எழுதினா புரியுமோ என்னன்னு அடைப்புகுறியில் போட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி அபர்ணா.உங்க போட்டோவும் நல்லா இருந்தது .இன்னும் கொஞ்சம் தக்காளிய காமிச்சுருக்கலாம்.ஏன் அந்த தக்காளிக்கு இவ்வளவு வெக்கம்.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கார்த்திக் . உங்கள் படமும் நல்லா இருந்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொன்ஸ் என்ன இப்படி கேட்டுட்டீங்க.
தக்காளி மேல மிதியடி வழியா வெளிச்சம் தானேங்க விழுந்துச்சு.
சாப்பிடாம என்ன ? தக்காளி சட்னியும் தக்காளி ரசமுமா அந்த தக்காளி உள்ள போச்சு.ஆனா அழகான அந்த தக்காளிய வெட்டும்போது தான் ரொம்ப மனசுக்கு கஷ்டமாயிடுச்சு.

aparnaa said...

வெக்கம்லாம் ஒன்னும் இல்லங்க..இருந்தது 1/2 தக்காளிதான்!!
நம்ம புத்தி வேற எப்பவும் குறுக்கு புத்திதான்!! சரி, differenta try பண்ணலாம்னு நினைத்தேன் ;-)

SurveySan said...

அட்டகாசமான போடோ உங்களது.

16ல் எனக்கு பிடித்தது அந்த மிதியடி வெளிச்சம் பட்ட தக்காளிதான் :)

துளசி கோபால் said...

என்னங்க ஐடியாவெல்லாம் சூப்பரா இருக்கு?

கொன்னுட்டீங்க போங்க.

வடுவூர் குமார் said...

நல்லா வந்திருக்கு.

மங்கை said...

Making of த.வெ.உ. ??..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா சர்வேசன் நீங்க தான் உங்க கமெண்ட் வரிசையிலேயே போட்டிருந்தீங்களே...வெயிலின்
அழகு + ன்னு ..நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி , ஆமாங்க போட்டோ புடிச்சுட்டு அந்த தக்காளி எல்லாத்தையும் கொன்னுட்டேன் :)
அப்பப்ப இப்படி ஐடியா எட்டிப் பாக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வடுவூர் குமார் said...
நல்லா வந்திருக்கு.//

நன்றி வடுவூர் குமார்.

\\மங்கை said...
Making of த.வெ.உ. ??..//
ஆமா இல்லையா பின்ன எப்படி பட்ட படைப்பு...இதுக்கு தனியா மேகிங்க் ஆஃப் , அப்பறம் எப்படி இதில நீங்க இவ்வளவு அழகா நடிச்சீங்க அப்படின்னு பள பள தக்காளியும் வெட்டப்பட்ட வெங்காயமும் பேட்டி வேற குடுப்பாங்க. ஒளி அமைப்பு மிதியடி ,உதவி ரெட் பக்கெட்..ன்னு டைட்டில் போட்டுடலாம். இதெல்லாம் பதிவு போடறதுக்குமுன்னாடி தோணி இருக்கணும். :(

மங்கை said...

இதுக்கு பேக் ரவுன்ட் மீசிக் குடுத்த சின்னவர் கிட்ட முதல்ல நான் பேட்டி எடுக்கனும் ...:-))... அவர் மட்டும் மனசு வைக்கலேனா உலகத்துக்கு இந்த படைப்பு கிடைச்சிறுக்குமா..:-))..

தமிழ்நதி said...

சின்னக்குழந்தைகளை வைத்துக்கொண்டு இப்படி எழுத்து, இணையம் என்று ஆர்வமாய் இருக்கிற உங்களைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. வாழ்க்கைக்கு உயிரை ஊட்டுவது இந்தப் பக்கச்செயற்பாடுகளை விட்டுவிடாதிருப்பதும்தான். எப்போதும் இதே உற்சாகத்தோடிருக்க வேண்டும் நீங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி தமிழ்நதி.
புக்கர் ப்ரைஸ் வாங்கிய கிரண் ஒரு பேட்டியில் குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்தை எழுதுபவர்களை ஆச்சரியப்பட்டு பார்ப்பதாக கூறியிருந்தார்.உண்மைதான்.மிக கடினம்.ஆனால் உற்சாகம் தரும் உறவுகள் தான் இதற்கு காரணம் .

ஒப்பாரி said...

முதலில் பார்த்தவுடன் ஜன்னல் வெளிச்சத்தில் எடுக்கப்பட்டதோ என்று நினைத்தேன். வித்யாசமான முயற்ச்சி வாழ்த்துக்கள்.

ஆம் எனது பதிவுகளின் பின்னுட்டங்கள் திரட்டப்படுவதில்லை தமிழ்மணத்திற்க்கு தெரியப்படுத்துவது எப்படி.