February 20, 2007

சில கேள்விகளும் பதில்களும்

என் மதமே சிறந்தது என்பது சரியா?

கொள்கை வெறி நல்லதல்ல. எனது மதம் ஒன்றே சரியானது மற்ற மதங்கள் தவறு என்பது நல்லதல்ல.எல்லாரும் கடவுளைத்தான் வழிபடுகிறார்கள். இனிப்பு ரொட்டியை நேராக சாப்பிட்டாலும் சரி, குறுக்காக சாப்பிட்டாலும் சரி இனிப்பாகவே இருக்கும்.

கடவுள் உருவம் ,அருவம் எது சரி?


ஒன்றில் நம்பிக்கை இருந்தால் சரி. உருவமில்லாதவர் கடவுள் என்றால் அது ஒன்றுதான் உண்மை என்ற எண்ணத்திற்கு இடம் தராதீர்கள். உருவமும் உண்மை என்பதை நினைவில் வைக்கவேண்டும். ஆனால் உங்களுக்கு எது நம்பிக்கையோ அப்படி கும்பிடுங்கள் .

கெட்டவர்களிலும் இறைவனே இருக்கிறான் அவர்களிடம்
எப்படி நடப்பது?

கடவுள் எல்லா உயிரிலும் இருக்கிறார். ஆனால் நல்லவர்களுடன் பழகலாம். கெட்டவர்களைக் கண்டால் தூர விலகி நிற்க வேண்டும். புலியிலும் கடவுள்
இருக்கிறார். அதற்காக புலியைக் கட்டித் தழுவிக்கொள்ள முடியாது. புலியும் கடவுளே, புலி வருகிறது ஓடு என்பவனும் கடவுளே அவனுடைய வார்த்தையை ஏன் கேட்கக் கூடாது.

கெட்டவர்கள் கெடுதல் செய்ய வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்?
பாம்பு ஒன்றின் கதை மூலம் சொல்கிறார், தீமை செய்ய வரும்போது அவர்கள் துன்பம் தந்துவிடாமல் இருக்க சீறலாம் பயமுறுத்தலாம் . ஆனால் பதிலுக்கு விஷத்தைச் செலுத்திவிடாமல் இருக்க வேண்டும் .

இன்று ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்தநாள். கஷ்டமான தத்துவங்கள் அவர் கூறும் எளிமையான கதைமூலம் யாரும் புரிந்துகொள்ளும்படி இருக்கும். எத்தனை மதங்களோ அத்தனை வழிகள் என்று மத நல்லிணக்கம் கூறிய அவருடைய கருத்துக்கள் நிறைந்த அமுதமொழிகள் புத்தகத்திலிருந்து எடுத்தது.

10 comments:

பொன்ஸ்~~Poorna said...

:) தலைப்பைப் பார்த்துட்டு, சுடர் ஏத்தி இருக்கீங்களோன்னு நினைச்சேன் :)

சென்ஷி said...

//புலியும் கடவுளே, புலி வருகிறது ஓடு என்பவனும் கடவுளே அவனுடைய வார்த்தையை ஏன் கேட்கக் கூடாது.//

நல்ல கருத்துக்கள்

சென்ஷி

மங்கை said...

லட்சுமி..

நல்லா இருக்கு...

ஏதோ ஒரு சக்தி இந்த உலகத்த ஆட்டி படைக்குதுனு நினைக்குறது,
மனசும் உடலும் துயர் படும்போது மனசாந்தி தருவது, இந்த சமுதாயத்தில ஒழுக்க நெறியுடன் வாழ்றது, மத்தவங்க மேல முடிஞ்ச வரைக்கும் அன்பு செலுத்தறது,இது எல்லாம் மனித மனங்களை ஒன்று சேர்க்க உதவியா இருக்கு..இந்த ஒன்னு சேர்தற பசை தான் 'மதம்' னு நினைக்கிறேன்


பக்தி மனதுக்கு இதமூட்டும் ஒரு விஷயம்.. அவங்க அவங்க சொந்த அனுபவத்திற்கு தகுந்த மாதிரி இது மாறுபடுது...

நன்றி லட்சுமி...டைம்லி பதிவு..

துளசி கோபால் said...

கருத்துக் கந்தசாமியாரிணிக்கு,

வாழ்த்துக்கள். நல்லா இருங்க.:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பொன்ஸ் said...
:) தலைப்பைப் பார்த்துட்டு, சுடர் ஏத்தி இருக்கீங்களோன்னு நினைச்சேன் :) //

அது சரி யார் நம்மகிட்ட எல்லாம் குடுக்கப்போறாங்க நானா ஏத்திக்கிட்டாதான் உண்டு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கருத்தை ரசித்ததுக்கு நன்றி, சென்ஷி .

மங்கை டைம்லி என்னங்க? எப்போவும் தேவைபடற கருத்து தான் இது.

ஆங் துளசி ...கருத்து கந்தாசாமியாரிணின்னு!! சரி சரி.
நல்லத படிச்சேன் சொன்னேன்.
கருத்து அப்பப்ப சொல்றது தான்:-)

david santos said...

Hello!
Very good blog and very good work.
Taste very of the INDIAN culture.
Tank you

பங்காளி... said...

நானும் கடவுள்தான்னு, ஆன மட்டும் எல்லார்ட்டயும் சொல்லீட்டேன்....ஒரு பயபுள்ளயும் நம்ப மாட்டேங்குது.

எஞ் சோகத்த எந்த கடவுள்ட்ட போய் சொல்றது?....ஹி...ஹி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க கடவுளே, நீங்க புலிகடவுளா இல்ல புலி வருதுன்னு கத்தின கடவுளா விளக்கமா சொன்னாதானே நம்புவாங்க ..இல்ல சும்மா வேடிக்கை பார்க்கற கடவுள் கூட்டத்துல ஒருத்தறா?

(அப்புறம் நதியோட எழுத்துக்கு அமைச்ச ரசிகர் மன்றவேலை சரியா செய்யறதில்லையே நீங்க. புதுஷோ போட்டதுக்கப்புறம் பழய ஷோ க்கு லைன் ல நிக்கறீங்க ஏன்)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

THANKS DAVID...


( யாருப்ப்பா இந்த டேவிட் கடவுள் ஆங்காங்கே வந்து அருள்பாலிச்சு டேஸ்ட் இண்டியன் அப்படின்னு அருள்வாக்கு சொல்றாரே? சிந்தாநதி பக்கத்துல கூட இதேதான் போட்டுருக்கார்.)