February 26, 2007

இனிப்புடன் துவங்குகிறேன்

வளர் பிறை சுபமூகூர்த்தம். நல்ல நாளில் ஒரு இனிப்புடன் "சாப்பிட வாங்க" தளத்தில் எழுதத் தொடங்குகிறேன். முன்பே சொல்லிக்கொள்கிறேன் , நான் சமையலில் நிபுணி அல்ல , தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.


பாதாம் முந்திரி பர்பி [சரியாக வரவில்லை என்றால் பாதாம் முந்திரி அல்வா]எளிமையானதும் சரியாக வரவில்லை என்றால் பிரச்சனை இல்லாததுமானவற்றை மட்டுமே நான் முயற்சிப்பது .ஆகவே எந்த பண்டிகையானாலும் இதுவே எங்கள் வீட்டுசிறப்பு இனிப்பு.

மேலும் படிக்க இங்கே கிளிக்கவும்

12 comments:

மங்கை said...

லட்சுமி..சாப்டேங்க..நல்லா இருக்கு.. நேரம் ஆச்சு...வர்ர்ர்ரேன்..:-)))...

இங்க ஒரு பார்சல்

அபி அப்பா said...

வந்துட்டேன்!!! படிச்சுட்டேன். வாயில் ஊறுது. முடிஞ்சவரை செஞ்சு பாக்குறேன்!!!

Anonymous said...

அப்படியே இங்கேயும் ஒரு பார்சல்! :)

வடுவூர் குமார் said...

"மேலும் படிக்க" இந்த லிங்க்கு வேறு கலர் கொடுங்க,இல்லாவிட்டால்,ஏதோ என்று நினைத்து போய்விடுவார்கள்.

வடுவூர் குமார் said...

துணைக்கு யாராயாவது வேண்டுமானால் கூட்டிக்கொள்ளவும்
இதானே வேண்டாம் என்கிறது.ஏதோ படிச்சிட்டு வீட்டுகாரம்மாவுக்கு சொல்லலாம் என்றால் இப்படி இருக்கு.
எனக்கு வேற வேலை இருக்கு!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை செய்து பார்த்துவிட்டு நீங்க தாங்க பார்சல் எனக்கனுப்பணும்...:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அபி அப்பா said...
வந்துட்டேன்!!! படிச்சுட்டேன். வாயில் ஊறுது. முடிஞ்சவரை செஞ்சு பாக்குறேன்!!! //

சரிதான்..முடிந்தவரை அப்படிங்கறது ரொம்ப சரிதான். முடிஞ்சா பர்பி இல்லன்னா அல்வா . முயற்சி செய்யுங்க. தங்கமணிக்கும் சந்தோஷமா இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இனியன் said...
அப்படியே இங்கேயும் ஒரு பார்சல்! :) //

என்ன செய்தவங்க இனியன் உங்களுக்கும் பார்சல் அனுப்பனுமா?
கஷ்டப்படறது ஒருத்தர் அல்வா
சாப்பிடறது இன்னொருத்தரா? நல்லாருக்கே.வருகைக்கு நன்றி இனியன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மேலும் படிக்கவிற்கு வேறு கலர் குடுத்துவிட்டேன் நன்றி .

\\வடுவூர் குமார் said...
துணைக்கு யாராயாவது வேண்டுமானால் கூட்டிக்கொள்ளவும்
இதானே வேண்டாம் என்கிறது.//

அந்த வரியை படிக்கும் போது மட்டும் மனைவியை "அங்க பாரேன்ன்னு கூரையை " அப்படின்னு காமிச்சு ஏமாத்திப் பாருங்களேன் . அதுக்காக செய்து பார்க்க சொல்லாம இருக்காதீங்க.
எளிமையான் இனிப்பு என்பதால் அடிக்கடி உங்களுக்கு தானே கிடைக்கும்.

Anonymous said...

நல்ல முயற்சி லட்சுமி.. சாப்பிட வாங்கன்னு போட்டுகிட்டு ஒண்ணும் பரிமாறாமயே இத்தனை நாள் ஏமாத்திகிட்டிருந்தாங்க :))

ஒருவழியாக சாப்பாடு போட்டுட்டீங்க..

Anonymous said...

//ஒண்ணும் பரிமாறாமயே இத்தனை நாள் ஏமாத்திகிட்டிருந்தாங்க :))//

என்னங்க பண்றது... சமைக்க தெரியும்னு சொன்னவரை கூட கூட்டிட்டு வந்து தளத்தை திறந்தா அவரு சமைக்கறதை தவிர மிச்சம் எல்லாம் செஞ்சு வயித்த காயப் போட்டுட்டாரு. ( இப்பிடி புலம்ப வெச்சிட்டியேய்யா?)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பொன்ஸ், நன்றி சிந்தாநதி.