குழந்தைகளைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். அவர்கள் உலகமே தனி. அவர்களைச் சுற்றி இருக்கும் சின்னஞ்சிறு உலகத்தில் தான் எத்தனை இனிமை. மாலையில் என் தோழி வீட்டுக்கு சென்ற போது
அவள் தன் குழந்தைகளுக்கு படிக்க உதவிக் கொண்டிருந்தாள். இப்போது தான் ஹிந்தியின் ஆரம்ப எழுத்துகளைக் கற்றுக்கொள்கிறான் அவள் மகன் .
ஒரு புது எழுத்தை வகுப்பில் சொல்லிக் குடுக்குமுன் தான்
அம்மாவிடம் கற்றுக் கொண்டுவிட்டானாம். அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. "அம்மா, அம்மா, எனக்கும் உனக்கும் மட்டும் தான் தெரியும் இந்த எழுத்து இல்ல". தோழி சொன்னா அப்படி இல்லப்பா . உடனே அவன் ஓ அப்ப என் டீச்சருக்கு தெரியுமா? ன்னு கேட்டான். ஆமான்னவுடனே.
''பரவால்ல மத்த பசங்களுக்கு தெரியாதே '' அப்படின்னு அவனே சமாதானப் படுத்திக்கிட்டான். மகிழ்ச்சியை அவர்களே எப்படி எல்லாம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
நல்ல வார்த்தையே பேசிப் பழகு என்று சொல்லிக்குடுக்க வேண்டி யவர்கள் ஆசிரியர்கள். என் பெண் படிக்கும் பள்ளியில் ஒரு மாணவனை ஆசிரியர் ஒருவர் கெட்ட
வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். அவனால் தாங்கவே முடியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறான். பாருங்கள் அவனுடைய தனி உலகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அவமானம், மற்றும் அதிர்ச்சி .
என்னை ஏண்டா அப்படி செய்தேன்னு கேட்டு பனிஷ்மண்ட் தரலாம் ஆனால் அவர் ஏன் அப்படி திட்டினார் என்பதே அவன் அதிர்ச்சி.
தலைமை ஆசிரியர் அழைத்த போது குழந்தைகள் உண்மையே சொன்னார்களாம். பொய்களையும் , கெட்ட வார்த்தைகளையும் எங்கிருந்து கற்கிறார்கள். இந்த பெரியவர்கள் உலகத்தில் இருந்து தானே..
இன்று சர்வ சாதாரண மாக பெரியவர்களாகிய நம் வலைப் பதிவர்கள் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கும் நிலையைப் பார்க்கிறோம். குழந்தைகளின் தனி உலகில் மூழ்கி இன்பம் இன்பம் எங்கும் இன்பம் எனும் அவர்களின்
கொள்கையைக் கொஞ்சம் கற்றுக் கொள்ளவேண்டும்.
15 comments:
அருமை. தேவையான ஒரு பதிவு!
//இன்று சர்வ சாதாரண மாக பெரியவர்களாகிய நம் வலைப் பதிவர்கள் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கும் நிலையைப் பார்க்கிறோம். குழந்தைகளின் தனி உலகில் மூழ்கி இன்பம் இன்பம் எங்கும் இன்பம் எனும் அவர்களின்
கொள்கையைக் கொஞ்சம் கற்றுக் கொள்ளவேண்டும்.//
very very true Muthulakshmi.
-Mathy
சர்வேசன், மதி இருவருக்கும் நன்றிகள்.
வயதாக வயதாக குழந்தையாய் மாறுவோம் என்று சொல்கிறார்களே!!
அப்படியில்லையா?
ஹூம் என்னத்த சொல்றது.
உண்மைதான் குமார்.ஆனால் நடுவில் தான் வேண்டாததெல்லாம் கற்றுக் கொண்டுவிட்டோமே. அதனால் தான் மீண்டும் குழந்தைகளின் உலகத்தில் போய் நல்லவற்றை (இழந்த இன்பத்தை) கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொன்னேன். :))
குழந்தைகள் வந்து சொல்ற அளவுக்கு நிலமை இருக்கு...ஹ்ம்ம்...
இந்த வரிகளை நான் பல பதிவுல போட்டு இருக்கேன்...இங்கேயும்
If children live with criticism,
They learn to condemn.
If children live with hostility,
They learn to fight.
If children live with ridicule,
They learn to be shy.
If children live with shame,
They learn to feel guilty.
If children live with encouragement,
They learn confidence.
If children live with tolerance,
They learn to be patient.
If children live with praise,
They learn to appreciate.
If children live with acceptance,
They learn to love.
If children live with approval,
They learn to like themselves.
If children live with honesty,
They learn truthfulness.
If children live with security,
They learn to have faith in themselves and others.
If children live with friendliness,
They learn the world is a nice place in which to live
ச்சின்ன ச்சின்ன மேட்டர்ல இருந்து கத்துக்க வேண்டிய பெரிய மேட்டரெல்லாம் சொல்றீங்க....
வாழ்த்துக்கள்...
அருமையான & அவசியமான பதிவு.
மங்கையோட பின்னூட்டமும் சூப்பர்.
வாழ்க்கையில் படிக்கவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு, இந்தக் கெட்ட வார்த்தைகளைத் தவிர!
மங்கை, பங்காளி மற்றும் துளசி மூவருக்கும் நன்றி.
நல்ல பதிவு. முதல் பகுதி (குழந்தையைப் பற்றி) வாசிக்கவே இனிமையாக இருந்தது.
நன்றி சேதுக்கரசி.குழந்தைகள் செய்யும் எல்லாமே இனிமை தான்.
உண்மை உண்மை முத்துலெட்சுமி
கற்றுக்கொடுக்க வேண்டிய வயதினில் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் இருக்கிறது
கடைசி வரிகள் நச்சுன்னு இருக்கு - பதிவர்கள் பார்க்க வேண்டும்
நல்வாழ்த்துகள்
//இன்று சர்வ சாதாரண மாக பெரியவர்களாகிய நம் வலைப் பதிவர்கள் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கும் நிலையைப் பார்க்கிறோம். குழந்தைகளின் தனி உலகில் மூழ்கி இன்பம் இன்பம் எங்கும் இன்பம் எனும் அவர்களின்
கொள்கையைக் கொஞ்சம் கற்றுக் கொள்ளவேண்டும்.//
மிகச் சரியாய் சொல்லியுருக்கிறிர்கள்
இது இப்போ மிகத் தேவையான ஒன்று
பண்பு போற்றுவோம்
பாரதம் காப்போம்.
பிதற்றல்களை தவிர்ப்போம்
பீடுநடை போடுவோம்
புன்னகையாய் மலர்வோம்
பூக்களாய் மணப்போம்
பெருமை பெறுவோம்
பேரிகை முழங்குவோம்
பைரவரை வணங்குவோம்
பொறுமை வளர்ப்போம்
போற்றி மகிழுவோம்
பெளத்தம் போற்றுவோம்
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Post a Comment