நீ கடந்து போனபின்,
யாருமில்லா வகுப்பில்,
உன் மேஜை தேடி அமர்ந்தேன்.
நீ சொல்லாத காதலை,
உயிர்த்தெழுந்து,
சொன்னது உன் மேஜை.
உன் பெயரோடு என் பெயர்.
நானே உன் நலம் அறியப் போனபோது
எங்கோ இருக்கும் உன்னைப்பற்றி
என்னிடம் நலம் விசாரிக்கும்
நீ சாய்ந்து நின்றே பேசும் மின்கம்பம்
நீ சுற்றி வந்த விநாயகர்
அடிக்கடி தென்படும் தபால் நிலையம்
யாருமற்ற பாதை வளைவு.
9 comments:
ரெண்டு கவிதையுமே அழகா இருக்குங்க !!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கு நன்றி, அருட்பெருங்கோ.
நீ கடந்து போனபின்,
யாருமில்லா வகுப்பில்,
உன் மேஜை தேடி அமர்ந்தேன்.
நீ சொல்லாத காதலை,
உயிர்த்தெழுந்து,
சொன்னது உன் மேஜை.
உன் பெயரோடு என் பெயர்.
ம்... உணர்ந்து எழுதி இருக்கிறீங்கள்.
பாராட்டுக்கள்!
நல்லா இருக்குதுங்க.
நன்றி,சத்தியா. வகுப்பறை மேஜை எல்லாம் காவியம் சொல்பவை இல்லையா?
நன்றி சேதுக்கரசி. முதல் பின்னூட்டம் இட்டு வாழ்த்திட்டு போனீங்க.ரொம்ப நாள் ஆச்சே நீங்க இந்த பக்கம் வந்து.
நல்ல கவிதை லட்சுமி!
//நீ கடந்து போனபின்,யாருமில்லா வகுப்பில்,உன் மேஜை தேடி அமர்ந்தேன்.நீ சொல்லாத காதலை,உயிர்த்தெழுந்து,சொன்னது உன் மேஜை.உன் பெயரோடு என் பெயர்.//
நீங்களுமா...நானும் அப்படி பார்த்துத்தான் மாட்டிக்கிட்டேன்
சென்ஷி
//நானும் அப்படி பார்த்துத்தான் மாட்டிக்கிட்டேன்//
சென்ஷி
காதலிச்சவங்க கிட்டயா?மாட்டினது
நல்லதுதானே.
Post a Comment