July 10, 2008

காத்திருந்தகாதலி-7 ம் பாகம்

இப்போதெல்லாம் தொடர்ந்து டேக் பதிவு தான் போடறேன். ஜிலேபி யோ ஜாங்கிரியோ லெவலுக்கு சுத்து சுத்துன்னு சுத்தி விட்டுருக்காங்க கதையை.. அதுவும் கிரி ரொம்பவே சுத்திட்டார். டிபிசிடிதான் கதைய சரியான பாதைக்கு கொண்டுவந்ததா கதையை ஆரம்பித்துவைத்த வடகரை வேலன் சொல்றார். இனி நாங்க கதையை ஒத்தையடிக்கு கொண்டுபோவோமா இல்ல ஹைவேக்கு கொண்டுபோவோமான்னு தெரியல ..அதனால் பார்த்து கவனமா போங்க இந்த கதைப்பாதையில்...
தில்லிக்கு கதையை இழுத்துப்போக முடியாது. கிரி கோபிக்கு கூட்டிட்டுபோய் ஜாலியா ஊர்சுத்திப்பாத்துக்கிட்டார். அதனால் சொன்ன சொல்லுக்காக தில்லி என்ற பெயர் மட்டும் வலுக்கட்டாயமாக கதையில் புகுத்தப்பட்டிருக்கிறது.
மேலே கதை....
------------------------------------

அன்றைக்கு என்ன நடந்தது என்று நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்த சங்கருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரிப்பது தெரிய ஆரம்பித்துவிட்டது. அவனின் முனகல் கேட்டு அறையின் ஓரத்தில் நாவல் படித்துக்கொண்டிருந்த நர்ஸ் உடனே டாக்டருக்கு தொலைபேசினாள்.

" சார் நீங்க சொன்னமாதிரியே அவர் வலியில் முனகுகிறார் ... ஆனால் அவரால் தெளிவாக பேசமுடிகிறது. தூக்கமாத்திரை குடுக்கனுமா டாக்டர்."

மறுமுனையில் குடுக்க சொல்லி ஆணை வந்ததும் அவள் தண்ணீரும் மாத்திரையுமாக அவன் அருகில் சென்றாள். சங்கர்
" சிஸ்டர் எனக்கொரு உதவி .. இது என்ன தூக்க மாத்திரையா .. எனக்காக வெளியில் யார் காத்திருக்கிறார்கள் ? என்றான்.
"" இப்ப யாருமில்ல உங்க நண்பர் கார்த்திக் ஊருக்குப் போயிருக்கார் .. கௌரின்னு அந்த பொண்ணு வீட்டுக்கு போயிருக்காங்க. ஏன் ?""
" இல்ல சிஸ்டர் கார்த்திக் வந்தா உள்ள விடவேண்டாம் .. கௌரிக்கிட்ட சொல்லுங்க , நான் முழிச்சிருக்கற நேரமா வரச்சொல்லி, தொலைபேசியில் அவங்களுக்கு மெஸேஜ் தர்ரீங்களா ? ""
அவள் ,பெரிய மருத்துவரின் நண்பர் குடும்பம் என்பதால் என்ன எல்லாம் செய்யவேண்டி இருக்கிறது என்று மனதில் நினைத்தபடியே சரி என்று சொல்லிவைத்தாள் .
---------------------------------------
""அப்பா இருதயராஜ் அங்கிள் தில்லியில் இருந்து ஸ்பெஷலிஸ்ட் வராங்கன்னு சொன்னார் . நாளை மறுநாள் தேதி கொடுத்திருக்காங்களாம்""

""அப்பா உங்ககிட்ட அங்கிள் எதாவது சொன்னாரா என்கிட்ட எதுவும் சொல்லமாட்டேங்கிறார் .. சங்கருக்கு எது ஒன்னுன்னாலும் சொல்லுங்கப்பா ....
சங்கர் நினைவு திரும்புவரை அங்கே காத்திருக்கலாம் என்றால் கேட்டரிங் ஆபிஸிலிருந்து தொடர்ந்து ஆர்டர் குடுத்தவங்க போன் ...
என்ன நடந்ததுன்னும் தெரியல.""

""கௌரி மனசு போட்டு குழப்பிக்காதே.. நீ கிளம்பும்மா நம்ம ஆபிசை நான் பாத்துக்கறேன்.. நீ சங்கர் ஆபிஸிலேயே இரு.""

கௌரி கிளம்பியதும் அவள் மறந்து விட்டுச் சென்ற கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி...

கார்த்திக் தான் காரணம் நேரில் பேசவேண்டும். பார்வையாளர் நேரத்துக்கு முன்பே வரவும் - சங்கர்
கௌரியின் அப்பா படித்ததும் ... வண்டியை எடுத்துக்கொண்டு மருத்துவமனை விரைந்தார்.

---------------------------------------------------------------------
அப்பா அம்மா வை அழைத்துக்கொண்டு காலை ரயிலில் வந்து இறங்கியதும் நேராக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துப்போக முடியாது என்பதை பக்குவமாக சொல்லி அறைக்கு கொண்டு போய் இறக்கிவிட்டான் , கார்த்திக்.
கௌரி க்கு போன் அடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவளிடம் இருந்து வந்துவிட்டது கால்.
''ஹலோ என்ன நேற்று எல்லாம் கூப்பிட்டால் ஆஃப் ல யே இருந்ததே ? அம்மா அப்பா எப்படி இருக்காங்க ஊரில்?'' என்று தடதடவென ஆரம்பித்தாள் கௌரி.
""கௌரி, அப்பா நல்லாதானிருக்கார்.சங்கரை பார்க்கனும்ன்னு ரொம்ப தொந்திரவு செய்தார் அழைத்து வந்திருக்கேன்.. அம்மா அப்பா இப்ப அறையில் இருக்காங்க. குளிச்சு காலை உணவு முடித்து மருத்துவமனை பார்வையாளர்கள் நேரத்திற்கு அழைத்துவரேன்""... என்ற கார்த்திக் தொலைபேசியை அணைத்துவைத்த காரணத்தை பக்குவமாக சொல்ல விட்டுவிட்டான்.

""கார்த்திக் இங்க வாப்பா !! ""
""என்ன அம்மா !""
""உனக்கும் சங்கருக்கும் நடுவில் எதுவும்பிரச்சனை இல்லையே?""
""ஏம்மா இப்படி கேக்கறீங்க?""
""எப்பவும் அவனுக்கு அடுத்த இடத்தில் இருப்பதில் உனக்கு சங்கடம் இருப்பது எனக்குத் தெரியும். கொஞ்ச நாளா தொழில் விசயங்களில் நீ அதிகம் ஈடுபாடு காட்டாம இருப்பதா சங்கர் சொன்னான். அவன் மருத்துவமனையில் இருக்கும் நேரம் நீ இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாயே? சங்கர் சொல்லும்போதெல்லாம் நான் அவனிடம் உனக்காகத்தான் பரிந்து பேசுவேன். ""
""அன்று என்ன நடந்தது என்று நீ சொல்லவே இல்லையே எப்படி இந்த விபத்து?""
""அம்மா நேரமாகுது அப்பறம் சொல்றேன் கிளம்பி இருங்க.""
"" எனக்கு ஒரு சின்ன வேலை கொஞ்சம் வெளியே போயிட்டுவரேன்.""
---------------------------------
மருத்துவமனை ஒன்றாம் எண் வாசலில் கௌரியின் அப்பா கார்நுழைந்த அதே நேரம் கார்த்திக் கார் இரண்டாம் எண் வாசல் வழியாக நுழைந்தது. இருவரும் வேறு வேறு படிக்கட்டுகளில் சங்கர் அறையை நோக்கி ஏறிக்கொண்டிருந்தார்கள்.
-----------------------------------------------------
கொஞ்சநாட்களாக கதையே எழுதாமல் தப்பித்துக்கொண்டிருக்கும் மைஃப்ரண்ட் இதனைத்தொடர்வார்.

வடகரை வேலன்.காத்திருந்தகாதலி 1
பரிசல் காரன் காத்திருந்தகாதலி 2
வெயிலான் காத்திருந்தகாதலி 3
கிரி காத்திருந்தகாதலி 4
ஜெகதீசன் காத்திருந்தகாதலி5
டிபிசிடி காத்திருந்தகாதலி 6

22 comments:

Thamiz Priyan said...

காத்திருந்த காதலி இம்புட்டு தூரம் வந்திடுச்சா?... பார்க்கலாம் மை பிரண்ட் அக்கா காத்திருந்த காதலியை என்ன செய்யப் போறாங்கன்னு.... :)

Thamiz Priyan said...

மை பிரண்ட் கெளரியை மலேசியாவுக்கு கூப்பிடமாட்டாங்களே... ;)

ஜெகதீசன் said...

நல்லாப் போகுது.... இருந்த குழப்பங்களை எல்லாம் 2 பேரும் சேர்ந்து சரி பண்ணீட்டீங்க...

:)

Anonymous said...

நன்றிங்க கயல்விழி,

கதை சரியான பாதையில் பயணிக்கிறது.

தேவையான திருப்பத்துடன் உள்ளது.

பரிசலும், வெயிலானும் மகிழ்வார்கள் என நினைக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்ப்பிரியன் நன்றி..காதலி 16 பாகமாவது போகனும்ன்னு ஒரு விதிமுறை டிபிசிடி போட்டிருக்கார்.

மைப்ரண்ட் கௌரியை மலேசியாக்கு கூட்டிட்டுப்போய் மலாய் சொல்லிக்குடுத்து பயமறியாபாவையாக்கிடுவாங்களோ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஜெகதீசன்.. குழப்பங்களள சரி செய்திருக்கமா.. அந்த சஸ்பென்ஸை யார் தான் உடைக்கபோறாங்களோ.. தெரியலயே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க வடகரை வேலன் நீங்க நல்ல திருப்பத்துடன் நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லி இருந்தா நான் வருத்தப்பட்டிருப்பேன்.. கதை சரியான பாதைன்னு சொல்லி தைரியப்படுத்திட்டீங்க நன்றி.

TBCD said...

யக்கோவ்....நல்லா எழுதியிருக்கீங்க..

வடகரை வேலரின் ஊக்கமும்.உங்களை மகிழ்விக்கும்...

வெகு விரைவில் உங்க சொந்த புதினத்தை எதிர்ப்பார்க்கிறோம்..

(நீங்க பேசுறதில் 10% எழுதினாலும், ஜெயமோகனுக்கு சவால் விடும் என்பதில் ஐயமே இல்லை...)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதைத்தான் அன்னைக்கே மங்கை சொன்னாங்க.. திட்டறீங்களா கிண்டலடிக்கறீங்களான்னு தெரியாம குழப்புவது ன்னு.. கவனிக்கவும் பாராட்டுரீங்களான்னு சேர்க்கவே இல்லை.. ஜெயமோகனா யார் அவர்?? :))

MyFriend said...

யக்கா.. இது அடுக்குமா? என்னை போய் கதை எழுத சொன்னால் என்ன பண்ணும் இந்த பச்சைப்புள்ள....

கோபிநாத் said...

முதல்ல முன்னாடி உள்ள கதையை படிச்சிட்டு வரேன் ;)

இப்போதைக்கு உள்ளேன் அக்கா ;)

MyFriend said...

ஆனாலும் உங்க பேச்சை மாற முடியாதுங்கரதுனால எழுதிட்டேன்.. உங்க அளவு இல்லைன்னாலும் சபரி அளவாவது எழுதியிருப்பேன் என்ற நம்பிக்கையில்..

.:: மை ஃபிரண்ட் ::.
http://engineer2207.blogspot.com/2008/07/8.html

பரிசல்காரன் said...

//அறையின் ஓரத்தில் நாவல் படித்துக்கொண்டிருந்த நர்ஸ்//

//பெரிய மருத்துவரின் நண்பர் குடும்பம் என்பதால் என்ன எல்லாம் செய்யவேண்டி இருக்கிறது என்று மனதில் நினைத்தபடியே/

மிக நல்ல உன்னிப்பான வாசிப்பனுபவம் உங்களுக்கு இருக்கிறது என்று கட்டியம் கூறும் வரிகள்

பரிசல்காரன் said...

//பரிசலும், வெயிலானும் மகிழ்வார்கள் என நினைக்கிறேன்.//

உண்மை!! மகிழ்ச்சியே கயலக்கா..

//நீங்க பேசுறதில் 10% எழுதினாலும், ஜெயமோகனுக்கு சவால் விடும் என்பதில் ஐயமே இல்லை//

ஏன்.. இல்ல ஏன்னு கேக்கறேன்.. கொஞ்சம் நிம்மதியா யாராவது இருந்துட்டா போதுமே.. இழுத்து தெருவுல விட்டுடுவீங்களே..

கோவை விஜய் said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
அன்பு ராம லெட்சுமிக்கு

கடிதம் கண்டேன். நினைவுகளின் கூட பயணித்ததால் இந்தபதிவெழுத தாமதமாகி இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.. பழய புகைப்படங்கள் தான் முதலில் மனதை கொள்ளை கொள்கிறது .. எல்லாரிடமும் அந்தகாலத்தில் இருக்கும் ஒரு அடக்கமான அழகு மிளிர்கிறது.. உங்கள் வீடு மிக அழகு.. அதும் பச்சை தரையா ம்..குறித்துக்கொள்கிறேன்.. நீங்கள் திண்ணை திண்ணையாக ஓடி வழியனுப்பும் காட்சி மனக்கன்ணில் ஓடியது.. மணவடை .. ஆச்சி பதங்கள் ...நீங்களும் திருநெல்வேலிக்காரரோ..
உங்கள் பெரியத்தையைப் பார்த்தால் அப்படியே என் ஆச்சியைப்போலவே இருக்காங்க.. :)
நன்றி
கயல்விழி முத்துலெட்சுமி//


சகதோரிகள் தரணி போற்றும் பரணி பாயும் நெல்லையை சேர்ந்தவர் என்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. எழுத்துநடையிலே நம் நெல்லையின் மண்வாசம் மணக்கிறதே.வாழ்த்துக்கள்


பிளாஸ்டிக் அரக்கனின் கூற்று:-

1.மனித குலத்தை அழிப்பேன்= to destroy mankind

2.மனிதனை அளிப்பேன் = to donate man to நீரில்லாச் சூழ்நிலைக்கு, மாசு பட்ட உலகுக்கு

அன்புடன்
தி.விஜய்

pugaippezhai.blogspot.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மைப்ரண்ட் இந்தா வரேன் படிக்க .. நீயா பச்சபிள்ள ...என்னமா கதை விடுவ (எழுதி விடுவ. )சும்மா பேசிக்கிட்டு.. அதான் காலையில் சொன்னதுக்கு சாயங்காலம் எழுதி லிங்க் குடுத்திட்டியே.. :)
--------------
கோபி நிஜம்மா கதை ஸ்பெஷலிஸ்ட் தங்களைத்தான் கூப்பிடுவதாக இருந்தேன்..(மைப்ரண்ட் சிபாரிசில்)
ஆனா ஆள் ஆன்லைனில் வராததால் ... தப்பிச்சிட்டீங்கோ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி பரிசல்காரரே.. ஜெயமோகனை எனக்கு தெரியும் ஆனா தெரியாது.. டிபிசிடி எனக்கு தெரியும்ன்னு நினைச்சார் அதனால் தெரியாதுன்னேன்.. நீங்க தெரியாதுன்னு நினைச்சா தெரியும்.. ஓகேய்? :)

Thamiz Priyan said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கா.. இது அடுக்குமா? என்னை போய் கதை எழுத சொன்னால் என்ன பண்ணும் இந்த பச்சைப்புள்ள....
7/10/2008 7:03 PM ///
//.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆனாலும் உங்க பேச்சை மாற முடியாதுங்கரதுனால எழுதிட்டேன்.. உங்க அளவு இல்லைன்னாலும் சபரி அளவாவது எழுதியிருப்பேன் என்ற நம்பிக்கையில்..

.:: மை ஃபிரண்ட் ::.
http://engineer2207.blogspot.com/2008/07/8.html
7/10/2008 7:05 PM ////
இரண்டே நிமிஷத்தில் தொடர்கதையின் ஒரு பகுதியா.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

// கதை சரியான பாதையில் பயணிக்கிறது. தேவையான திருப்பத்துடன் உள்ளது.பரிசலும், வெயிலானும் மகிழ்வார்கள் என நினைக்கிறேன்.//

மிக்க மகிழ்ச்சி! வ.க.வேலன் சொன்ன பிறகு, அதற்கு மேல் நான் பின்னூட்ட என்ன இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி வெயிலான் .. அவர் சொன்னா என்ன நீங்க நினைப்பதையும் எழுதலாமே. :)

சென்ஷி said...

நல்லா இண்ட்ரஸ்டிங்கா இருக்குக்கா கதை... நல்லா எழுதியிருக்கீங்க.. அடுத்தது தங்கச்சி.. அப்புறம் கோபியா கலக்கல்தான்போல :))

(நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்)

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமையாக சொல்லி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !
தொடரட்டும் !