கேள்விபதில் சுடராக ஏற்கனவே கையில் வந்து போனது..இப்போது மீண்டும் சென்ஷி ..
கேள்விகள் எல்லாமே என் கண்களுக்கு அவுட் ஆஃப் சிலபஸ் மாதிரியே தெரிகிறது . வழக்கம்போல தேர்வில் எழுதுவது போலவே இறுதிக்கேள்விக்கு முதலில் பதில்..
4. தமிழ்மணத்தில் கலக்குகின்ற (என் போன்ற) புதிய பதிவர்களுக்கு மூத்த பதிவராய் தங்களின் மேலான ஆலோசனை என்ன?
முழு சோற்றை பூசணிக்காயில் மறைப்பது போல இருக்கே.. நான் நவம்பர் மாதம் தான் பதிவே ஆரம்பித்தேன்.. . செப்டம்பரிலேயே ஆரம்பிச்சது உங்க பதிவு .. ஆக கேள்வியே தப்பு.. அப்பப்ப மொக்கைப்பதிவு போடுவதெப்படி ? பதிவெழுத ஐடியா தருகிறேன் என்று தலைப்பு வைக்கும் பதிவுகளையெல்லாம் ஓடிப்போய் எட்டிப்பார்க்கும் என்னைப்போய் ... எந்த தலைப்பை சொன்னாலும் ,,, இல்ல சேட்டிலே பேசிய பேச்சை.. இல்லையா புள்ளி வைத்தால் கூட அதை புள்ளி விவரமாக மாற்றி தடாலடியா பதிவு போட்டு கலக்கும் நீங்களெல்லாம் அறிவுரை கேட்டால் எப்படி? சின்னவங்களைப்பார்த்து அண்ணன்னு கூப்பிட்டு வயசை மறைக்க நினைப்பது போல மூத்தபதிவரான தாங்கள் என்னை அப்படி சொல்வது சிரிப்பாத்தானிருக்கு..
அது மட்டுமில்லாம புரியாமல் பதிவு போடும் கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்ட பின்னர் மீத பர்ஸ்டு போடுவதில் கூட கணக்கு தப்புகிறது.... சரியை தப்பாக , தப்பை சரியாக செய்வதும் தான் பி.ந ஆமே அப்படியா ?
நான் மூத்தபதிவரில்லை இல்லை. குசும்பனின் பதிவுக்கு பின்னர்.. நான் வெறும் ஸ்மைலி போடுவதைக்கூட மாற்றிவிட்டேன்.. அது கூட இதுவரை போட்டுக்கொண்டிருந்தற்கு காரணம் பயந்தாகொள்ளித்தனம் தான்.
3. உலகத்திரைப்படங்களை பற்றிய உங்கள் பார்வை எவ்வளவு தூரம்?
உலகசினிமா ...சரி.. அது என்ன பார்வை தூரம்.. உலகசினிமா பத்தி சொல்லுங்கன்னா சொல்லிட்டுப் போயிருப்பேன் இல்லையா.. பார்வை தூரம்ன்னா எனக்கு தூரத்துல இருக்கறதெல்லாம் தெரியாது .. அதுகுத்தான் பவர் அதிகமான கண்ணாடி போட்டிருக்கேன்.. அதைகிண்டல் செய்யறயோன்னு தோணுது.. என்னைப்பொறுத்தவரை நடப்பதை அப்படியே காண்பிக்கற இல்லாட்டி நாலு பாட்டு நாலு பைட் இல்லாமல் சில நிகழ்வுகளையோ அல்லது உணர்வுகளையோ மையமா வச்சுக்கிட்டு உலகத்துல இருக்கற எல்லாரும் மொழியே புரியலைன்னாலும் பாத்து புரிஞ்சுக்கமுடியறதா இருந்தா அது உலகசினிமான்னு சொல்லிக்கலாம்.. உண்மையில் உலகசினிமாக்கான அர்த்தம் என்னனன்னு எனக்குத் தெரியாது எங்கயும் படிச்சதில்லை.. பொழுதுபோகாம இருக்கறவங்க பார்க்க சிறந்த படம் உலகசினிமா... ஓடறதை ... நடக்கறதை யோசிக்கறதை எல்லாம் காட்டுவாங்க..
2. தசாவதாரத்தில் தங்களை கவர்ந்த அவதாரம் எது, ஏன்?
இதுவரை தமிழ்மணத்தில் எல்லாரும் இந்த படம் பத்தி எழுதிட்டாங்க.. நான் எழுதாத ஒரே ஆள் என்று சாதனை செய்யலாம்ன்னு இருந்தேன் அது எப்படியோ தெரிஞ்சு அதை முறியடிக்கனும்ன்னு இப்படி கேள்வி கேட்டதை கண்டிக்கிறேன்.. இருந்தாலும் சொல்றேன்..
பூவராகன் தான் .. இயற்கை பத்தி கவலைப்படற ஒரு நியாயம் நேர்மைனு பேசற ஆளா வந்திருக்காரே அது ஒரு காரணம்..இன்னோன்னு இயற்கையாவே அப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருப்பது போல அவர் அந்த படத்தில் வந்திருக்க்காரே அது ஒரு காரணம்.. அவர் மற்ற அவதாரங்களைப் போல அதிகம் ப்ளாஸ்டிக் வேலைகள் செய்யவே வேண்டாம்.. தன் நடிப்பால் சின்ன சின்ன வித்தியாசம் காண்பிக்கிறாரே அதுவே போது நாம் அவரை பாராட்ட ரசிக்க.. .. இறந்த பின்னும் கூட அந்த அவதாரம் உபயோகப்படுது பாருங்க.. ஒரு தாய்க்கு தன் குழந்தையாக ..... அருமையான கதாப்பாத்திரம். தனியா அவரை வைத்து ஒரு படம் செய்ய சொல்லிக் கேக்கலாம் ..
1. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற விஷயத்தில் தலைமுறைகள் இழந்ததாக எதை நீங்கள் கருதுகிறீர்கள். உங்களால் மீட்க முடியும் என்ற என்ற சக்தியிருந்தால் எந்த விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். (திண்ணையை தவிர..)
கலாச்சாரம் பாரம்பரியம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாறத்தான் செய்யும்.. நல்லவற்றை மறக்காம பிடிச்சிக்கணும். எல்லாவற்றையும் இது தேவையில்லைன்னு தூக்கிப்போடக்கூடாது. நான் இன்றைக்கு நம்ம தலைமுறைல தொடர்ந்து கடைபிடிக்கனும்ன்னு ஆசைப்படற ஒரு விசயம் ..யாரையும் பார்க்கும் போது வணக்கம் சொல்றது தான்.. இப்பன்னு இல்ல நான் 25 வருடம் முன்ன பள்ளிக்கூடப்பிள்ளையா இருந்தபோதே வணக்கம் சொல்ல வெக்கப்படுவேன்.. கல்யாண வீடுகளிலோ மற்ற இடங்களிலோ பெரியவர்களை காண்பித்து இவர் எனக்கு இன்ன முறை வேண்டும் உனக்கு தாத்தா ..வணக்கம் சொல்லு என்று அம்மா கை கூப்பி சொல்லச் சொல்லும் போது வேண்டா வெறுப்பாக சொல்லுவேன். இங்கே தில்லியில் மக்களிடம் இன்னமும் அந்த பழக்கம் தொடர்கிறது..
வயதானவர்கள் சம வயதினரோ தமக்கு சிறியோரோ பார்த்ததும் நமஸ்தே .. ராம் ராம் என்று ஒன்றைச் சொல்லி வணங்கிக்கொள்கிறார்கள்..சிறு குழந்தைகள் கூட அதை வழிமொழிந்து விட்டு தங்கள் வலக்கையால் அவர்கள் காலில் விழுவது போன்றதொரு பாவனை செய்வார்கள்.. அது அந்த தை பெரியவர்களின் முட்டி வரை சென்று மீளும்.. அதற்குள் அந்த பெரிவர்கள் தடுத்து : ஜீத்தேரஹோ - நல்லா இருக்கனும் என்கிற அர்த்தத்துடன் ஆசி வழங்குகிறார்கள்.. அது மட்டுமா இந்த குழந்தைகள் நம்மீது மதிப்புடையவர்களாக இருக்கிறார்களே என்று ஒரு மகிழ்வான கர்வம் கூட அவர்கள் முகத்தில் அந்நேரம் வந்து போகும்.
தமிழ்மணத்தில் வந்ததாலும் கூகிள் அரட்டையின் தமிழ்ச்சேவையாலும் நான் மீண்டும் வணக்கம் சொல்லுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்.. இப்போது வெக்கமாக இருப்பது இல்லை.. அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் கூட புன்னகை மறந்து போன நகரத்தில் ... இன்னமும் பூங்காவில் சந்திக்கும் வயதானவர்கல் யாரென்றே தெரியாம நமஸ்தே பேட்டே ... பாத்து பாத்து குழந்தையைக் கூட்டிட்டுபோன்னு சொல்லும் அந்த அக்கறையை என்ன சொல்ல.. அந்த அக்கறையும் பாசமும் அடுத்த தலைமுறைக்கும் வரணும் என்பதே என் ஆசை.
----------------------------------------------------------------------------
பதில் சொல்வது கூட எளிதாக இருக்கும்போல... கேள்வி கேட்பது தான் சிரமமாகத் தோன்றுகிறது.. என்னடா இது தருமியைவிட மோசமான நிலைமை.. ம்.. எப்படிக் கேட்டாலும் குறைஞ்சபட்சம் தெரியாதுன்னாவது சொல்லுவேன்னு உறுதிமொழி கொடுத்ததால ஜீவ்ஸைக்கேக்கறேன்..
1. வெண்பா எழுதினதா சொல்லிக்கறாங்க.. திண்ணையில் எழுதினதா சொல்லிக்கறாங்க.. ஆனா இப்ப சத்தமில்லாம இருக்கீங்களே வெறும் புகைப்படம் எடுத்துக்கிட்டு .. ... ?
2. பெரிய அரசியல் வாதிகளில் யாரையாவது ஒரு நாள் முழுக்க கூடவே இருந்து படம் எடுத்துத்தள்ள அனுமதி கிடைத்தால் அது யாரா இருக்கனும்..
3. ஆபிஸில் ஒரு மாசம் லீவ் தரோம்.. என்ஜாய் ! இந்த ஆபிஸே உன் தலையில் ஓடுதுன்னு நினைக்காம வீட்டுக்குப்போ அப்பா .. ன்னு சொன்னா.. என்ன செய்வீங்க??
4. கிராமமா நகரமா எதில் வாழ்வது சிறப்பு..
38 comments:
ஜீவ்ஸுக்கான கேள்விகள் எளிமையானவை மட்டுமில்லை. அழகானவையும் கூட
வணக்கம் பத்தி சொல்லி இருந்தீங்களே...நல்லா இருந்தது..
ஆஹா ஆஹா கடைசி கேள்விக்கான பதில் முதலில். நச்சுன்னு இருக்கு பதில். அண்ணே சென்ஷி அண்ணே சீக்கிரம் வாண்ணே. வந்து இதுக்கு நீ ஒரு பதில் சொல்லு:)
//அந்த அக்கறையும் பாசமும் அடுத்த தலைமுறைக்கும் வரணும் என்பதே என் ஆசை.
//
இந்த பதிலை ரொம்பவே ரசித்தேன்.
அக்கா நானும் உங்களுக்கு ஒரு கும்புடு போட்டுக்கறேன்க்கா. :))
உலக சினிமா பற்றிய உங்கள் பார்வையும் அதற்கான அர்த்தமும் சூப்பர்:)
/இன்னமும் பூங்காவில் சந்திக்கும் வயதானவர்கல் யாரென்றே தெரியாம நமஸ்தே பேட்டே ... பாத்து பாத்து குழந்தையைக் கூட்டிட்டுபோன்னு சொல்லும் அந்த அக்கறையை என்ன சொல்ல.. அந்த அக்கறையும் பாசமும் அடுத்த தலைமுறைக்கும் வரணும் என்பதே என் ஆசை.//
Nice...
:))
///தமிழ்மணத்தில் எல்லாரும் இந்த படம் பத்தி எழுதிட்டாங்க.. நான் எழுதாத ஒரே ஆள் என்று சாதனை செய்யலாம்ன்னு இருந்தேன் அது எப்படியோ தெரிஞ்சு அதை முறியடிக்கனும்ன்னு இப்படி கேள்வி கேட்டதை கண்டிக்கிறேன்..இருந்தாலும் சொல்றேன்..
பூவராகவன் தான் ..///
இது வேறயா? நீங்களே தான் சொல்லி இருப்பீங்க. அத நேரம் பார்த்து சென்ஷி கேட்டுட்டார். ஆனாலும் உங்களுக்கு பிடிச்ச பூவராகன் பலருக்கும் எனக்கும் பிடிச்ச கேரக்ட்டர்.
///தமிழ்மணத்தில் வந்ததாலும் கூகிள் அரட்டையின் தமிழ்ச்சேவையாலும் நான் மீண்டும் வணக்கம் சொல்லுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்..///
நல்ல பழக்கம். அப்படியே தொடருங்க.
மேடம் சொன்ன வரைக்கும் பதில்கள் சூப்பர். தசாவதாரத்தில் கமலின் பெயர் பூவராகன். நானும் முதல்ல பூவராகவன் அப்டின்னுதான் என் பதிவில் எழுதிருந்தேன். அப்புறம் ஷ்யாம் சார்தான் திருத்தினார்.
//இன்னமும் பூங்காவில் சந்திக்கும் வயதானவர்கல் யாரென்றே தெரியாம நமஸ்தே பேட்டே ... பாத்து பாத்து குழந்தையைக் கூட்டிட்டுபோன்னு சொல்லும் அந்த அக்கறையை என்ன சொல்ல//
நானும் இதை மாதிரியே இங்க நெறைய தடவை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டுருக்கேன்.
//பார்வை தூரம்ன்னா எனக்கு தூரத்துல இருக்கறதெல்லாம் தெரியாது .. அதுகுத்தான் பவர் அதிகமான கண்ணாடி போட்டிருக்கேன்.. அதைகிண்டல் செய்யறயோன்னு தோணுது..//
அண்ணன் அப்பாவியா கேட்ட கேள்வியை அடப்பாவியா மாத்திட்டீங்களே.. க்ரேட். :-P
அதான் சொன்னேனே சின்ன அம்மிணி கேள்வி கேக்கவே வரலை..எதோ பேருக்கு தயார் செய்துட்டேன்.. பிழைச்சுப்போறார்.. ஜீவ்ஸ்.. :))
-------
சரவணக்குமார். நன்றி.
--------
நிஜம்மா நல்லவன் கவனிச்சீங்களா நான் அறிவுரை எதுவும் சொல்லலை.. ஏன்னா சொல்லிட்டா மூத்தபதிவர்ங்கறதை ஒத்துக்கிட்டதா ஆகுமே.. :)
http://kaladi.blogspot.com/2008/07/blog-post.html
பதிலிட்டேன் இங்கே அக்கா. போயி படிச்சுப் பாருங்க.
நன்னி
யக்க்கா.. அரசியல்ல சேர்ந்துட்டீங்களா? இல்ல கட்சி ஏதேனும் ஆரம்பிக்க ப்ளான் போட்டிருக்கிங்களா??
பதிலெல்லாம் நச்சுன்ன்னு இருக்கு.. அதுவும் தெளிவா, கொஞ்சம் குழப்பமா ( தெளிவா குழப்புறது அரசியல்வாதிதானே), நகைச்சுவையா, மேடை பேச்சு மாதிரி சொல்லியிருக்கீங்க. நடுவுல சென்ஷி அண்ணனுக்கு கண்டனம் எல்லாம் சொல்லியிருக்கீங்களே. அதான்.
anyway, the post is super. :-)
வணக்கம் அம்பி ,இந்த வயசிலேயே என்ன மரியாதை..... கும்பிடுக்கு நன்றி..
--------------
இராம் நன்றி...
--------------
தசாவதாரம் கேள்விக்கு ....சரிதான் ஓட்டைவாய் நானே அங்க அங்க பின்னூட்டமா போட்டு என் வெற்றி வாய்ப்பை இழந்துட்டேன் நிஜம்மா நல்லவன்..
ஓ மாத்தறேன் ராப்.. சொல்லும் போது சரியா சொல்லிட்டு அடிக்கும் போது தப்பா அடிச்சிட்டேன்..
--------------
அண்ணன்களுக்கு ஒன்னுன்னா மைப்ரண்டு ஓடிவந்துடுவியே.. வரட்டும் அந்த அட.. சே அப்பாவி
அக்காவோட பதில்கள் சென்டிமெண்ட்...
ஜீவ்ஸூக்கு கேள்விகள் சின்னதா இருக்கே... (பாருங்க அதுக்குள்ள பதில் போட்டுட்டாரு...)
1. \\ஆக கேள்வியே தப்பு.\\
கேள்வியே தப்புன்னு சொன்ன முதல் ஆளு நீங்க தான் அக்கா....படிச்சிட்டு கண்ணு கலங்கிடுச்சி அக்கா ;-)))
@ மாப்பி சென்ஷி...உனக்கு பதில் தான் சொல்ல தெரியலன்னு பார்த்தேன் கேள்வியுமா!! ;-))
2. \\பார்வை தூரம்ன்னா எனக்கு தூரத்துல இருக்கறதெல்லாம் தெரியாது .. அதுகுத்தான் பவர் அதிகமான கண்ணாடி போட்டிருக்கேன்.. அதைகிண்டல் செய்யறயோன்னு தோணுது.. \\
யக்கா...எப்படிக்கா இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க...பதிலும் சூப்பரு ;)
3. \\இறந்த பின்னும் கூட அந்த அவதாரம் உபயோகப்படுது பாருங்க.. ஒரு தாய்க்கு தன் குழந்தையாக ..... \\
கையை கொடுங்கக்கா...அருமையான பார்வை...சத்தியமாக எனக்கு தோணவே இல்ல...சூப்பர் ;)
4. இந்த பதிலும் அருமை..கடைபிடிக்க படவேண்டிய நல்லவிஷயம்.
மொத்தத்தில் எல்லா பதிலும் சரவெடி மாதிரி கலக்கிட்டிங்க ;))
ஜீவ்ஸ் கேட்ட கேள்வியும் "நச்சு"ன்னு இருக்கு ;))
வணக்கம்!!! நல்லா இருக்கு பதில் எல்லாமே!!! ஜீவ்ஸ் என்ன பண்ண போறார்ன்னு பார்ப்போம்:-)))
இப்படிக்கு
அபிஅப்பா
பதில்கள் நான்கும் மூன்றும் கலக்கல் [ஸ்மைலி போடலாமான்னு தெரியலையே:( ] !
இரண்டாவதை ரசிக்க படம் இன்னும் பார்க்கலையே!
ஒன்றாவது-கவர்ந்தது. கனமானது. குறிப்பாக,
//அந்த அக்கறையும் பாசமும் அடுத்த தலைமுறைக்கும் வரணும் என்பதே என் ஆசை.//
அட அம்பியும் ரசித்திருக்கிறாரே என்றபடி, ஒரு படி இறங்கினால் போட்டிருக்கிறாரே பெரிய கும்பிடு:))!
[அட, இனி ஸ்மைலி போடாமல் பின்னூட்டமிடவே முடியாது போலிருக்கே!]
பின்னீட்டீங்க ;)
//எல்லாமே என் கண்களுக்கு அவுட் ஆஃப் சிலபஸ் மாதிரியே தெரிகிறது . வழக்கம்போல தேர்வில் எழுதுவது போலவே இறுதிக்கேள்விக்கு முதலில் பதில்..
//
அவுட் ஆப் சிலபஸ் கொஸ்டீன்ன்னாலம் கேள்வி மட்டும் எழுதிட்டு மார்க் வாங்கிட்டு போகாம ரொம்ப சிரத்தை எடுத்து சூப்பரா பதில் சொல்லியிருக்கீங்கக்கா!
//சில நிகழ்வுகளையோ அல்லது உணர்வுகளையோ மையமா வச்சுக்கிட்டு உலகத்துல இருக்கற எல்லாரும் மொழியே புரியலைன்னாலும் பாத்து புரிஞ்சுக்கமுடியறதா இருந்தா அது உலகசினிமான்னு //
அட அதான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கே!
இதுதான் உலக சினிமா உலகதரம் எல்லாமே! இதுக்காக நீங்க எங்கயும் போய் படிக்கவேணாம்!
///இன்னோன்னு//
அட நம்ம ஊர் பாஷை! :)))
//இறந்த பின்னும் கூட அந்த அவதாரம் உபயோகப்படுது பாருங்க.. ஒரு தாய்க்கு தன் குழந்தையாக //
அருமையான ரசிப்பு!
//நம்ம தலைமுறைல தொடர்ந்து கடைபிடிக்கனும்ன்னு ஆசைப்படற ஒரு விசயம் ..யாரையும் பார்க்கும் போது வணக்கம் சொல்றது தான்//
இந்த இனிய வரிகளுக்கு வணங்கி மகிழ்கிறேன்!
//வெண்பா எழுதினதா சொல்லிக்கறாங்க.. திண்ணையில் எழுதினதா சொல்லிக்கறாங்க.. ஆனா இப்ப சத்தமில்லாம இருக்கீங்களே வெறும் புகைப்படம் எடுத்துக்கிட்டு .. ... ?
//
அட நான் நினைச்சது கேட்க இது வரை தயங்கிய விஷயம்!
த******ம் பத்தி எழுதிட்டீங்களா? சென்ஷி தல வாழ்க :)))))))
பதில்கள் கலக்கல்!
// .. ஆக கேள்வியே தப்பு.. //
எத்தனை மொக்கையாக கேள்வி கேட்டாலும் அதற்கு சூப்பராக பதில் சொல்வது எப்படி என்ற இந்த பதிவே எங்களுக்கான (புதிய பதிவர்களுக்கான) மிகச்சிறந்த ஆலோசனையாக தெரிகிறது.
வாழ்த்துக்கள் அக்கா. எனக்கு உங்க பதிவுல மிகவும் பிடித்த பதிவின் வகையில் இதுவும் சேர்கிறது.
பின்னூட்ட கும்மி அடிக்க ஆசையிருந்தும் மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஒரு பின்னூட்டத்தோடு மனமின்றி செல்கிறேன்.
கலக்கல் பதில்கள் எப்படிங்க...:))
அட இதுக்கு பேருதான் உலக சினிமாவா நான் இம்புட்டு காலமா தடுமாறிக்கிட்டிருந்தேன்... :)
இயல்பான பதில்!
///இன்னமும் பூங்காவில் சந்திக்கும் வயதானவர்கல் யாரென்றே தெரியாம நமஸ்தே பேட்டே ... பாத்து பாத்து குழந்தையைக் கூட்டிட்டுபோன்னு சொல்லும் அந்த அக்கறையை என்ன சொல்ல.. அந்த அக்கறையும் பாசமும் அடுத்த தலைமுறைக்கும் வரணும் என்பதே என் ஆசை.///
இது தான் உங்கள் அன்பு...
அருமை...
it's nice of u..........
வணக்கம் பற்றி சொன்துக்கு
நன்றி - வணக்கம்...:)
//அக்கம்பக்கம் இருப்பவர்களிடம் கூட புன்னகை மறந்து போன நகரத்தில் ... இன்னமும் பூங்காவில் சந்திக்கும் வயதானவர்கல் யாரென்றே தெரியாம நமஸ்தே பேட்டே ... பாத்து பாத்து குழந்தையைக் கூட்டிட்டுபோன்னு சொல்லும் அந்த அக்கறையை என்ன சொல்ல.. அந்த அக்கறையும் பாசமும் அடுத்த தலைமுறைக்கும் வரணும் என்பதே என் ஆசை.//
நெகிழ வைத்த வரிகள்!!
தமிழ்ப்பிரியன்... எனக்கு கேக்கத்தெரியாம கேட்டுட்டேன் ஆனா கேள்வியையே மாத்தி தனக்கேத்தமாதிரி ஆக்கிட்டாரே .. அதுக்கும் மேலே என்ன செய்ய
-------------------------
கோபி நீங்கள்ளாம் இப்படி ஏத்திவிடறதால தான் இன்னமும் பதிவு போட்டிட்டுருக்கேன்
----------------
அபி அப்பா நன்றி.. ஆணி கம்மியா ??பதிவு என்ன பின்னூட்டம் என்ன? அப்பறம் படிச்சுட்டு வேற பின்னூட்டம் ..கலக்கறீங்க..
ராமாலக்ஷ்மி நன்றி.. ஸ்மைலி போடுங்களேன் புள்ளைங்க தப்பா நினைக்கமாட்டாங்க.
--------------
கானாப்பிரபா நன்றி நன்றி.. :)
---------------
ஆயில்யன் நன்றி...இன்னோன்னு நம்ம ஊரில் மட்டும் தான் சொல்லுவாங்களா?
----------------
கப்பி பய இது என்ன ஒரு மகிழ்ச்சி .. ஆட்டையில் பாதில நான் வெளியேத்தப்பட்டதுல இப்படி ஒரு மகிழ்ச்சியா?
சென்ஷி ஒரு முன்முடிவோட(நான் மூத்தபதிவர் தான் என்கிறதுல) இருந்தா என்ன செய்ய ..அறிவுரை சொன்னதாவே எடுத்துகிட்டாச்சா.. சரி வயதில் மூத்தவர் என்பதால் அப்படி சொன்னதா எடுத்துக்கிறேன்..
----------------
தமிழன் நன்றிங்க.. எப்படி இப்படி எல்லாம்ன்னு கேட்டீங்கன்னா.. எல்லாம் சென்ஷி போன்ற பதிவர்களின் பதிவைப்படிச்சுத்தான்..
:))
---------------------------------
பரிசல்காரன் நன்றிங்க..
//கலாச்சாரம் பாரம்பரியம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் மாறத்தான் செய்யும்.. நல்லவற்றை மறக்காம பிடிச்சிக்கணும். எல்லாவற்றையும் இது தேவையில்லைன்னு தூக்கிப்போடக்கூடாது. நான் இன்றைக்கு நம்ம தலைமுறைல தொடர்ந்து கடைபிடிக்கனும்ன்னு ஆசைப்படற ஒரு விசயம்//
உங்களுடைய கருத்துக்கள், அப்படியே வருணுடைய கருத்துக்கள் போலவே இருக்கிறது(கலாச்சார விஷயங்களில்)
மறுமொழிக்கு நன்றி கயல்விழி..
Post a Comment