September 22, 2008

தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்






தக்ஷின சித்ரா போயிருக்கீங்களா? சில புத்தகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்திருந்தாலும் சென்னை வரும்போது செல்லவேண்டும் என்று நினைவுக்கு வருவதே இல்லை. பாலபாரதியின் திண்ணைத் தொடருக்காக திண்ணை பற்றிய பதிவிட்ட போது மலர்வனம் லக்ஷ்மி வேறு நினைவுபடுத்தி இருந்தார்கள் . என் மாமாமகள் பிக்காசாவில் தக்ஷினசித்ரா சுற்றிப்பார்த்தப் படங்களை அனுப்பிவைத்திருந்தாள், பார்த்ததும் மீண்டும் ஆசை துளிர்விட்டது .

சென்னை ஆட்கள் பலரும் தக்ஷின் சித்ரா போறீங்களா? எங்க இருக்கு அது என்று கூகிள்சேட்டில் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.திருவான்மியூர் மாமாமகள் வீட்டுக்கு சென்று விட்டு அங்கிருந்து தக்ஷின் சித்ரா போவதாக திட்டம். நான் வந்து இறங்குவதோ எக்மோர் . எதாவது எளிதான போக்குவரத்து என்று லக்ஷ்மிக்கே தொலைபேசினேன். மின்சாரரயிலே உண்டே என்று வயிற்றில் பால் வார்த்தார்கள்.

எக்மோரிலிருந்து கோட்டை .. கோட்டையிலிருந்து திருவான்மியூர். ஆகா! அலுவலக நேரம் தவிர்த்து மின்சார ரயில் பயணம் செய்வது என்பது இன்பமானது. நல்ல காற்று .. அமைதியாக, ஆனந்தமாக குழந்தைகள் ரசித்து பயணித்தனர். திருவான்மியூரிலிருந்து மாமாமகளின் கணவர் எங்களை பஸ் ஏற்றிவிட்டார். எம் ஜி எம் டிஸ்ஸி வேர்ல்ட் க்கு அடுத்து இருக்கிறது தக்ஷின் சித்ரா. எம் ஜி எம் நிறுத்தத்தில் இறங்கி கொஞ்சமே கொஞ்சம் நடந்தால் வந்துவிடுகிறது.

ரிசப்ஷன் ஹாலே ஒரு அழகான வீடு தான். நடத்தறவங்க மெட்ராஸ் க்ராப்ட்ஸ் ஃபவுண்டேசன்.. 1996 ல் ஆரம்பிச்சிருக்காங்க.நுழைவுகட்டணம் பெரியவங்களுக்கு 75 ரூ. சிறுவருக்கு 20 ரூ. புகைப்படம் எடுக்க அனுமதி இலவசமாம்.. பாருங்க அதிசயத்தை. வீடியோவுக்கு 25 ரூ தான். நாங்க ஒரு வீடியோக்கேமிராக் கூப்பன் வாங்கிட்டு நுழைந்தோம். ஒரு மேப் கூட குடுக்கறாங்க. அதுல எங்க எங்க என்ன இருக்குன்னு அழகா நம்பர் போட்டிருக்காங்க.. நாங்க முதலில் பார்த்தது கர்நாடகா . அப்பறம் ஆந்திரா வீடு. வட்டமான குடிசை வீடு . வாசலில் ஒரு அம்மா குச்சியில் கட்டி சுத்தினால் சத்தம் வரும் டிக் டாக் 10 ரூ க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.

உள்ளே அழகான கயித்துக்கட்டில். எல்லா இடத்திலும் அழகா மெழுகி கோலமிட்டிருந்தார்கள். . குடிசை வீடு. கொஞ்சம் வசதியானவர்கள் வீடு.தறி நெய்பவர்கள் வீடு. வீடுகள் அந்த காலத்தின் அமைப்பு என்பதால் வாசல் தனித்தே இருக்கும். யாரும் வணங்கா முடிகள் வந்தால் இடித்துக்கொள்ளக்கூடாதே என்று சின்ன சின்ன கருப்பு தலைகாணிகளை வாயிலில் கட்டிவிட்டிருக்கிறார்கள். ஆமாம் தெரியாமல் இடித்தால் பத்து நாள் தலைவலிக்குமே.

தமிழ்நாடு வீட்டில் செட்டி நாடு வீடு அமர்க்களம். வரிசைகட்டி திண்ணை வீடுகள் இருக்க ஒரு தெருவே அந்த காலத்தை கண் முன்னே காட்டுகிறது. திண்ணையில் கிளி ஜோசியமும், கை ரேகை பார்ப்பவர்களுமாக உயிரோட்டமாக இருக்கிறது. கிளி ஜோசியக்காரர்கள் உள்ளே பப்பெட் ஷோ சீக்கிரம் போங்க என்றார்கள். உள்ளே நுழைந்தால் ஒன் மேன் ஷோ. செல்வராஜ் என்பவர் பேச்சு நிழற்பிம்ப நாடகம் .. தோல்ப்பாவைகளை வைத்து காட்டுகிறார். அவரே குரல். அவரே இசை. அவரே பொம்மைகளை ஆட்டுவிக்கிறார்.


10 நிமிடங்களில் என்ன பெரிய கதை சொல்லிவிட முடியும் என்று சின்னதாக ஒரு அறிமுகம் செய்கிறார். கிருஷ்ணலீலாவில் ஒரு காட்சி என்று சொல்லிவிட்டு அதில் ஆங்கிலம் கலந்து நகைச்சுவையாக ( இரண்டு அறை விட்டா நகைச்சுவைதானே ... டமால் டமால் என்று அடிவிழுகிறது) நடத்துகிறார். நடுவில் வரும் எக்சூஸ்மிக்கெல்லாம் ஒரு வெளிநாட்டுக்காரர் சிரித்துக்கொண்டிருந்தார்.

கேரளாவீடுகள் சொல்லவா வேண்டும் அழகு. முற்றம் ஒரு நீச்சல் குளம் போல இருந்தது. முற்றிலும் கம்பியில்லா மர ஜன்னல்கள். ஜன்னல் கதைவை கீழ் நோக்கித் திறந்து ரயில் பெர்த் போல போட்டால் உட்கார ஏதுவாகும். வேண்டாமா? எடுத்து மூடிவிடலாம். நல்லா யோசிச்சிருக்காங்கப்பா.


வீட்டுக்கூரையில் பாதி தடுத்து ஒரு மச்சு செய்து அதில் ஏற ஒரு மர ஏணி தென்காசியில் பார்த்திருக்கேன். அது போல இங்கேயும் உண்டு ஆனால் ஏறக்கூடாது என்று எழுதி இருக்கிறார்கள்.கேரள இந்து வீடு. கேரள கிருத்துவர் வீடு என்று மாடல்கள்.

தமிழ்நாட்டில் குயவர் வீட்டில் மண் பாண்டம் செய்வது எப்படி என்று செய்து காட்டுகிறார்கள் . நீங்கள் செய்துபார்க்கனுமா? 10 ரூ . மருதாணி போடறாங்க 10ரூ. ஆனா வடநாட்டு பாணி. நம்ம ஊருல கோன்லயா போடுவங்க.. மண்ணில் செய்த பொருட்கள் விலைக்கு இருந்தது. நான் என்ன வாங்கினேன் தெரியுமா?
ஆட்டுக்கல் அம்மிக்கல் உரல் திரிகை. எல்லாம் சேர்ந்து 70 ரூபாய்ன்னு ஞாபகம்.

இதெல்லாம் இனி ம்யூசியத்துலதான்னு சொல்லிக்கேள்விப்பட்டிருக்கேன். இப்ப ம்யூசியத்தில் பார்க்கவே பார்த்துட்டேன். மாவு திரிகையில் மாவு திரிக்க 5 ரூபாய்ங்க.. கொஞ்சம் அரிசியை உள்ளே போட்டு திரிச்சுப்பார்க்கலாம்.. பாட்டி எப்படி மாவு திரிச்சாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க... :)

ஒரு அய்யனார் கோயில் கூட இருக்கு அட்டகாசமா..

தில்லிகாட் மாதிரி கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யறாங்க..தில்லிகாட் மாதிரியே விலையும் பயமுறுத்தியது. ஒன்னும் வாங்கல அங்க.. ஒரு அம்மணி வாங்கிக்கொண்டிருந்த வளையல் விலை 800ரூ. அதே போன்ற இன்னொன்று 200ரூ . என்ன வித்தியாசம் என்ற அம்மணிக்கு இளைஞர் சொல்லிய பதில். " 800ரூ வளையலில் இருக்கும் ஃபினிஷிங் இன்னோன்றில் இல்லை. ஏனென்றால் அது என் மாணவர் செய்தது " ஹ்ம்.. சொன்னா கேட்டுக்க வேண்டியது தான்.

பனைஓலை பொம்மைகள் செய்வது எப்படி? களிமண் மோல்டிங் செய்வது எப்படி? இப்படி நிறைய விசயங்கள் சொல்லித்தருவதாக எழுதி இருந்தாலும் நாங்கள் சென்ற போது வெறுமனே மண் பாண்டத்தில் கலர் பெயிண்ட் செய்யமட்டுமே வசதி உண்டு என்று சொல்லிவிட்டார்கள்.

கேரளா வீட்டில் வாசலில் தென்னை வயலின் 30 ரூபாய்க்கு மகன் வாங்கினான். மகளுக்கு ஒரு பாட்டியம்மா பனையோலையில் யோ யோ செய்வது எப்படின்னு சொல்லிக்கொடுத்தாங்க.. ""பொருளு கம்பனி(!!!)ப்பொருளும்மா அது வெல 10 ரூ . டிக்கெட் கொடுத்துடுவோம். சொல்லிக்கொடுக்கறதுக்கு நீ பாத்துப் போட்டு கொடும்மா""ன்னாங்க.. சரின்னு ஒரு 5 ரூ. கரகாட்டம் ஒயிலாட்டம் நடக்க இருந்தது . எங்களுக்கு நேரம் இல்லை நாங்க வீடுகளை சுத்திக்கொண்டிருந்தபோது சத்தம் கேட்டது.

சாப்பாடு ஹால் இருக்கு. தங்கவசதியும் இருக்காம். இவங்களோட வலைப்பக்கத்துல http://www.dakshinachitra.net/index.htm விவரமா இருக்கு . அலுவலக மீட்டிங்க் , பர்த்டே பார்டி கூட அரேஞ்ச் செய்யலாம் போல...எட்டிப்பாத்து என்ஜாய் செய்யுங்க சென்னை மக்களே!

33 comments:

ஆயில்யன் said...

//ரிசப்ஷன் ஹாலே ஒரு அழகான வீடு தான். நடத்தறவங்க மெட்ராஸ் க்ராப்ட்ஸ் ஃபவுண்டேசன்.. 1996 ல் ஆரம்பிச்சிருக்காங்க.நுழைவுகட்டணம் பெரியவங்களுக்கு 75 ரூ. சிறுவருக்கு 20 ரூ. புகைப்படம் எடுக்க அனுமதி இலவசமாம்.. பாருங்க அதிசயத்தை. வீடியோவுக்கு 25 ரூ தான். நாங்க ஒரு வீடியோக்கேமிராக் கூப்பன் வாங்கிட்டு நுழைந்தோம். ஒரு மேப் கூட குடுக்கறாங்க. அதுல எங்க எங்க என்ன இருக்குன்னு அழகா நம்பர் போட்டிருக்காங்க.. //


o.ke புரோகிராம்ல பிக்ஸ் பண்ணியாச்சு!

இந்த வெக்கேஷன்ல பார்த்துடவேண்டியதுதான் நன்றி அக்கா!

ஆயில்யன் said...

எல்லா போட்டோக்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் !

சூப்பரா இருக்கு!

சென்ஷி said...

போட்டோ ரொம்ப‌ அழ‌கா வ‌ந்திருக்குக்கா. ஆயில்ய‌ன் சொன்னாமாதிரி இந்த‌ வெக்கேச‌னுக்கு போயிட்டு வ‌ந்துர‌வேண்டிய‌துதான் போல‌ :)

சந்தனமுல்லை said...

அடிக்கடி க்ராப்ட் ஃபேர் நடக்கும் அங்க!! பப்பு கொஞ்சம் வளர்ந்தப்புறம் போனா எஞ்சாய் பண்னுவானு இன்னும் எட்டிப் பார்க்கல!!

போட்டோஸ் அழகு!!

அமுதா said...

ஆமாம், இது ஓர் அருமையான இடம். நல்ல பதிவு

ராமலக்ஷ்மி said...

கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். நன்றி படங்களுக்கும் தகவல்களுக்கும். அடுத்த சென்னை விஸிட்டிலேயே முடிகிறதா பார்க்கிறேன்.

ambi said...

ரொம்ப அருமையா எங்க கண் முன்னாடி கொண்டு வந்ருக்கீங்க. எழுத்து நடை துளசி டீச்சரை நியாபகடுத்துது.(inspiration..?) :D

//அவரே குரல். அவரே இசை. அவரே பொம்மைகளை ஆட்டுவிக்கிறார்.
//

நீங்க முகுந்தா முகுந்தா!னு பாடி இருக்கலாம் இல்ல. தேன் கிண்ணத்துல மட்டும் தான் பாடுவீங்களா? :)))

கோபிநாத் said...

\\எட்டிப்பாத்து என்ஜாய் செய்யுங்க சென்னை மக்களே!\\

ரைட்டு ;))

படங்கள் எல்லாம் சூப்பரு ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் இன்னும் நிறைய படங்கள் இருக்கு.. அதெல்லாம் அவங்களோட வலைதளத்திலே கூட நீங்கள் பார்க்கலாம்.. இருந்தாலும் அந்த கருப்பு தலைகாணியெல்லாம் நான் எடுத்துப்போட்டாத்தானே உண்டு.. :)

-------
சென்ஷி சிலருக்கு போரடிக்கலாம்.. அதையும் சொல்லிக்கறேன்.. ஒருத்தங்க சுத்திப்பார்த்துட்டு கடைசியில் ..." ஷாப்பிங் மட்டும் செய்திட்டு அப்படியே போயிருக்கலாமோ? நாம தப்பு பண்ணிட்டோமோ"ன்னு வடிவேலு ஸ்டைலில் பேசிட்டிருந்தாங்க.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சந்தனமுல்லை.. ஆமாங்க, அந்த அந்த விழாவுக்கான தினத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி உண்டுன்னு தளத்திலும் குறிப்பிட்டு ஒரு ப்ளானர் கூட இருக்கே.. உங்களுக்கென்னா பக்கத்துல இருக்கீங்க.. மெதுவா பாத்துக்கலாமே..
-------------------------
நன்றி அமுதா .. சொல்வதைப்பார்த்தால் நீங்க போய் வந்திருப்பீங்க போல.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி , கண்டிப்பா பாருங்கப்பா..
விடுமுறை தினங்களில் போனா தான் நாலுமனுசங்க இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. இதையெல்லாம் காசு கொடுத்துப்பார்க்கனும்ன்னா கொஞ்சம் கஷ்டம் தானே மக்களுக்கு.. என்பாட்டிவீடே இப்படித்தான் இருந்ததுன்னு சொல்லிடுவாங்க.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்பி நன்றி நன்றி.. பெரியவார்த்தையெல்லாம் சொல்றீங்க.. துளசி தானே என் குரு..

அட சரியா சொன்னீங்க..முகுந்தா பாட்டுதாங்க இப்ப தோல்ப்பாவையை உலகத்தரத்துக்கு நினைவுப்படுத்த உதவுது.. :)

---------------
கோபிநாத் .. நகர்புறத்து மாடல் வீடு கட்ட அங்க மாடல் இல்லையேப்பா.. சீக்கிரம் வீடுகட்ட வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

ரொம்ப நன்றிக்கா....அடுத்த தடவை ஊருக்கு போகும் போது கண்டிப்பா பார்த்துடுறேன்....!

கானா பிரபா said...

2004 இல் முதன் முதல் சென்னை வந்த போது தஷிண சித்ரா வந்திருக்கேன். நம் நாட்டு ஆட்களுக்கு நான் சொல்லும் விஷயம் மறக்காம தஷிண சித்ரா பார்த்து வாங்கன்னு. அருமையான தொரு கலாச்சாரக் களஞ்சியம் இது.

இன்னும் என் புகைப்படக்களஞ்சியத்தில் நான் எடுத்தவை இருக்கு. அழகான பதிவைக் கொடுத்திருக்கீங்க. இந்தியாவில் இது போன்ற பலருக்கு தெரியாத சுற்றுலா தலங்களை உங்க பாணியில் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்


சொன்னா மிகைப்படுத்திய மாதிரி இருக்கும். இங்கே ஒரு குறி சொல்லும் பெண்மணியிடம் என் எதிர்காலம் கேட்டேன். 6 மாதத்தில் உத்தியோக உயர்வு என்றார். ஆறு மாதத்தில் அவர் சொன்னது பலித்தது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கானா...அங்கயும் நிறைய வெளிநாட்டுக்காரங்களும், வெளியூர்க்காரங்களும் தான் இருக்காங்க.. இங்கேயே இருப்பதை என்னத்தப்பார்க்கறதுன்னு இருப்பாங்களோ என்னமோ...

ஆனா நானே இன்னமும் தென்னிந்தியால பார்க்காத இடம் இருக்கே.. பார்த்தா உடனே பதிவிடவேண்டியது தான் வேறென்ன வேலை.. :)

rapp said...

ஹ்ம்ம், நான் செகண்ட் இயர்ல பார்த்தது. ஆனா ஒன்னுமே நினைவில் இல்லை. அப்போத்தான் என்னோட ரங்கமணி முதல் தடவையா எனக்கே எனக்கா சென்னை வந்திருந்தாரா, அப்போ அவர்கிட்ட பந்தா காமிக்க கிட்டத்தட்ட கலாச்சார தூதுவர் கணக்கா சீன் போட்டதுல, பார்த்த இடம் ஒன்னும் நினைவில் இல்லை. அங்கயெல்லாம் என்னா பார்த்தேன், பேசினேன்னு ஒன்னுமே நியாபகம் இல்லாத அளவுக்கு அப்படி ஒரு அர்ப்பணிப்பான நடிப்பு:):):)

rapp said...

சூப்பர் போட்டோஸ், ஆனா அங்கப் போயும் நாங்க ஒரு உருப்படியான புகைப்படம் எடுக்கல:(

rapp said...

ஆயில்யன் மற்றும் சென்ஷி அண்ணன்களே, என்கிட்டே நீங்க சொன்ன கிசுகிசு மேட்டர் பத்தி கேட்டா, தில்லிப் பதிவர்கள், விவரம் முழுசா தெரியலைங்கராங்களே:):):)

மங்கை said...

இது மாதிரி போபால்ல ஒரு இடம் இருக்குப்பா..எல்லா மாநிலத்தின் கலாச்சாரத்தையும் அங்கே பார்க்கலாம்.. அதுவும் ஒரு சின்ன மலைச்சாரலில்...

தக்ஷின சித்ரா பற்றி இப்பத்தான் கேள்விப்படறேன்..நன்றி

Anonymous said...

நானும் போயிருக்கேன்...எனக்கு மிகவும் பிடித்த இடம்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மா நல்லவன் ஞாயிற்றுக்கிழமையாப் போய் பாருங்க.
-----
மங்கை, நீங்க சொல்லி சொல்லி போபால் போகனும்ன்னு ஆசை யை கிளப்பிட்டே இருக்கீங்க..அந்த மலை ஹோட்டலைப்பற்றி வேற சொன்னீங்களே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன பார்த்தேன் என்ன பேசின்னேன்னு தெரியாம பேசினீங்களா ராப்.. அப்ப அது ஸ்வீட் நத்திங்க்ஸா இருக்கும்.. :)

------------------
தூயா எல்லா வீடு மாடல்களும் அழகா இருந்தது இல்லையா.. அதுல பார்த்ததெல்லாம் வச்சு என் கனவு வீடு தயாராகனும்...:)

Thamiz Priyan said...

படங்களும், கட்டுரையும் அருமையா இருக்கு... இதையெல்லாம் பொறுமையாக பார்க்கும் மனம் ஊருக்கு சென்றால் இருக்குமா என்று தெரியவில்லை... முயற்சி செய்கின்றேன்.

இரா. வசந்த குமார். said...

Please have a look ::

http://kaalapayani.blogspot.com/2007/09/blog-post_03.html

Sundar சுந்தர் said...

நல்ல பயணக்குறிப்பு!

துளசி கோபால் said...

இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன்.

முத்தம்(!!)வச்ச வீடுகள் அமர்க்களமா இருக்குமே:-)

ஆமாம். வாங்குன திருகை வெறும் பொம்மையா? இல்லை அரைக்குதா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் ,ஆமா உங்க லீவுல இதெல்லாம் பார்க்கக்கூட்டிட்டுப்போனா வீட்டுல திட்டப்போறாங்க :)
--------------
இரா.வசந்தகுமார். உங்க பதிவு பார்த்தேன் நிறைய படங்கள் போட்டிருக்கீங்க.. நானும் இன்னும் சில படங்கள் பிறகு போடலாம்ன்னு இருக்கேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சுந்தர்...
-----------
துளசி நான் வாங்கினது மண்ல செய்த திருகை..போட்டோல நடுவரிசையில் இருக்கற நாலு பொருட்கள் பாருங்க.. அம்மி ஆட்டுக்கல் உரல் திரிகை அந்த நாலும் தான் வாங்கினேன்.. இந்த வருசக்கொலுவுக்கு புதுவரவு.. :)

ராமலக்ஷ்மி said...

//அம்மி ஆட்டுக்கல் உரல் திரிகை அந்த நாலும் தான் வாங்கினேன்.. //

திருநெல்வேலி டவுண் கோவில் வாசலில் ஓலைப் பெட்டியில் மரச் சொப்பு சாமான் செட் விற்பார்கள். என் காலம் தொட்டு என் தங்கை மகளுக்கு இப்போ வாங்கின போது வரை ஐட்டம்களில் மாறுதலே இல்லை:))! நீங்க வாங்கின நாலும் அதில் உண்டு.

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு. சென்னையில், வேலை ரொம்ப போர் அடிச்சா, நண்பிகளோட இங்கதான் போவேன். அருமையான இடம். உங்க போட்டோவும்தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி அந்த ஓலைபெட்டி எத்தனை முறை என் மகளுக்கு , ஒவ்வொரு ஆச்சியும் வாங்கி கொடுத்து வந்ததுன்னு கணக்கே இல்லை.. பெரிசு சின்னது வேறுபாடு தவிர்த்து.. கலர் அமைப்புல மாற்றமே இருந்ததில்லை.. எங்களுக்கு மதுரை மீனாட்சி கோயில்க் கடையில் இருந்து வரும். எனக்கு அந்த செட்ல குத்துவிளக்கும் குடமும் ரொம்ப பிடிக்கும்.. திரிகை அடிக்கடி சுத்தி சுத்தி ... அந்த பிடி போயிடும் அப்பறம் விளக்கமாத்து குச்சி வச்சி சுத்துவோம்.. :)
----------------
ஆடுமாடு இது ஓவருங்க.. சும்மா போரடிச்சா போவீங்களா? போகவர எவ்வளவு தூரம்.. காசு 75 ரூ .. ஹ்ம்.. நடத்துங்க..

pudugaithendral said...

dakshin chitra pathathillai. adutha murai pogumbothgu kandipa pakkanum.

hyderabadil kooda shilparamamnu oru idam irukku. aana athu oru exhibition mathiri.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டிப்ஸ் உங்களுக்கு நன்றிங்க..

தென்றலுக்கும் நன்றி.