இதுவரை வந்த சினிமா கேள்விபதில் பதிவுகளைப்பார்க்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்கிறது. வெட்டி ஒரு படி மேலே போய் 6 மாசத்துலயே சினிமா தியேட்டரில் கல்யாணம் பேசி முடிச்சிருக்கறதெல்லாம் நினைவுப்படுத்திச் சொல்கிறார்.. எனக்கு ஞாபகமறதி நிறைய. அதனால் என்னால் நினைவுப்படுத்தி சொல்லமுடிவது மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. அழைத்த ஆயில்யன் மற்றும் மை ப்ரண்டுக்கு நன்றி.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
ரொம்ப சின்ன வயதிலும் படம் பார்த்திருப்பேன் . எனக்கு நினைவுக்கு வருவது பாலும் பழமும்(ரீலீஸ் ஆன காலமில்லங்க பழய படம் தியேட்டருக்கு திரும்ப வருமில்ல ) படத்தைப் ரயிலடி ஆச்சியைக் கூட்டிக்கிட்டுப்போனதா ஞாபகம். சுந்தரம் தியேட்டரில் எனக்கு உட்கார இடமில்லாம , சின்னப்பிள்ளைதானே நின்னுக்கிட்டேப்பார்த்தமாதிரி கலங்கலாத் தெரியுது . பெரிய திரையில் படம் பார்ப்பது சிறுவயதில் பெரிய பிரமிப்பு தான். வீட்டிலும் வேறு சின்னத்திரை கிடையாது. ஒரு முறை எங்க பெரியப்பா என்னை தாய்வீடு படத்துக்கு கூட்டிச் சென்றார்களாம். எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். அதனால் எழுந்து சீட் மேல நின்னு கை தட்டினேனாம் .. ( என்ன கொடுமை இது மீரா ஜாஸ்மின் மாதிரி இருந்திருக்கேனே) வீட்டுக்கு வந்து ரஜினி மாதிரியே " புட்டு புட்டு வச்சிடுவேன்னு" ஆக்சனோட எல்லாரையும் மிரட்டினேனாம் . இன்னமும் எல்லாரும் அதை சொல்லி சிரிப்பது வழக்கம்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தில்லியில் தமிழ்ப்படங்கள் தமிழ்ச்சங்கத்தில் தான் பார்க்கவேண்டும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் திரையரங்கிலும் வருகிறது. சமீபத்தில் பார்த்தது சிவாஜி ,தசாவதாரம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஜெயங்கொண்டான் சிடியில் பார்த்தேன். படம் நல்லா இருந்தது. போன படத்தை விட ஹீரோ இந்த படத்துல நல்லா நடிச்சிருந்தார்ன்னு தோண்றியது. இயல்பான படமா இருந்தது போல இருந்தது. ஹீரோ எல்லாரையும் நல்லா அடிக்கிறார். ஆனா அதுல ரஜினி விஜய் மாதிரி அடிச்சா பறக்குறாங்கன்னு முதல்ல ஒரு இண்ட்ரோ காட்சி வராததால் .. இயல்பாவே அவன் கொஞ்சம் அடிக்கக்கூடிய ஆளுன்னு தோணும்படி இருந்தது என்று நினைக்கிறேன். தங்கச்சியா வந்த பெண் நல்லா நடிச்சிருக்கான்னு நினைச்சேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
கருத்தம்மா ... அந்த படத்தை கல்லூரித்தோழிகளுடன் பார்த்தேன். கருத்தம்மா அவள் அப்பாவை குளிப்பாட்டி விடும் காட்சியில் அவர் மனசில் பழசை நினைப்பதும் .. கருத்தம்மாவின் அக்கறையும் கண்ணீர் சிந்த வைத்தது. தாக்கிய என்பதற்கு, மனசில் இடம் பிடித்த படம் என்றால்.. மணல் கயிறு , தில்லு முல்லு , இன்று போய் நாளை வா..இப்பவும் இந்த படங்களெல்லாம் சின்னத்திரையில் எப்பொழுது வந்தாலும் உட்கார்ந்து ரசித்து சிரிப்பேன்.. கூடவே மனப்பாடமாய் எல்லா வசனமும் சொல்லிக்கொண்டே ..:)
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தமிழ் சினிமா- அரசியலா? அப்படின்னா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிச்சயமாக .
புத்தகம் , நியூஸ் பேப்பரில் வரும் செய்திகளை படிப்பதுண்டு. ஆயில்யன் சொன்னதுபோல கிசுகிசுக்கள் யாரைக்குறிப்பிடுகிறது என்று மண்டை உடைய யோசிப்பது வழக்கம்.
7.தமிழ்ச்சினிமா இசை?
இந்த இசையைக் கேட்காமல் இப்பொழுதெல்லாம் ஒரு குழந்தை கூட வளருவதில்லை. முக்கியமாக இதான் முதல் இசை பயிற்சி. எப்பொழுதும் சினிமா இசையைக் கேட்பது என்பது ந்ம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து போயிருக்கிறதே.இன்னார் என்று இல்லாமல் எல்லா இசையமைப்பாளர் இசையும் ரசிப்பேன்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தொலைகாட்சி பெட்டி வாங்கிய காலத்திலிருந்தே பிறமொழி படம் பார்ப்பது என்பது பழக்கமாகிவிட்டது. பெங்காலி படங்கள் அந்த காலத்துப்படங்கள் பிடிக்கும். சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி பற்றிய "நிதர்சனத்தின் பதிவுகள் " என்கிற எஸ். ராமகிருஷ்ணனி ன் புத்தகத்தை அன்புடன் காட்சிக்கவிதைப்போட்டியின் போது பரிசாகக்கேட்டிருந்தேன். அது திரைப்படத்தைப்பற்றிய இன்னொரு கோணத்தை காட்டியது.
ரேபிட் ஃப்ரூப் பென்ஸ்,
பே இட் ஃபார்வேர்ட்,
நாட் ஒன் லெஸ் மனதை பாதித்த படங்கள்.
இது போல படங்கள் பார்க்க நேரிட்டால் அவ்வப்போது பதிவில் பகிர்ந்து கொள்வேன்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
எங்கம்மாவோட மாமா அந்த காலத்துல( ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்துல) கதை வசனகர்த்தாவா இருந்தாங்க.. எங்கமாமா சத்யராஜோட ப்ரண்ட் . பள்ளிக்கூடக்காலத்துல அவங்க சேர்ந்து சுத்தியிருப்பதா சொல்லி இருக்காங்க. அவர் கூடப்போய் போட்டோ எடுத்துட்டுவந்தாங்க. இப்பத்தான் நம்ம ப்ளாக்கர்ஸ் பலரும் சினிமாத்துறைக்குப்போறாங்க.. சினிமாத்துறை ஆளுங்க ப்ளாக்கர்ஸ் ஆகிறாங்க. :) தமிழ் சினிமாவுக்கு சினிமாவை பார்ப்பது தான் உதவின்னு நினைச்சு செய்துட்டுவரேன்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதிர்காலம் பற்றி சொல்ல நான் காலக்கடிகாரமா வச்சிருக்கேன். இருந்தாலும் நல்லா ப்ரகாசமா இருக்கும்ன்னு தான் நினைக்கிறேன். சினிமா வந்த காலத்திலிருந்து இப்ப வரைக்கும் வளர்ந்து கிட்டேயும் தான் இருக்கிறது. எங்கயாவது சறுக்கினா எங்கயாவது உயர்ந்து கிட்டு பேலன்ஸ்டா கொஞ்சமா வளர்ந்துகிட்டு இருக்கு.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இனிமே எப்பவுமே வராது என்ற நிலைதான் கவலைப்பட வைக்கும். ஓராண்டு என்பது பெரிய விசயம் இல்லை . இதுவரை வந்த எத்தனையோ படங்கள் பார்க்காமல் விட்டிருப்போம். ஆனால் தியேட்டர் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களைப் பொறுத்தவரையில் அது மிகக்கொடுமையானதாக இருக்கும்.
பின்.நவீனத்துவ கதாசிரியர் சென்ஷி
ஆங்கிலப்பேராசிரியை ராப்
என் குரு துளசி
இவர்களை கேள்விபதிலை தொடரும் படி கேட்டுக்கொள்கிறேன்.
44 comments:
சிம்பிளா அழகா எழுதி இருக்கீங்க....:)
முதலில் பார்த்த படம் எழுதியதுக்கு... ;))
//எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். ///
ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
சூப்பரூ!
me the third
நல்லாயிருக்கு, ஆனா அவசரத்தில் சிறுமுயற்சியாவே செஞ்சிருக்கீங்க, உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம் ;-)
//அதனால் எழுந்து சீட் மேல நின்னு கை தட்டினேனாம் .. ( என்ன கொடுமை இது மீரா ஜாஸ்மின் மாதிரி இருந்திருக்கேனே) வீட்டுக்கு வந்து ரஜினி மாதிரியே " புட்டு புட்டு வச்சிடுவேன்னு" ஆக்சனோட எல்லாரையும் மிரட்டினேனாம் //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............... அப்பவே இப்பேர்பட்ட குழந்தை பூச்சாண்டியா இருந்தீங்களா?
ஜெயம்கொண்டானைப் பத்தி அன்னைக்கு எப்படி விமர்சனம் பண்ணீங்களோ, அப்படியே வார்த்தைக் கூட மாறாம சொல்லி இருக்கீங்க. சூப்பர். அன்னைக்கொரு பேச்சு இன்னைக்கொரு பேச்சுன்னு இல்லாம கலக்குறீங்க முத்து:):):)
கருத்தம்மா நிஜமாகவே நல்லா இருக்கும், அது ஏன் ஓடலைன்னு எனக்கு வருத்தமா இருக்கு:(:(:( அதுல மகேஸ்வரியத்தவிர அவ்ளோ பேரும் ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க.
//தியேட்டர் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களைப் பொறுத்தவரையில் அது மிகக்கொடுமையானதாக இருக்கும்.
//
வழிமொழிகிறேன்:(:(:(
நன்றி தமிழ்பிரியன்.. எங்கவீட்டுல அடிக்கடி ப்ளாக் அண்ட் ஒயிட் படத்துக்குத்தான் போவோம் என்ன செய்யறது..
-------------------
ஆயில்யன் சங்கத்து ஆளாச்சே நீங்க.
கானா பிரபா இதை விளையாட்டுன்னு டேக் செய்திருந்தாலும் கேள்வி பதில் ன்னதும் பாருங்க ஒரு டென்சன்.. அதுவும் இல்லாம என்னைக்குமே நான் பரிட்சையில் கை வலிச்சா முன்னுரைக்கப்ப்றம் எத்தனை பாரா எழுதினினோ அதோட முடிச்சிட்டு முடிவுரைக்கு நேராப்போகிற ஆளு..
ஹை, சென்ஷி அண்ணனும் துளசி மேடமுமா:):):)
ராப் அபார ஞாபகசக்தி உனக்கு ஏற்கனவே எழுதினதை எல்லாம் ஒப்பிட்டுப்பார்க்கிறே எனக்கு பயம்மா இருக்கே..
ஆமா துளசி பேருக்கும் சென்ஷி பேருக்கும் நடுவில் இருக்கறது யாருன்னு தெரியலயா..?
என்னை கூப்பிட்டத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க முத்து:):):) கண்டிப்பா சீக்கிரம் ஒரு பதிவை போட்டிடறேன்.
//ஆயில்யன் said...
//எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். ///
ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
சூப்பரூ!//
ரீப்பீட்டே...
நாங்க ஒரு தடவ ரீப்பீட் போட்டா நூறு தடவ போட்ட மாதிரி..
இது எப்டி இருக்கு? :)
//எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். அதனால் எழுந்து சீட் மேல நின்னு கை தட்டினேனாம் .. ( என்ன கொடுமை இது மீரா ஜாஸ்மின் மாதிரி இருந்திருக்கேனே)//
:-))
//கருத்தம்மா ... //
சூப்பர். ;-)
//5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?//
இதுக்கு பதிலை காணோமே?
//எதிர்காலம் பற்றி சொல்ல நான் காலக்கடிகாரமா வச்சிருக்கேன். இருந்தாலும் நல்லா ப்ரகாசமா இருக்கும்ன்னு தான் நினைக்கிறேன். //
டியூப் லைட் கடை வைப்பாங்களோ? :-))
மை ப்ரண்ட் நீதான் நல்ல டீச்சர். நல்லா பேப்பர் திருத்துற.. அந்த கேள்வி கஷ்டமா இருந்துச்சா ..அப்பறமா எழுதலாம்ன்னு விட்டிருந்தேனா... மறந்து போச்சு.. :)
//என்ன கொடுமை இது மீரா ஜாஸ்மின் மாதிரி இருந்திருக்கேனே) //
அந்த கேரக்டருக்கே நீங்க தான் இன்ஸ்பிரேஷன்ன்னு பேசிக்கறாங்க. :))
கலக்கல், கொஞ்சம் அவசர அவசரமா எழுதின மாதிரி தோணுது.
சுடர்மணி .. நன்றி நன்றி நன்றி.. ரஜினி ஸ்டைலில் படிச்சிக்குங்க..
அம்பி நிஜம்மாவே அவசர அவசரமா தான் எழுதினேன்.. எல்லாரும் நல்லாவே கவனிக்கிறீங்கன்னு தெரியுது. ஆனா என்ன செய்யறது பரிட்சைன்னாலே ஏனோதானோன்னு செய்வது வழக்கமா போச்சே.. :)
என்னோட தோழியோட அண்ணிங்க ரெண்டு பேரு அடிக்கடி மீரா ஜாஸ்மின் ஞாபகம் வருது உன்னைப்பார்த்தான்னு சொன்னக்காரணம் இதா இருக்குமோன்னு தோணுது.. :)
:) தமிழ் சினிமாவுக்கு சினிமாவை பார்ப்பது தான் உதவின்னு நினைச்சு செய்துட்டுவரேன்.
:))))))))
ஆமா அமிர்தவர்ஷினி அம்மா..
உண்மையிலே யே இது உதவியாக்கும்.. பின்ன எவ்வளவு கஷ்டப்பட்டு சில படத்தை முழுசா பார்க்கிறோம் தெரியுமா? எப்படா முடியும்ன்னு இருக்கும்.. ஆரம்பம் பார்த்துட்டமே முடிவ பாக்காட்டி எப்படின்னு?
//தமிழ் சினிமாவுக்கு சினிமாவை பார்ப்பது தான் உதவின்னு நினைச்சு செய்துட்டுவரேன்.//
தியேட்டரில்!
சிவாஜி , தசாவதாரம் எல்லாம் திரையரங்கில் வந்தது பார்த்தேன்.. மற்றவை இங்கே வரவில்லை.. ஊருக்கு வரும்போது அது திரையரங்கில் ஓடும் அளவுக்கு சிறப்பாகவும் இல்லை என்ன பரிசலண்ணா செய்வது.. சிடிதானே ஒரே வழி. ஊரில் இருந்த வரை நாங்கள் நல்ல படம் என்று நினைப்பதை தியேட்டரில் போய் தான் பார்ப்போம். நானே சொன்னபடி அந்த காலத்தில் டெக் போட்டு திரைப்பட்ம் பார்க்கும் வசதி வந்த பின்பும் நாங்கள் திரையரங்கில் தானே ப்ளாக் அண்ட் ஒயிட் கூட பார்த்தோம்.. :)
இராம் நன்றி :)
எல்லாம் பெரிய ஆளுகப்பா.. கலக்கறீங்க...
முதல் கேள்விய படிச்சதும் எனக்கு என் பிளாஷ் பேக் நியாபகத்துக்கு வருது...மூனாவது படிக்கறப்போ நானும் கோவையில ஒரு பிரபல பிரிண்டிங்க் பிரஸ் முதலாளி பெண்ணும்..போனோம்...
ஆஹா..மூனாவது படிக்கறப்பவே தனியா சினிமாவுக்கு போனது நாங்களா தான் இருப்போம்.. படம் என்ன தெரியுமா...ஜக்கம்மா..
:-))))))
ஜக்கம்மாவாஆஆ... மூணாவது படிக்கும் போதேவாஆ... மங்கை ப்ளீஸ் நீங்களும் எழுதிடுங்களேன் பதிவு...
ராசாத்தி..பெரிய மனசு பண்ணி என்னை இழுக்காம இருந்ததுக்கு உனக்கு கோடி புண்ணியம்..:-)..
அது அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க..... ...
இங்கன இப்படி ஒரு ரீல் ஓடிட்டு இருக்கறது எனக்கு இப்பத்தான் தெரியும்....
ம்ம்ம்ம்...
என்னை யராச்சும் டேக்கிருக்காங்ளான்னு தெரியலையே...
இங்கன மங்கை..னு ஒரு அப்பாவி இருப்பாங்களே, யாராச்சும் எங்கனாச்சும் பார்த்தா கவி.முத்துலட்சுமி ப்ளாக்ல நான் பொலம்பிட்டுருக்கறதை சொல்லவும்...
ஹி..ஹி..ஏற்கனவே அவுக கூப்ட டேக்குக்கு டேக்கா குடுத்த பய நான்..
ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன்...இந்த சினிமா பதிவெழுத என்னைவிட தகுதியான ஆள் இங்க யாருமில்லையாக்கும்....ஹி..ஹி...
//எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும்//
ம்ம்.என் கட்சியா நீங்க..?
எல்லா கேள்விகளுக்கும் ரொம்ப யதார்தமாக பதில் சொல்லி இருக்கீங்க... சிலருக்கு மட்டுமே இப்படி முடியும்... . ::)) நல்லாயிருக்குப்பா..
ய்ட்சன் , மங்கை இங்கனதான் இருக்காக.. ஆனா உங்களுக்கெல்லாம் டேக் கொடுக்கக்கூடாதுன்னே பதிவு எழுத மாட்டேங்கறாங்க..பின்ன ஒரு மட்டு மரியாதை இல்லாம இன்னும் போஸ்ட் போடல இல்ல..
கவிதா... யதார்த்தமா எழுதி இருக்கேன்.. ஆனா எல்லாக்கேள்விக்கும் பதில் எழுதலயே...:)
நன்றி நன்றி..
Jeeves said...
சிம்பிளா அழகா எழுதி இருக்கீங்க....:)
முதலில் பார்த்த படம் எழுதியதுக்கு... ;))
//ஆனால் தியேட்டர் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களைப் பொறுத்தவரையில் அது மிகக்கொடுமையானதாக இருக்கும்//
உண்மைதான் அக்கா.. உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
அதென்னாது என் பேருக்கு முன்னாடி ஏதோ போட்டு வச்சிருக்கீங்க... உங்க பதிவ படிக்கற பெரிய மனுசங்க தேடி வந்து உதைக்காம இருந்தா சரி :)
வழக்கம் போல கலக்கிட்டிங்க :)
அக்கா உங்க ஆன்சர் ஷீட் ரொம்ப நல்லா இருக்கு... அழகா சொல்லிருக்கீங்க...!! :)))))))
ஜீவ்ஸ் நீங்க ரொம்ப பிசி ஒத்துக்கிற்றேன்.. அழகா கமெண்ட்டை காப்பி அடிச்சிட்டீங்க.. பரிட்சைன்னாலே எல்லாரும் ஒரு விதமாத்தான் ந்டந்துக்கறாங்க :)
சென்ஷி கவலைப்படவேண்டாம்.. இப்போல்லாம் பெரியமனுசங்க .. தானே பெரியமனுசன் பெரியமனுசன்னு சொல்லிட்டே இருக்காங்க.. தானாவே பட்டம் கொடுத்துக்கறது தானாவெ புகழ்ந்து பேசிக்கரதுன்னு.. இப்ப என்ன நீயாவா போட்டுக்கிட்ட நானே தானே குடுத்தேன் பட்டம்.. வச்சுக்கோ சும்மா...:)
நன்றி கோபி :)
-------------------
நன்றி ஸ்ரீமதி :)
ஹ்ஹா....ரொம்ப இயல்பா இருகுங்க உங்க சினிமானுபவம்!!
//தமிழ் சினிமாவுக்கு சினிமாவை பார்ப்பது தான் உதவின்னு நினைச்சு செய்துட்டுவரேன்.//
:-)))
//ஆயில்யன் சொன்னதுபோல கிசுகிசுக்கள் யாரைக்குறிப்பிடுகிறது என்று மண்டை உடைய யோசிப்பது வழக்கம்.//
;-)...உண்மைதான்!
அப்புறம், கருத்தம்மா பார்த்துட்டு நானும் பீல் பண்ணேன்!!
நல்லா எழுதியிருக்கீங்க. எனது சினிமா ஞானம் பெரும்பாலும் பத்திரிகை விமர்சனங்களைக் கொண்டே:)! உங்களை மாதிரி எப்போ டிவியில் வந்தாலும் ரசிக்கிற படம் என்றால் அது 'எதிர்நீச்சல்'. சின்ன வயதில் நான் பார்த்தப்பவே அது பழைய பட லிஸ்டில்தான்:).
Post a Comment