October 20, 2008

சும்மா சமாளிபிகேஷன் போஸ்ட்...

தோழி ஒருத்தங்க வீட்டில் புதுமனைபுகுவிழா. எங்கு திரும்பினாலும் கட்டிடங்கள் எழும்பி நிற்கும் ஒரு உலகம். எத்தனை விதம் விதமாக வந்தாலும் எல்லாவற்றிலும் குடியிருக்க ஆட்கள் வந்தவண்ணமே இருக்கிறார்கள். முடிவுறா சாலைகள். முடிவுறா கட்டிடங்கள். காற்று நுழைந்து செல்லும் போது ராஜ கோபுரத்தை நினைவுப்படுத்துகிற கட்டிடங்கள். ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் இடையில் முன்பெல்லாம் கொஞ்சமேனும் வெற்று நிலங்களும் , விவசாய நிலங்களும் பார்த்திருப்போம். இனி அப்படி பார்ப்பது சிரமம் என்று நினைக்கும் படி முடிவுறாமல் குடியிருப்புகள். ஹைவேக்களின் ஓரங்களெல்லாம் பளபளப்பான குடியிருப்பு வளாகங்கள்.


சிறிதே தாமதமாக வந்தவர்கள் , பூஜையில் தோழியும் அவள் மாமியாரும் அமர்ந்திருந்ததைப்பார்த்து , இது புதுவழக்கமா இருக்கிறதே. எங்கள் வீடுகளில் கணவனும் மனைவியும் தானே அமர்வது வழக்கம் என்றார்கள். வழக்கம்போல கணவன் மனைவி தான் பூஜை செய்தார்கள் . அதன்பின் தான் பூஜை செய்பவர் லக்ஷ்மி பூஜை ஒன்று செய்யவேண்டும் என்று சொல்லி பெண்களை அமர்த்தினார். இதில் இரண்டு பயன். லக்ஷ்மி வருகிறாள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
மாமியாருக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்ததாய் ஆகும்.



வெகுநேரமாக ஹோமப்புகை அதிகப்பட்டு தீ அணைந்துவிட்டது போலவெ ஆனதும் எல்லாருக்கும் உள்ளூரக்கவலை . அய்யா அது என்றதும் அவர் அதெல்லாம் கவலைப்படாதீங்க தானாவே அந்நேரம் சரியாகிடும் என்றார். இது என்ன நம்மைப்போலவே கவனிக்காமல் விட்டுவிட்டு சப்பை கட்டு கட்டுகிறாரோ என்று எனக்குத்தோன்றியது. ஆனால் அவர் சொல்லி வாய் மூடவில்லை சடாரென்று தீ நாக்கு ஒன்று புகைக்கு நடுவில் எழுந்தது. ( நான் எதாவது வேலையை பாதியில் விட்டுட்டு சமாளிபிகேஷன் செய்யும்போதெல்லாம் இப்படி எதும் நடக்க மாட்டேங்கிறதே)

------------------------------------------------------------
டெஸ்க்டாப் ல என்ன படமா? ஏம்ப்பா ஆயில்யன் இதெல்லாம் டேக்கா... நானெல்லாம் அடிக்கடி மாத்தறது இல்லை.. எப்பவோ கொஞ்ச நாள் முன்ன ஒரு சாமிப்படம் வைத்திருந்தேன். அப்பறம் இந்த புல்வெளியும் வானமும் வச்சது தான் மாத்தவே இல்லை.

நடுவில் ஒரு சொந்தக்காரப் பையன் வந்தான். சரி எதோ மெயில் பார்க்கனும் என்றதால் கொடுத்தேன். அப்பறம் ஊருக்கு கிளம்பிப் போனதும் கணினியைத் திறந்தால் .. எப்போதோ ஒரு நண்பர் அனுப்பிய படத்தை டைல் செய்து டெஸ்க் டாப்பில் வைத்துவிட்டு போயிருக்கிறார். இதெல்லாம் என்ன வேண்டாத வேலை என்று ஒரு பக்கம் கோபமாக வந்தது. படத்தை மாற்றும் முறையையே மறந்திருந்தேன் . மீண்டும் தேடி மாற்றி வைத்தேன். என் மொபைலில் தான் பெண்ணின் போட்டோ இருக்கும். பையனின் குரலில் அழைக்கும்.
யாரு இந்த டேக்கை தொடர விரும்புறீங்க ..?
எப்படியோ சமாளிச்சு ஒரு போஸ்ட் இன்றைக்கு போட்டுவிட்டேன்.

16 comments:

பரிசல்காரன் said...

டெஸ்க்டாப்ல என்ன படம்னு தொடர் விளையாட்டா.. என்னங்க நடக்குது இங்க?

இப்படியெல்லாம் கெளம்பீட்டாங்களா?

அச்சாடா.. பலே வெள்ளையத்தேவாஆஆஆஆஆ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க.. பலே சொல்லனும் ல..
பரிசல்.. :)

Thamiz Priyan said...

அக்கா உங்க டெஸ்க்டாப்பும் என் டெஸ்க்டாப்பும் ஒன்னு தான்.... ஸ்கீரின் சேவர், டெஸ்க்டாப் படமெல்லாம் மாத்தரதே இல்லை.

ஆயில்யன் said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..
///

வேற வழியே இல்லக்கா!

யோசிக்கறதுக்கு ஆயிரம் விசயமிருந்தா எல்லாத்திலேயும் நாலு பேரை புடிச்சு போட்டு எழுத சொல்லாம்ன்னுதான் தோணுது! :)) அதுவும் பிரச்சனைக்குரிய விசயங்கள் இல்லாமல் எழுதணும்ன்னா இப்படித்தான் :))))))

பொறுத்தருளவேண்டும்!

(அட அதான் நிறைய செய்திகளோட கலக்கிட்டீங்களே!)

நன்றியக்கா!

கானா பிரபா said...

உட்கார்ந்து யோசிப்பாங்களோ ;)

சென்ஷி said...

Good Samalips :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ்பிரியன் நாமள்ளாம் கணினி ஆரம்பிச்சதும் வேலையை( அட எனக்கும் சில வேலைகள் எல்லாம் இருக்குப்பா) பார்க்கறோம்.. டெஸ்க்டாப்பை பார்க்க நேரம் எங்கே?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆயில்யன் நன்றி.. இப்படி கூப்பிட்டதால் தான் இப்போதெல்லாம் பதிவே எழுதிட்டிருக்கேன்.. பிசியா இருக்கேன்னு நிரூபிக்கனும் இல்லையா அதான் புதுமனைபுகுவிழா பத்தியும் கொஞ்சம் எழுதிட்டேன்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கானா ..:)
-------------------
சென்ஷி ... :) நன்றி.

தமிழ் அமுதன் said...

என்ன சொல்லுறதுன்னு தெரியல

கோபிநாத் said...

;))

Unknown said...

:))

rapp said...

நானா இருந்தா வேற ஒரு இடத்துல ஒருத்தங்களை உக்கார வெச்சிருப்பேன்:):):)(திட்டறவங்க தாராளமா திட்டுங்க)

rapp said...

ஆஹா, இன்னும் இப்டி என்னல்லாம் யோசிச்சு வெச்சிருக்காங்க? நான் இனிமேல் யாராவது தொடரச்சொன்னா சிம்பு குழந்தை நட்சத்திரமாவும், டி.ஆர் ஹீரோவாவும் நடிச்ச ஏதாவது ஒரு படத்தோட வசனத்தை ஒப்பிச்சாத்தன் தொடருவேன்னு சொல்வேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....................:):):)

rapp said...

me the 15th:):):)

Unknown said...

அக்கா உங்க நெக்ஸ்ட் போஸ்ட் வாழ்வென்னும் பாதைல ஏன் அக்கா கமெண்ட் போட முடியல??? சரி நான் இங்கயே சொல்றேன்... நல்லா இருக்கு..!! :))