February 13, 2009

நாளெல்லாம் காதலர் தினமே...


நிச்சயமாகத் தெரியாத அன்பின் வடிவத்தை
கற்பனைக்கு கொண்டுவந்து
வளைத்து நெளித்து
உருவம் வரைந்து வைத்து..

உயிர் நிறமென்று மனதால் உருகி
ரத்த சிவப்பால் வண்ணம் தீட்டி

நீயேன்றும் நானென்றும்
வார்த்தைகளை வடித்து
முதல் சில வருடங்களைப்போல
அட்டையளிக்கவில்லை தான்.

புன்முறுவலும் புருவ நெறிப்பும்
விருப்பு வெறுப்பை
அளவிட்டு சொல்லிவிட
ஏதுவாகிவிட்ட நாட்களில்...
காதலின் பக்குவத்தை
கைப்பக்குவமாக்கி ,
சொற்கள் வடிவம்பெறுமுன்னே
செயல் வடிவமாக்கி
வானவில் வண்ணங்களை நாட்களுக்குத் தீட்டி
நானென்றும் நீயென்றும்
இல்லாமல்
நாமென்று வாழ்க்கை வடித்து

நாளெல்லாம் காதலர்தினமே! ....

(எல்லாருக்கும் வேலண்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்)

31 comments:

rapp said...

me the first:):):)

இராம்/Raam said...

Me the second.... :)

இயற்கை நேசி|Oruni said...

நாளெல்லாம் காதலர்தினமே!

athu...

rapp said...

//நிச்சயமாகத் தெரியாத அன்பின் வடிவத்தை
கற்பனைக்கு கொண்டுவந்து
வளைத்து நெளித்து
உருவம் வரைந்து வைத்து..

உயிர் நிறமென்று மனதால் உருகி
ரத்த சிவப்பால் வண்ணம் தீட்டி

நீயேன்றும் நானென்றும்
வார்த்தைகளை வடித்து
முதல் சில வருடங்களைப்போல
அட்டையளிக்கவில்லை தான்//

நான் கல்யாணத்துக்கு முன்னயே வாழ்த்தட்டை வாங்க யோசிப்பேன். அப்போ இருந்த பொருளாதாரத்தில், வாழ்த்தட்டஎல்லாம் விக்கிற விலைக்கு , நான் எழுதுற கவுஜைக்கு கால்வாசி பெறாத வரிகளுக்கே இம்புட்டு காசான்னு வாங்க மாட்டேன்:):):)

இப்போ, அதான் நிஜக் கவிதை நானே இருக்க, அதெல்லாம் எதுக்குன்னு சொல்லி வாங்கறதில்லை:):):)

இராம்/Raam said...

கவிஜ சூப்பரு... :) கவிஜாயினி ராப்'க்கா ரேஞ்சு'க்கு இல்லாட்டியும் நல்லாவே இருக்கு...... :)))

rapp said...

//புன்முறுவலும் புருவ நெறிப்பும்
விருப்பு வெறுப்பை
அளவிட்டு சொல்லிவிட
ஏதுவாகிவிட்ட நாட்களில்//

super super super

rapp said...

அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்கள் :):):)

ஆதவா said...

காதலர் தின வாழ்த்துக்களுங்க.... கவிதை நல்லா இருக்கு.....

சில வரிகள் சிலாகிக்கறமாதிரி...

அபி அப்பா said...

முத்துலெஷ்மி! கவிதை அருமை!

************

எனக்கும் இந்த வாழ்த்து அட்டைகளிள் விருப்பம் இல்லை,
அது போல கவிதை எழுத தெரியாத காரணத்தால்

"எனக்கு நீ கவிதை

உனக்கு நான் கவிதை

நமக்கு ரெண்டு கவிதை"ன்னு

சின்ன சைஸ் "கவிதை மாதிரி" சொல்லிகிடுவோம்!பஸ் அத்தனையே:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழும் கவிதை ராப்.. நீயே பர்ஸ்ட்.. :)
உனக்கும் விஞ்ஞானி சாருக்கும் வாழ்த்துக்கள்..

-----------------------
இராம் நீங்க தான் செகண்ட்..:)

ராப் ரேஞ்சுக்கு எழுதமுடியுமா அவங்க யாரு அவங்க தலைவர் யாரு.. ஹ்ம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இயற்கை நேசி... :) என்ன அவசரம் ஐடிய மாத்தாம வந்துட்டீங்களா..

--------------------------

ஆதவா வாழ்த்துக்களுக்கும் மறுமொழிக்கும் நன்றிங்க....:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா நம்பிக்கை இல்லைன்னு சொல்லலை .. அட்டையால் சொல்லவேண்டிய காலகட்டத்துல அட்டையாலும் சொன்னேன்னு கவிதையில் எழுதி இருக்கேனே...:)

உங்க கவிதை காலத்தால் அழியாத கவிதை.. அதுவும் உலகத்தார் எல்லாம் பயன்படுத்தும் கவிதை/

சென்ஷி said...

அக்கா.. சத்தியமா கவிதை கலக்கல்....

சென்ஷி said...

/நிச்சயமாகத் தெரியாத அன்பின் வடிவத்தை
கற்பனைக்கு கொண்டுவந்து
வளைத்து நெளித்து
உருவம் வரைந்து வைத்து..//

கலக்கல்...

சென்ஷி said...

//புன்முறுவலும் புருவ நெறிப்பும்
விருப்பு வெறுப்பை
அளவிட்டு சொல்லிவிட
ஏதுவாகிவிட்ட நாட்களில்...
காதலின் பக்குவத்தை
கைப்பக்குவமாக்கி ,
சொற்கள் வடிவம்பெறுமுன்னே
செயல் வடிவமாக்கி
வானவில் வண்ணங்களை நாட்களுக்குத் தீட்டி
நானென்றும் நீயென்றும்
இல்லாமல்
நாமென்று வாழ்க்கை வடித்து

நாளெல்லாம் காதலர்தினமே! ....//

முடிவும் சூப்பர்...

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் முத்துலெட்சுமி!

sury siva said...

//.காதலின் பக்குவத்தை
கைப்பக்குவமாக்கி //

ஒரு பிடி பார்வையுட‌ன்
இரு துளி நேச‌ம் சேர்த்து,

வ‌றுத்தெடுத்த பொன்னவல் மனமான (மணமான ) வான‌லியில்
ந‌றுக்கென உள்ள‌மிள‌காய் நாண‌த்துட‌ன் கூடி நிற்க‌,
..........
..........


( பூர்த்தி செய்து கொள்க‌. அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கேற்ப‌ )

காத‌லும் ப‌க்குவ‌ம்தான்.

சுப்புர‌த்தின‌ம்.

Vinitha said...

// நாளெல்லாம் காதலர்தினமே! //

nice.

கோபிநாத் said...

\\புன்முறுவலும் புருவ நெறிப்பும்
விருப்பு வெறுப்பை
அளவிட்டு சொல்லிவிட
ஏதுவாகிவிட்ட நாட்களில்...
காதலின் பக்குவத்தை
கைப்பக்குவமாக்கி ,
சொற்கள் வடிவம்பெறுமுன்னே
செயல் வடிவமாக்கி
வானவில் வண்ணங்களை நாட்களுக்குத் தீட்டி
நானென்றும் நீயென்றும்
இல்லாமல்
நாமென்று வாழ்க்கை வடித்து

நாளெல்லாம் காதலர்தினமே! ....\\


எதிர்பார்த்தேன்....நிஜமும் சுவைக்கும் ;))

Vijay said...

//இப்போ, அதான் நிஜக் கவிதை நானே இருக்க, அதெல்லாம் எதுக்குன்னு சொல்லி வாங்கறதில்லை:):):)//

ராப்பு... "நிஜக்"' வரைல செரிதான். அது என்னா ""கவிதை"" நம்ப லாங்வேஜ்ல அது ""கவுஜ"" தானெ?

சோ, அந்த கடசி வரில ஒரு கரீக்சனு....

இப்போ , அதான் நிஜக் கவுஜ நானே(ரங்கமணி தல எழுத்து அவ்ளோதான்) இருக்க, எதுக்கு பொய் கவிதை எல்லாம் அட்டைல பட்ச்சி ரங்கமணி மனச கஷ்ட படுத்துறது எதுக்குன்னு சொல்லி வாங்கறதில்லை :):):). இது எப்பிடி இருக்கு.??? ஹி....ஹி.....

Iyappan Krishnan said...

:) நல்ல கவிதை.

நாளெல்லாம் காதலர் தினமே!
உண்மைதான்


அன்புளார்க் கென்னாலும் நன்னாளாம் அன்பிலார்க்(கு)
என்று மில்லை யது!

ராமலக்ஷ்மி said...

//புன்முறுவலும் புருவ நெறிப்பும்
விருப்பு வெறுப்பை
அளவிட்டு சொல்லிவிட//

அதே அதே..:)!

//நானென்றும் நீயென்றும்
இல்லாமல்
நாமென்று வாழ்க்கை வடித்து

நாளெல்லாம் காதலர்தினமே! ....//

இதே இதே..:))!

Anonymous said...

கவிதை நல்லா இருக்கு அக்கா :-)
உங்களுக்கும் இனிய அன்பர் தின வாழ்த்துகள் :-)

Iyappan Krishnan said...

எப்பவோ எழுதினது... :)

பயந்து கிடக்கும் மனது
ஒளிந்து கிடக்கும் எண்ணம்
மலிந்து போன நேரம்....
காதல் என்பது எங்கே வாழுது
காதலும் வீரமும் தமிழரின் பண்பாம்
காதலைச் சொல்லவும் இன்று
வீரமற்றுப் போன நேரம்.....
காதல் என்பது எங்கே வாழுது..
காதல் என்பது ஒருநாள் கூத்தா
கடவுளைப் போலதும் ஓர் உணர்வு இல்லையா
ஒருநாள் என்று காதலுக்கு ஒதுக்கும் நேரம்
காதல் என்பது எங்கே வாழுது...
என்றும் காதல் என்பது இயல்பாய்
அனைத்து உயிர்களிடம் பாசம் வைத்து
சக மனித தோழமை விரும்பிடும் நேரம்...
காதல் என்பது அங்கே வாழுது...
இருபால் இயங்கிட மட்டும் இருப்பதோ காதல்
எப்பால் மீதிலும் காட்டுமன்பு காதல்
துடித்திடும் உயிர் கண்டு உள்ளம் துடித்திடும் நேரம்
காதல் என்பது அங்கே வாழுது....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி :)
நன்றி முல்லை :)
சூரி சார் நீங்க பாட்டெழுத கேக்கனுமா.. நல்லாவே இருக்கு.. :))

--------------
விஜய்.. கரெக்சனெல்லாம் நல்லா சொன்னீங்க..:)

--------------------

நன்றி வினிதா
நன்றி கோபி ... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜீவ்ஸ் உங்க கவிதையும் அருமை.. :)
--------------
ராமலக்ஷ்மி :) இரண்டு வார்த்தையானாலும் சந்தத்தோட பின்னூட்டம்..நன்றி..
--------------------
புனிதா நன்றிம்மா.. :)

☀நான் ஆதவன்☀ said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதவன் ..என்னாச்சுப்பா.. தலை சுத்துதா.. கவிதைன்னு லேபிள் பார்த்து :)

ஆதவா said...

வளைத்து நெளித்து அப்படீன்னவுடனே பாம்புதானோன்னு நினைச்சேன்!!! :)

கவிதை பிரமாதம்... கொஞ்சம் நிறுத்தி நிறுத்தி போயிருக்கலாம். என்னை மாதிரி உதாருங்களுக்கு கொஞ்சம் எளிமையா இருக்கும்..

நானென்றும் நீயென்றும்
இல்லாமல்


காதல் ஒற்றைச் சொல்லி ஆரம்பிக்கிறது, அதன் உள்ளடக்கத்தில் நாம் என்ற இருவர் கலந்து இருக்கிறார்கள்... நல்ல அனுப்வமிக்க கவிதை
காதலர் தின வாழ்த்துக்கள்.

மாதேவி said...

"நானென்றும் நீயென்றும்
இல்லாமல்
நாமென்று வாழ்க்கை வடித்து..."
அருமையான கவிதை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆதவா நீங்க உதாராங்க.. ? :)அடக்கமா சொல்லிக்கிறீங்களா..?

வாழ்த்துக்கு நன்றிகள்..
----------------------------
மாதேவி நன்றிங்க..:)