February 15, 2009

நேற்று இன்று நாளை

ரொம்ப வருசங்களுக்கு முன்பு சோல்ட்ஜர்ன்னு ஒரு டப்பா ஹிந்திப்படம் பார்த்திருக்கேன். அப்ப ஹிந்தி அவ்வளவா தெரியாது. (இப்பமட்டும்??) அதனால் அந்த படத்துல நடக்கரதெல்லாம் புரியாம முழிச்சிட்டிருந்தேன். ப்ரீத்தி ஜிந்தா வும் தர்மேந்த்ரா வோட சின்னப்பையனும் நடிச்ச அந்த படத்தை அப்படியே தமிழில் எடுத்திருக்காங்க விஜய்க்காக வில்லு.. விமர்சனம் படிக்கவே இல்லை. ( படிச்சு மட்டும் என்ன பாக்காம தப்பிக்கவா போகறோம்..) வேற ஊருக்கு கொண்டுபோய் அப்பாவை நயனதாரா காமிக்கும் போது தான் இது அந்த படம் மாதிரியே இருக்கேன்னு நினைச்சேன். அன்னைக்கு புரியாத காரணமெல்லாம் நேத்தைக்கு புரிஞ்சுடுச்சு.. தியேட்டர்லயே எடுத்த சிடிங்கறதால லைவ்வா தியேட்டர்ல மக்கள் அடிச்ச கமெண்டோட வே படம் பாத்தோம்.. டேய் அதேகோயிலுடா .. அங்க அந்த அம்மா உக்காந்திருக்கும் பாரேன்னு யாரோ சொல்றான்.. ஆகா என்ன ஒரு கணிப்பு...

படத்துல பெரிய பிள்ளையார் சிலைய வச்சிட்டு கடலில் போடற சீனெல்லாம் வருது.. ஆனா வில்லு ராமன்னு பாடறார்.. பிள்ளையார் கோச்சிக்கமாட்டாரா? அப்பறம் அந்த பிள்ளையார் பொம்மை மூலமா கடலுக்குள்ள போறாராம்.. ஏன்ப்பா கடல்ல இருந்து தீவிரவாதி உள்ள வந்தாலே யாரும் கண்டுக்கறதில்ல இவரு போறதயா கண்டுக்கப்போறாங்க சும்மா நல்ல பகல் பன்னிரண்டு மணிக்கு எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டே போகலாமில்ல.. உஸ் அப்பாடா ஒரு கொடுமை முடிஞ்சது..

இதுக்கெல்லாம் அசராம...

அடுத்து படிக்காதவன் . வில்லே தேவலாம்ன்னு ஆக்கிட்டாங்கப்பா.. படமா அது .. அய்யோ ஒரு காட்சி கூட நம்பறமாதிரியே இல்லை.. ரொம்ப நம்ப முடியாத ஒரு காட்சி ஒன்று வந்தது .. அதை மட்டும் அவங்களே கிண்டல் செய்துகிட்டு கனவுன்னு சொல்லிட்டாங்க.. படத்துல ஒரு சீன்ல படிச்ச முட்டாளு ன்னு ஒன்னு சொல்றாங்க அது ஹீரோயினைப்பார்த்து இல்லை.. படம் பார்த்தவங்களைப் பார்த்து தான்.

நான் கடவுள் பாட்டு தரவிறக்கம் செய்துகொண்டிருந்தேன்.சில பாட்டெல்லாம் ஏற்கனவே கேட்டமாதிரியே இருந்தது.. ஒரு வேளை படத்தில் பழயபாடலிருந்து லிங்க் எதுவும் வச்சி எடுத்திருப்பாங்கங்களா இருக்கும்.படம் பார்க்கலை.. இன்னும் இங்க ரிலீசும் ஆகலை..சிடியும் வரலை..இன்று ஒரு பேட்டி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது .பூஜாவுடன் அந்த பிச்சைக்காரப்பாத்திரத்தில் நடித்த அனைவரும் இருந்தனர். சிலர் பேசமுடியாமல் இருந்தனர். அப்படிப்பட்டவர்களை வைத்து எடுக்கவேண்டி இருந்ததால் தான் படம் 3 வருடமாகிவிட்டது . சிலர் அத்தனை கஷ்டபட்டது வேஸ்ட் என்று சொன்னதாக பதிவர் கோபிநாத் மூலம் அறிந்தேன். அப்ப எனக்குத் தோன்றிய தத்துவம் ....

ஒருத்தருக்கு பிடிக்காத உணவை 10 மணி நேரம் உக்காந்து சமைத்துத்தந்தாலும் அவங்களுக்கு சாப்பிடப்பிடிக்குமா..
அதுக்கு அவங்க பேசாம குருவி, படிக்காதவன், வில்லு மாதிரி ஃபாஸ்ட்புட் படம் பாத்துட்டு போயிட்டே இருப்பாங்கள்ள..

உஃப் இதான் நேற்று இன்று நாளை பார்த்த பார்க்கப்போகும் படங்களைப்பற்றிய பதிவு... தலைப்பு ஒத்துபோகுதா..?

33 comments:

Thekkikattan|தெகா said...

படத்துல ஒரு சீன்ல படிச்ச முட்டாளு ன்னு ஒன்னு சொல்றாங்க அது ஹீரோயினைப்பார்த்து இல்லை.. படம் பார்த்தவங்களைப் பார்த்து தான்.//

கும்மாங்குத்துங்க.... :))

"நான் கடவுள்" பற்றிய சிந்தனை அருமை... நறுக்கின்னு இருக்கு.

☀நான் ஆதவன்☀ said...

//ஏன்ப்பா கடல்ல இருந்து தீவிரவாதி உள்ள வந்தாலே யாரும் கண்டுக்கறதில்ல இவரு போறதயா கண்டுக்கப்போறாங்க சும்மா நல்ல பகல் பன்னிரண்டு மணிக்கு எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டே போகலாமில்ல..//

மேடம் சிரிச்சுகிட்டே இருக்கேன் :)))

☀நான் ஆதவன்☀ said...

//சிலர் அத்தனை கஷ்டபட்டது வேஸ்ட் என்று சொன்னதாக பதிவர் கோபிநாத் மூலம் அறிந்தேன்//

இவர் சொல்றத கேட்கிறதுக்கும் ஆள் இருக்காங்களா.....

அபி அப்பா said...

அட என்ன கொடுமை இது! அதுக்கு பேசாம நான் இப்ப பார்த்துகிட்டு இருக்கும் ''காதல் அழிவதில்லை" படம் கே டிவியிலே போட்டிருக்காங்க அதை பார்க்கலாம்!

ஆனா எனக்க்கு \\மசோகிஸ்ட்(pleasure in being abused or dominated : a taste for suffering )

அப்படீன்னு சொல்ரார்!

ஒரு வேளை உங்களுக்கு அப்படி எதுனா இருக்குமோ?

பார்த்துபா நாம நல்லா இருக்கனும்ன்னா இது போல தப்பெல்லாம் செய்ய கூடாது:-))

sury siva said...

// ஒருத்தருக்கு பிடிக்காத உணவை 10 மணி நேரம் உக்காந்து சமைத்துத்தந்தாலும் அவங்களுக்கு சாப்பிடப்பிடிக்குமா
//

சரிதான். ஆனாலும் ரொம்ப பேர் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போகிறார்கள் என்றால்,அல்லது ஒரு திருமண விருந்துக்குச் சென்று சாப்பிடும்பொழுது, அதில் தரப்படும் உணவுக்காக்த் தான் போகிறார்கள் என்று சொல்லிவிடமுடியாது. சாப்பிடுகின்ற இடம், கூட சாப்பிடுபவர்கள், அப்போது நடக்கின்ற நிகழ்ச்சி எல்லாமே உணவின் தரத்தை இரண்டாம்
இடத்திற்குத் தள்ளி விடுகின்றன அல்லவா ! சில சமயம் உணவு பரிமாறுபவரின் அன்பும் பரிவும் உணவின் சுவையை பின்னுக்குத் தள்ளி விடுகிறார் இல்லையா !

அது போலத்தான். விஜய்யை பார்க்கவேண்டும் என வருகிறவர்களுக்கு, கதை, பாட்டு, எல்லாம். அதுவும் நன்றாக இருந்தால் ஓஹோ !

சுப்பு ரத்தினம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா... அவங்க எங்களை குத்துனதவிடவா.. ? :)
---------------------
ஆதவன், இடுக்கண் வருங்கால் நகுக.. :)
கோபி பதிவுலதான் சொல்றதுல்ல..பின்னூட்டத்துலயும் சேட்லயும் எதயாச்சும் சொல்வாரு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா. பாதுகாப்பாத்தானே டெல்லியில் வந்து இருக்கேன்.. :)
-------------------------
சூரி சார் நீங்க சொல்லறதும் ரொம்ப சரிங்க.

ஆனாபாருங்க நா ன் கல்யாண சாப்பாடு , வீட்டு சாப்பாடு இதெல்லாம் விட முக்கியமா இந்த ஃபாஸ்ட்புட் ஐயிட்டம்ன்னா விரும்பி சாப்பிடுவேன்.. ஆனா அதே அதிகமா சாப்பிட்டா உடம்புக்காதாமே.. அதுமாதிரி இவங்க கில்லி எடுத்தப்ப ரசிச்சோமே.. அதையே திரும்ப திரும்ப எடுத்தா போரடிக்குதுல்ல அத சொல்றேன்.

pudugaithendral said...

:)

எம்.எம்.அப்துல்லா said...

//ஏன்ப்பா கடல்ல இருந்து தீவிரவாதி உள்ள வந்தாலே யாரும் கண்டுக்கறதில்ல இவரு போறதயா கண்டுக்கப்போறாங்க //

ஹா...ஹா...ஹா.... அக்கா உண்மையிலேயே வெகுநேரம் சிரித்தேன். ரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு :))

கோபிநாத் said...

;))

கோபிநாத் said...

நான் ஆதவன் said...
//சிலர் அத்தனை கஷ்டபட்டது வேஸ்ட் என்று சொன்னதாக பதிவர் கோபிநாத் மூலம் அறிந்தேன்//

இவர் சொல்றத கேட்கிறதுக்கும் ஆள் இருக்காங்களா.....


மிஸ்டர் நான் ஆதவன் சார் நீங்க சொல்றது புரியல கொஞ்சம் விளக்குறிங்களா!! ;))

அமிர்தவர்ஷினி அம்மா said...

//ஏன்ப்பா கடல்ல இருந்து தீவிரவாதி உள்ள வந்தாலே யாரும் கண்டுக்கறதில்ல இவரு போறதயா கண்டுக்கப்போறாங்க சும்மா நல்ல பகல் பன்னிரண்டு மணிக்கு எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டே போகலாமில்ல../

:)-

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுகைத்தென்றல், கோபிநாத் நன்றி :)
------------------------------
அப்துல்லா...பாருங்க நம்ம நிலைமை இப்படி சிரிக்கும்படியாகிடுச்சே..

--------------------------
அமிர்தவர்ஷினி அம்மா நன்றிங்க.. :)

கவிதா | Kavitha said...

எடுத்திருக்காங்க விஜய்க்காக வில்லு.. விமர்சனம் படிக்கவே இல்லை. ( படிச்சு மட்டும் என்ன பாக்காம தப்பிக்கவா போகறோம்..) //

எல்லாம் சொன்னீங்க...ஆனாலும் நீங்க ரொம்ப மோசம், குஷ்புவின் டான்ஸ் பத்தி ஒன்னுமே எழுதல பாருங்க..! :(

KarthigaVasudevan said...

:)

கவிதா | Kavitha said...

உஸ் அப்பாடா ஒரு கொடுமை முடிஞ்சது.. //

:)) அதனாலதான் நான் இந்த கொடுமை எல்லாம் பார்கறதே இல்லை.. அன்பே சிவம் என்ற அருமையான படத்தையே நான் இந்திய தொல்லைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக டிவி யில் போட்டபோது பார்த்த்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதா.. நாங்கல்லாம் எதயும் தாங்கும் இதயம் படைத்தவங்க..

குஷ்பு டேன்ஸுக்கு என்னப்பா..? இப்பவும் நட்புக்காக ஒரு டேன்ஸ் ன்னு கூப்பிட்டா வந்து நடிக்கிறாங்களேன்னு .. நினைச்சேன்.. அப்பறம் அப்பறம்..ம்.. அவங்க இந்த உடம்ப வச்சிக்கிட்டும் ஆடனும்ன்னு நினைக்கிறாங்களே.. எவ்வொளோ ஸ்போர்ட்டிவ்ன் ன்னு நினைச்சேன்.. அப்பறம் .. என்ன இருந்தாலும் நார்த் இண்டியா ஆளுங்கள்ளாம் ஆட்டத்தை எந்த வயசுலயும் ஸ்போர்டிவா எடுத்துக்கற ஆளுங்கன்னு நினைச்சேன். .. போதுமா இன்னும் வேணுமா.. :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டவுட் மூத்தபதிவராகிட்டீங்களா? :)

குசும்பன் said...

//ஏன்ப்பா கடல்ல இருந்து தீவிரவாதி உள்ள வந்தாலே யாரும் கண்டுக்கறதில்ல இவரு போறதயா கண்டுக்கப்போறாங்க சும்மா நல்ல பகல் பன்னிரண்டு மணிக்கு எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டே போகலாமில்ல//

செம நெக்கல் உங்களுக்கு, இருங்க இருங்க மும்பை போலீஸ் கிட்ட சொல்லி உங்க வீட்டுக்கு வர சொல்லுறேன்!

கவிதா | Kavitha said...

குஷ்பு டேன்ஸுக்கு என்னப்பா..? இப்பவும் நட்புக்காக ஒரு டேன்ஸ் ன்னு கூப்பிட்டா வந்து நடிக்கிறாங்களேன்னு .. நினைச்சேன்.. அப்பறம் அப்பறம்..ம்.. அவங்க இந்த உடம்ப வச்சிக்கிட்டும் ஆடனும்ன்னு நினைக்கிறாங்களே.. எவ்வொளோ ஸ்போர்ட்டிவ்ன் ன்னு நினைச்சேன்.. அப்பறம் .. என்ன இருந்தாலும் நார்த் இண்டியா ஆளுங்கள்ளாம் ஆட்டத்தை எந்த வயசுலயும் ஸ்போர்டிவா எடுத்துக்கற ஆளுங்கன்னு நினைச்சேன். .. போதுமா இன்னும் வேணுமா.. :))//

உங்க பாஸிடிவ் அப்ரோச் நினைச்சாவே ரொம்ப பெருமையா இருக்குப்பா...!! :)

sindhusubash said...

வில்லு படத்தோட ஏகனையும் சேர்த்துக்குங்க..அது ஷாருக் மற்றும் சுஷ்மிதா சென் நடிச்ச மே ஹு னாங்கற படம் தான்...கதைக்கு ரொம்ப பஞ்சம் போல இருக்கு.

”நான் கடவுள்” பார்க்கலாமா வேண்டாமானு ஒரே குழப்பமா இருக்கு!!!!!!.

நாகை சிவா said...

மும்பை சம்பவத்தை சோக்க சொல்லி இருக்கீங்க....

வில்லு பாத்தாச்சு! படம் ரிலீஸ் முதல் ஷோவே பாத்தாச்சு, அதனால் சேதாரம் அதிகம் இல்லை.

படிக்காதவன் பாக்கல(தப்பிச்சேன்) ரஜினி ஒன்னு பக்கா! அதை பாருங்க..

நான் கடவுள் கண்டிப்பா பாக்கனும், ஏன்னா நானும் கடவுள் ;)

பாலா படத்தில் கூர்ந்து கவனிக்க வைக்கும் பல விசயங்கள் இருக்கும் அதனால் அதை பார்க்கனும் (லைக் மணி படம்)

அது போகட்டும் இப்போ என்னோட வேலையை (மொக்கை படத்தை பார்த்து விமர்சனம்) நீங்க எடுத்துக்கிட்டீங்க போல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குசும்பன் நீங்க வரையற கார்டூனுக்கெல்லாம் வராத ஆளுங்க நான் எழுதின ஒரு வரிக்கா வரப்போறாங்க.. பயமுருத்தாதீங்க.. :)
---------------------------

கவிதா பார்த்துக்குங்க.. எத்தனை மனத்தெளிவை உண்டுபண்ணுது இந்த படங்கள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிந்து லேசான மனசுக்காரங்க பார்க்கவேணாம்ன்னு சொல்லி இருக்காங்க..உண்மை சில சமயம் பாடாய்படுத்துமில்லையா.. :)
-------------------------
நாகை சிவா.. உங்களளவுக்கு இல்லைன்னாலும்.. எதோ அப்பப்ப இப்படி ஹிண்ட் குடுக்கிறேன்..

rapp said...

me the 25th?

rapp said...

உங்களுக்கு வரவர பயமே விட்டுப்போச்சி. விஜய் படம் பாக்கற அளவுக்கு தில்லா:):):)

நான்கூட படிக்காதவன் கொஞ்சம் தேறும்னு நெனச்சேன், ஆனா விஜய் இடத்த பிடிச்சே தீருவேன்னு தனுஷ் கோதாவுல குதிச்சா, யாரு என்ன செய்ய முடியும்?

//
ஒருத்தருக்கு பிடிக்காத உணவை 10 மணி நேரம் உக்காந்து சமைத்துத்தந்தாலும் அவங்களுக்கு சாப்பிடப்பிடிக்குமா..
அதுக்கு அவங்க பேசாம குருவி, படிக்காதவன், வில்லு மாதிரி ஃபாஸ்ட்புட் படம் பாத்துட்டு போயிட்டே இருப்பாங்கள்ள//

சூப்பரு. அதோட இத ஏன் இவ்ளோ நாள் எடுத்தாங்கன்னு இந்தப் படத்துக்கு ஏன் கேக்குறாங்கன்னு தெர்ல. பாலா, எல்லார்கிட்டயும், இத இவ்ளோ நாள் எடுத்திருக்கேன், அதால ஓட்டிருங்கப்பான்னு கெஞ்சனாப்ல:(:(:(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீயே தான் 25 த்.. :) ராப்

நாமெல்லாம் ரிஸ்க் எடுக்க்றதுன்னா அல்வா சாப்பிடறமாதிரின்னு சொல்றவங்க இல்லையா. அதான் படம் பாத்துட்டோம்.. ;))

பாச மலர் / Paasa Malar said...

//ஒருத்தருக்கு பிடிக்காத உணவை 10 மணி நேரம் உக்காந்து சமைத்துத்தந்தாலும் அவங்களுக்கு சாப்பிடப்பிடிக்குமா..
அதுக்கு அவங்க பேசாம குருவி, படிக்காதவன், வில்லு மாதிரி ஃபாஸ்ட்புட் படம் பாத்துட்டு போயிட்டே இருப்பாங்கள்ள..//

அதுதானே நடக்குது..

SurveySan said...

//ஒருத்தருக்கு பிடிக்காத உணவை 10 மணி நேரம் உக்காந்து சமைத்துத்தந்தாலும் அவங்களுக்கு சாப்பிடப்பிடிக்குமா..
அதுக்கு அவங்க பேசாம குருவி, படிக்காதவன், வில்லு மாதிரி ஃபாஸ்ட்புட் படம் பாத்துட்டு போயிட்டே இருப்பாங்கள்ள.. //

ஸ்ஸ்ஸ். நா.க பாத்துட்டு சொல்லுங்க;)

SurveySan said...

பாக்கரதுக்கு முன்னாடி என் 'திரைப் பார்வை' படிக்காதீங்க ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாசமலர்.. இப்படியும் படம் வேணும் அப்படியும் படம் வேணும் ... மக்களுக்கும் பொழுதுபோகவேணாமா..;)
------------------------
சர்வேசன்.. சாரி நீங்க சொல்றதுக்கு முன்னாடியே உங்கபதிவை எட்டிப்பார்த்துட்டேன்.. ஓட்டு போடலை படம் பாக்கலன்னு.. பின்னூட்டமும் போடலை..படம் பாக்காம எப்படி கருத்து சொல்றதுன்னு :))

Thamiz Priyan said...

Good post..... :)

சின்னப் பையன் said...

////ஏன்ப்பா கடல்ல இருந்து தீவிரவாதி உள்ள வந்தாலே யாரும் கண்டுக்கறதில்ல இவரு போறதயா கண்டுக்கப்போறாங்க சும்மா நல்ல பகல் பன்னிரண்டு மணிக்கு எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டே போகலாமில்ல..////

:-)))))))))