March 12, 2009

நானே செய்த வெடிகுண்டு !!

நானே செய்த வெடிகுண்டு இது .. எப்படி வெடிக்குது பாருங்க.. எவ்வளவு புகை..ரொம்ப நாள் முன்னாள் செய்த அனிமேசனை பதிவாகப் போட்ட போது குசும்பன் வந்து வெடிகுண்டு செய்யுங்கன்னு சொல்லிட்டு போனப்ப ஆரம்பிச்சது.. பின்ன மறந்தே போனேன்.. அப்பறம் அனிமேசன் எப்படி செய்தேன்னே மறந்துடுச்ச. போன முறை குச்சிக்கால் மனுசனை எல்லாரும் கிண்டல் செய்ததால் ஸ்கெட்சப் ல ஒரு வெடிகுண்டு 3D யில் செய்து விட்டு அதை வைத்து மீண்டும் முதலிலிருந்து அனிமேசனை ஆரம்பித்தேன். ஆனால் ஒரு முறை வெடித்துவிட்டு அது மீண்டும் வெடித்துக்காமிக்கவே இல்லை..

நேற்று தான் லூப் என்ற ஒரு பகுதியை கிளிக்க விட்டுவிட்டீர்கள் என்று நான் ஆதவன் சொன்னபிறகு மீண்டும் செய்திருக்கிறேன்.. இதுவும் ஆரம்பக்கட்ட முயற்சி தான் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்காதீர்கள் ...

ஸ்கெட்ச் அப் ல் வெடிகுண்டு செய்ய முதல் முறையாக ஃபாலோமீ டூல் ஐ கத்துக்கிட்டு செய்தது இது.. ஃபாலோமீ டூல் பற்றி எனக்கு ஒரு பேராசை இருந்தது.. நான் முன்பு மல்டி மீடியா கோர்ஸ் படித்திருந்தேன்.. பரிட்சை வைக்காம ( சொல்லியே ஒழுங்கா குடுக்கல பரிட்சை வச்சிருந்தா) சர்டிபிகேட்டும் குடுக்காம எஸ்கேப் ஆகிட்டாங்க அந்த ஆளுங்க..
ஆனா புத்தகமெல்லாம் மட்டும் குடுத்திருந்தாங்க.. அப்பப்ப அதை மட்டும் ஆசையா பாத்துப்பேன்.. அதுல 3டி ஸ்டுடியோன்னு ஒரு புக்ல விதவிதமா ன படங்கள் செய்து காமிச்சிருப்பாங்க.. இப்பத்தான் முதல் முதலா அதை செய்துபார்க்க ஸ்கெட்ச் அப் கிடைச்சிருக்கு..
vedigundu

30 comments:

நட்புடன் ஜமால் said...

இப்படியா!


பயமுறுத்துவது!

நட்புடன் ஜமால் said...

நல்ல செய்திருக்கீங்க

கற்றுகொள்ளனும் இதனையும்.

ஆயில்யன் said...

பாஸ் செம டெரரா ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க :)))

ஆயில்யன் said...

//குசும்பன் வந்து வெடிகுண்டு செய்யுங்கன்னு சொல்லிட்டு போனப்ப ஆரம்பிச்சது///


அவ்வ்வ்வ்வ்வ் பயபுள்ள குண்டு செய்ய சொல்லி குண்டு போட்டு போயிருக்கா :))))

அபி அப்பா said...

அவன் கிடக்கான் குசும்பன்! பயம் காட்டிட்டியலே அம்மனி! தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேன்:-))

ஆயில்யன் said...

// அபி அப்பா said...

அவன் கிடக்கான் குசும்பன்! பயம் காட்டிட்டியலே அம்மனி! தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேன்:-))//

றீப்பிட்டேய்ய்ய்ய்ய் :)))

☀நான் ஆதவன்☀ said...

தலைப்பு பார்த்து எல்லோரும் மிரண்டு உள்ள வரபோறாங்க மேடம் :)

வெடிகுண்டு சூப்பரா இருக்கு..

அப்புறம், ஹாப்பி வீக் எண்ட் :)

Ungalranga said...

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்...
அவ்வ்வ்வ் :(((

நாகை சிவா said...

சீசனுக்கு தகுந்த மாதிரி வெடிச்சு இருக்கீங்க...

வெடிச்சா உங்க பெயர் வர மாதிரி டிரை பண்ணுங்க

வல்லிசிம்ஹன் said...

நம்ம கயலா இப்டீ எழுதுதுன்னு பார்க்க வந்தேன்:0

ஸ்மார்ட்பா நீங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பயந்ததற்கு நன்றி ஜமால்
லேபிள் தான் அனிமேசன் என்று தமிழ்மணத்துல பெரிசா வருமே யாரு பயப்படப்போறான்னு நினைச்சேன்..
---------------------

ஆயில்யன் .. பாஸுன்னாலே டெரர் தானே.. :)
---------------------
அபிஅப்பா நீங்க பதிவைப்படிப்பதே அதிசயம் லேபிளும் படிக்கறதில்லயா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நான் ஆதவன்..மிரட்டத் தானே அந்த தலைப்பே..
-----------------------
நன்றி ரங்கன் :)
-----------------------------

நாகை சிவா.. வெடிச்சா என்பேரு ..நல்லாஇருக்கே.. நீங்க உலகப்பெரிய பிசினஸ் மேக்னட்டா என்னை ஆக்கினமாதிரி நாமே பேரு போட்டுக்கிட்டாத்தானே உண்டு :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி வாங்க.. நல்லவேளை மைசூர்பாக் மாதிரி எதும் வெடிகுண்டு செய்திருப்பாங்கன்னு நினைச்சிடலயே :)

சந்தனமுல்லை said...

பத்த வச்சீட்டீங்களே மேடம்..;-)

பாச மலர் / Paasa Malar said...

நல்லாருக்கு முத்துலட்சுமி...இன்னும் நிறைய முயற்சிகள் செய்ய வாழ்த்துகள்..

கோபிநாத் said...

ரைட்டு...நல்ல வெடிக்குது ;))

குசும்பன் said...

ஆங் இப்படிதான் வெடிகுண்டு செய்ய சொன்னது யாருன்னு கேட்டா, கரெக்டா குசும்பன் என்று சொல்லதும்:)))

ரொம்ப நல்லது:)

நல்லா வெடிக்குது!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை வெடிகுண்டை செய்தா அதை ட்ரையல் பாக்கவேனாமா..:)
-------------------------
நன்றி பாசமலர்..
நன்றி கோபி :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ... குசும்பன் அடிக்கடி இப்படி ஐடியா குடுங்க.. உங்க பேரை சொல்லி தப்பிச்சிக்கிறேன்..

sindhusubash said...

ஐய்ஐய்யோ!!!!! இது வரைக்கும் டெல்லி பார்த்தது இல்லை இனிமே அந்த பக்கமே வரமாட்டேன்.

அழகா இருக்கு...பயமாவும் இருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிந்து பயப்படாதீங்க.. வல்லரசுன்னா அப்படி இப்படி சோதனை செய்வோம் தான் .. ஆனா உங்களை ஒன்னும் செய்யமாட்டோம்..

Arasi Raj said...

கலக்கி போடுங்க
ரொம்ப நல்லா இருக்கு

அப்டியே குருவி வெடி, லட்சுமி வெடி எல்லாம் செஞ்சா தீபாவளிக்கு செலவு மிச்சமாகும்ல.....என்ன நான் சொல்றது?

Thamiz Priyan said...

ஓ.. இந்த வெடி குண்டை செய்யத்தான் ரொம்ப நாளா தலைமறைவா இருந்தீங்களா?... முதல் குண்டு என்பதால் வாழ்த்துக்கள்! இனி ஆட்டிலெறி, பீரங்கி குண்டு இப்படியெல்லாம் செய்ங்க.. நிறைய தேவைப்படுது.. ;-)

நசரேயன் said...

நான் பயந்துகிட்டே தான் வந்தேன்.. நல்ல வேளை வெடிக்கலை

"உழவன்" "Uzhavan" said...

அம்மணி.. இது என்ன சினிமா வெடிகுண்டு தானே?? அதாங்க.. வெடிச்ச உடனே, ட்ரெஸ் மட்டும் கிழிஞ்சி போகும்; குறிப்பா பின் பக்கம் மட்டும். உடம்பெல்லாம் புகை படிஞ்சி கருப்பா இருக்கும்.. குறிப்பா வாய தொறந்த உடனே புகை வரும் :-)

காட்டாறு said...

என்னவோன்னு ஓடி வந்தேன். புசுவானமா ஆக்கிட்டீங்களே. ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிலாவும் அம்மாவும்.. செம கஞ்சமா இருப்பீங்க போலயே.. :)
----------
தமிழ்பிரியன் உண்மைதான் தலைமறைவாத்தான் இருந்தேன்..
அடுத்து என்ன அனிமேசன்னு ஐடியா தேவை.. ஆனா வன்முறை கைவிடப்படுகிறது..
-----------------------------
என்ன நசரேயன்.. இப்படி வெடிக்குது வெடிக்கலைங்கறீங்க.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உழவன் வாங்க.. ஆமாங்க அதே மாதிரி வெடிகுண்டு தான். இல்லாட்டி காமிக்ஸ்ல வருமே.. அந்த மாதிரி பொய் வெடிகுண்டு தான்.. :)
--------------------------
காட்டாறு .. வாங்க அதிசயம்ப்பா..

அது சரி என்ன வெடிகுண்டு சத்தமே வரலியேன்னு புஸ்வானமாக்கிட்டீங்களா.. :)

ராமலக்ஷ்மி said...

முயற்சி திருவினையாகி வெடித்த
முதல் குண்டு டாப்பு முத்துலெட்சுமி:))!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்ஷ்மி... :)