முருகா முருகான்னு நானும் நாலு நாளா முருகன் கோயிலுக்கு போயிட்டுவந்ததை எழுத நினைச்சு க்ரியேட்டை க்ளிக் செய்துவிட்டு ஒரு புள்ளி கூட வைக்கமுடியாமல் வெளியேறிவிட்டேன். இன்னைக்கு இந்த முருகா முருகா பதிவைப் படிச்சு ,அய்யோ என்னால சிரிப்பை அடக்கவே முடியலை.
ஆனா இதே மாதிரி நானும் பல விசயத்தை செய்து பாத்துட்டேன் . என்ன முருகாவுக்கு பதிலா .வேண்ணா தாயே பராசக்தி சொல்லுவேன்.
ஆனா அடி ஒன்னைத்தவிர இதுங்க எதுக்கும் பயப்படறதா தெரியலயே.. சொல்ற பேச்சை கேளேண்டாவை . நான் ரிங்க் டோன் ஏறுமுகமா அலர்ரமாதிரி படிப்படியாக சத்தம் உயர்த்தி சொல்ல ஆரம்பிச்சேன்..இப்ப அவன் சிம்பு தனுஷ் மாதிரி “ சொல்ற பேச்சை கேளேம்ம்மா””ங்கறான்.
ஆனா இப்ப படிச்ச ஒருபுத்தகத்தில், நீங்க அடிக்கடி குழந்தைகளிடம் நேராகவே “சொல்ற பேச்சை நீ என்னைக்குத்தான் கேட்டிருக்க”ன்னு எதிர்மறையா சொல்லாதீங்கன்னு சொல்றாங்க.. இப்போது எனக்கு தேர்வு அதுல தான் . எதிர்மறை வார்த்தை என்ன யூஸ் செய்யறேன்னு யோசிச்சு பார்த்து சரி செய்கிறேன். நான் எதயாவது சரி செய்து வழி கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவன் பெரியவனாகவே ஆகிவிடுவானோ?
முந்தாநாள் தான் பசங்க படம் பார்த்தேன். அந்த காலத்துப் படம் மாதிரி நல்லா இருந்தது. அழகா நெகிழ்வா. வாத்தியார், ஹீரோ அப்பான்னு ஒவ்வொரு கேரக்டரும் அழகா நடிச்சாங்க..குட்டிப்பையன் அடிக்கிறதை ..அடிவாங்கினவர் பொண்டாட்டியே வாய் பொத்தி சிரிச்சி ஹய்யோ படம் ஒரு கவிதைங்க..
வாத்தியார் பேசற சீனிலிருந்தே கண் கலங்கிடுச்சு. ஆமா அறிவுரை எளிது. கேட்கும் போது கூட நல்லாதான் இருக்கிறது. நடைமுறையில்.. ஹ்ம். வெகுநாட்களுக்குப் பிறகு குழந்தைகளோடு சேர்ந்து பார்க்க ஒரு அழகான படமா இருந்தது. அதை ஊரிலேயே தியேட்டரில் பார்க்கவிட்டுப்போனது ஒரு வருத்தம்.
16 comments:
:-)
வெல்கம் பேக் முத்துக்கா!
மிச்ச பின்னூட்டங்கள் நாளைக்குத்தான்.
//சென்ஷி said...
:-)
வெல்கம் பேக் முத்துக்கா!
மிச்ச பின்னூட்டங்கள் நாளைக்குத்தான்.
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்! :)
//ஆனா அடி ஒன்னைத்தவிர இதுங்க எதுக்கும் பயப்படறதா தெரியலயே.///
நாம எப்படி இருந்தோமோ அப்படித்தான் நமக்கு பின்னே வர்ற ......! :)))
/அடிவாங்கினவர் பொண்டாட்டியே வாய் பொத்தி சிரிச்சி ஹய்யோ படம் ஒரு கவிதைங்க.//
எச்சாட்டிலி கரீக்ட் அக்கா ரொம்ப சிம்பிளா எடுத்திருந்தாலும் அதுல ஒரு அழகு! :)
//ஆமா அறிவுரை எளிது. கேட்கும் போது கூட நல்லாதான் இருக்கிறது. நடைமுறையில்.. ஹ்ம். //
உண்மையிலும் உண்மை. ஆனால் கொஞ்சம் வயதானப்பறம் (25க்கு மேல்) அறிவுரைகள் நல்லதுக்குதான்னு தெரியவரும் ஆனால் பயனில்லாமல் போகிவிடுகிறது. அது திருடியபிறகு திருந்தியதுபோல் ஆகிவிடுகிறது.
நன்றி சென்ஷி ..
-------------------
நன்றி ஆயில்யன்..
:) சரிதான் 30 வருசம் காத்திருந்து பழிவாங்கப்படுறதுங்கறது இது தானா..
---------------------
பாலாஜி .. பரவாயில்லங்க அந்த அந்த வயசுக்கு செய்யற தப்புக்கு அப்பப்ப கிடைக்கிற அட்வைசையும் கேட்டு வச்சிக்க வேண்டியதுதான்.. வாத்தியார் க்ளாஸ் பையன் சொன்னதை கேட்டு கைத்தட்டி சர்ட்டிபிகேட் குடுத்தாரில்லையா.
:-)
வெல்கம் பேக் முத்துக்கா!
மிச்ச பின்னூட்டங்கள் நாளைக்குத்தான்.
7/04/2009 7:22 PM
Blogger ஆயில்யன் said...
//சென்ஷி said...
:-)
வெல்கம் பேக் முத்துக்கா!
மிச்ச பின்னூட்டங்கள் நாளைக்குத்தான்.
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்! :)//
றிப்பீஈஇட்டேஏஏஏ
வாங்க..வாங்க மேடம்.
நானும் அந்த படத்தை ஊர்ல பாக்காம வந்துட்டேன். அப்புறம் இங்க வந்து தான் பார்த்தேன்.
//முருகா முருகா பதிவைப் படிச்சு ,//
சுட்டியில் சென்று பார்த்தேன், நல்ல டெக்னிக் போங்க, நம்மைக் கோமாளி ஆக்க..:))!
வெல்கம் பேக் முத்துக்கா!
நானும் சொல்லிக்கறேன்.
இப்பவே கண்டு பிடிச்சுட்டதா நினைச்சுடாதீங்கப்பா:)
இன்னும் வளர வளரப் புதிசாக் கத்துக் கொடுப்பாங்க நாம் பெற்ற செல்வங்கள்..
எங்கம்மா, ஆதிபராசக்தியை ஏன் அழைக்கிறீர்கள் என்று ஓடிவந்தால்...
நல்லாருக்கு.
நன்றி கானா, நன்றி நான் ஆதவன்.
---------------
ஆமா ராமலக்ஷ்மி .. இவங்க நம்மளை கோமாளி ஆக்கிட்டுத்தான் மறுவேலைபாப்பாங்கபோல..
--------------------
நன்றி சின்ன அம்மிணி.
-----------------------
வல்லி ஏன் ஏன் இப்படி பயமுறுத்துறீங்க..
:))
--------------
நானானி உங்கம்மா பராசக்தி தானே காப்பாத்தனும்.:)
ரைட்டு...அக்கா வந்துட்டாங்க ;))
வந்தாச்சா, வந்து பசங்க படமும் பார்த்தாச்சா? நல்லது!
""""அது திருடியபிறகு திருந்தியதுபோல் ஆகிவிடுகிறது.""" இத எடுத்துப் போட்டதிற்கு மன்னிக்க - இருந்தாலும், ஒரு விசயத்தை நாம புரிஞ்சுக்கணுங்கிறதாலே சொல்றேன்... அந்த வளர்ச்சி நிலையில நமக்கு அது தேவைப்படுறதுனாலேதான் என்னதான் காதால கேட்க நேர்ந்தாலும் சரி, எம்பூட்டு படிச்சாலும் சரி, நாமா உணர்ந்துகிறதிலதான் முழுமை கிடைக்கும். அது கிடைக்கிற வரைக்கும் எதார்த்ததில புரியறதுமில்ல, நாமும் அதன் மொத்த வீச்சமும் புரிஞ்சிக்கிற வரைக்கும் விடவுமாட்டோம், இல்லையா?
நன்றி கோபி:)
---------------------
ஆமா இப்ப படிச்சிட்டிருக்கற புத்தகம்ன்னு கேட்டப்ப வ.உசி புத்தகத்தை என் அடுத்த பதிவில் குறிப்பிட்டிருக்கேன் தெகா..
அதுல என்ன புதுசான்னு கேட்டா ஒன்னும் இல்ல .. வாழ்க்கையோட பல பக்கங்களில் அமைதிக்கு என்ன வழின்னு. அதை எத்தனை முறை எத்தனை மொழியில் படிச்சாலும்.. என்னைக்காச்சும் உரைக்காதான்னு தான்..
Post a Comment