July 7, 2009

இசையின் அலைகள்

இரவு கவிழ்ந்த நேரத்தில் நிலவு கசியும் ஒளியில் கடலலையில் கால் நனைத்திருக்கிறீகளா? கரைக்கும் நிலவுக்கும் நடுவில் ஒரு வெள்ளை ஒளிப்பாதை ..
இரவின் அமைதியில் அதுபோல ஒரு ஒலிப்பாதை எங்கோ கொண்டு செல்கிறது.

பொள்ளாச்சியில் இரண்டு வாரங்கள். இரவெல்லாம் இசையலையில் கால்நனைத்தபடி கழிந்தது. ஒருவேளை தூங்கிவிட்டால் என்பதற்காக எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் வைத்தபடி பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
“ அம்மா எதற்கு ரேடியோ கேட்க உனக்கு பிடிக்கிறது . உன்னிடம் தான் சிடிக்கள் இருக்கிறதே!..”

” ரேடியோவில் தானே அடுத்தப்பாடல் என்னவரும் என்பது ஒரு சர்ப்ரைஸ் . அடுத்தடுத்த ஆச்சரிய அலைகளில் தொடர்ந்து நனைந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இதுவும்... ஓ இந்தப்பாடல் .. அடுத்த அலை பெரிசா வருது .. அந்தா பாருன்னு எப்படி கடல் அலுக்கவே அலுக்காதோ அது மாதிரி இல்லையா”
மகள் சரிதான் என்று தலையசைத்தபடி தூங்கிவிட்டாள்.

காலையிலிருந்தே அந்த எஃப் எம் இந்த எஃப் எம் என்று மாற்றிக்கேட்டுக்கொண்டிருந்தாலும் காலை நேரத்தில் இந்த ரேடியோ ஜாக்கிகளின் தொல்லையும் ..அவர்களுக்குத் தொல்லை பேசுபவர்களின் தொல்லையும் தான். ஊரில் சரிபாதி ஜாக்கிகளாகவும் சரிபாதி தொலைபேசுபவர்களாகவும் இருப்பார்களோ ?

ஒரு நாள் கோவையில் சிறுவாணியில் தண்ணீர் குறைகிறது என்ற செய்தித்தாள் செய்தியை வைத்துக்கொண்டு .. மழை என்று வருகிற பாடல்கள் எல்லாம் தொடர்ந்து தொகுத்தளித்தார்கள்..அன்று இசைமழையே பெய்தது. அவர்களின் இசையாகம் அன்றைக்கு இரவே எல்லாப்பக்கமும் மழை தான். சிலர் தொலைபேசி பிடித்தமழைப்பாடல்களை சொன்னார்கள். எங்கள் ஊரில் மேகம் திரள்கிறது என்றோ சிறுதுளிகள் பெய்தது என்றோ சொன்னால் .. எல்லாரும் மகிழ்ந்தார்கள்.

சிலர் வணக்கம் சொல்லும் முன்னமே ஒரு கவிதை(கவுஜ) சொல்லிவிட்டுத்தான் தன் பெயரையே சொல்கிறார்கள். அய்யோ பாவம் ஆர்ஜே.. இரவுகளில் கொஞ்சம் இந்த தொல்லை குறைவு . இட்ஸ் ஹாட் மச்சி ரேடியோ மிர்சி இரவில் நல்ல பாடல்கள் தந்தார்கள். இன்றைய மெலடிகள் தவிர்த்து மிட் டைம் மெலடிகள் போட்டது எனக்கு மிகவும் பிடித்தது. சில நேரம் மாற்றி கோவை வானொலியும் ரசித்தேன். இங்கே அந்த கடலலையின் சிறுதுளிகள்..



ரசிக்கத்தெரியுமே தவிர இது இன்னார் எழுதியது இன்னார் இசை என்று வகைப்பிரித்துச் சொல்லத்தெரியாது. பாடியவர்களை மட்டும் பிரித்து அறியமுடியும்.சில பாடல்கள் ரசிக்கும்போது அதன் வார்த்தைகள் மறைந்து வெறும் பி.ஜி. எம் மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கும்..மயக்கும். சில பாடல்களுக்கு யார் நடித்தார்கள் , காட்சி என்ன என்பதெல்லாம் நினைவுக்கு வராமல் இருப்பதே மகிழ்ச்சி. டிவியில் சிலபாடல்களைப் பார்க்க நேரும் போது தான் தெரியும் அய்யோ எத்தனை அழகான பாடல் .. என்ன கொடுமையான காட்சி அமைப்பு , நடனம். ..

30 comments:

க.பாலாசி said...

நானே முதல்...

rapp said...

உங்களுக்கும் ஆர்ஜே புடிக்காதா? எனக்கும் ரெண்டு பாட்டை போட்டுட்டு உயிரெடுக்குற ஆளுங்கள காலேஜ் போறப்போ புடிக்காது. ஆனா, இப்போ நெட்ல இவங்களக் கேக்க முடியாமப் போனப்புறம்தான், எனக்கு நம்மூரை விட்டு டச் விட்டுப்போனாப்டி இருக்கு. ஆயிரம் பேசி பிளேடு போட்டாலும், ஒரு மாதிரி என்னை சென்னையோட லிங்க்ல வெச்சிருந்தாப்டி ஒரு பீல். அப்டியே, நம்மூர் எப்எம் ஏதாச்சும் நெட்ல வருதுன்னா, யாரச்சும் லிங்க் கொடுங்கன்னும் வேண்டுகோள் வெச்சிக்கிறேன்.

rapp said...

//ரேடியோவில் தானே அடுத்தப்பாடல் என்னவரும் என்பது ஒரு சர்ப்ரைஸ் . //

ரொம்ப சரி.

ஆனா, என் வாய்லருந்தும் நெக்ஸ்ட் வாட் பயங்கரம் கெளம்பும்னு சொல்ல முடியாது. நான் பாட ஆரம்பிச்சா, திகிலோட பாத்துக்கிட்டிருக்க, மக்களைக் கேளுங்க அந்த உண்மைய வெளக்குவாங்க.

க.பாலாசி said...

//சிலபாடல்களைப் பார்க்க நேரும் போது தான் தெரியும் அய்யோ எத்தனை அழகான பாடல் .. என்ன கொடுமையான காட்சி அமைப்பு , நடனம். ..//

சரிதான். பல நல்லபாடல்கள் இப்படிப்பட்ட விகாரங்களால் வீணாப்போகின்றன.

அதுபோன்ற நேரங்களில் குயிலின் குரலை மட்டும் ரசிப்பதுபோன்று ருசிக்கவேண்டும்.

கோபிநாத் said...

\\ரசிக்கத்தெரியுமே தவிர இது இன்னார் எழுதியது இன்னார் இசை என்று வகைப்பிரித்துச் சொல்லத்தெரியாது. \\

ஒஒ...எனக்கு இந்த விபரம் எல்லாம் தெரிஞ்ச தான் முழு திருப்தியே வரும்.

சந்தனமுல்லை said...

//ஆயிரம் பேசி பிளேடு போட்டாலும், ஒரு மாதிரி என்னை சென்னையோட லிங்க்ல வெச்சிருந்தாப்டி ஒரு பீல். அப்டியே, நம்மூர் எப்எம் ஏதாச்சும் நெட்ல வருதுன்னா, யாரச்சும் லிங்க் கொடுங்கன்னும் வேண்டுகோள் வெச்சிக்கிறேன்.//

:-) ரசித்தேன் ராப்!ஆயில்ஸ்கிட்டே ஸ்டாக் இருக்கும்னு நினைக்கிறேன்!

☀நான் ஆதவன்☀ said...

ரேடியோவில் பாட்டை இரசிப்பதற்கு கொடுத்த விளக்கம் சூப்பர் :)

SUFFIX said...

நீங்க சொன்னது மிக்க சரி, ரேடியோவில் பாட்டு கேட்பது ஒரு அலாதி இன்பந்தான். இனி வரும் காலங்களில் பயனக்கட்டுரையாத்தான் இருக்குமோ? ரேடியோவில் பாட்டு கேட்டதுக்கு ஒரு பதிவு, அடுத்தது மாடியிலிருந்து படி இறங்கிய அனுபவம்னு ஒரு பதிவு போட்டாலும் ஆச்சர்யம் இல்லை...ஹீ..ஹீ!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாலாஜி என்ன இப்படி சொல்லிட்டீங்க குயில் அழகாவும் இருக்குமே.. :)
-------------------
ராப் அப்ப அடுத்தமுறை நீ ஆன்லைனில் வந்தா பாடிக்காமிச்சிரு.. :)
--------------------
கோபி நீங்கள்ளாம் தீவிர ரசிகர்கள்..நாங்கள் மிதவாதி ரசிர்கள்கள்..
----------------------------
முல்லை சரியாச் சொன்னீங்க.. ஆயில்யன் கிட்ட லிங்க் களை வாங்கிக்கலாம்.. :)
------------------------------
நன்றி ஆதவன்.
----------------------------
ஷஃபி ... படியில் இறங்கும் போதா . .. இருங்க யோசிக்கிறேன்.. எதாச்சும் நினைவுக்கு வந்தா தேத்திடறேன் ஒரு பதிவு.. :)

விக்னேஷ்வரி said...

ரேடியோவில் தானே அடுத்தப்பாடல் என்னவரும் என்பது ஒரு சர்ப்ரைஸ் . அடுத்தடுத்த ஆச்சரிய அலைகளில் தொடர்ந்து நனைந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இதுவும்... ஓ இந்தப்பாடல் .. அடுத்த அலை பெரிசா வருது .. அந்தா பாருன்னு எப்படி கடல் அலுக்கவே அலுக்காதோ அது மாதிரி இல்லையா //

ஆமா அப்படித்தான். சிறு வயதில் பள்ளி செல்லும் நாட்களில் ரேடியோ கேட்டதோடு சரி. இப்போதெல்லாம் நீங்கள் சொல்வது போன்ற ஜாக்கிகளின் தொல்லையால் கேட்கப் பிடிக்கவில்லை.

அழகான பதிவு. உங்களுடன் சேர்ந்து நானும் ரசித்தேன்.

கானா பிரபா said...

எனக்கு வானொலி மேல் கொள்ளைப் பிரியம் வரவைத்தது சென்னை வானொலி நிலையமும் விவித் பாரதியும், அதெல்லாம் ஒருகாலம், அந்தப் பாதிப்பில் பாணியில் தான் பாடல்களை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை செய்கின்றேன்.

இப்போதெல்லாம் எப் எம் வானொலிகளில் கழுத்தறுக்கும் இரைச்சலுடன் வரும் வேக வேகமான அறிவிப்புப் பாணி எல்லாம் என்னை ரசிக்க வைப்பதில்லை.

ராமலக்ஷ்மி said...

//ரேடியோவில் தானே அடுத்தப்பாடல் என்னவரும் என்பது ஒரு சர்ப்ரைஸ் . அடுத்தடுத்த ஆச்சரிய அலைகளில் தொடர்ந்து நனைந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இதுவும்... ஓ இந்தப்பாடல் .. அடுத்த அலை பெரிசா வருது .. அந்தா பாருன்னு எப்படி கடல் அலுக்கவே அலுக்காதோ அது மாதிரி இல்லையா//

எல்லோருக்கும் பிடித்த இதே வரிகளுடன் நானும் ஒத்துப் போகிறேன்:)!

வொர்ல்ட் ஸ்பேஸில் கேஎல் ரேடியோவின் ‘இரவின் மடியில்’ தினம் நான் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சி.

SUMAZLA/சுமஜ்லா said...

//இரவு கவிழ்ந்த நேரத்தில் நிலவு கசியும் ஒளியில் கடலலையில் கால் நனைத்திருக்கிறீகளா? கரைக்கும் நிலவுக்கும் நடுவில் ஒரு வெள்ளை ஒளிப்பாதை ..
இரவின் அமைதியில் அதுபோல ஒரு ஒலிப்பாதை எங்கோ கொண்டு செல்கிறது.//

நீங்கள் பாட்டை ரசித்தீர்களோ இல்லையோ, நான் இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி விக்னேஷ்வரி.. :)
-------------------
ஆமா கானா பிரபா அவங்க வேகம் பயம்மா இருந்தாலும் .. சரி எபப்டியோ சீக்கிரம் பேசி தொலைச்சிட்டுப் பாட்டை போடுங்கய்யான்னு வெயிட் செய்து தான் கேட்டேன்..
----------------------------
ராமலக்‌ஷ்மி அதான் யோசிச்சிட்டிருக்கேன் இப்ப.. :)
-----------------------------
சுமஜ்லா நீங்க ரசிச்சேன்னு சொன்னப்பறம் தான் கவனிச்சேன்..இரவு கவிழ்ந்த வா இருள் கவிழ்ந்தல்ல வரனும்ன்னு :) உங்க ரசிப்புக்கு நன்றி..நன்றி..

சென்ஷி said...

:)

Thekkikattan|தெகா said...

இப்படி எதுனாச்சும் ஒரு கருவை வைச்சு எழுதிகிட்டே இருக்கோணும், இல்லன்னா மறந்துடுவோம் :-))

ரேடியோ பொட்டின்னவுடன் எனக்கு பழைய ஞாபகமெல்லாம் வருதே... விடிய விடிய திருகிட்டு கெடக்கிறது.

பாடல்களுக்கு நன்றி!

pudugaithendral said...

ரேடியோவுல பாட்டு கேக்கறது எனக்கு எப்பவுமே பிடிக்கும். இங்கயும் இலங்கையைப்பத்தி சொல்லணும்.

அங்கே இருந்த வரை இரவிலும் தாலாட்டும் பாடல்களுடன் தான் என் பொழுதுகள் கழியும்.

நீங்க சொல்லியிருப்பது போல இப்ப எஃ எம் களில் பேச்சுத்தான் அதிகமா இருக்கு.

மனதுக்கு இதம் தரும் பாடல்கள்னா இப்பவும் ஆகாஷவானி தான்.

இரவு 9 மணிக்கு விவிதபாரதியில் மெலடியான ஹிந்தி பாடல்கள் இப்பவும் கேட்டுகிட்டு இருக்கேன்.

கோமதி அரசு said...

கயல்விழி
(1970களில்)நானும் என் அண்ணனும்
போட்டிபோட்டுக்கொண்டு டிரான்ஸ்சிஸ்டரைக் கையில் எடுத்துக் கொண்டு விவிதபாரதியின் பாடல்களைக் கேட்போம். சிறப்புத்தேன் கிண்ணம் கேட்போம். பின் திருமணம் ஆனபின் கணவருடன் (1973) சென்னை வானொலி வழங்கும் (இரவு10 -11)பழைய திரைப்படப்பாடல்களைக் கேட்போம்.
கானாப் பிரபா சொல்வதுபோல் அதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் காரைக்கால் வானொலி வழங்கும் "உறங்கும் வேளை" நிகழ்ச்சி (பழையபாடல்கள்) எங்கள் நினைவுகளை
மலரச் செய்கின்றன.

Sanjai Gandhi said...

வாவ்.. அருமையான பாடல்கள். இதுக்காகவே அடிக்கடி பொள்ளாச்சி போய்ட்டு வாங்கக்கா.. :)

Sanjai Gandhi said...

ராப்.. நோ பீலிங்கு.. ஆன்லைன்லயும் ஆர்ஜேக்களை கேட்கலாம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி நன்றி..
-----------------------
தெகா விசயத்துக்கு ஒன்னும் பஞ்சமில்ல .எழுத கை வரதில்லயே..(எழுதவே வரலைன்னு இல்ல சொல்லனும்)
---------------------
புதுகைத்தென்றல் இப்பவும் ஹிந்தி எவ்வளவு வேணாலும் கேக்கலாம் ஆனா போரடிக்குதுங்க ஹிந்தியே கேட்டு.. :)
------------------------
கோமதிம்மா..எப்படின்னாலும் பாட்டு கேக்கறீங்கள்ள இங்க் அது இல்லையேன்னு தான்... அடுத்த வேலை தமிழ் ரேடியோவுக்கு ஏற்பாடு செய்யனும்..:)
-------------------------
சஞ்சய்.. நன்றி..அடுத்த லீவுக்கு போயிடுவோம்.. :))

♫சோம்பேறி♫ said...

ஆர்.ஜேக்களும் மக்களும் பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கடுப்பேத்தினாலும், தேடியெடுத்து ஒலிபரப்பும் நல்ல பாடல்களுக்காக, இவிங்களைப் பொருத்துக் கொள்ளலாம்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

காலை நேரம் ஒரு ரம்மியமான பொழுது
அதில் நீங்க சொன்ன அனுபவம் சூப்பர்
நல்லா இருக்கு


வாங்க என் பக்கத்துக்கு‌

நிலா அது வானத்து மேல!

நாகை சிவா said...

//இரவு கவிழ்ந்த நேரத்தில் நிலவு கசியும் ஒளியில் கடலலையில் கால் நனைத்திருக்கிறீகளா? //

இருக்கேன் :))))

//இரவுகளில் கொஞ்சம் இந்த தொல்லை குறைவு .//

தொல்லையே இல்லை, சில நேரங்களில் பாடல் மட்டுமே. அதிகாலையிலும் அப்படி தான். காலை 7 (7.30) மணியில் இருந்து தான் இங்க ஏழரை பெரும்பாலும் ஆரம்பிக்கிறது :))

☼ வெயிலான் said...

ஆர்.ஜேக்கள் தொல்லையினால, இரவு மட்டும் தான் வானொலிப்பெட்டி தலமாட்டுல இருக்கும்.

நல்ல பதிவு!

Thamiz Priyan said...

என்னோட பேவரைட் பாடல்கள் எல்லாம் செல் பேசியில் இருக்கும்.. ஆனாலும் ரேடியோவில் கேட்பதில் இருக்கும் சுகமே தனிதான்.. சென்னையில் படிக்கும்(?) போது இரவு கூட்டமாக உட்கார்ந்து பாட்டு கேட்டுக் கொண்டு இருப்போம்..:)

எங்க ஏரியாவில் கொடைக்கானல் எப் ம். முடிந்த அளவு சுத்த தமிழில் அழகாக இருக்கும் கேட்க..:)

பாச மலர் / Paasa Malar said...

// சில பாடல்களுக்கு யார் நடித்தார்கள் , காட்சி என்ன என்பதெல்லாம் நினைவுக்கு வராமல் இருப்பதே மகிழ்ச்சி. டிவியில் சிலபாடல்களைப் பார்க்க நேரும் போது தான் தெரியும் அய்யோ எத்தனை அழகான பாடல் .. என்ன கொடுமையான காட்சி அமைப்பு , நடனம். ..//

உண்மை..உண்மை..உண்மை..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோம்பேறி .. நிஜம்மா நானும் அப்படித்தான் பொறுமை காத்து
பாட்டைக்கேட்டேனாக்கும்..
---------------
ஸ்டார்ஜன் ... நான் இரைவில் இசையலைகள்ன்னு சொன்னதை நீங்க காலை வேளையில் வாசிச்சீங்களா “:)) சரி ..சரி .. நன்றி.
---------------------
உங்களுக்கென்ன நாகை சிவா கடற்கரை ஊருலயே இருக்கீங்க..நாங்க 23 கிமீ பயணம் செய்துதான் பூம்புகார் போவோம்..போனமுறைகொஞ்சம் இருட்டும் வரை இருந்தோம்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெயிலான் தினம் கேக்கமுடியுதுன்னா கொடுத்துவைத்தவர் தான்..
------------------------
தமிழ்பிரியன் என்னதான் ஐபாட் போன் என்று இருந்தாலும் ரேடியோரேடியோ தான்..நாம லீவுக்கு போகும்போது மட்டும் கேட்டு ரசிப்போம்.. :)