September 22, 2009

எப்படி வசதி?

மின்னரட்டையில், சிலர் சமையல் ஆச்சா? வேலை ஆச்சா? என்று கேட்பது வழக்கம்.. நண்பரொருவர் வித்தியாசமாவே சிந்திப்பவர். சாப்பிட்டாச்சா / சாப்பாடு போட்டாச்சா ? என்று கேட்டிருந்தார்.. எல்லாரும் சாப்பிட்டப்பறம் நானும் சாப்பிட்டுட்டேன் என்று புத்திசாலித்தனமாக (?!!) சொல்லிமுடிக்கும் முன்பாக... அது ஏன் அப்படின்னு கேள்வியைப் போட்டார்.. வசதி என்பதே பதில். உண்மையில் இந்த கட்டு இப்படித்தான் பழக்கம் இல்லையென்றாலும் இது வசதி, எப்படின்னா? முதல்லயே நாம சாப்பிட்டு மத்தவங்களுக்கு போதவில்லை என்றால்.. புதிதாக இன்னொன்று செய்யவேண்டி இருக்கும். இதே அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. எப்பூடி?

-------------------------------------------

புதியதாக தமிழில் எழுதியதை படித்துக்காட்டும் புது தொழில்நுட்பம் வந்திருப்பதாக மாலன் வலைப்பூவில் கண்டேன். அது உண்மையில் யாருக்கு உதவியாகக் கண்டுபிடிக்கப்பட்டதோ ? ஆனால் என் போன்ற சோம்பேறிகளுக்கு வேறொரு வகையில் உதவக்கூடும். மிக நீண்ட பதிவுகளை வாசிக்க சிரமமா? வெட்டி ஒட்டினால் போதும் பதிவை வாசிக்க வேண்டாம், கேட்டுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு கதைகளை இதனைக்கொண்டு வாசிக்க வைக்கலாம்.. :) நல்லா இருக்குதில்லயா..?
----------------------------------------------

செருப்புக்கு வந்த மரியாதை பாருங்களேன்.. காதில் செருப்புகள்.. விதவிதமாய்.. இனி செருப்பு வாங்கனும்ன்னா தோடு கடைக்கும் போவோமே?

படத்தை பெரியதாக்கி செருப்பழகைக் காணலாம்..
------------------------------------

27 comments:

☀நான் ஆதவன்☀ said...

ஆகா இதுவும் காக்டெயில்யா?

☀நான் ஆதவன்☀ said...

மூனு மேட்டர சொல்லி ஒன்னொன்னுக்கும் ஒரு லேபிளை வச்ச உங்களை பாராட்டாம இருக்க முடியலக்கா :)

சென்ஷி said...

:-)

//குழந்தைகளுக்கு கதைகளை இதனைக்கொண்டு வாசிக்க வைக்கலாம்.. :) //

இதில் எனக்கு நிச்சயம் ஏற்புடையதில்லை. என்னதான் கதைசொல்லி மூலமாக கதைகளை கேட்டு வளர்ந்தாலும் நல்ல கருத்துடைய அச்சுப்புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டியது நிச்சயம் பெற்றோர்களின் கடமை.

☀நான் ஆதவன்☀ said...

//புதிதாக இன்னொன்று செய்யவேண்டி இருக்கும். இதே அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. எப்பூடி?//

இதை தமிழ்பெண்ணின் அடையாளம் என்பதா? சோம்பேறித்தனம் என்பதா? அவ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

சுட்டி அறிமுகத்திற்கு நன்றி!

தலைப்பே ஒரு ரேஞ்சா இருக்கு?!! :))

சென்ஷி said...

//முதல்லயே நாம சாப்பிட்டு மத்தவங்களுக்கு போதவில்லை என்றால்.. புதிதாக இன்னொன்று செய்யவேண்டி இருக்கும். இதே அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. எப்பூடி?//

காமெடியா எழுதிட்டீங்க. ஆனால் இதுக்கு பின்னால இருக்கற உண்மை ரொம்ப சுடுது :-(

ஆயில்யன் said...

//இதே அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. எப்பூடி?
//

ஓ மை காட் :(

ஆயில்யன் said...

//மிக நீண்ட பதிவுகளை வாசிக்க சிரமமா? வெட்டி ஒட்டினால் போதும் பதிவை வாசிக்க வேண்டாம், கேட்டுக் கொள்ளலாம்.//

நடுவில டெரரா எதாச்சும் பிறமொழிகலப்பு வந்துச்சுன்னா....? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நான் ஆதவன், நன்றி.. ராப் போடற லேபிளுக்கு பக்கத்துலயே இதெல்லாம் நிக்கமுடியாதே. :)
---------------------
புத்தகப்புழு சென்ஷி .. பயப்படவேண்டாம்.. அவங்க ரெண்டுபேரும் புத்தகப்பைத்தியங்கள் தான். ஆனா நம்மை வாசிக்க சொல்றப்ப பயன்படுத்திக்கலாம்ன்னு சொன்னேன்.. மற்றும் இணையத்தில் அவ்வ்ளோ எங்க கதை கிடைக்குது.. புத்தகம் தான் .. இன்னும் கொஞ்ச நாளில் மகள் ஒரு கதை புத்தகம் போட்டாலும் போடுவாள் என்று நினைக்கிறேன் எழுதிட்டிருக்கா.. :)
-----------------------
முல்லை பாஸ்.. உங்களயெலாம் பாத்து டெரரா ஒரு ரேஞ்சா நானும் மாறிட்டு வரேன் பாஸ்.. :)
------------------------
சென்ஷி , ஆயில்யன்..பயப்படாதீங்க முழுபட்டினி இருக்கமாட்டேன்.. ரெண்டு சப்பாத்திதான் வருது எனக்குன்னா.. மீதி ஒரு ப்ரட் சாப்பிட்டு ந்னு சொல்லவந்தேன்..
-----------------------
ஆயில்யன் அப்படி டெரரா ஆங்கிலம் கலந்தா வேற வழி ..நாம இப்படித்தான் படிக்கிறோம்ன்னு தெரிஞ்சா எல்லாரும் தமிழுக்கு மாறிடுவாங்களோ ? :)

ராமலக்ஷ்மி said...

முதல்ல பதிவை தமிழ் மணத்துக்கு அனுப்புங்கப்பா! எப்படி வசதி:)?

மூணு மேட்டரும் அருமை. முதல் எப்பூடியை சமயத்தில் நானும் அப்பூடியே கடைப்பிடிப்பதுண்டு:)!

க.பாலாசி said...

முதல்ல உள்ள சாப்பாட்டு ஐடியா நல்லாருக்கு...என்னோட வருங்காலம் வரும்போது உங்களான்ட அனுப்பிவைக்கிறேன்...

இரண்டாவது தகவலும் ஓ.கே...

மூன்றாவது காதில் தோடு மாட்டிக்கொள்ளும் ஆண்களுக்கும் மிகவும் பயனுள்ள தகவல்.

கோபிநாத் said...

\\எப்படி வசதி?"\\

ஆகா...! ;))

நிஜமா நல்லவன் said...

/சென்ஷி said...

//முதல்லயே நாம சாப்பிட்டு மத்தவங்களுக்கு போதவில்லை என்றால்.. புதிதாக இன்னொன்று செய்யவேண்டி இருக்கும். இதே அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. எப்பூடி?//

காமெடியா எழுதிட்டீங்க. ஆனால் இதுக்கு பின்னால இருக்கற உண்மை ரொம்ப சுடுது :-(/


ரிப்பீட்டு

Sanjai Gandhi said...

//இதே அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. எப்பூடி?//

இதெல்லாம் சும்மா.. ஆரம்பத்துலையே சாப்டா மத்தவங்களுக்கும் வேணுமேன்னு கம்மியா சாப்டனும்.. இதே கடைசியா சாப்டா மிச்சம் இருக்கும் எல்லாத்தையும் ஒரு கட்டு கட்டலாம்.. எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சிங்களா? :)))

நிஜமா நல்லவன் said...

/புதியதாக தமிழில் எழுதியதை படித்துக்காட்டும் புது தொழில்நுட்பம் வந்திருப்பதாக மாலன் வலைப்பூவில் கண்டேன். /

நல்ல முயற்சி தான். ஆனா இன்னும் முழுமையான அளவில் இல்லை. மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்!

Anonymous said...

என் ப்ரெண்டி இப்படி ஒரு செருப்பை காதில மாட்டிட்டு கோயிலுக்கு போனா. அம்மா அப்பா எல்லாம் ஒரே திட்டு. கோயில்ல கால்லயே செருப்பு போடக்கூடாது. காதுல செருப்பான்னு :)

R.Gopi said...

மூணு லேபிள்... மூணு மேட்ட‌ர்... இது சூப்ப‌ர் காக்டெயில்...

ந‌ல்லா இருக்கு முத்துலெட்சுமி மேட‌ம்....

//அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு என்றால் அப்படி இப்படி சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்துவிடுவேன்.. //

உங்க‌ள் விருந்தோம்ப‌ல் ரொம்ப‌ நெகிழ்ச்சியா இருக்கு...

கால்ல‌ செருப்பு போய், இப்போ காதுல‌ செருப்பா... அப்போ காலுக்கு தோடா?? ய‌ப்பா... இந்த‌ அதிர‌டி மாற்ற‌ம் க‌ல‌க்க‌லுங்கோ... ச‌ம‌ய‌த்துல‌ க‌ல‌க்குதுங்கோ...

சின்ன‌ அம்மிணி க‌மெண்ட் சூப்ப‌ர்....

//எப்பூடி//

ஜூப்ப‌ரு.....

கோமதி அரசு said...

//சமாளித்து வேற எதையோ சாப்பிட்டு சமாளித்து விடுவேன் எப்பூடி?//

முத்துலெட்சுமி இப்படி அடிக்கடி சமாளிக்காதீர்கள்.

//தமிழில் எழுதியதை படித்துக்காட்டும் புது தொழில் நுட்பம்//

கேட்க பொறுமை வேண்டும்.

// செருப்புக்கு மரியாதை//
பரத ஆழ்வார் தலையில் வைத்துக்
கொண்டார்,பாதுகையை.
செருப்பை குறைவாக மதிப்பிடாதீர்கள்.

சிங்கக்குட்டி said...

//என் போன்ற சோம்பேறிகளுக்கு....//

எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்‌ஷ்மி அது தொடர்ந்து தமிழ்மணம் எனக்கு இப்படித்தான் செய்யுது.. கொஞ்சம் கழிச்சு எப்பவாச்சும் ஒர்க் அவுட் ஆகினால் நானே சேர்ப்பேன் . இல்லையா ? உங்களைப்போல நண்பர்கள் இணைத்துவைப்பார்கள்.. ;)
-------------------------
ஆச்சரியப்பட்டதுக்கு நன்றி கோபி
:)
----------------------------
நிஜம்மா நல்லவர் , சென்ஷி, கோமதிம்மா எல்லாருடைய அக்கறைக்கும் நன்றி.. :)
------------------------------
சின்ன அம்மிணி இப்படி ஒரு விசயம் இருப்பதை நான் யோசிக்கவே இல்லையே.. எப்பூடி இப்படில்லாம் ந்னு அந்தம்மா அப்பா கிட்ட கேட்டு சொல்லுஙக :))
------------------------
பாலாஜி என்ன இது நீங்க பெண்களுக்காக யோசிப்பவர்ன்னு பாத்தா இந்த டெக்னிக்க கத்துக்க அனுப்பறேங்கறீங்களே.. :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சஞ்சய் இப்படித்தான் என் தம்பி நினைச்சுட்டு சொல்வான். பலசமயம் பாத்திரம் பூரா வழிச்சுபோட்டு காலி செய்யறதா அம்மாவைச் சொல்வான்.. குறைவா இருப்பதால் தான் அவங்க அப்படி சாப்பிடறாங்கன்னு பெரிசானதும் புரிஞ்சுகிட்டான்.. அதனால் வளருங்கப்பா.. :)
-----------------------
சிங்ககுட்டி, இப்படி எல்லாம் யோசிக்கலன்னா தான் ஆச்சரியப்படனும்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

@ R.கோபி.. இதுக்கெல்லாம் கலங்கக்கூடாது. நாங்களே மூணு விதமா ஷூ செருப்பு வாங்கிவந்தோம்.. :)

R.Gopi said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
@ R.கோபி.. இதுக்கெல்லாம் கலங்கக்கூடாது. நாங்களே மூணு விதமா ஷூ செருப்பு வாங்கிவந்தோம்.. :)//

அதானே பார்த்தேன்.... அட்ரா..அட்ரா....அட்ரா ச‌க்கை....... வாழ்த்துக்க‌ள்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:) செருப்பு கம்மல் மேட்டர் சூப்பர்.

Vetirmagal said...

//முதல்லயே நாம சாப்பிட்டு மத்தவங்களுக்கு போதவில்லை என்றால்.. புதிதாக இன்னொன்று செய்யவேண்டி இருக்கும்.//

பழைய தலைமுறை பழக்கங்கள். மிகவும் வசதி யாக இருந்தது, பெண்களுக்கு.

பெண் விடுதலையாளர்கள் may not agree..:-)

Unknown said...

Hiiiiiiiiiiiiiiiiiiii


enna ppa
eppadi join aavathu nne puriyale


anybody tel me

bye

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க.. என்ன புரியல .. எதுல சேரனும்? ப்ளாக்கர்லயா..? www.blogger.com ல போய் மூணே ஸ்டெப்ல ஒரு ப்ளாக் கிரியேட் செய்துக்குங்க.. okey? :)