முன் குறிப்பு : சும்மாத்தானே இருக்கோம்.. பழைய பதிவுகளுக்கு லேபிள்களை சரிப்படுத்துவோம்ன்னு நினைத்துக் கொண்டிருந்த போது.. என் முதல் முயற்சியான இக்காட்சிக் கவிதைக்கு லேபிள் குறும்படம்ன்னு போடலாமோ போட்டுட்டு அப்படியே மீள்பதிவாக்கலாமோ என்று தோன்றியது . மீள்பதிவாக்கியாச்சு.
பதிவின் பழைய பின்னூட்டங்களுக்கு ...
மேலும் சில சுய விளம்பரங்கள்..
குறும்படம் எடுக்க போகிறீர்களா சில குறிப்புகள்...என் இரண்டாவது முயற்சி அன்புடன் குழுவில் எனது காட்சிக்கவிதை இரண்டாவது பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
என் கவிதை வரிகள்:பூங்கா
(திறந்தவெளி)
தத்தித் தளிர்நடையிடும்
பேச்சறியாப் பிள்ளைப்பருவமோ
நண்பருடன் கூடிக்களிக்கும்
வெயிலறியா விளையாட்டுப்பருவமோ
இன்றென்ன செய்தார்கள்
செல்லக் கண்மணிகளென்று
குறைபடுவது போல் தெரிந்தாலும்
புகழ்ந்திருக்கும் நடுவயதுப்பருவமோ
நேற்றென இன்றென நாளையென
பேசிப்பேசி ஓயும்
நடைதளர்ந்த முதிர்ப்பருவமோ
நாற்சுவரின் சிறையிலிருந்து
வெளியேறி திறந்தவெளியில்
பொழுதெல்லாம் இனிதாக்கிச்
சுதந்திரமும் சந்தோஷமுமாய்.
24 comments:
அடுத்து என்ன கதை!??
//அன்புடன் குழு மேல் மேலும் வளர
வாழ்க வளமுடன்//
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
:-)அடுத்தது மெகா சீரியலா...?
\\அடுத்து என்ன கதை!??//
அதேதான் கோபிநாத் நானும் யோசிச்சிட்டிருக்கேன்.. :) ஆனா நிச்சயமா கதை தான் அடுத்தது எழுதனும்.. ஹாட்ரிக் :))
---------------------
\\கோமதி அரசு said...
//அன்புடன் குழு மேல் மேலும் வளர
வாழ்க வளமுடன்//
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
//
நன்றி நன்றி ! :)
முத்தக்கா, இன்னைக்கு தான் பாக்கறேன். நல்லா இருக்கு. அடுத்தது என்ன கதை?
வாழ்த்துக்கள்!
(மங்கை அக்கா ஒரு சினிமா எடுத்தாங்களே. அது என்ன ஆச்சு)
சின்ன அம்மிணி பாத்தீங்களா இப்ப மீள்பதிவாக்கியது நல்லதா போச்சு.. அடுத்தது என்ன எடுக்கலாம்..ஒரு டாக்குமெண்ட்ரிக்கு நல்ல ஐடியால்லாம் வந்திருக்கு ஆனா தைரியம் தான் வர மாட்டேங்குது .. களத்தில் இறங்க.. பார்க்கலாம் எப்பத்தான் ஆரம்பிக்கபோறேன்னு..
----------------------
மங்கை ஒரு நிறுவனத்தின் கீழ் இன்னோரு அமைப்பின் பணத்தில் எடுத்தாங்க அதனால் அதன் இணைய உரிமை வேற இடங்களில் சிக்கிக்கிச்சு போல.. சென்ஷி
இப்ப ப்ரசெண்ட் மட்டும். அப்புறம் பொறுமையா படிக்கிறேன்
ஆஹா உங்களுக்குள் ஒரு இயக்குனர் ஒளிஞ்சு இருக்கார் போல!
முல்லை .. தலைப்பு பாத்தீங்கள்ள - சிறுமுயற்சி.. நாங்க எல்லாத்தையும் சின்னதா தான் முயற்சி செய்வோமாக்கும்..’ மெகா’ ல்லாம் எங்க ? :)
இருந்தாலும் நீங்க பணம் தந்தா அதையும் எடுத்து ஒரு முயற்சி செய்துடுவேன்..
//:-)அடுத்தது மெகா சீரியலா...?///
நிறைய இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளுங்கள்! வாழ்த்துக்கள் !
மெகா சீரியலோ அல்லது வேறு எந்தவிதமான தொடர்களோ கொஞ்சம் சிரிப்பதற்கும் நிறைய சிந்திப்பதற்கும் மட்டும் வாய்ப்பிருத்தல் கட்டாயம் !
//குசும்பன் said...
ஆஹா உங்களுக்குள் ஒரு இயக்குனர் ஒளிஞ்சு இருக்கார் போல!//
ஆமாம் அக்கா ஆமாம்!
அவரை எப்படியாச்சும் வெளியில கொண்டுவந்துடுங்க!:)
வாழ்த்துக்கள்!
அழகிய கவிதை. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
சந்தனமுல்லை said...
:-)அடுத்தது மெகா சீரியலா...?
//
repeatu
இது எப்போ நடந்தது? சொல்லவே இல்ல... முதல் முயற்சிங்கிறதாலே லூசுல விட்டுடுறேன் :) ...
எனக்கு ஒரு கவிஜா வந்திருக்கு அந்த தாத்தாக்களின் மாநாட்டு காட்சியைப் பார்த்தவுடன் ... :))
கலக்கல் தொடரட்டும்...வாழ்த்துக்கள்
/ மங்கை said...
கலக்கல் தொடரட்டும்...வாழ்த்துக்கள்//
மங்கை அக்கா இப்பத்தான் தூங்கி எழுந்து வந்த மாதிரி வாழ்த்துக்கள் சொல்றாங்க.
அக்கா இது மீள்பதிவு. இப்ப தொடரட்டும் போட்டா அடுத்த பதிவையும் மீள்பதிவாக்கிடப் போறாங்க :)
அடுத்த படத்துக்கு என்னை உதவி இயக்குனரா சேத்துகோங்க.. நானும் ரெண்டு மூனு கதை சொல்லி இருக்கேன்
புதிய இயக்குனர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் :-)).
குசும்பன் , தெகா, மங்கை, அமுதா, கானா, உழவன், சிங்ககுட்டி நன்றிங்க..
------------------
நசரேயன் அடுத்த ப்ளைட்டை (சொந்தக்காசில்) பிடித்து வந்தீங்கன்னா .. டாக்குமெண்ட்ரி வேலைய ஆரம்பிச்சிரலாம்.. :)
#
என் கிட்ட கூட நல்ல லவ் சப்ஜக்ட் ஸ்டோரி ஒன்னு இருக்கு.
நல்ல கதை!??..
திரைக்கதை கூட நான் எழுதிடுறேன்.
நீங்க படத்த டைரக்ட் பண்ணா போதும்.
சென்ஷிய புரடியூசரா யூஸ் பண்ணிக்கலாம்.
உங்களுக்கு சென்ஷிய நல்ல சம்பளம் தரச்சொல்றேன். என் கதைய இயக்குறிங்களா? பிளீஷ்......
#
சொல்ல மறந்துட்டேன்,
கவிதை சூப்பர்....
நல்லா இருக்கு நண்பரே..
Post a Comment