May 16, 2012

வாசப்புகைப்படம்


மண்கிளறி களையூறி
பார்த்துப்பார்த்து
உயிராக்கினாலும்
பூக்கும்போதெல்லாம்
களைந்தெறிந்த
கோபமின்றி
பூகிள்ளிய கரங்களை
தோட்டத்துக் காற்றை
வாசத்தால் நிறைக்கிறாய்
.
ஈரமும் உடைதலுமாய்
கிளைத்த
என்னுயிரை
மனதை
எனை
அறியாதவற்கு தர
வாசப்புகைப்படமாய்.

6 comments:

கோபிநாத் said...

;-)

வல்லிசிம்ஹன் said...

பூவைக் கிள்ளிய கரங்களே,மண்ணைக் கிளறித் தன்னை வளர்த்தவை என்று தெரிந்துதான் வாசம் வீசுகிறது இல்லையா கயல்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோபி..:)

வல்லி வாங்க..
அதே அதே.. :)

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...
அழகாய் வந்திருக்கிறது பூவைப்போல...

வாழ்த்துக்கள் கயல்.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கவிதை,..

இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்வது எப்படியென்று இந்தப் பூக்கள் அழகாகக் கற்றுக்கொடுக்கின்றன :-)

Saritha said...

nice one :)