February 1, 2007

உங்களுக்கு எந்த ஊரு?

"உங்களுக்கு எந்த ஊரு?" இது எங்க மாமா பார்க்கிறவங்க கிட்ட கேட்கற முதல் கேள்வி.பேசியே வேலை வாங்குகிற
அரசாங்க வேலையில இருந்ததால பேச்சுதிறமை அதிகம்.
அத்தை சொல்வாங்க, அவங்க ஊரையே விலை பேசிட்டு வந்துடுவாங்கன்னு.

அந்த கேள்விக்கு துத்துக்குடின்னு சொன்னா அதான் எங்க ஊரும் நான் அங்க தான் பிறந்ததுன்னு சேந்துக்குவாங்க.
இல்லயா அவங்க திருநெல்வேலின்னு சொல்லிட்டா அப்படியா நம்ம பக்கமா நான் வளர்ந்த இடம் ன்னு சொல்லி பேச்ச வளர்த்துவாங்க.

கோவை, உடுமலை இல்லை பொள்ளாச்சி அப்படின்னாலும் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை ...ஐயா அப்படி இப்படின்னு ஓரோர் ஊரிலும் ஒன்பது இல்லன்னா பத்து வருஷம் வேலை பார்த்திருக்கிறேன் . எல்லாம் நம்ம ஊரு தான்னு , இப்படி சளைக்காம யாதும் ஊரே யாவரும் கேளீர் ன்னு நட்பாக்கிக்குவாங்க.

இங்க டெல்லி வந்து போனா ஹிந்தி தெரியாதுன்னாலும்
அங்க இங்க சுத்தி, "தமிழா நானும் தமிழ் தான்". அப்ப தமிழ்நாடுன்னு சொல்லிக்கிட்டு ஊர்ப்பாசம் வந்திடும்.

சிங்கப்பூரையும் விடல;மக வீட்டுக்கு போய் இரண்டே வாரத்தில் ஹிந்தி , தெலுங்கு எல்லாரும் நண்பர்களாகி "அவங்க மகளா நீங்க" ன்னு கேட்டு அவளுக்கு வீட்டுக்கு வந்து ஹாய் சொல்லிட்டு போவாங்க.ஆமா இப்ப இந்தியாவில் இருந்து வந்தவங்க என்பதே போதுமே.

இந்த ஊர்ப்பாசம் எங்க வீட்டுல சிலசமயம் சின்ன செல்லச்சண்டைகள் வரக் காரணமா இருக்கும். யாராச்சும் பெரிய பாடகரோ இசை அமைப்பாளரோ அவங்க பேட்டி இல்லாட்டி இசை நிகழ்ச்சி பாக்கும்போது "பார்த்தியா எங்காள" என்று ஒருத்தர் ஆரம்பிச்சா அடுத்த ஆள் "அது என்ன அவர் உங்க சொந்தமா , எனக்கும் தான் அவங்க படைப்புகள் பிடிக்கும் , உங்க கட்சிக்கு எப்படி சேர்க்கலாம்" என்று கொஞ்சம் வாதம் பண்ணிக்குவோம்.

கல்யாணம் ஆன பெண்களுக்கு சொல்லவே வேணாம் வளர்ந்த ஊர் வாழ்கிற ஊருன்னு ரெண்டு. எங்க ஊருன்னு அம்மா வீட்டுல இருக்கும் போது பேசினா வாழ்கிற ஊரையும், வாழ்கிற ஊரில் சொன்னால் அம்மா ஊரையும் சொல்றதா அர்த்தம் ஆகிடும்.

எப்படியும் நமக்கு இந்த ஊர்ப்பாசம் வாழ்ந்த ஓரோரிடத்தில் இருந்தும் கொஞ்சம் ஒட்டிக் கொள்கிறது.
அந்த ஊரைப் பற்றி நல்லதா யாராவது சொன்னால் ஆகா ஏதோ நம்மளயே ஒருத்தர் சொன்னது போல பூரிச்சு போறோமே.

ஆமா, எழுதற எனக்கு எதெல்லாம் சொந்த ஊரு, மாமா மெச்சும் மருமகள் .பாருங்க நம்ம லிஸ்ட் இதுதான்,
மதுரை ,திருநெல்வேலி, கோவை, பொள்ளாச்சி,நாகை மாவட்டம், தஞ்சை மாவட்டம் இப்போது தில்லி.

வரைபடத்தில் இந்த இடங்களின் சில பல கி.மீ தொலைவில் இருக்கும் மற்ற இடங்களையும் , அதெல்லாம் கொஞ்சம் தூரம் தானே ஏன் அதை எல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்லி அதெல்லாம் கூட சேர்த்துக்குவேன் அப்பப்போ.

19 comments:

நாமக்கல் சிபி said...

அட! நம்ம ஊர்க்காரங்களா நீங்க!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்க ஊரு கோவை, ஆமா நான் உங்க ஊருதான் :)
இந்த நாகை மாவட்ட கோயில் எல்லாம் போய் வந்தப்போ எங்க ஊரு பக்கமா போனீங்கன்னு கேட்டேனே அப்ப எங்க ஊரு நாகை.:))

வடுவூர் குமார் said...

நாகப்பட்டிணம் & சிங்கப்பூர் லிஸ்டில் வந்திருச்சு,அது போதும்.
ரொம்ப ஆசைப்படக்கூடாது பாருங்க!!

துளசி கோபால் said...

'ஊர்க்காரங்க'ன்னு சொன்னாலே பாசம் அப்படியே பொத்துக்கிட்டு வந்துரும்லே:-)

நீங்களும், கடைசியிலே நம்மூர்க்காரவுகளா ஆயிட்டீங்க.

Unknown said...

ஓ கோவையா?

அஞ்சு வருசம் படிச்ச ஊரு பாருங்க அதனால எனக்கும் சொந்த ஊருதான் ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\வடுவூர் குமார் said...
நாகப்பட்டிணம் & சிங்கப்பூர் லிஸ்டில் வந்திருச்சு//

அது என் மாமா போய் வந்த ஊருலிஸ்ட்ல தான் எழுதி இருந்தேன்.
இன்னும் நான் போய் வந்த ஊரையெல்லாம் என் ஊருன்னு சொல்கிற கொள்கை வராததால சிங்கப்பூர் என் லிஸ்ட்ல வரலை :((
அது என் நாத்தனார் ஊரு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி எப்படியோ ஊர்க்காரவுக எல்லாரையும் இந்தபதிவால கண்டுபிடிக்க முடிஞ்சது .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அருட்பெருங்கோ said...
ஓ கோவையா?

அஞ்சு வருசம் படிச்ச ஊரு பாருங்க அதனால எனக்கும் சொந்த ஊருதான் ;-) //

அஞ்சு வருஷமா என்னங்க இது அப்ப அது உங்க சொந்த ஊரே தான். லீவுக்கு வருஷத்துக்கு ஒரு மாசம் ரெண்டுமாசம் போற நானே எங்க ஊருங்கறேன்.

மங்கை said...

//இந்த ஊர்ப்பாசம் எங்க வீட்டுல சிலசமயம் சின்ன செல்லச்சண்டைகள் வரக் காரணமா இருக்கும்//

லட்சுமி அப்ப சீக்கிறம் வரேன்...:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\மங்கை said...
//இந்த ஊர்ப்பாசம் எங்க வீட்டுல சிலசமயம் சின்ன செல்லச்சண்டைகள் வரக் காரணமா இருக்கும்//

லட்சுமி அப்ப சீக்கிறம் வரேன்...:-))) //
வாங்க வாங்க,அதுக்காகவாவது .
யாரோட ஊர்க்காரவுங்க நீங்கன்னு ஒரு பட்டிமன்றம் வச்சிடலாம்.

நாகராஜ் said...

ஹி ஹி ஹி

நானும் கோவை அப்படீன்னு போட்டு கூகுளில் தேடுனா நம்ம ஏரியா பசங்க நிறைய பேரு நெட்டுல மேயுறாங்கன்னு இன்னைக்குத்தான் தோணிச்சு....இனி அடிக்கடி வரணும்...

குமரன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க வாங்க முத்தமிழ் குமரன் (நாகா சிபிஇ??) நீங்களும் கோவையா ? வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

பங்காளி... said...

தாயே..நீங்க மதுரயா...ச்சொல்லவே இல்ல...

ஏய் எல்லாரும் தள்ளி நில்லுங்கப்பேய்...இவுக எங்கூருகாரவுக...

ஜோ/Joe said...

நெல்லையும் (நாகர்கோவிலுக்கு என்ன பெரிய தூரம்?) ,சிங்கையும் நம்ம ஊராச்சே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா பிறந்த ஊரு மதுரதேன்.
அதுக்காக பாசத்துல இப்படி அருவா
காமிச்சு மத்தவுகள விரட்டிறதீங்க
அண்ணே. ஏதோ கொஞ்சம் பேரு வந்து போறாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி, ஜோ. என்ன பெரிய தூரம் எல்லாம் நம்ம பக்கம் இவுகளும்ன்னு சொல்லிக்க வேண்டியது தானே.நல்ல நாளு போல ஊர்க்காரவுங்கள்ளாம் வந்து போறீங்க இன்னைக்கு.

சென்ஷி said...

அட நீங்களும் நம்ம ஊர்தானா..!

(எந்த ஊர்னெல்லாம் கேக்கப்படாது..பொறுமையா பதிவ, பின்னூட்டத்த படிச்சிருக்கேன்ல )

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி ஒத்துக்கிற்றேன் நீங்க எங்க ஊருதான்ன்னு ஒத்துக்கிற்றேன். யாதும் ஊரே யாவரும் கேளீர்.

நிலாமகள் said...

நானும் 'உங்க' ஊர்க்காரி ஆகிட்டேன்! சரிதானே ...?!