July 2, 2007

எட்டு எட்டாம்

பதிவெழுத இப்போதைக்கு எதுவும் தோணாததால் எட்டு எட்டு என்று எல்லாரும் எட்டும் அந்த எட்டை போட்டு விடலாம் என்று எழுத ஆரம்பித்துவிட்டேன்.ராதா வும் காயத்ரியும் கூப்பிட்டு இருக்காங்க எட்டு எழுத சொல்லி.


1.என்னத்த சொல்றது , முதல் பாயிண்டே தடங்குது. எந்த வகுப்பிலும் பெயில் ஆகாம பெரிதா கப்பு வைக்காம படிச்சு பாஸாகி பெத்தவங்களுக்கு கவலை வைக்காம இருந்ததே சாதனை தான். பின்ன கை வலிச்சா பரிட்சையில் எழுந்து வந்துட்டா பாஸாகிறது பெரிய விசயம் இல்லயா. மதிப்பெண் நடுத்தரமா இருந்தாலும் எல்லா ஆசிரியர்கள் மனதிலும் இவ புத்திசாலின்னு ஒரு இமேஜ் ஏற்படுத்தி வச்சிருந்ததும் சாதனை தானே.



2.இன்னிக்கும் அதே ஊரில் இருக்கற பள்ளி கல்லூரி நட்பு வட்டத்தை நான் போய் தான் சேர்த்து வைப்பேன். ஊருக்கு போகும் போது அட்ரஸ் மாறிப்போனதை யாருக்கும் சொல்லாத சில தோழிகளைக்கூட போன் நம்பர் கண்டுபிடிச்சு பேசியோ நேரில் போயோ அசத்துவது , என் பழக்கம். நீ ஒருத்தி தான் எப்போவும் தொடர்பு கொண்டு பேசறடீ ன்னு வாங்க , அவர்கள்
வாழ்க்கையின் ஓட்டத்தில் வயதானவர்களா நினைக்க ஆரம்பித்திருந்தால் நான்போய் அவர்களை வருடங்களுக்கு பின்னால் அழைத்து சென்று இளமையாக்கிவிட்டு வருவேன் கணக்கிலடங்காதவர்களின் நட்பு வட்டம் ஒரு சாதனை.



3. இசை கத்துக்கனும்ன்னு தோண்றியதும் குரல் சரியில்லை என்று யோசித்துவிட்டு வயலின் பக்கம் ஒதுங்கினேன்.. இருமுறை உள்ளூர் தியாகராஜ ஆராதனை யில் நிகழ்ச்சி நிரலில் பேர் எல்லாம் போட்டு பத்திரிக்கைய் அடிச்சிருந்தாங்க மேடையேறி வாசித்தது ஒரு சாதனை..கேட்டவங்களுக்குத்தானே கஷ்டம் எனக்கென்ன..கல்லூரியில் ஒரு முறையாவது மேடையேறும் ஆசையும் வயலினால் நடந்தது. அதுவும் போட்டியில் கம்பி வாத்தியம் அப்படின்னு ஒரு பிரிவுக்கு ஆளே இல்லை .
அதுனால் போட்டி இன்றி முதல் பரிசும் கோல் டு மெடலும்...எப்படி.சாதனை தானே.



4, நல்லபடியா குழந்தைய வளர்த்துருக்கீங்க வளர்க்கிறீங்கன்னு சிலர் சொல்லும் படி வளர்த்துட்டு வரதும் நியாயமா நடந்துக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்னா அவங்களும் சிலருக்கு நியாயத்தை எடுத்து சொல்ற மாத்ரி ஒரு சிந்தனை உண்டாக்கி வச்சிருக்கேன்னா அது ம்.ஒரு சாதனையாத்தான் இருக்கனும்ன்னு நினைக்கிறேன்.. நீங்க தான் இந்த குழந்தோயோட அம்மாவான்னு பாராட்டு பெற்ற பல சந்தர்ப்பங்கள் ஆனந்தமான ஒன்று.(அப்படி ஒரு நாளும் நாம நம்ம அம்மா அப்பாக்கு குடுத்துருக்கமான்னு ஒரு கேள்வி உள்ள)



5.இங்க எழுதறதும் இத்தனை பேர் அத படிக்கறதும் ஒரு சாதனை தான்னு நினைக்கிறேன்...



6. அருணாவோட எட்டு படிச்சீங்களா அப்படி நானும் செய்திருக்கேன்.. குழந்தை அழுதான்னு பாக்கப்போய் பாத்திரத்தில் ஸ்டெரிலைஸ் பன்ணப்போட்ட பாட்டில் பாட்டில் மூடி ரப்ப்பர் எதுவும் கண்ணுக்கு தெரியாம தண்ணியோட அப்படியே ஆவியாகி வெளியே போனப்புறம் எங்கே அது ன்னு தேடி சாதனை புரிந்திருக்கிறேன்...பூரி செய்து விட்டு குறைத்து வைத்த அடுப்பை அணைக்க மறந்து எரிய விட்ட சாதனை.



7. பெண் 3 வயது இருக்கும் போது அவளை வைத்துக்கொண்டு தனியாக ரயிலில் போகாதே என்றார்கள். சரி என்று பெங்களூரிலிருந்து தில்லிக்கு ப்ளைட்டில் வந்தேன். கணவர் முன்னால் போனால் அப்படியே காலைப்பாத்துக்கிட்டே பின்னாடி போய் தான் பழக்கம்..நான் போய் தனியா செக்கின்பண்ணி ப்ளைட்டிலான்னு பயந்துட்டு புலம்பினேன்..நமக்கும் ஸ்போக்கன் இங்கிலீஸுக்கும் அத்தனை பொருத்தம். சென்னையில் கூட நம்மாளுங்க தமிழில் பேசமாட்டாங்க. ...உள்ள போய்ட்டு அங்க பைலட் யாராவது காக்பிட் பாக்கவரீங்களான்னு அறிவிப்பு செஞ்சதும் ஆங்கிலத்தில் தடால்ன்னு ஏர்ஹோஸ்டஸை கூப்பிட்டு நான் என் பொண்ணுக்கு காண்பிக்கனும்ன்னு சொன்னேன். அங்க போய் இதான் அதான்னு அந்த பைலட் சொல்ல சொல்ல அவர்கிட்டயும் தட்டு தடுமாறி பேசிட்டு கடைசில என் பொண்ணுக்கு தமிழ்ல புரியறமாதிரி சொன்னா கேட்டுட்டு அவரும் தமிழ் தான் அப்படின்னார்.



8.வேறென்ன சொல்றது ...சாய்ஸில் விடலாமா? இல்ல வழக்கம்போல கைவலிக்குதுன்னு சொல்லி பேப்பரை சீக்கிரமா மடிச்சு குடுத்துட்டு ஹாலை விட்டு முதல் ஆளா வெளிய போய்டலாமா / சரி தான் இல்லன்னா நான் நானா இருப்பது எப்படி? அதனால எட்டாவது எழுதலை.


இன்னும் யாராவது எழுதாம இருக்கீங்களா? நானே கடைசியில் தான் எழுதி இருக்கேன்.

41 comments:

Ayyanar Viswanath said...

எளிமையான எட்டு அழகா இருக்கு

அபி அப்பா said...

ஏழும் ஏழு ஸ்வரங்கள்!

அய்ஸ் அவங்க எங்க 8 போட்டாங்க 7 தான் நல்லா கண்ண கழுவிட்டு பாருய்யா! இதில இருந்து 1 தெரியுது நீர் படிக்காம பின்னூட்டம் போட்டுட்ட்ய்யா! என்னய மாதிரி படிச்சுட்டு போடும்!

லக்ஷ்மி said...

கலக்கறீங்களே முத்து. நீங்களூம் கைவலிக்குதுன்னு பேப்பர் மடிச்சு கொடுக்கற ஆள்தானா? :) என்னைப் போல் ஒருத்தின்னு ஒரு அல்ப சந்தோஷந்தான். #4 ம் நிஜமாவே பெரிய சாதனைதான்... வேணும்னா #5யும் சேத்துக்கலாம். ஹிஹி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யனார் ரொம்ப நன்றி அழகா இருக்குன்னு சொன்னதுக்கு...
ஆமா நான் என்ன அழகுப்பதிவா போட்டேன்னு ஒரு நிமிடம் யோசிக்க வச்சிட்டீங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா ஒத்துக்கிர்றேன் இப்ப ஒத்துக்கிர்றேன் நீங்க படிச்சிட்டு த்தான் பின்னூட்டம் போடுவீங்கன்னு நான் ஒத்துக்கிர்றேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லக்ஷ்மி அதான் பேரும் ஒரே மாத்ரி இருக்கு நமக்கு என்ன ஒரு ஒற்றுமை...போங்க..அதும் இதிலெல்லாம் போய் பெருமை பாருங்க நமக்கு.

Unknown said...

ம்ம்ம் ஏழும் நல்லாருக்கு...

கை வலிக்குதுன்னு பாதியில எழுந்து வர்றதுக்கே இத்தன பில்டப்பா? நாங்க கால் வலிக்குதுன்னு பரிட்சைக்கே போக மாட்டோம்... :)

மங்கை said...

லட்சுமி எப்ப கச்சேரி வச்சுக்கலாம்...

எனக்கும் ஒரு அல்ப சந்தோஷம்....
சமையல் கலைல யாரும் என்னை மிஞ்ச முடியாதுன்னாலும்... உங்க 6 ஆவது, அளவுக்கு சாதனை எல்லாம் பண்ணது இல்லை..:-)))

அம்மினிக்கு இன்னைக்கு ரொம்ம்ம்பபப போர் அடிச்சதோ...

இருந்தாலும் அய்யனாரே... சும்மா கண்ண ஒரு தடவை மேய விட்டாவது பின்னூட்டம் போடுங்கப்பா

கோபிநாத் said...

அழகான எட்டு...சாரி ஏழு ;))

முதல் விஷயம்த்தில் நீங்களும் நானும் ஒன்னுக்கா ;))

Thekkikattan|தெகா said...

//பின்ன கை வலிச்சா பரிட்சையில் எழுந்து வந்துட்டா பாஸாகிறது பெரிய விசயம் இல்லயா.

:-))

//கண்டுபிடிச்சு பேசியோ நேரில் போயோ அசத்துவது , என் பழக்கம். நீ ஒருத்தி தான் எப்போவும் தொடர்பு கொண்டு பேசறடீ ன்னு வாங்க , அவர்கள்
வாழ்க்கையின் ஓட்டத்தில் வயதானவர்களா நினைக்க ஆரம்பித்திருந்தால் நான்போய் அவர்களை வருடங்களுக்கு பின்னால் அழைத்து சென்று இளமையாக்கிவிட்டு வருவேன் கணக்கிலடங்காதவர்களின் நட்பு வட்டம் ஒரு சாதனை.//

நானும் அப்படிப் பண்ணுவேனே... நல்ல பழக்கம் அதில கெடைக்கிற சுகமே தனிதானே...

//கேட்டவங்களுக்குத்தானே கஷ்டம் எனக்கென்ன...//

அது சரி :-)

//பாட்டில் மூடி ரப்ப்பர் எதுவும் கண்ணுக்கு தெரியாம தண்ணியோட அப்படியே ஆவியாகி வெளியே போனப்புறம் எங்கே அது ன்னு தேடி சாதனை புரிந்திருக்கிறேன்...//

அது சாதனைன்னா கொழம்ப எவ்வளவே நேரம் கொத்திக்க வைக்கணுமின்னு தெரியாம கொதிக்க வைச்சு, எங்கட கடைசில கொழம்ப காணமேன்னு கரண்டியை விட்டு தொழவிரது எவ்வ்வ்வ்ளோ பெரிய்ய்ய்ய சாதனை ;-)))

ஹும்... நிறைய நகைச்சுவை உணர்வும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா தம்பி அருட்பெருங்கோ கால் வலிக்குதுன்னு பரிட்சைக்கே போக மாட்டீங்களா ? நான் செய்தது சாதனைன்னா நீங்க செஞ்சது பெருஞ்சாதனை..இப்ப ஓகேவா.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முதல் குழந்தை பிறந்ததும் வயலினை அப்பாக்கிட்ட கொடுத்த சாதனை இந்த வரிசையில் வரலை..அது டில்லிக்கு வந்தா கச்சேரி கேக்கலாம் மங்கை...ஆமா செம போர் இன்னைக்கு அதான் எட்டு போட்டேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி அது தான் நாம எல்லாம் ஏறக்குறைய ஒரே மாதிரி யோசிக்கறவங்களா இருக்கறதால தான் வலைப்பதிவே எழுத வந்துருக்கோம்ன்னு வல்லியம்மா சொன்னாங்களே...அத ஒவ்வோரு டேக் ம் நிரூபிக்குது பாருங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெகா முதல் வருகை என்று நினைக்கிறேன்...நன்றி.

கொழம்பு கொஞ்சம் கொதிச்சா சாம்பார்..ரொம்ப கொதிச்சு கெட்டியானா புளிக்குழம்பு அதுக்கும் மேல போனா சுண்டக்கொழம்பு...ஆனா ஒரு ஸ்பூன் வந்தா அது சாதனை தான்.

பாலராஜன்கீதா said...

// 8.வேறென்ன சொல்றது ...சாய்ஸில் விடலாமா? //

***பேசாம*** ஜி அவர்களின் கமெண்ட்டை எட்டாவ(த)தாக வைத்துக்கொள்ளலாமா ? :-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க பாலராஜன் கீதா...எப்படியோ நம்ம பதிவுக்கும் வந்து பின்னூட்டம் போட்டுட்டீங்க.(கப்பி அண்ட் வெட்டி சொன்னாங்க நல்லா எழுதினாத்தான் வருவீங்களாம் பதிவுக்கு)
முதல் வருகை ரொம்ப நன்றி.

Radha Sriram said...

வயலின் கத்துகிட்டீங்களா?? சூப்பர் போங்க.....நானும் இப்பதான் பாட்டு ஆரம்பிச்சு இருக்கேன்...தாட்டு வரிசைல இருக்கேன்....

//எட்டு படிச்சீங்களா அப்படி நானும் செய்திருக்கேன்.. குழந்தை அழுதான்னு பாக்கப்போய் பாத்திரத்தில் ஸ்டெரிலைஸ் பன்ணப்போட்ட பாட்டில் பாட்டில் மூடி ரப்ப்பர் எதுவும் கண்ணுக்கு தெரியாம தண்ணியோட அப்படியே ஆவியாகி வெளியே போனப்புறம் எங்கே அது ன்னு தேடி சாதனை புரிந்திருக்கிறேன்...பூரி செய்து விட்டு குறைத்து வைத்த அடுப்பை அணைக்க மறந்து எரிய விட்ட சாதனை//

இந்த பால் பாட்டில் நானும் பண்ணிருக்கேனே.ஆனா நான் ஈய சொம்பு அண்ட் அயர்ன் பாக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்........:):).

காயத்ரி சித்தார்த் said...

யக்கா!! லேட்டா போட்டாலும் லேட்டஸ்ட்டா போட்டுட்டீங்க!! வாய் ஒயாம பேசுவீங்களே? அதை எட்டாவதா போட்ருக்கலாம் இல்ல?

//எல்லா ஆசிரியர்கள் மனதிலும் இவ புத்திசாலின்னு ஒரு இமேஜ் ஏற்படுத்தி வச்சிருந்ததும் சாதனை தானே//

அப்டியா? :)))

காயத்ரி சித்தார்த் said...

நிஜமாவே எளிமையா அழகா இருக்குக்கா!! அலட்டிக்காம உங்க பெருமை எல்லாம் சொல்லிரூக்கீங்களே எப்பிடி?

காயத்ரி சித்தார்த் said...

உங்க பையன் ரொம்ப சமத்துன்னு நானும் அம்மாவும் இங்க வந்து கூட பேசிகிட்டோம்!! உண்மையாவே ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அதுவும் போட்டியில் கம்பி வாத்தியம் அப்படின்னு ஒரு பிரிவுக்கு ஆளே இல்லை .
அதுனால் போட்டி இன்றி முதல் பரிசும் கோல் டு மெடலும்...எப்படி.சாதனை தானே.//

இதுதான் நல்ல சாதனை

துளசி கோபால் said...

//கொழம்பு கொஞ்சம் கொதிச்சா சாம்பார்..//

அது தெளிஞ்சா, மேலே இருப்பது ரசம்:-))))

நல்லா ................வே இருக்கு ஏழு.

Ayyanar Viswanath said...

பாசக்கார குடும்பமே (அபிஅப்பா மங்கை மற்றும் முத்துலக்ஷ்மி) !!
:@ :@
ஒரு கருத்து சொல்ல விடமாட்றிங்களே ..ரொம்ப டிசிப்ளினா நேர்கோட்ல அழகா இருந்தது நடை அதான் அழகா எளிமையா இருக்குன்னேன்..

அப்போ சாய்ஸ் ல விடுறத நீங்க பெருமை லிஸ்ட் ல சேக்கலியா? நான் நானா இருப்பது மிகப்பெரிய பெருமைங்கோவ்..சொல்லப்போனா 9 எழுதி இருக்கிங்க

பங்காளி... said...

ஆஹா,

இப்படியும் எட்டு போடலாமோ...நமக்கும் ஒரு ட்யூ இருக்கு, வழி காட்னதுக்கு நன்றி.

நீங்க ஒரு வயலின் மேதை....நம்புங்க தாயே....என்னோட கம்பேர் பண்ணினா நீங்க ஒரு வயலின் மேதைதான்...ஹி..ஹி...ஏன்னா எனக்கு வயலின்னு எழுதுனதைத்தான் வாசிக்க தெரியும்....

siva gnanamji(#18100882083107547329) said...

//இளமையாக்கிட்டு வருவேன்....//

பிரமாதமா சொல்லியிருக்கீங்க..
இப்படிக்கூட உங்களாலெ எழுத முடியுமா னு வியந்திட்டேன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராதா பாட்டு கத்துக்கிறீங்களா கத்துக்குங்க , இசை மாதிரி மனதை லேசாக்கிற விஷயம் வேற இல்லங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காயத்ரி நன்றிப்பா எட்டு எழுதறதே அலட்டலுக்கு தான் அதுல அலட்டல் இல்லாமலா ? என் பையன் தானே அதெல்லாம் நல்லபையன்னு பேரெடுத்துடுவான் அவன் அவங்க அப்பா மாதிரி லக்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாதனை தானேங்க ஒத்துக்கிறீங்களா நன்றி யோகன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி ஆ அது! சாம்பாரை ரசமாக்கியது கேள்விப்பட்டு இருக்கேன் அனுபவம் இல்லை..ஆனா சாம்பாரை புளிக்குழம்பாக்குவது நடப்பது தானே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பங்காளி நான் உங்களுக்கு வழிகாட்டினேனா..சாதனைகள் கூடிக்கிட்டே போகுதே...வயலின்னு எத்தனை மொழியில வாசிக்கத்தெரியும்ன்னு வேணா சாதனை செய்யுங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யனார் ரொம்ப புகழறீங்க
\\அப்போ சாய்ஸ் ல விடுறத நீங்க பெருமை லிஸ்ட் ல சேக்கலியா? நான் நானா இருப்பது மிகப்பெரிய பெருமைங்கோவ்..சொல்லப்போனா 9 எழுதி இருக்கிங்க // சாய்ஸ்ல விடுறது எட்டு..
நான்நானா இருப்பது 9 ஆ...
ஆகாக்கா.என்ன விளக்கம்.நன்றி நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிவஞானம்ஜி ஏங்க ஜி ஏன் அப்படி எல்லாம் வியந்தீங்க..புரியலயே...

\\//இளமையாக்கிட்டு வருவேன்....//

பிரமாதமா சொல்லியிருக்கீங்க..
இப்படிக்கூட உங்களாலெ எழுத முடியுமா னு வியந்திட்டேன் //


அப்படி ஒன்னும் இந்த பொண்ணுக்கு??!! :) வயசாகலயேன்னு அப்படி நினைச்சீங்களா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் டெல்பைன் ...கர்னாடிக் தான்..கீர்த்தனை எல்லாம் வாசிச்சேன்..ஆனா வோகல் தனியாக்கத்துக்கல அப்ப...அதுனால தாளம் கொஞ்சம் தடுமாறும்...ஓட்டமா ஓடும் என் பேச்சு மாத்ரியே பாட்டும்..
நல்லா கர்நாடிக் தெரிந்தவங்களுக்கு தப்பு கண்டுபிடிக்க முடியும்..

நாகை சிவா said...

அருளுக்கு சொன்ன பெரும் சாதனை நமக்கும் கிடைக்கும்... எவ்வளவு லேட்டா உள்ள போறோம், எவ்வளவு சீக்கிரம் வெளி வரோம் என்று பந்தயம் கட்டி தான் உள்ளேயே போறது.....

உள்ள இருக்கும் சில நேரத்திலும் கொடுக்கும் பேப்பரில் கட்டம் போட்டு வார்த்தை விளையாட்டு விளையாடுவது, கிராஸ் விளையாடுவது என்று தான் இருக்கும். சில பெயர் ப்ரீட்சை பேப்பர பாத்தா தான் கவிதை எழுத வரும் என்கிற மாதிரி கவிதை எழுதி காட்டுவானுங்க... அப்பவே நம்ம திறனாய்வு திறமையும் ஸ்டார்ட் ஆயிடுச்சு....

வயலின் - என்ன கொடுமை செய்தார்கள், இசை ரசிகர்கள்... ;-)

நாகை சிவா said...

2 அல்டிமேட்.... இதை தொடரவும்....

வாழ்த்துக்கள்

அயன் உலகம் said...

நானும் ஒரு தடவை 8 போட கூப்பிடலையே....
ச்ச் ச்ச் ச்ச்

http://ayanulagam.wordpress.com/2007/07/03/8game/

Anonymous said...

//வயலின் - என்ன கொடுமை செய்தார்கள், இசை ரசிகர்கள்... ;-) //

ரிப்பீட்டே

அதுவும் பேச்சு மாதிரியே விடாம தொடர்ந்ததா?

உங்களின் பேச்சுத்திறனையும் சேர்த்திருக்கலாமோ..

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா...நீங்களும் அருளும் இப்படி நான் செய்தது சாதனையே இ ல்லைன்னு நிரூபிப்பதை ஆட்சேபிக்கிறேன்...எனக்கு இதான் பா சாதனை..சே இதெயெல்லாம் கூட சாதனையாக்க விடமாடேங்கறாங்கப்பா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அயனுலகம் கார்த்தி என்ன இது நிங்கள்ளாம் வந்து கமெண்ட் போடறீங்க..நேரம் இருக்கா...
கூப்பிட்டா மாட்டிவிட்டதா திட்டுவாங்களோனு பயம் தான்.

காட்டாறு said...

ஏனுங்க... மங்கையும், நீங்களும் சொல்லி வச்சி எட்டை ஏழா போட்டீங்களா? அவங்க என்னான்னா பாடனுமின்னு சொல்றாங்க... நீங்க என்னான்னா வயலின் வாசிப்பேன்னு சொல்றீங்க... என்ன நடக்குது இங்கே? தலை நகரத்தில் ஏதாவது விஷேசமாங்க யக்கோவ்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு ,ரெண்டு பேருமே எட்டு எழுத வேணான்னு பார்த்தோம்..எழுதலன்னா பந்தா விடறதா நினைப்பாங்கன்னு எழுதினோம்..எழுத என்ன இருக்குன்னு ஒரு நினைப்பு தான்..

ஏழு போட்டதால் தெரிஞ்சிருக்குமே எங்க ஒற்றுமை.தில்லி சகோதரிகள் கச்சேரினு எல்லாம் ஆரம்பிக்க மாட்டோம் பயப்படாதீங்க.