December 9, 2006

நன்றி

களிமண்ணாய் வந்து விழுந்தேன்
உன் முன்னால்,
பதமாய் ஆக்கினாய்
வணங்கும் மண் பொம்மையாய்.
விதையாய் வந்து விழுந்தேன்
உன் முன்னால்,
நேசமாய் வளர்த்தாய்
உதவும் கனிமரமாய்.
எழுதுக்களாய் வந்து விழுந்தேன்
உன் முன்னால்,
கவனமாய் சேர்த்தாய்
மதிக்கும் பொன் மொழியாய்.

இந்த கவிதை[??!!] என் ஆசிரியையை நினைத்து எழுதியது.பெற்றோருக்கும் கூட இது பொருந்துவதாக நினைக்கிறேன்.

1 comment:

Divya said...

ஆசிரியர், பெற்றோர் இருவருக்கும் இந்த வரிகள் பொருந்தும்,

அழகான வரிகள், கவிதை அருமை!