இன்று நாட்பத்திரிக்கையை திறந்ததுமே, முதல் செய்தி, அதிகபட்சமாக சிறுநீரகம் தானம் அளிப்பவர்களாக பெண்கள் . 90%கணவன் மனைவிக்குள் நடக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மனைவி தருபவர்.
ஹர்ஷ் என்னும் மருத்துவர் சொல்கிறார்,அவருடைய வேலைக்காலத்தில் இதுவரை மொத்தம் ஆறே ஆறு கணவர்கள் தான் மனைவிக்கு சிறுநீரகம் தந்திருக்கிறார்களாம். பொதுவாக பெண்கள் அறுவைசிகிச்சைக்கு பதிலாக டயாலிசிஸ் முறையை தேர்ந்தெடுக்கிறார்களாம்.
2 அல்லது 3 லட்சங்கள் ஒருமுறை செலவழிப்பதை காட்டிலும் மாதம் 10,000 அல்லது20,000 டயாலிசிஸ் கு
செலவழிப்பது அதிகம் தான்..ஆனால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பெண்களுக்கு சிறுநீரகம் கிடைப்பது இல்லை.
கணவன் கொடுக்க தயாராக இருந்தால் அவர்களின் குடும்பம் அதனை எதிர்க்கும்.மற்றும் உழைப்பவன் அவன் ஒருவனே என்பதால் சாத்தியக் கூறு மிகவும் குறைவு.
50% அறுவை சிகிச்சை செய்துகொள்ள அறிவுறுத்தப்படும் பெண்நோயாளிகள் மீண்டும் மருத்துவரிடம் வராமலே போய்விடுகின்றனராம். கல்யாணமாகாத பெண் நோயாளிகள் வரும்போது கேட்கப்படும் மிக முக்கியக் கேள்வி "என் பெண்ணுக்கு திருமணம் நடக்குமா?" என்பதாகும். ஆனால் கல்யாணமாகாத ஆண்கள் வரும் போது இத்தகைய கேள்விகள் எழுவதே இல்லையாம்.
படித்ததும் நினைவு வந்தது ஒரு கதை.
அறிஞர் அண்ணா பொற்பதக்க முதல்பரிசு பெற்ற கதை.
விலை அதன் தலைப்பு.கணவன் உயிருக்கு ஆபத்து சிறுநீரகம் தேவை.மனைவிக்கும் அதே ஏபி நெகடிவ்.கணவனும் மாமியாரும் உயிரையும் தருவதாக சொன்னதெல்லாம் பொய் என சந்தேகம் கொள்ளும் போது அவள் சொல்கிறாள். என் தந்தை நீங்கள் கேட்ட வரதட்சணைக்காக தலையை அடமானம் வைப்பதற்கு பதில் நான் என் சிறுநீரகத்தை விற்று விட்டேன். அதுதான் உங்கள் கையில் வைரமோதிரமாக செயினாக இருக்கிறது.
இப்பொது கூட என்னுடைய சிறுநீரகம் தருவதாக தான்
மருத்துவரிடம் கூறினேன். அவர் மறுத்துவிட்டார்.இருவரில்
ஒருவர் தான் உயிர் வாழலாம் என்கிற நிலைவந்தால், அது நீங்களாக இருக்கட்டும் .எடுத்துக் கொள்ளுங்கள் .
2 comments:
\"என் தந்தை நீங்கள் கேட்ட வரதட்சணைக்காக தலையை அடமானம் வைப்பதற்கு பதில் நான் என் சிறுநீரகத்தை விற்று விட்டேன். அதுதான் உங்கள் கையில் வைரமோதிரமாக செயினாக இருக்கிறது.\"
வரதட்சணை கொடுமைதனை உணர்த்தும் இந்த வரிகள் நெஞ்சை உலுக்கியது!!
நல்லதொரு பதிவு!! பாராட்டுக்கள்!!
நன்றி திவ்யா
93ம் வருடம் தமிழரசி பத்திரிக்கை வெளியிட்ட கதை.டைரியில் எழுதி வைத்திருந்தது.இந்த செய்தியை பார்த்ததும் நியாபகம் வந்துவிட்டது.
.
Post a Comment