December 19, 2006

பிறைநிலா எனும் காதலி

காதலனை ,
கண்டால் பரவசமும்,
பிரிந்தால் சோகமும்,
காதலில் இயல்பு.




மேகம் விலகியபின்
பிரகாசமாய்,
நாணத்தில் தலைகுனிந்து,
பௌர்ணமி வரை பூரிப்பாய்,





மேகத்தில் முகம்மறைத்து
சோகமாய்,
தலை கவிழ்ந்து,
அமாவாசை வரை மெலிவாய்,

நிலவும் நேசத்தில் சிக்கியுள்ளதோ?
நிலவின் நேசம் யாரிடத்தில்
உங்களுக்கு தெரியுமா?

4 comments:

ஜி said...

நிலவுக்கு பக்கத்திலேயே நட்சத்திரத்தையும் போட்டிருக்கீங்க..

ஒருவேளை ஏதாவது வால் நட்சத்திரத்தின் வால்ச் செயலாக இருக்குமோ?

Divya said...

வளர் பிறை, தேய் பிறை இரண்டையும் ஒரு காதலியோடு ஒப்பிட்டு எழுதிய உங்கள் கவிதை அருமை!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சோகமா பிறைநிலா மட்டும் தனியா
இருக்கற மாதிரி படம் தேடினேன்
சரியா அமையல.அதான்.

ஆனா நீங்க கவிதையின் கடைசி கேள்விக்கு நல்லாவே யோசித்து பதில் சொல்லி இருக்கீங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னோட பதிவுக்கு தொடர்ந்து வருகை தந்து ,அருமை என்றெல்லாம் சொல்லி ஊக்குவிக்கும் திவ்யா உங்களுக்கும் நன்றி.