''மேகலா ஒன்னுமே பிடிபடாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணாப்போயிடுமோன்னு கவலைப்பட்டு பேசும்போது கூட நானிருக்கேன்
உனக்குன்னு சொல்லமுடியலடா உங் கொட்டி கேட்டுட்டு வந்திட்டேண்டா''
''ஆமா எத்தன காலத்துக்குதான் இப்படி புலம்பிக்கிட்டு இருப்பயோ தெரியல
இந்தா விசா வந்தா மஸ்கட் ஓடி போயிடுவேன் . அதுவரைதான் இந்த
சுமைதாங்கி வேலை எல்லாம் . அப்புறம் எங்கபோய்சொல்லுவ? ''
''சரிசரி விடு அந்த பையனப் போய் பாக்கணும் மேற்கொண்டு என்னதான்
செய்யபோறான்னு கேட்கசொன்னா . வண்டிய எடுடா ''
''முதல்ல எனக்கு சொல்லு அப்புறம்தான் எல்லாம்''
''என்ன சொல்லனும் உனக்கு அவனக் காதலிக்கறத என்கிட்டதான் முதல்ல
சொன்னா அப்பம்போய் நானுன்ன ரொம்பநாளா லவ் பண்ணரன்னு சொன்னா எப்படி இருக்கும்?''
'' ஓகே. நல்லா இருந்திருக்காதுதான் இப்ப கதையேவேறயாச்சே.
கஷ்டப்பட்டு சம்மதமெல்லாம் வாங்கினப்புறம் தாலி வாங்க கடைக்கு போயிட்டு சும்மா வந்த அவனா அவள நல்லா வச்சுப்பான்.''
''நல்லா யோசிச்சு சொல்லு. ஜாதகத்த காரணம் சொன்னான் கொஞ்சநாள் . எனக்கு தெரியும் அவன் இத கட்டமாட்டான். வீட்டுலபாக்குற பணக்கார பொண்ணத்தான்கட்டுவான் ,அதுதெரியாம இந்தப் பொண்ணு அடிஉதை வாங்கிட்டு சொந்தபந்தம் எல்லாத்துக்கிட்டயும் அவமானம் பட்டு உட்கார்ந்து இருக்கு . உனக்கும் புரிஞ்சுதானிருக்கும் அந்த பொண்ணு மேல இருக்கற காதலால அவ நினைக்கறத நடத்தி சந்தோசப்பட வைக்கணும்ன்னு அலையற. .''
''இந்த கல்யாணம் மட்டும் நடக்கலன்னா அதுக்கப்பறம் அவ ளுக்கு மாப்பிள்ளை யாரும் பார்க்கபோறது இல்ல அவ வாழ்க்கை பத்தி யோசிக்கல நீ''
''இதோட கடசியா இருக்கட்டும் அவன் இன்னைக்கு சரியா பதில் சொல்லல
என்கிட்ட விட்டுடு . எங்க பேசணுமோ பேசி மஸ்கட் போற முன்னாடி,
உன்ன ஜோடியா பார்க்கணும்டா நான் .''
நன்றியோடு நண்பனின் வார்த்தைகளை மனதில் நினைத்து கொள்ளும்போது
''என்ன கனவா? போய் ரெடியாகுப்பா ISD பூத் போய் ஒரு கால் மஸ்கட் பேசிட்டு கல்யாணநாளுக்கு கோயில்ல ஒரு அர்ச்சனை பண்ணிடலாம் சரியா?''
மேகலாதான்.
4 comments:
From aasath
Try to write a socio-political stories. Now your vision on this story like "VIKADAN ORU PAKKA KADHAI"
//Try to write a socio-political stories. Now your vision on this story like "VIKADAN ORU PAKKA KADHAI" //
அனுப்பி இருந்தா போட்டுருப்பாங்களோ?
ஆசாத் ஒருபக்கம் பாராட்டு போல
தெரியுது உங்க பின்னூட்டம் .காதல்கதை எழுதாதீங்கன்னு சொல்ல வரீங்களா?நீங்க சொன்னமாதிரியும் எழுத ட்ரைபண்ணறேன்.இப்படிஒரு ரசிகரா?:)
from aasath
"Kathalai paadu porulil vaippathalayae oru kadhai kadhal kadhai aagi vidathu. Kadhalai athan samuuga urpathi uravugalin vuudaaga vivarithaal meendum arasialai samuugathai porulaathaara varupadugalaik kaaddi athan vuudaaga theervugalaiyam cholla veandum. maaraga kanavu vazhippatta kadhaikala neengal ezhuthinaal enna aanadha vikadan ezhuthinal enna?
ஆசாத்
நானிந்த கதையை எழுதும்போது
காதல் கதையாகத் தானெழுதினேன்.
ஒரு பெண்ணின் மேல் இருந்த காதலால்
அவள் தேர்ந்தெடுத்திருந்த தவறான காதலை அவளுக்கு நடத்தி தருவதைவிட்டு நல்லவனை வாழ்க்கைத்துணை ஆக்குவதாக
காட்டும்போது எங்கிருந்து கனவு
வழிபட்டகாதல் வருகிறது.எனக்கு தெரியலையே?
Post a Comment