January 27, 2007

குழந்தைகளுக்கான சில தளங்கள்



கணினி வாங்கிய புதிதில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களையும் தேடித்தேடி படித்து என் தங்கத்துக்கு சொல்லித்தருவது என்வேலையாக இருந்தது. இப்போதும் தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் சிறு குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களுக்கு அந்த உரல் களை தந்து நேரம் கிடைக்கும் போது பார்க்கச் சொல்வேன்.அவற்றில் சில இங்கே,

http://www.tamilvu.org/ -- -- இதில் தமிழ்நாட்டினை விட்டு
வெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது.
அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலிஅமைப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும்.


www.pbskids.com -- விதவிதமான தொலைக்காட்சி காரெக்டர்களுடன் விளையாட்டும் கற்றுக்கொள்வதற்குமான தளம்.உதாரணத்திற்கு
Between the lions இதில் word play, alphabet soup ,A.B.Cow
போன்றவற்றால் விளையாட்டாய் ஆங்கிலம் கற்கலாம்.

www.little-g.com -- little fingers software இதை நம் கணினியில்
தரவிறக்கம் செய்து கொண்டு விளையாடலாம். இதிலும் ஆங்கிலத்தின் ஆரம்ப நிலைகளை படிக்கலாம்.

http://www.sanford-artedventures.com/ -- வரைய சொல்லிக் கொடுப்பதுடன் விளையாட்டும் வரைபடங்களின் தியரியும் உள்ளது.



http://www.dreezle.com/ -- இது எல்லா கணினியிலும் கிடைக்கும் பெயிண்ட் ப்ரஷ் போலத்தான் ஆனால் சில மாற்றங்களுடனான இத்திரையில் வரைவது இன்னும் எளிது , இது மவுஸ் கண்ட்ரோல் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு உதவும். மற்றும் கற்பனைத் திறனை வளர்க்க .

http://www.suzyque.us/index.htm -- இந்தத்தளத்தில் worksheets பகுதி நன்றாக இருக்கிறது. வீட்டிலேயே தாய் சொல்லிக்கொடுப்பதற்காக அழகான விளக்கங்களுடன் இன்னும் சில arts and crafts என்று ஒரு வெர்ச்சுவல்
பள்ளிக்கூடம்.


( குழந்தைகள் அதிகநேரம் கணினி முன் இருக்கக்கூடாது, மவுஸ் பிடிப்பது விரல்களில் வலி ஏற்படுத்தும்,இருப்பினும் எப்போதாவது சில நேரங்களில் இது போன்ற தளங்களில் சென்று கற்றுக்கொள்வது
தவறாகாது. விளையாட்டாய் கற்றுக்கொள்வதற்கு தான் இவைகள். )

24 comments:

jeevagv said...

மிக்க நன்றி, மிகவும் பயனிள்ளது.

ILA (a) இளா said...

நல்ல கருத்துள்ள பதிவு, இதை கதை சங்கத்தில் பரிந்துரைக்கலாமா?
கதைச் சங்கம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஜீவா (Jeeva Venkataraman) said...
மிக்க நன்றி, மிகவும் பயனிள்ளது.\\

நன்றி ஜீவா.

\\ILA(a)இளா said...
நல்ல கருத்துள்ள பதிவு, இதை கதை சங்கத்தில் பரிந்துரைக்கலாமா?
கதைச் சங்கம் \\

மகிழ்ச்சி. தாரளமாக உபயோகிக்கலாமே.

✪சிந்தாநதி said...

நல்ல தகவல்கள்.

இதோ தமிழில் ஒரு மழலைகள் தளம்

http://mazalais.com/

Anonymous said...

Learn Tamil - through English ( Primary ) at http://thamizamuthu.com/nasan/eedu001/eeduindex.htm

-Pandian

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சிந்தாநதி,பாண்டியன் இருவரின் வருகைக்கும், மேலும் தளங்களின்
முகவரிகளை அளித்தமைக்கும் நன்றி.

பத்மா அர்விந்த் said...

லஷ்மி
உங்கள் பின்னூட்டங்களால் கவரப்பட்டு பதிவின் பக்கம் வந்தேன். நல்ல தளங்கள். இன்னும் சில முக்கியமான தளங்கள் உண்டு. அதை பிறகு இணைக்கிறேன். நிலாச்சாரலில் குழந்தைகளுக்கான பூஞ்சிட்டு பக்கம் எழுதும் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு பிடிக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பத்மா அர்விந்த் said...
லஷ்மி
உங்கள் பின்னூட்டங்களால் கவரப்பட்டு பதிவின் பக்கம் வந்தேன்.//
நன்றி பத்மா அர்விந்த்.
விவாதங்களின் போது தான் உண்மையில்
நன்றாக பேச(எழுத)வருகிறது என்று நினைக்கிறேன்.
அடிக்கடி வருகை தாருங்கள்.
ஊக்கமளிக்கிறது உங்கள் பாராட்டு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி விழியன்.இது ஒரு பகுதி தான்.
மேலும் கிடைக்கும் தகவல்களை பதிவிடுகிறேன்.

சிவபாலன் said...

பயனுள்ள தகவல்!

பதிவுக்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருகைக்கு மறுமொழிக்கும் நன்றி சிவபாலன்.

Jeyapalan said...

இங்கேயும் ஒரு பக்கம் உண்டு:
http://ca.geocities.com/jeyakand/index.html

Anonymous said...

thank u very much for the kids links.........they are very useful

முத்துலெட்சுமி/muthuletchumi said...

thankyou for u r comment

Anonymous said...

www.babloo.com - Another website for kids.
-Mani

தென்றல் said...

பயனுள்ள தளங்களை அறிமுக படுத்தியற்கு நன்றி!

இந்த தளத்தையும் முயற்சித்துப் பாருங்கள்!

http://www.noggin.com/

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மணி , தென்றல் இருவருக்கும்
நன்றிகள். பப்லு பார்த்திருக்கிறேன்.
நல்ல தளம் தான்.
தென்றல் சொன்ன தளத்தையும் சென்று பார்க்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

உரல்களுக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொத்தனார்ஜி..மறுமொழிக்கு நன்றி.

Anonymous said...

இங்கே சென்று படியுங்கள் முத்து லட்சுமி.

அபி அப்பா said...

எப்படி இந்த பதிவை படிக்க விட்டேன்? அபிபாப்பாவுக்காக தங்கமணிக்கு தகவல் சொல்லியாச்சு. நன்றி சகோதரி:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லிங்க் கொடுத்ததற்கு நன்றி,அனானி அவர்களே சென்று படித்தேன்.
அங்குள்ள தளங்கள் எனக்கு
அறிமுகமானவைதான்.இங்கு
வருவோருக்கு உதவியாக வே இருக்கும்.
அன்று தொகுக்க சோம்பேறித்தனமாக இருந்ததால் கொஞ்சம் மட்டும் சேர்த்தேன்.

------

வாங்க அபிஅப்பா இன்னும்
பின்னூட்டத்தில் உள்ள லிங்க் களும் சென்று பாருங்கள்.

கண்மணி/kanmani said...

எனக்குத் தெரிந்த இன்னொரு குழந்தைகள் தளம் http://dimdima.com கல்வி,வேடிக்கை,மேஜிக் என அருமையாக இருக்கும்.இன்னும் சில நினைவில் இல்லை வந்தால் பின்னூட்டுகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கண்டிப்பாக கண்மணி புதியவர்களுக்கு
மற்றும் தமிழ் கூகுள் மூலம் தேடுபவர்களுக்கு இவையெல்லாம்
உதவியாக இருக்குமே.