நான் ரசித்த படங்களின் வரிசையில் இன்னொன்று THE LAND HAS EYES .ஒரு வகையில் போராடும்பெண்ணின் கதை என்பதால் மிகவும் பாதித்த கதையும்கூட. Fiji யின் ஒரு அழகுதீவின் மிக எளிமையான ஒரு பழங்குடி சிறுமியின் கதை.
கடலில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணை அவளின் சகோதரர்களில் ஒருவனே தவறுக்குட்படுத்தும் போது மற்ற சகோதரர்களும் அவளை வெறுத்து யாரும்இல்லா தீவில் விட்டுச் செல்ல , தூக்கியெறியப்பட்ட அந்தப் பெண் பின்னாளில் ரோட்டமென்களின் முதல் தலைமுறையாகவும் அவர்களின் வீரப்பெண்மணியாகவும் கருதப்படுகிறாள்.
THE LAND HAS EYES
THE LAND HAS TEETH
AND KNOWS THE TRUTH
இந்த கதையினை தந்தை சொல்லக்கேட்டு வளரும் சிறுமி விக்கி . அவள் தந்தையை திருட்டு குற்றம் சாற்றி ஏழ்மையின் கரங்களுக்கு பலி கொடுக்கும்போது தானும் தூக்கியெறியப்பட்ட அந்த வீரப்பெண்ணும் ஒன்றே என்று உணர்கிறாள்.
தானும் அவளைப்போல தன்னுள்ளிருக்கும் தைரியத்தை திரட்டி எதிர் வரும் துயரினை எதிர்த்து கடும் முயற்சியால் படிப்பதற்கு ஊக்கத்தொகையை பெற்று மேற்படிப்புக்காக fiji செல்கிறாள்.
பக்கத்து வீட்டு பணக்காரனால் தந்தை காவலர்களிடம் செய்யாத குற்றத்திற்காக தலைகுனியும் போது ஒளிந்து இருந்து மொழிபெயர்ப்பாளன் பணத்திற்கு விலைபோனதை தந்தைக்கு சொல்லுகிறாள்.தந்தை இந்நிலத்திற்கு கண் உண்டு உண்மை யை பார்த்துக் கொண்டிருக்கிறது கெட்டது செய்தவனை அது நிச்சயம் பார்த்துக்கொள்ளும். இதற்குதான் உன்னை படிபடி என்கிறேன். என் கனவை நிறைவேற்று என்ற தந்தைக்காக கைவினை பொருட்கள் தயாரித்து வீட்டையும் காப்பாற்றுகிறாள்.
அந்த பழய நம்பிக்கை உண்மை என்பது போல சில நாட்களிலேயே அந்த பணக்காரன் நண்பன் மொழிபெயர்ப்பாளனால் வெட்டுப்பட்டு இறக்கிறான்.
எல்லா நிலங்களுக்கும் கண் இருக்கிறதா?
11 comments:
நல்ல பதிவு.
அழகிய படங்கள்.
"நிலங்களுக்கு கண் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் அதன்மீது விழும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஞாபக சக்தி என்பது நிறையவே இருக்கிறது. அநியாயம் காரணமாக ஒருவர் சாய்க்கப்பட்டு உடலானது மண்ணில் புதைக்கப்படுவதில்லை. மாறாக, அனைத்து வம்சத்து, பாரம்பரிய கருவூல விதையாக விதைக்கவே படுகிறார்" வரலாற்றை யாராலும் எப்போதும் மறைக்கவோ, அழிக்கவோ முடியாது. நியாயமே வெல்லும்!
இதை நானும் பார்த்தேன்.Zee Cinemaல இந்தவாரம்
:)
ஆருமையான கதை
அட! பிஜித்தீவுப் படமா? யாரு இயக்கம்?
நாங்க அங்கே இருந்தப்ப படமெல்லாம் இல்லையேங்க.
இன்னும் சொல்லப்போனா அங்கே 'அப்ப 'தொலைக்காட்சிகூட இல்லை(-:
வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி , மாசிலா
நன்றி,நாடோடி.
நான் சில மாதங்கள்
முன் பார்த்தேன்.எனவேதான்
இன்னமும் அதிகமாக விவரிக்க
இயலவில்லை.இன்னும் பல நல்ல
காட்சிகள் இருந்தன.
vilsoni hereniko Queen victoria school லில் பிஜியில்
படித்தவராம்.
SAPETA TAITO – Viki
1986ல் பிஜியில் பிறந்தபெண்,படித்து
வளர்ந்தது மால்காகா,ரொடாமாவாம்.
அதான் உங்கள சந்திச்சப்போ
பிஜியிலயா இருந்தீங்க அழகான
ஊராச்சேன்னு விசாரிச்சேன்.
நல்லா இருக்கு லட்சுமி கதை. கதையுடன் கூட, இன்னும் கொஞ்சம் விரிவாக விமர்சனமும் எழுதி இருக்கலாமே நடிப்பு, இசை, மற்ற விவரங்கள் பற்றியும்..
good story.
விபரத்துக்கும் பதிவுக்கும் நன்றி
//பொன்ஸ் said...
நல்லா இருக்கு லட்சுமி கதை. கதையுடன் கூட, இன்னும் கொஞ்சம் விரிவாக விமர்சனமும் எழுதி இருக்கலாமே நடிப்பு, இசை, மற்ற விவரங்கள் பற்றியும்.. //
பாத்து பலமாசம் ஆச்சு பொன்ஸ்
என்னால இன்னும் விரிவா எழுத வரல.பார்த்த சமயத்தில வலைப்பதிவு
பத்தி தெரியாதே இல்லன்னா அப்போவே போட்டிருக்கலாம்.
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி-/பெயரிலி
Post a Comment