புரோட்டா வாங்கிக்குடுத்து புரணி கேட்பவர்கள் மத்தியில் புரணி பேசப்போன இடத்தில் புரோட்டா செய்வதற்கான பக்குவம் கேட்டு வரும் அளவு பக்குவமானவள் நான். பொள்ளாச்சியில் இரண்டு வாரம் இருந்தாலும் கடைசி ரெண்டு நாளில் பக்கத்து வீட்டுல இருந்து வந்த ரெண்டே ரெண்டு பரோட்டாவுக்கு நாங்க எல்லாருமா அடிச்சிக்கிட்டதுக்கப்பறம் எங்களுக்கும் செய்ய சொல்லித்தரனும்ன்னு கேட்டுகிட்டோம். பக்கத்துவீட்டு அம்மணி நீங்க தில்லிலேர்ந்து வந்திருக்கீங்க கொஞ்சம் சப்ஜி சொல்லித்தாங்கன்னு கேட்டாங்க..அவங்களுக்கு சன்னா ,பாலக் எல்லாம் தெரிஞ்சுது வேற எதாச்சும்ன்னு இழுத்தாங்க.. தில்லி என்னங்க தில்லி எல்லா சப்ஜிக்கும் ஒரே ஸ்டார்ட்டிங்க் தான்னு சொல்லி ஸ்டார்ட் செய்தேன்..
வெங்காயம், தக்காளி,இஞ்சி ,பூண்டு தான் அடிப்படை . இதுகூட உருளைக்கிழங்கு ஒன்றை மட்டும் வச்சிக்கிட்டே எந்த சப்ஜியோடும் கூட்டு போட்டுக்கிட்டு எல்லா மேஜிக்கும் காட்டலாம். ஒரு ரெசிப்பி சொல்லிட்டு மத்ததெல்லாம் அதே தான் அடிப்படைன்னு மேலே
ட்ரை சப்ஜிக்கு போயிட்டேன். உருளை + முட்டைக்கோஸ், உருளை + முள்ளங்கி , உருளை + வெண்டைக்காய் உருளை + மட்டர் எக்ஸட்ரா எகஸட்ரா.. நோட்ஸ் எடுத்துக்கலாம்ன்னு நினைச்சது வீண் தானோன்னும் நான் தான் என் வீட்டுல சமைப்பனா இல்லையான்னும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல..
( யாரு அது பரோட்டா கதையில் பரோட்டாவைக் காணோம்ன்னு தேடறது? இங்கல்லாம் நல்லா கேள்வி கேளுங்க.. காசு குடுத்துப் பாக்கற சினிமாவில் கதையக் காணோம்ன்னு தேடாதீங்க)
கடைசியா என்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துல நானே நேரா அவங்க அடுக்களை களத்தில் புகுந்து என்னோட ஸ்பெஷல் சப்ஜியை செய்துக் காமிக்கிறதா ஒப்புக்கிட்டேன். வெங்காயம் , உருளைக்கிழங்கு, கத்திரிக்காய்,வெண்டைக்காய் , குடமிளகாய் , தக்காளி எல்லாத்தையும் வெட்டி வச்சிட்டு கூப்பிடுங்கன்னு சொல்லிட்டேன். அன்னைக்குன்னு பாத்து அவங்கவீட்டுக்கு சில நண்பர்கள் வந்திருந்தாங்க.. அவங்க மனைவிகளும் இதெல்லாம் சேத்து ஒரு காய் கேள்விபட்டதே இல்லைன்னு அடுக்களைக்குள்ள புகுந்துட்டாங்க..
நான் எழுதின வரிசை முறையாகவே காய்களை போட்டு வதக்கி மசாலாத்தூள் போட்டு மூடிமூடி வச்சு செய்தா கடைசியில் வர்ர வாசனையை வைத்து “ அம்மா என்ன செய்யறீங்கன்னு” வெளியே விளையாண்டுகிட்டிருந்த என் மகள் வந்தப்பதான் எல்லாருக்கும் அதோட மாயம் புரிந்தது. வித் எண்ணெய் விடாத ரொட்டியும் சொல்லிக்குடுத்ததில் அவங்க எல்லாரும் எனக்கும் சமையல் தெரியுமென்று ஒத்துக்கிட்டு பரோட்டா ரகசியத்தை சொல்லித்தர சம்மதிச்சாங்க..
பரோட்டாக்கு அரைக்கிலோ மாவுக்கு கொஞ்சம் உப்பு ஒரு ஸ்பூன் ஜீனி சேத்து கொஞ்சம் கொஞ்சமா மாவு பிசைஞ்சாங்க ( நான் பாத்துட்டிருந்தேன்) என் பையன் ஒரு உருண்டை மாவை அவங்க சொன்னமாதிரியே பிசைந்து செயல்முறை வகுப்பெடுத்துக்கிட்டான். மாவு பிசைஞ்சு முடிச்சதும் 'U' வடிவத்துல உருளையாக செய்துவச்சிட்டாங்க. ஒரு கிண்ணத்துல நல்லெண்ணெயில் 3 ஸ்பூன் அரிசிமாவைக் கொட்டி அதை நல்லா கோழிக்கு மஞ்சள் தடவுறமாதிரி தடவி மூடிவச்சுட்டாங்க. காலையில் ஊறவச்சா ராத்திரிக்கும் ராத்திரி ஊறவச்சா காலைக்கும் அதை பரோட்டாவாக்கலாமாம்.
(மேற்கொண்டு கதைக்கு போறதுக்கு முன்னால்: இதைக் கத்துக்கிட்டு வந்து சிலமாதங்களான பின்னும் யாருக்காக கத்துக்கிட்டு வந்தனோ அவங்களுக்கு செய்து தரவே இல்லை. நேற்று தான் அதுக்கான நேரம் வந்தது.)
உருண்டைகளா செய்து அதை நீட்டமான பலகையில் போட்டு எண்ணைய்+ அரிசிமாவுக் கலவையை தடவித் தடவி நீட்டி நீட்டி கிழிஞ்ச பனியன் மாதிரி செய்திடனும்.எங்க வீட்டுல பலகை இல்லாததால் அடுக்களை க்ரானைட் மேடையையே நல்லா சுத்தம் செய்து பனியனை கிழித்தோம்.(மகள், ”அப்பா இங்க வந்து பாருங்க கிழிஞ்ச பனியன்”னு எதுக்கு கூப்பிட்டு காட்டினா??!!..பரோட்டாவுக்காக அவ என் கட்சியில் சேர்ந்திட்டான்னு உதவிகள் செய்ததிலிருந்தும் இதிலிருந்து புரிஞ்சுது :) ) ஒருமுனையைப் பிடிச்சு தூக்கி முறுக்கு சுத்தறாப்பல சுத்தி வட்டமாக்கி வச்சிட்டோம்.
எல்லா முறுக்கும் சுத்தினப்பறம் அதை லேசா அழுத்தாம சின்னச் சின்ன பரோட்டாவாக்கி சுட்டு எடுத்தாச்சு. ரெண்டு பரோட்டா சுட்டதும் அழுத்தி பிடிச்சு மேலும் கீழுமா இழுத்து விட்டாத்தான் லேயர் வருமாம் கை எல்லாம் சிவந்து போச்சு.. உப்புதான் கொஞ்சம் கம்மி ஆனா பரோட்டா சூப்பர்ன்னு பின்னூட்டம் கிடைத்தது. பரோட்டாக்கு குருமாவும் , தயிர்பச்சடியும் செய்யப்பட்டு இருந்தது.எல்லாரும் அதை சாப்பிட்டு.. அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்..................
49 comments:
//பக்கத்துவீட்டு அம்மணி நீங்க தில்லிலேர்ந்து வந்திருக்கீங்க கொஞ்சம் சப்ஜி சொல்லித்தாங்கன்னு கேட்டாங்க..அவங்களுக்கு சன்னா ,பாலக் எல்லாம் தெரிஞ்சுது வேற எதாச்சும்ன்னு இழுத்தாங்க.//
விடுங்கக்கா ஏதோ அறியாப்பிள்ளை தெரியாம கேட்டுட்டாங்க.... கோவத்துல நீங்க ஒன்னும் செய்யலையே? ஐ மீன் அவங்களை ஒன்னும் செய்யலையே....
//தில்லி என்னங்க தில்லி எல்லா சப்ஜிக்கும் ஒரே ஸ்டார்ட்டிங்க் தான்னு சொல்லி ஸ்டார்ட் செய்தேன்..//
♫ விதி வலியது ♫......
//( யாரு அது பரோட்டா கதையில் பரோட்டாவைக் காணோம்ன்னு தேடறது? இங்கல்லாம் நல்லா கேள்வி கேளுங்க.. காசு குடுத்துப் பாக்கற சினிமாவில் கதையக் காணோம்ன்னு தேடாதீங்க)//
எங்க கேள்வி கேட்டா பயப்பட்டு பதில் சொல்லுவாங்களோ அங்க தான் கேள்வி கேட்க முடியும்.
// அவங்க மனைவிகளும் இதெல்லாம் சேத்து ஒரு காய் கேள்விபட்டதே இல்லைன்னு அடுக்களைக்குள்ள புகுந்துட்டாங்க.. //
இந்த இடத்துல உங்களுக்கு “♫ விதி வலியது ♫...”
/( யாரு அது பரோட்டா கதையில் பரோட்டாவைக் காணோம்ன்னு தேடறது? இங்கல்லாம் நல்லா கேள்வி கேளுங்க.. காசு குடுத்துப் பாக்கற சினிமாவில் கதையக் காணோம்ன்னு தேடாதீங்க)/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//வர்ர வாசனையை வைத்து “ அம்மா என்ன செய்யறீங்கன்னு” வெளியே விளையாண்டுகிட்டிருந்த என் மகள் வந்தப்பதான் எல்லாருக்கும் அதோட மாயம் புரிந்தது.//
பாவம் அம்மாவும் பொண்ணும் பேசி வச்சுகிட்டு அந்த டயலாக் சொன்னது அவங்களுக்கு தெரியாது போல...
//என் பையன் ஒரு உருண்டை மாவை அவங்க சொன்னமாதிரியே பிசைந்து செயல்முறை வகுப்பெடுத்துக்கிட்டான். //
சபரி நீயுமா? அவ்வ்வ்வ்வ்
/கடைசியா என்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துல நானே நேரா அவங்க அடுக்களை களத்தில் புகுந்து என்னோட ஸ்பெஷல் சப்ஜியை செய்துக் காமிக்கிறதா ஒப்புக்கிட்டேன். வெங்காயம் , உருளைக்கிழங்கு, கத்திரிக்காய்,வெண்டைக்காய் , குடமிளகாய் , தக்காளி எல்லாத்தையும் வெட்டி வச்சிட்டு கூப்பிடுங்கன்னு சொல்லிட்டேன்./
ஓ..தில்லியில் கூட நீங்க இப்படி தான் சப்ஜி செய்வீங்களா:)))
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இனி டில்லியில் நடக்கும் பதிவர் மீட்டிங்கிற்கு அக்கா சார்பாக பரோட்டோவும் கண்டிப்பாக இடம் பெறும். கேட்டு வாங்கி பெருவீர்
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இனி டில்லியில் நடக்கும் பதிவர் மீட்டிங்கிற்கு அக்கா சார்பாக பரோட்டோவும் கண்டிப்பாக இடம் பெறும். கேட்டு வாங்கி பெருவீர்
ஆகக்கடைசியில் அழகா பொய் சொல்லிட்டீங்களே:)))
//புரோட்டா வாங்கிக்குடுத்து புரணி கேட்பவர்கள் மத்தியில் புரணி பேசப்போன இடத்தில் புரோட்டா செய்வதற்கான பக்குவம் கேட்டு வரும் அளவு பக்குவமானவள் நான்///
ஊர் பெருமை கொள்கிறது !
மயிலாடுதுறை மைந்தன்
அன்புடன் ஆயில்யன்
//அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்//
:))
//காசு குடுத்துப் பாக்கற சினிமாவில் கதையக் காணோம்ன்னு தேடாதீங்க///
பொக்கிஷம் ! ? :)
//கேட்டு வாங்கி பெருவீர்//
இதை சாப்பிட்டா ரொம்ப பெருத்துடுவமோ?
//அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்................//
யாரெல்லாம்னு கொஞ்சம் வெவரமா சொல்லுங்க. :)
நீங்க பரோட்டா செஞ்சேன்னு சொன்னதும் பாருங்க , இந்தப்பச்சப்புள்ளக எல்லாம் நம்பிட்டாங்க. நாங்கெல்லாம் போட்டோ போட்டாத்தான் நம்புவோம். :)
@ஆதவன் \\பாவம் அம்மாவும் பொண்ணும் பேசி வச்சுகிட்டு அந்த டயலாக் சொன்னது அவங்களுக்கு தெரியாது போல...// கடைசியில் பக்கத்துவீட்டு முழு பேமிலியும் சாப்பிட்டு பாராட்டினது எனக்கு சொல்றதுக்கு தன்னடக்கம் தடுத்ததால் எழுதல..
-------------------------------
@நிஜம்மா நல்லவன்
\\ஓ..தில்லியில் கூட நீங்க இப்படி தான் சப்ஜி செய்வீங்களா:))//
தன்னைப்போல் பிறரை நினைன்னு சொல்றதைநீங்க ஃபாலோ செய்ய்றீங்கன்னு நினைக்கிறேன்.. :)
----------------------------
@ஆயில்யன் . .. பொக்கிசம் எனக்கு பிடிச்சிருந்துச்சு.. :)
அதனால் கேள்வி எல்லாம் கேக்கலை..
----------------------------
@ நாமக்கல் சிபி .. ஆமாங்க மைதா ஐட்டமெல்லாம் அடிக்கடி சாப்பிடக்கூடாது.. ( அடிக்கடி செய்யறாப்ப்லயா இருக்கு இந்த டிஷ், தப்பிக்க வழியும் ஆச்சு )
---------------------------------
@ சின்ன அம்மிணி
நானும் போட்டோல்லாம் எடுக்கனும்ன்னு தான் நினைச்சேன் சொள சொளன்னு எண்ணெயில் கை வச்சிட்டு கேமிராவை எடுத்தா ... எங்கவீட்டய்ய்யா தொலைச்சிடுவாங்க :) என்ன செய்ய ..
:)
பரோட்டா முயற்சி சூப்பர். இந்த சப்ஜிங்கற பேரு கேக்கறதுக்கு தான் ஃபேன்சியா இருக்கும். ஆனா பொறியலா இருந்தாலும் அவியலா இருந்தாலும் வறுவலா இருந்தாலும் அவங்களைப் பொறுத்த வரை எல்லாமே சப்ஜி தான். நீங்க தெற்கு தில்லியிலோ அல்லது அருகாமையிலோ இருந்தீங்கன்னா - டிஃபென்ஸ் காலனி மார்க்கெட்ல இருக்கற ஸ்வாகத் அப்படீங்கற உணவகத்துக்குப் போய் சாப்பிட்டு பாருங்க. விலை கொஞ்சம் அதிகம்னாலும் டேஸ்ட் சூப்பரா இருக்கும். குறிப்பா பரோட்டா ரொம்ப நல்லாருக்கும். சாகர் ரத்னா சைவ உணவகங்கள் நடத்தற அதே க்ரூப்போட அசைவ உணவகம் தான் ஸ்வாகத். இப்ப maybe தில்லியில் பல இடங்களில் அவங்க கிளை தெறந்திருக்கலாம். நான் சொல்லறது ஒரு 4-5 வருஷத்துக்கு முந்துன கதை.
:)
உருளைக்கிழங்கு ஒன்றை மட்டும் வச்சிக்கிட்டே எந்த சப்ஜியோடும் கூட்டு போட்டுக்கிட்டு எல்லா மேஜிக்கும் காட்டலாம். //
அடிப்படை நல்லா தெரிஞ்சு வெச்சுருக்கீங்க.... :)
நோட்ஸ் எடுத்துக்கலாம்ன்னு நினைச்சது வீண் தானோன்னும் நான் தான் என் வீட்டுல சமைப்பனா இல்லையான்னும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல.. //
ஹாஹாஹா....
அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்.................. //
Hahaha.... Classical Ending. :)
பரோட்டா செய்து விட்டு போட்டோ
போடவில்லை என்றால் எப்படி?
சபரியை எடுக்க சொன்னால் சூப்பராக
எடுத்து இருப்பானே.
எண்ணெயில் கை வச்சிட்டு கேமிராவை எடுத்தா ... எங்கவீட்டய்ய்யா தொலைச்சிடுவாங்க :) என்ன செய்ய ..
கேமராவைத் தொலைச்சுட்டு ....????வேற வாங்குவாரா????
//( யாரு அது பரோட்டா கதையில் பரோட்டாவைக் காணோம்ன்னு தேடறது? இங்கல்லாம் நல்லா கேள்வி கேளுங்க.. காசு குடுத்துப் பாக்கற சினிமாவில் கதையக் காணோம்ன்னு தேடாதீங்க)//
LOL!!
புரோட்டா செய்முறையும், அதுக்கு வந்த பின்னூட்டமும் சூப்பரோ சூப்பர்.
முத்து நாங்களும் புரோட்டா செஞ்சு பார்த்திருக்கோமில்ல.ஆனா அதுக்கு மெனக்கெடுவதற்கு பதில் கடையில் வாங்கினா செம சூப்பரா இருக்கும்.:))
புரோட்டாவா ரொட்டியா நீங்க செஞ்சது ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா
நன்றி பர்த்டே பாய் சஞ்சய் :)
-------------------------
கைப்புள்ள சாகர் ரத்னான்னாலே நாங்க பின்னங்கால் பிடரி பட ஓடுவோமே.. :)
போன வாரம் தான் சரவணபவன் போய் பரோட்டா சாப்பிட்டம்.. சின்னூண்டா ரெண்டு 70 ரூ :(
----------------------------
வாங்க விக்னேஷ்வரி வடநாட்டு மருமகளே வந்து சொல்லிட்டீங்க அப்பறமென்ன :) அவார்ட் கிடைச்சாப்ல தான்..
------------------------
வாங்க கோமதிம்மா, சபரி தானே புதுக்கேமிரால சரியா ஃபோகஸ் ஆகற்துக்குள்ள க்ளிக்கி வச்சிடறார் அதான் தொல்லை.. அவருக்கு பரோட்டா வேணா நல்லா வரலாம் போட்டோக்கு இன்னும் பயிற்சி தேவை..:)
-------------------------
கோமா நீங்க என்னவோ ஜோக்கா சொல்லிட்டீங்க.. சீரியஸா
என்னைத்தான் தொலைப்பாங்க :)
-----------------------------
முல்லை நீங்களும் கதையத் தேடினீங்க போல :))
-------------------------
நன்றி சிந்து :)
--------------------
கண்மணி , இங்கயும் அதே கதை தான் .. பரோட்டாவில் கொட்டின எண்ணை கணக்கப் பார்த்து இதுக்கு நான் கடையிலயே சாப்பிடுவேனேன்னு கமெண்ட்டும் கிடைச்சு.. :)
புரோட்டா எப்படி செய்வதுனு என்கிட்ட கேட்டாலே சொல்லியிருப்பேனே...
ஏன்னா, விருதுநகர் புரோட்டா தான் நல்லாருக்கும் :)
:)
எங்க வீட்டுல செய்யற பரோட்டா மாதிரி நான் வெளியில எங்கயும் சாப்பிட்டதில்லைங்கற ஒரு பெருமை உண்டு.
நீங்க செஞ்சது பரோட்டா மாதிரி தெரியலை. செய்முறை குறிப்புல எண்ணெய் ரொட்டின்னு சொல்றதை கத்துக்கிட்டு வந்திருக்கீங்கன்னு நினைக்கறேன்.
அடுத்த முறை ஊருக்கு வரும்போது எங்க வீட்டுக்கு போய் சூடான சுவையான பரோட்டா எப்படி செய்யறதுன்னு கத்துக்கிட்டு வந்துடுங்க.
//எல்லாரும் அதை சாப்பிட்டு.. அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்..................//
கவிதையா முடிச்சுருக்கீங்க!
மிகவும் சிக்கலான முறையில் செய்யப்பட்ட பரோட்டா. படித்துக் கொண்டே வரும்போதே பரோட்டாவையே மறக்கும் நிலை ஏற்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் சினிமாவில் கதை தேடும் வரிகள்.
பரோட்டா, புரிந்து கொள்ள மிகவும் கடினமாக இருந்தது.
சீரியஸ் எல்லாம் ஜோக் ஆனாதான் ஜோலி பக்க முடியும்....
உங்களைத் தொலைப்பாங்களா????????
நான் தேடிக் கண்டு பிடிச்சுடுவேன்....!!!!
ரெடி ஜூட்
வெயிலான் சொல்வது யாருக்கும் எளிதாம்.. அடுத்தமுறை பரோட்டவை செய்துமீட்டுக்கு எடுத்துட்டுவாங்க .. .எந்த ஊர் பரோட்டாவா இருந்தாலும் நாங்க சாப்பிடுவோம்..
:)
------------------------------
சென்ஷி நான் செய்தது பரோட்டான்னு எங்க வீட்டுல எல்லாரும் ஒத்துக்கிட்டாங்களே.. :) இருந்தாலும் நெக்ஸ்ட் டைம் உங்க அம்மாவையும் வேணா கேட்டுக்கறேன்.. :)
------------------------
இராதாகிருஷ்ணன் ,பரோட்டா கஷ்டமில்லாட்டியும் வெளிய வாங்கி சாப்பிடறதே நல்லதுன்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.. எக்கசக்க நேரம் வேஸ்ட்.. நீங்களும் வெளியேவே வாங்கி சாப்பிடுங்க..:)
---------------------------------
கோமா உங்களைப்போன்றவர்கள் உள்ளவரை எனக்கென்ன கவலைன்னு இனி நான் கேமராவை ஒரு வழி செய்துடறேன்..:)
கலக்குங்க அக்கா ;))
பதிவோட முதல் வரியே செம காமெடியா இருக்குக்கா.. இன்னும் அதுக்கே சிரிச்சி முடிக்கல.. :))
// காயத்ரி said...
பதிவோட முதல் வரியே செம காமெடியா இருக்குக்கா.. இன்னும் அதுக்கே சிரிச்சி முடிக்கல.. :))//
அக்கா எம்புட்டு சீரியசா பரோட்டா செய்யறதைப் பத்தி பதிவு எழுதியிருக்காங்க. உங்களுக்கு ஜோக்கா படுதா இதெல்லாம். ஜாக்கிரதை!
முத்தக்கா பேரவை
ஷார்ஜா
சென்ஷி
நன்றி கோபி :)
-------------
காயத்ரி நன்றி .. நல்லா சிரிச்சிட்டே படிம்மா ;)
------------------
சென்ஷி ’நகைச்சுவை’ன்னு லேபிளில் நான் ஆர்டர் போட்டும் யாருமே சிரிச்சதா சொல்லல.. அட்லீஸ்ட் காயத்ரியாச்சும் நகைச்சு வைக்கிறா? நல்லது தானே..
// அடுத்தமுறை பரோட்டவை செய்துமீட்டுக்கு எடுத்துட்டுவாங்க .. .எந்த ஊர் பரோட்டாவா இருந்தாலும் நாங்க சாப்பிடுவோம்.. //
ஆஹா! நானா தான் மாட்டிக்கிட்டேனோ?
எனக்கு செய்முறை சொல்லத்தான் தெரியும். புரோட்டா செய்யத் தெரியாது.
நீங்க எங்க ஊருக்கு வரும் போது எத்தனை புரோட்டா வேணும்னாலும் வாங்கித் தர்றேன்.
எஸ்கேப்....
//தில்லி என்னங்க தில்லி எல்லா சப்ஜிக்கும் ஒரே ஸ்டார்ட்டிங்க் தான்னு சொல்லி ஸ்டார்ட் செய்தேன்..//
இதிலிருந்தே தெரியுது நீங்க பக்குவமானவங்கன்னு!!
//பக்கத்து வீட்டுல இருந்து வந்த ரெண்டே ரெண்டு பரோட்டாவுக்கு நாங்க எல்லாருமா அடிச்சிக்கிட்டதுக்கப்பறம் எங்களுக்கும் செய்ய சொல்லித்தரனும்ன்னு கேட்டுகிட்டோம்//
சஃப்ட்டான பரோட்டா இன்னும் சாஃப்ட்டா ஆயிருக்கும்
//எகஸட்ரா.. நோட்ஸ் எடுத்துக்கலாம்ன்னு நினைச்சது வீண் தானோன்னும் நான் தான் என் வீட்டுல சமைப்பனா இல்லையான்னும் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல..//
ஏன்டா இவங்ககிட்டே கேட்டோம்னு யோசிச்சு இருப்பாங்க
//கடைசியா என்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்துல நானே நேரா அவங்க அடுக்களை களத்தில் புகுந்து என்னோட ஸ்பெஷல் சப்ஜியை செய்துக் காமிக்கிறதா ஒப்புக்கிட்டேன். //
ஆமாமா இதுக்கெல்லாம் ஒரு பக்குவம் வேணும் தான்.
//அண்ட் தென் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்..................//
லட்டர் போட்டாங்களா?
ஷஃபிக்ஸ் நான் பரோட்டா செய்துகுடுத்தது என் குடும்பத்துக்குத்தானே அவங்க ஏன் லெட்டர் போடனும். :)
//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஷஃபிக்ஸ் நான் பரோட்டா செய்துகுடுத்தது என் குடும்பத்துக்குத்தானே அவங்க ஏன் லெட்டர் போடனும். :)//
நீங்க சப்ஜி செய்து காண்பிச்சிஙகளே அத செஞ்சு பார்த்தததுக்கு, அப்புறம் அவங்க பரோட்டாவ சரியா செய்றீங்களான்னு கேட்டு, ஷ்ஷ்.....போதும்ப்பா.
எங்களுக்கு கடிதப்போக்குவரத்து எல்லாம் இல்ல ஷஃபிக்ஸ் ... அடுத்த லீவுல போய் சொல்லிடறேன்..
கொத்து பரோட்டாலேருந்தே நாங்க இன்னும் மீளலை. அதுக்குள்ள முத்துவும் பரோட்டா போட்டாச்சா.
அதான் தே லிவ்ட் ஹாப்பிலி அப்படீன்னு
சொல்லிட்டீங்களே , அப்ப நல்ல பரோட்டாதான்:)
நல்ல பதிவு
ஆமாங்க ஆமா, ட்விட்டரைப் பார்த்தபடியேதான் உள்ளே நுழைவேன். ‘மெளனக் கிளைகளின் அடர்வின் கீழ்’ நல்லாயிருக்கு.
_____________________________________
கிழிந்த பனியனை அப்படியே தூக்கியும் சுத்தலாமா? நான் எப்படி செய்வேன் என்றால், சின்ன வயசில பேப்பரில் விசிறி செஞ்சிருப்பீங்களே? அதுபோல பனியனை மடித்து பிறகு சுற்றவேன் முறுக்கு:)!
___________________________________
வல்லிம்மா பின்னூட்டம்தான் எனக்குப் பிடித்தது. சொல்லிட்டாங்க கரெக்டா கொத்துப் பரோட்டா முத்துப் பரோட்டான்னு, ஹி என் பாணியில்.
நல்லா சொல்லியிருக்கீங்க, ருசிகரமாக!!
Post a Comment