August 29, 2010

உள்ளடக்கமும் அடக்கமும் ஒரு மண்டக்குடைச்சலும்

சில சமயம் ப்ளாக் ஆஃப் நோட் பிடித்து வெளிநாட்டு ப்ளாக் களை நோட்டமிடுவேன்.
இதை எழுது அதை எழுதாதே ..எழுத வரலையா எழுதாதே என்று எந்த பெரியமனிதத் தொல்லையும் அவங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை.. வாழ்க்கையை அழகாக பார்த்து இன்பயமாக்கிக்கொள்கிறார்களோ என்று எனக்குப் பொறாமையாகக் கூட வரும். அங்கே ஒரு பின்னூட்டம்.
{Alessandra said...

Hey, I think I'm the first one to leave a comment today yay...Here it goes: } - வட எனக்குத்தான் மீ த பர்ஸ்ட் ஹேய்..
ஒரு பதிவின் உள்ளடக்கம் .
”திரும்பிப் பார்க்காமல் உங்களுக்கு பின்னால் என்னவெல்லாம் இருக்கிறது , நடக்கிறது உடனே பகிருங்கள். உங்கள் வீட்டுக்குள் நுழையும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் பார்வையில் உங்கள் வரவேற்பரையை பகிர்ந்துகொள்ளுங்கள் ” அவரும் பகிர்ந்திருக்கிறார் அனைவரையும் அழைக்கிறார்.
நான் அவன் வீட்டு வரவேற்பரைக்குப் போனேன் அவன் அடுக்கியவிதம் சரியில்லை, அவனே சரியில்லை என்று குறைபடாமல் நம்மை நாமே கவனித்துக்கொள்ள என்ன ஒரு அழகான வழி. ம்...

-------------------------------------------------
இனிது இனிது படத்திற்கான தொலைகாட்சி நிகழ்ச்சியில் ப்ரசன்னா ப்ரகாஷ்ராஜைப் பற்றிப் பேசிவிட்டு அடக்கமாட்டாமல் அழுதபோது எனக்கும் தொண்டை அடைத்துக்கொண்டது. தன்னலமற்ற அன்புக்குத்தான் எத்தனை அழகு. ஆனால் இதைச் சொன்ன இந்த பசங்களுக்கு பெருந்தன்மையே தவிர அவர்களோடு இருக்கும் போது நான் அழகா இருக்கிறேன் என்பது மட்டுமே தன் தன்னலம் என்பது போல அவர் பதில் அடக்கமாகவே இருந்தது.
சொந்தவாழ்க்கைகளை வைத்து முன்முடிவாக அணுகாதவரை அந்த நேரம் அழகாகவே இருந்தது.

இப்படித்தான் அன்றைக்கு சின்மயி மனதோடு மனோவில் அம்மாவைப் பற்றி பேசியபோது எனக்கும் அழுகை வந்தது. இன்னோருநாள் மகதி என்று நினைக்கிறேன் உன்னிகிருஷ்ணனின் உயிரும் நீயே உணர்வும் நீயே பாடலைப்பாடியபோதும் இப்படித்தான்.

4:17 ல இருந்து கொஞ்சம் பாருங்களேன். சின்மயிகுரல் இன்றைய நிலையில் எவ்ளோ ரசிக்கப்படும் பெருமைப்படுத்தப்படும் நிலையில் இருந்தாலும் என்ன ஒரு எளிமையான பதில் , எத்தனையோ பெரியபெரியவர்கள் இருந்த இசை உலகத்துல அவங்க கால் மிட்டி தூல் மண் நான்னு சொல்லுறது .. உயரத்தில் அடக்கம் நிச்சயம் அரிதான விசயம் இல்லையா ?
-----------------------------------------
போனவாரக் கடைசியில் இரண்டு கச்சேரிகள் தமிழ்சங்கத்தில், சஞ்சயும் நித்யஸ்ரீ யும் தமிழில் பாடி அல்லல் நீக்கினார்கள். ஒரு பாடலின் ராகம் சலநாட்டை என்று சொன்னாரென்று நினைக்கிறேன். ஆலாபனை செய்யும்போது மண்டைக்குள் அது போன்ற ஒரு திரைப்பாடலின் முதல் வரியைப் பிடிக்க போராடிக்கொண்டிருந்தேன். கடைசி வரை முதல் வரியை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நானுமதே ராகத்தை இரண்டு நாட்கள் ஏதோ என்னறிவுக்கு தெரிந்தவரை பாடிக்கொண்டே இருந்தேன் . திரைப்பாடல் தளத்தில் சில பாடல் ராகங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருப்பதாக ஆயில்யன் சொன்னார். . அங்கே போய் பிடித்ததில் அது பனி விழும் மலர் வனம் .இந்தபாடல் தான் மண்டையை குடைந்தது என்று முடிவுக்கு வந்தேன். தொல்லை விட்டது.

28 comments:

நட்புடன் ஜமால் said...

இது போன்று பல முறை எங்கையோ கேட்டமேன்னு மண்டக்குடச்சல் வரும்

(இன்னும் காநொளி பார்க்கயில்லை)

ஆயில்யன் said...

ப்ளாக் ஆப் நோட்ஸ் - அப்பப்ப போயிட்டு வர்ற லொக்கேசனு! தமிழ்பதிவு சூழலினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி/தள்ளி/தூக்கி/ எப்ப கொண்டு போய் தொபுக்கடீர்ன்னு போடறதுன்னு ஃபீல் பண்ண வைக்கும் நிறைய ப்ளாக்குகள் ! :) நம் மனதோடு இயைந்த/கூடவே டிராவல் பண்ணும் எண்ணங்களினை அன்னிய மொழியில் அழகாய் தருகிறார்கள்

வல்லிசிம்ஹன் said...

நானும் 'இனிது இனிது 'நிகழ்ச்சி பார்த்தேன்.
பிரசன்னாவை முன்னணிக்கு வரவைத்ததில் பிரகாஷ் ராஜுக்கு நிறைய பங்கிருக்கிறது இல்லையாம்மா.
படம் எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. இன்னோண்ணு பார்த்திருக்கீங்களா. நாம ஏதோ பாடலைப் பாடிக்கித்தேஏ இருப்போம். ரேடியோவைத் திருப்பினால் அதே பாட்டு வந்து அதிரடிக்கும்!!!

ADHI VENKAT said...

உயரத்தில் அடக்கம் நிச்சயம் அரிதான விஷயம் தான். இது சில பேருக்குத்தான் வரும்.

அம்பிகா said...

\\ப்ளாக் ஆப் நோட்ஸ் \\
நல்ல அறிமுகம்.
இது போன்ற மனக்குடைச்சல்ெல்லோர்க்கும் வருமென நினைக்கிறேன்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

சின்மயியின் பேட்டி அருமை.

கானா பிரபா said...

ப்ளாக் ஆப் நோட்ஸ் - அப்பப்ப போயிட்டு வர்ற லொக்கேசனு! தமிழ்பதிவு சூழலினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி/தள்ளி/தூக்கி/ எப்ப கொண்டு போய் தொபுக்கடீர்ன்னு போடறதுன்னு ஃபீல் பண்ண வைக்கும் நிறைய ப்ளாக்குகள் ! :) நம் மனதோடு இயைந்த/கூடவே டிராவல் பண்ணும் எண்ணங்களினை அன்னிய மொழியில் அழகாய் தருகிறார்கள் //


இங்கே புனைவு/பின்னவீனத்துவ மொழியாடல்கள் பாவிக்கப்படுகின்றனவா :(

ஆயில்யன் said...

//இங்கே புனைவு/பின்னவீனத்துவ மொழியாடல்கள் பாவிக்கப்படுகின்றனவா :(//

நான் தெளிவா பேசினாலே ஏன் பாஸ் இப்படி பயமுறுத்துறீங்க !


சரி வழக்கம்போல டெம்ப்ளட் கமெண்ட் போட்டு ஓடிடவா

நல்ல பதிவு இது போன்ற பகிர்தல்களுக்கு நல்ல ரிசப்ஷன் இருக்கணும் - [ரிசப்ஷன்னா வரவேற்புதானே?]

Ahamed irshad said...

Nice...

settaikkaran said...

ப்ளாக் ஆஃப் நோட்-????

கேள்விப்படுவதே இதுதான் முதல் முறை! :-)

ஒரு இடுகையில் ஒருசில விஷயங்களை அழகாய்க் கோர்த்திருக்கிறீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஜமால் காணொளிய மெதுவாபாருங்க..
---------------------
ஆயில்யன் சில சமயம் இதைக்கூட இவ்ளோ அழகாப் பார்கக்லாமான்னு தோண வைக்கிறாங்க இல்லை. எல்லாத்துக்கும் ஒரு ரீசன் இருக்கும்ன்னு வரிகளுக்கு இடையில் படிச்சி மண்டை உடைக்கிறமே நேரம் எங்கே இப்படிஃபீல் செய்யரதுக்கு..
-----------------------
வல்லிம்மா அதே தான் அப்படி மட்டும் பாட்டும் ரேடியோல வந்துருச்சுன்னு வைங்க தலைகால் புரியாத மகிழ்ச்சி வருமே.. அன்னிக்கு ஃபுல்லா.. :)
-----------------
வாங்க ஆதி .. அந்தவெகுசிலரோட பேச்சைக் கேக்கும்போது நமக்கும் ஒரு பணிவு வந்து ஒட்டிக்கிதுங்க
----------------------------
அம்பிகா ஆமா எல்லாரையும் கிறுக்கு பிடிக்கவைக்கும் அந்த மண்டகுடைச்சல்.. ;)
---------------
புவனா நன்றிங்க :)
------------------
கானா நேத்து ஆயில் உங்களை இளாபதிவுல ஓட்டினதுக்கு பதிலா இது.. பிள்ளை என்ன அழகா ஃபீல் செய்திருக்கு .. ஊக்கபடுத்துங்க கானா.. :) அதுல்லாம இந்த பாவிக்கிறதெல்லாம் இந்த (அப்) பாவிங்க செய்யக்கூடாத பாவமா என்ன ..:)
-----------------------
ஆயில்யன் ரிசப்ஷனா நீங்க வேற இது போன்ற சாதா பகிர்தலுக்கு நாலு பின்னூட்டம் கூட வந்துட்டாலே சிலருக்கு பொறுக்கிறதே இல்ல.. அவங்க ரிசப்ஷன் கொண்டாடிராஙக.. அவ்வ்
---------------
இர்ஷாத் ரசித்ததற்கு நன்றிங்க :)
---------------------
சேட்டை டேஷ்போர்ட்லயே தாங்க இருக்கு.. . பாலோ செய்கிற பதிவுகளை காட்டுது இல்லையா அது பக்கத்துல பாருங்க ப்ளாக்கர் பஸ் ம் இதும் இருக்கும்.. அங்கயும் போய் பாருங்க..

Anonymous said...

//பனி விழும் மலர் வனம்//

அது என்ன ராகம். த்வஜாவந்தியா

நல்ல பகிர்வு முத்தக்கா

ஹுஸைனம்மா said...

:-)))

எண்ணெயில்லாம வடை ரெஸிப்பி சொல்லவேயில்லையே நீங்க இன்னும்?

(பதிவுக்கு சம்பந்தமாத்தான் பின்னூட்டனும்னு அவசியம் இல்லையே?)

;-))))

Anonymous said...

முத்தக்கா,

இந்தப்பதிவுல இருக்க காணொளி பாருங்க. உங்களுக்கு பிடிக்கும்

http://chinnaammini.blogspot.com/2010/05/blog-post_25.html

சாந்தி மாரியப்பன் said...

//இதை எழுது அதை எழுதாதே ..எழுத வரலையா எழுதாதே என்று எந்த பெரியமனிதத் தொல்லையும் அவங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை.//

கண்ணுக்கு தெரியாத கட்டுப்பாடுகள் வரும்போது ஒருவகையில் எழுத்து சுதந்திரம் பாதிக்கப்படுது.அப்புறம், தடுமாற ஆரம்பிச்சுடும் :-))

கோபிநாத் said...

நல்ல பகிர்வு ;)

கோமதி அரசு said...

உயரத்தில் அடக்கம் அரிதான விஷயம் தான் முத்துலெட்சுமி.

சின்மயி பேட்டி அருமை.

பகிர்வுக்கு நன்றி.

Thekkikattan|தெகா said...

பாருங்க பல பேருக்கு எழுத்தறிவு, படிப்பறிவு இல்லாத வாழும் சமூகத்தில் எப்படி பணக்காரய்ங்க வைச்சதே சட்டங்கிற அளவுகோல் இருக்கோ அது மாதிரியே ‘’’நல்லா’’ படிச்ச பெரியவா, நாம கஷ்டப்பட்டு படிச்சு அறிஞ்சு தெரிஞ்சிக்கிட்டதை பரவலா கொண்டு போயி சேர்க்கணுமின்னு இருக்கிற ‘மூளை ச்சூடு’ தாங்க அந்த பரிதவிப்பு அந்த மாதிரி militarization of எழுத்துச் சட்டம். :)

//கண்ணுக்கு தெரியாத கட்டுப்பாடுகள் வரும்போது ஒருவகையில் எழுத்து சுதந்திரம் பாதிக்கப்படுது.அப்புறம், தடுமாற ஆரம்பிச்சுடும் :-))//

எனக்கு எப்போதுமே ஒரு தடுமாற்றம் உண்டு அது என்னான்னா, ஒரு பத்து புஸ்தகத்தை படிச்சிட்டு அதிலிருந்து வார்த்தை பிரயோகங்கள், நடை இவைகளை, சில சமயம் கருவைக் கூட ’சூட்டிங்’ போட்டு எழுதி சுவாரசியம் ஆக்கிக் கொள்ள எத்தனிக்கிறோம்னு வைச்சிக்குவோம்; அப்போ இப்பொழுது நாம் படித்துக் கொண்டிருக்கும் படைப்பாளியின் அடையாளம், இருப்பு அங்கே காணமல் போய் விடுகிறது. அப்போ அவரே புனைவு என்று ஆகிவிடுகிறாரே?

எனவே, எழுதும் பொழுது அங்கே படைப்பாளி மறைந்து கதை இயல்பிலேயே எழுத்து வழி நடத்தி செல்வதுதான் எழுத்தா இல்ல, நான் வாத்தியாரு மாதிரி எழுதணும்னு முக்கி, முனகி வாக்கியம் அமைப்பதிலே கவனமாக இருக்கும் பொழுது அங்கே உணர்வுகள் இறந்து விடுகிறதே... என்னயப் பொருத்த மட்டிலும் எப்பொழுதுமே ஒரிஜினல் மனத்தோட உறவாடி கொடுக்கும் படைப்புகளே காலத்தை தாண்டியும், மனிதர்களைத் தாண்டியும் கடத்தி செல்லப் படுகிறதுன்னு நினைக்கிறேன்.

அதான் அமைதிச் சாரலின் கருத்தோட ஒத்துப் போகிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

அந்த வீடியோல மனோ ஆரம்பத்துல பாடுற அந்த பாட்டு அருமைக்கா. சூப்பரா இருந்துச்சு.

ம்ம்ம் இப்படி எதுக்கெடுத்தாலும் அழுதா எப்படி இலக்கியவாதி ஆகுறதாம்? இலக்கியவாதின்னா இந்த மாதிரி செண்டிமெண்டுக்கெல்லாம் அழப்படாதுக்கா :))

பா.ராஜாராம் said...

//”திரும்பிப் பார்க்காமல் உங்களுக்கு பின்னால் என்னவெல்லாம் இருக்கிறது , நடக்கிறது உடனே பகிருங்கள். உங்கள் வீட்டுக்குள் நுழையும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் பார்வையில் உங்கள் வரவேற்பரையை பகிர்ந்துகொள்ளுங்கள் ” அவரும் பகிர்ந்திருக்கிறார் அனைவரையும் அழைக்கிறார்.
நான் அவன் வீட்டு வரவேற்பரைக்குப் போனேன் அவன் அடுக்கியவிதம் சரியில்லை, அவனே சரியில்லை என்று குறைபடாமல் நம்மை நாமே கவனித்துக்கொள்ள என்ன ஒரு அழகான வழி//

//இனிது இனிது படத்திற்கான தொலைகாட்சி நிகழ்ச்சியில் ப்ரசன்னா ப்ரகாஷ்ராஜைப் பற்றிப் பேசிவிட்டு அடக்கமாட்டாமல் அழுதபோது எனக்கும் தொண்டை அடைத்துக்கொண்டது. தன்னலமற்ற அன்புக்குத்தான் எத்தனை அழகு. ஆனால் இதைச் சொன்ன இந்த பசங்களுக்கு பெருந்தன்மையே தவிர அவர்களோடு இருக்கும் போது நான் அழகா இருக்கிறேன் என்பது மட்டுமே தன் தன்னலம் என்பது போல அவர் பதில் அடக்கமாகவே இருந்தது.
சொந்தவாழ்க்கைகளை வைத்து முன்முடிவாக அணுகாதவரை அந்த நேரம் அழகாகவே இருந்தது.//

//அங்கே போய் பிடித்ததில் அது பனி விழும் மலர் வனம் .இந்தபாடல் தான் மண்டையை குடைந்தது என்று முடிவுக்கு வந்தேன். தொல்லை விட்டது.//

romba arumaiyaai pesi irukkeenga mutthuletchumi.

pinnoottam pottu en sirumaiyai kaattaamal oodiruvomaa? ena varuthu.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்னம்மிணி அது சலநாட்டைன்னு போட்டிருக்குப்பா
உங்க காணொளியில் இருக்கிற செவிக்கு ஒலி சூப்பருப்பா.. நன்றி இன்னோருமுறை பாக்கவச்சதுக்கு..
--------------------------
ஹூசைனம்மா பதிவே எதுவேணாலும் எழுதலாம்ங்கும்போது பின்னூட்டத்துக்கென்ன.. :)
வடைக்கு தனி ரெசிப்பி எல்லாம் இல்லைப்பா
அது அரைக்கும் பக்குவத்தால் வர்வதுன்னு நினைக்கிறேன்.. வாங்க செய்து தரேன்.. எண்ணெய் பார்ட்சூன் க்ரவுண்ட் நட் ஆயில்
--------------------------
நன்றி அமைதிச்சாரல் :)
-------------------
நன்றி கோபி:)
---------------------
கோமதிம்மா நன்றி:)
------------------
தெகா அதே! உணர்ந்ததை அதே உணர்வோடு சொல்லவேண்டும் அருவறுக்க சொல்லக்கூடாது என்பதைத்தவிர என்ன பெரிய வரைமுறைகளோ தெரியவில்லை.

-------------------------
ஆதவன் மனோ இன்னோரு பாட்டும் அன்னிக்கு பாடினாரே.. ஓடக்கரை மரமேந்னு ஆரம்பிக்குமே.. சூப்பர்..
இலக்கியவாதின்னா அழமாட்டாங்களா.. அப்ப என்ன கல் நெஞ்சக்காரங்களா.. அப்ப என்னால முயன்றாலும் முடியாதா அவ்வ்..
------------------------------
பா. ரா..:)
என்னய்யா பதிலுக்கு பதிலாய்யா..
நல்ல வேளை ஓடலை.. நன்றி..

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வுகளுடன் சுவாரஸ்யமான தொகுப்பு.

Unknown said...

முத்துலட்சுமி, நல்ல பதிவு, தொகுப்புங்க.

சலநாட்டை பிடிக்கும்னா, நம்ம ஊரு சுபா சங்கரன் (மிருதங்கம் திருச்சி சங்கரன் அவர்களின் பெண்) கனடாவில் bபாண்ட் வச்சிருக்காங்க, அவங்க பாட்டை இங்கயும் கேக்கலாம்: http://autorickshaw.bandcamp.com/track/so-the-journey-goes .

//பனிவிழும் மலர்வனம்// அட இது எனக்குத் தோணலையே! நன்றி!!

Chitra said...

சில சமயம் ப்ளாக் ஆஃப் நோட் பிடித்து வெளிநாட்டு ப்ளாக் களை நோட்டமிடுவேன்.
இதை எழுது அதை எழுதாதே ..எழுத வரலையா எழுதாதே என்று எந்த பெரியமனிதத் தொல்லையும் அவங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை.. வாழ்க்கையை அழகாக பார்த்து இன்பயமாக்கிக்கொள்கிறார்களோ என்று எனக்குப் பொறாமையாகக் கூட வரும்.


....not only in blogs, they (especially women) have more freedom to express themselves anywhere as it is without worrying about the prejudiced group.

பவள சங்கரி said...

"இதை எழுது அதை எழுதாதே ..எழுத வரலையா எழுதாதே என்று எந்த பெரியமனிதத் தொல்லையும் அவங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை.. வாழ்க்கையை அழகாக பார்த்து இன்பயமாக்கிக்கொள்கிறார்களோ என்று எனக்குப் பொறாமையாகக் கூட வரும். அங்கே ஒரு பின்னூட்டம்." உண்மை.......உண்மை...... சித்ராவின் பின்னூட்டம் நிதர்சனம்.......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ராமலக்‌ஷ்மி ..:)

------------------
கெக்கே ஹய்யோ சூப்பருங்க அந்த லிங்க்
நன்றி நன்றி.. ;)
----------------
சித்ரா அழகா சொல்லி இருக்கீங்க
எப்படியோ நீங்க அந்தபக்கமா இருக்கீங்க கொஞ்சம்
அதுவே ஒரு விதத்துல லக் தான் ..
-----------------------------
நித்திலம் நன்றிங்க :)

க.பாலாசி said...

பகிர்ந்தமையும், பகிர்வும் நன்று... குறிப்பாக அந்த ஆங்கில ப்ளாக் பற்றினது.

செல்வா said...

//இதை எழுது அதை எழுதாதே ..எழுத வரலையா எழுதாதே என்று எந்த பெரியமனிதத் தொல்லையும் அவங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை.. வாழ்க்கையை அழகாக பார்த்து இன்பயமாக்கிக்கொள்கிறார்களோ என்று எனக்குப் பொறாமையாகக் கூட வரும். ///
கண்டிப்பாக அப்படி இருந்தால் நன்றாகவே இருக்கும் ..!