உன் நியாயம்
---------------------
சாய்ந்தமர்ந்து
புன்சிரிப்புடன் உலகாள்கிறாய்
நானல்ல
துன்பத்திற்கு காரணம்
அவரவரே என்கிறாய்
கவனங்களை ஒருமுகமாக்கி
பின் சிதறடிக்கிறாய்
தேடுபவன் கண்டுகொள்வான்
என்றபடி
ஒளிந்துகொள்ளாமல்
விண்ணுக்கு வளர்ந்து நிற்கிறாய்
கீதை சொல்லி
உணர் என்கிறாய்
கீழ்படிதலை வெறுக்கிறாய்
இருக்கிறாயா? இல்லையா?
ஆராய்ந்து கொண்டிருப்பவனின்
கண்களுக்குள்
முரண்படுகிறாய்.
---------------------
சாய்ந்தமர்ந்து
புன்சிரிப்புடன் உலகாள்கிறாய்
நானல்ல
துன்பத்திற்கு காரணம்
அவரவரே என்கிறாய்
கவனங்களை ஒருமுகமாக்கி
பின் சிதறடிக்கிறாய்
தேடுபவன் கண்டுகொள்வான்
என்றபடி
ஒளிந்துகொள்ளாமல்
விண்ணுக்கு வளர்ந்து நிற்கிறாய்
கீதை சொல்லி
உணர் என்கிறாய்
கீழ்படிதலை வெறுக்கிறாய்
இருக்கிறாயா? இல்லையா?
ஆராய்ந்து கொண்டிருப்பவனின்
கண்களுக்குள்
முரண்படுகிறாய்.
-----------------------------------------------------------------------
முன் தடயமற்ற பாதை
------------------------------
பனி வெடித்து சரிந்து
துடைத்தாற்போல்
சீராகிறது
நினைவுகளற்ற வெளியாய்
நடக்கத்தூண்டியபடியே இருந்தது
நிச்சயமற்ற ஒரு நொடியில்
மீள் நிகழ்த்துகிறது
------------------------------
பனி வெடித்து சரிந்து
துடைத்தாற்போல்
சீராகிறது
நினைவுகளற்ற வெளியாய்
நடக்கத்தூண்டியபடியே இருந்தது
நிச்சயமற்ற ஒரு நொடியில்
மீள் நிகழ்த்துகிறது
8 comments:
கீதையின் நாயகன் வர்ணனையும் சரி...பாதையின் விளக்கமும் சரி..நச் நச்..
தொடர்ந்து எழுதுவதற்காக விசேட பாராட்டுகள்...தொடருங்கள்...
அருமைக்கவிதை வாழ்த்துகள்.
நன்றி பாசமலர்..
விசேடப்பாராட்டு :)) ம்.. எழுதறேன் எழுதறேன்..
முதல் கவிதை இம்ப்ரஸ்ட் மோர்.. இரண்டுமே நல்லா இருக்கு முத்து.. ..
கண்ணன் கலக்கல்...இந்த மாதிரியும் முயற்சியும் அடிக்கடி செய் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ;-)
கவிதை நல்லா இருக்குங்க.
கவிதையில் கண்ணன் வந்து காட்சி தந்தான்.
பாதை கவிதை அருமை.
கண்ணன் காட்டிய பாதையோ நேராகவே போகிறது.கண்ணனின் வசம்நாம் போனால் பாதை சீராகிப் பயணிக்கலாம் என்று உங்கள் கவிதை சொல்கிறது கயல். பாராட்டுகள் மா.
Post a Comment