March 19, 2012

தேவைகள்

மதிப்பீடு

புரிகின்ற கேள்விகளுக்கு
அடித்தல் அழித்தல் போக
இருப்பதும்
கணக்குகளை சிதறடிக்க
தயாரிக்கப்பட்ட
சில புரியாத பதில்கள்
அவற்றிலும்
எழுதாத பதில்களுக்கே
முதலிடம்

--------------------------------------------

தேவைகள்


அந்தரத்தில்
இழுத்துக்கட்டப்பட்ட கயிற்றில்
முன்னேறவும்
நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும்
சில சாய்வுகள்

சிக்கலில் முடிச்சுகள்
தேடியவேகத்தில்
இறுகிக்கொண்டிருக்கிறது
என்றானபின்
சில நிதானங்கள்

தற்செயலாக நடந்துவிடும்
தவறுகளுக்கு
சில மன்னிப்புகள்.

16 comments:

பாச மலர் / Paasa Malar said...

ஆகா..தேவைகளுக்கான சாய்வுகள்..எழுதாத பதில்களின் முதலிடம்...

அருமை..வாழ்த்துகள் கயல்

ராமலக்ஷ்மி said...

சரியான ‘மதிப்பீடு’.

‘தேவைகள்’ அற்புதம்.

ஆயில்யன் said...

// இழுத்துக்கட்டப்பட்ட கயிற்றில்
முன்னேறவும்
நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும்
சில சாய்வுகள்///

செம!!!! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாசமலர் :) நன்றி

ராமலக்‌ஷ்மி நன்றி :)

ஆயில்யன் நன்றி:)

Marc said...

நல்ல எண்ண ஓட்டக்கவிதை.

வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

தேவைகள் கவிதை அருமை கயல்விழி.

ADHI VENKAT said...

நல்லா இருக்குங்க...

Asiya Omar said...

தொடர்ந்து கருத்தாழமிக்க கவிதைகள்.அருமை.

கோபிநாத் said...

2ம் நன்று ;-)

Bibiliobibuli said...

கயல், மதிப்பீடு கவிதையில் ஒரு ஆசிரியையின் டச் தெரியுது :)

தேவைகள், படித்தபோது சில நேரம் வாழ்க்கையும், சில நேரம் வார்த்தைகளும் என்று தோன்றியது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சேகரன் :)
நன்றிகோமதிம்மா :)
நன்றி ஆதி :)

நன்றி ஆசியா ப்ளஸில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவற்றை அங்கிருந்து இங்கே நகர்த்துகிறேன் :)

நன்றி கோபி :)

நன்றி ரதி :)

ஷாஜஹான் said...

உங்கள் மூன்றுநாள் கவிதைகளிலும் பிடித்தது - தேவைகள். கடைசி பத்தி தேவையற்றது. தற்செயலாக நடந்து விட்டது என்றாலே அது அறியாமல் செய்தது அல்லது நிகழ்ந்தது என்றுதானே பொருள். அத்தகைய தவறுகளுக்கு மன்னிப்பு தேவையில்லை.

சிக்கலில் முடிச்சுகள்
தேடியவேகத்தில்
இறுகிக்கொண்டிருக்கிறது
என்றானபின்
சில நிதானங்கள்

இந்த வரிகள்தான் மிகவும் பிடித்தவை. வாழ்க்கை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஷா வாங்க நன்றி..:)

தவறுக்கு மன்னிப்பு கேக்கவேண்டியது தவறியவர்களின் கடமை..
இதே போல அட அவசியமில்லயேன்னு பதில் கிடைச்சிட்டா நல்லது:)

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான கவிதைகள்..

Vijiskitchencreations said...

தேவைகள் கவிதை சூப்பர்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சாரல் :)
நன்றி விஜி:)