May 26, 2012

வானவில் இற்றைகள் (சவுத் இந்தியா)

சூப்பர் மார்க்கெட் ல பிடிச்ச பிஸ்கட் , ஜூஸ் எல்லாம் எடுத்தாச்சு.. மாடியில் இருந்த டாய் செக்‌ஷனில் மட்டும் எதும் சரிப்பட்டு வரல..வரும்போது ரொம்ப டல்..

மகள்: டேய் அதான் எல்லாம் பிஸ்கட்லாம் வாங்கினியேடா
மகன்: இருந்தாலும் டாய் வாங்கலியே
மகள்: ஃபுட் இல்லன்னா லைஃப் ல சாவோம்.. டாய் இல்லன்னா சாவோமாடா?
மகன்: எனக்கு லைஃப்ல டாய் ம் வேணும் ஃபுட் ம் வேணும்
மகள்: ஓகே அப்பன்னா ரெண்டு நாள் ஃபுட் மட்டும் சாப்பிடு..
ரெண்டு நாள் டாய் மட்டும் வச்சி விளையாடு புரியும் உனக்கு..
(யம்மாடி ...)
------------------------------------------------------------------------------
”அம்மா தாயே” (என்று ஆரம்பிச்சு பராசக்தி எல்லாரையும் காப்பாத்தும்மான்னு நான் முடிக்கிறதுக்குள்ள.. )

”பராசக்தி காப்பாத்தும்மா’ன்னு மட்டும் சொன்னான்.. 

”யாரைடா காப்பாத்தனும் “

”என்னையை , அம்மாவை...”
(அப்பறம்ங்கறமாதிரி நான் பாக்கவும்)

”சவுத் இந்தியாவை “ ( சென்னை சூப்பர் சிங்க்ஸ் ஜெயிக்கனும்ன்னு நினைச்சுட்டே இருந்ததால் இருக்குமோ)

இந்தியாவை ..
பாகிஸ்தானை...
ஸ்ரீலங்காவை...
எர்த்தை .... 

அப்பறம்ன்னு அவன் இப்ப என்னைப்பார்க்கிறான்..
----------------------------------------------------------
”இன்னிக்கு ஒரு அன்லக்கி டே எனக்கு”ன்னு முகத்தை சோகமா வச்சிக்கிட்டு சொன்னான்..குட்டிப்பையன்
”ஏண்டா அப்படி வருத்தப்படர அளவு என்னடா ஆச்சு?”
”எனக்கு இன்னிக்கு பேட்டிங்க் கிடைக்கவே இல்ல..”
”வீட்டுக்கு வந்தா அப்பா டீவி தரமாட்டேங்கராங்க..”
”நீ என்னடான்னா மிருதங்கம் ப்ராக்டிஸ் செய்யு ஸ்டோரி புக் படி”ன்னு சொல்றே.. 

9 comments:

ராமலக்ஷ்மி said...

/மிருதங்கம் ப்ராக்டிஸ் செய்யு ஸ்டோரி புக் படி/

லீவுல ஜாலியா இருக்க விடுங்க:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது நடந்தது போன மாசமா இருக்கலாம் ராமலக்‌ஷ்மி .. :)
ஆனா இப்பயும் லீவுல கொஞ்சமாவது ப்ராக்டிஸ் செய்யனும்ன்னு சொல்லி இருக்கார் மாஸ்டர்..

சாந்தி மாரியப்பன் said...

"இன்னிக்கு ஒரு அன்லக்கி டே எனக்கு”

ஆஹா!!.. வாழ்க்கையில என்னெல்லாம் கஷ்டம் வருதுப்பா :-))))))

ரெண்டு மாஸ்டர்கள் சொல்றதும் சரிதான். லீவுன்னு ப்ராக்டீஸ் செய்யாம இருந்துட்டா டச் விட்டுப்போயிரும்ன்னு சீனியருக்கு கவலை. லீவைக் கூட எஞ்சாய் செய்ய விட மாட்டேங்கறாங்கன்னு ஜூனியருக்கு கவலை. அவரவர் கவலை அவரவருக்கு :-)))

கோபிநாத் said...

:-))

ஹுஸைனம்மா said...

//ஸ்டோரி புக் படி//
இதுவுமா பிடிக்கலையாம் சாருக்கு? :-))))))

வல்லிசிம்ஹன் said...

கார்ட்டூன் பாக்க விடுங்கப்பா:0)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமா எவ்ளோ ஃபீல் பாருங்க..:) சாரல்..

நன்றி கோபி :)

ஹுசைனம்மா பொண்ணு தான் படிச்சிட்டே இருப்பா..இவன் ஒரு பக்கம் படிக்கிறதுக்குள்ளயே.. இன்னும் மீதி எவ்ளோ இருக்குன்னு ரெஸ்ட்லெஸா பார்ப்பான்..:)

வல்லி பாவம் அவங்கப்பா இவன் இல்லாதப்ப பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க ...அதிசயமா அந்த ஒரு நாளுக்குத்தான் இந்த பந்தா பேச்சு எல்லாம்..

'பரிவை' சே.குமார் said...

லீவுல பிள்ளைகளை கொஞ்சம் ரிலாக்சா இருக்க விடுங்கப்பா...

குட்டீஸ் கமெண்ட்ஸ் அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) சரிங்க குமார்..
கடைசியா சொன்ன அந்த விசய்ம் லீவுக்கு முன்னால நடந்தது..