December 4, 2006

வர்சானா குசல் பிகாரி கோயில் [2]

அரண்மனை போன்றதோர் வாயிலில் சென்று முடிந்தது அந்த பாதை. முன்பே இரு வண்டிகள் அங்கே இருந்தது மனதுக்கு நிம்மதி அளித்தது. பாதையின் ஆரம்பம் எங்களுக்கு அத்தனை சந்தேகத்தினை ஏற்படுத்தி இருந்தது.

'கோயில் நான்கு மணிக்கு திறப்பார்கள் அதுவரை சுற்றுசுவரில் நிறைய ஓவியங்கள் இருக்கின்றன அவற்றை பாருங்கள்' என்றார் கோயிலில் வேலை செய்பவர்
அருமையான ஓவியங்கள் எல்லாம் என் பெண் நான் தான் எடுப்பேன் என்று எடுத்த புகைப்படங்கள்.


அருமையான துளசிமாடம் .கோயிலுக்கேற்ற கலைநயத்துடன்.

கோயிலில் வேலைசெய்பவரிடம் எப்படி இந்த பாதையில் எதிரில் கார் வந்தால் என்ன செய்வார்கள் என்று சந்தேகத்தினை கேட்டால் அது என்ன பிரமாதம்..இங்கே கிளம்பி ஒலிப்பானை அடித்தால் நடுவில் வரும் வளைவில் அவர்கள் நிற்பார்கள் என்றார்.நாங்கள் என்னவோ மேலும் கீழும் தொடர்பு இருக்குமோ, ஒரு வண்டி அனுப்பினால் மற்றவரை காத்திருக்க செய்வார்களோ என்று எண்ணி இருந்தோம்.



கோயில் திறந்ததும் உள்ளே சென்றோம். பண்டிட் ஏதோ கதை சொன்னார்..நம்ம இந்திக்கு புரிந்தது குசல் பிகாரி என்ற ஜெய்ப்பூர் அரசர் ராதாராணி கோயில் கட்ட நினைத்திருக்கிறார்.கனவில் வந்த ராதாராணி நான் ஏற்கனவே இருக்கும் இடத்தை விட்டு வரமுடியாது நீ கிருஷ்ணன் கோயில் கட்டு என்றாராம்.

ராதாராணியின் கதை சொன்னார், எல்லா ஊரிலும் இருக்கும் சிறுதெய்வம் போல தான் ராதாராணியும் என்று ஆனால் அந்த ஊரின் நடையுடைய இந்தி சரியாக புரியவில்லை.



வரும்போது கவனமாக வளைவுகளில் ஒலிப்பானை நாங்கள் உபயோகித்தும்..அடிவாரத்தை அடையும் நேரம் ஒரு அம்பாசிடர் எதிரில்..நல்ல வேளை அவர்கள் ஆரம்பத்தில் இருந்ததால் பின்னால் போய் எங்களுக்கு வழிவிட்டார்கள்.
அதில் இருந்தோர் முகங்கள் ஆகா பெரிய கார் போய் வந்து இருக்குப்பா அப்பறம் என்ன பயமில்லாமல் போகலாம் என்று யோசிப்பது போல் இருந்தது. வேறு வண்டி ஏதும் வருகிறதா பின்னால் என்று கேட்டு கொண்டனர்..நமக்கு இப்படி நேராததே மகிழ்ச்சி என்று நினைத்துக்கொண்டோம்.

3 comments:

Boston Bala said...

காசிக்கு அருகில் சீதைத் தீக்குளித்த இடத்திலும் மிக அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய ஓவியங்களும், வாயிற்கதவும் பிரமிக்க வைக்கும்.

தங்கள் பதிவுக்கு நன்றி. அந்தப் பக்கம் வந்தால் அவசியம் செல்ல வேண்டிய இடத்தைப் பகிர்ந்ததற்கும் வணக்கங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//காசிக்கு அருகில் சீதைத் தீக்குளித்த இடத்திலும் மிக அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய ஓவியங்களும், வாயிற்கதவும் பிரமிக்க வைக்கும்.//
காசிக்கு அருகில் என்றால் அந்த இடம் எது ?ஊர் பெயர் தெரிவியுங்கள்.
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

Boston Bala said...

The place is called Sitamarhi. It is a resort area between Varanasi & Allahabad. The locals (tour operators) will be aware, if you drop the word.

Apart from this, there are three Pahadis (smal mountains) atop there are Durga temples. All are Shakthi Sthal and are famous around the Allahabad/Kasi area. Vindhyachal, etc...

A Google search landed me here:
Shikhar Travels - Mystique Adventure - ADVENTURE TOURS

My blog post on Kasi & Allahabad is here:
E - T a m i l : ஈ - தமிழ்: "India Trip - Varanasi"

Varanasi - Visitor Tips